Showing posts with label லியோ (2023) - தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label லியோ (2023) - தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts

Tuesday, November 07, 2023

லியோ (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் கேங்க்ஸ்டர் மசாலா )

   


    வசூல்  ரீதியாக  எப்படியோ தரமான  திரைக்கதை  என்ற  அளவில்  விஜய்க்கு  கடைசி ஹிட்  திரைக்கதை  துப்பாக்கி  தான் . அதற்கு  ஆனந்த  விகடன் 44  மார்க்  கொடுத்திருந்தது . பின்  வந்த  படங்களுக்கு  41,42, 43 ,   என்ற  அளவில்  தான்  இருந்தது . பீஸ்ட் , வாரிசு , பிகில்   அவரது  லேட்டஸ்ட்  படங்க்ள்  எல்லாமே  சுமார்  ரகமே .அட்லீயின்  இயக்கத்தில்  அவர்  நடித்த  தெறி , மெர்சல்  இரண்டும்  வெற்றிப்படங்கள்  பட்டியலில்  சேர்ந்தாலும்  கதை  என்னவோ  பட்டி  டிங்கரிங்  ஆஃப்   சத்ரியன் , அபூர்வ  சகோதரர்கள் , சக் தே  இந்தியா  கதைகள்  தான் 

லோகேஷ்  கனகராஜின்  முதல்  படமான  மாநகரம் (2017)   பிரமாதமான  திரைக்கதை . 2019  ஆம்  ஆண்டு  வெளியான  கைதி  திரைக்கதை  வடிவமைப்பிலும்  கலக்கல், வசூல்  ரீதியாகவும் பிளாக்பஸ்டர்  ஹிட் .2021ஆம்  ஆண்டு  வெளியான  மாஸ்டர்  பாதி  விஜய்  படம்  பாதி  டைரக்டர்  படம்  என  ப்ரமோ  செய்யப்பட்டாலும்  அதில்  விஜய்  சேதுபதி  ஸ்பெஷலாக  தெரிந்தார் .2022  ம் ஆண்டு  வெளியான  விக்ரம்  பக்கா  கமர்சியல்  ஆக்சன்  மூவி   .2016ல் இவர்  இயக்கிய  அவியல்  என்னும்  படம்  நான்  பார்க்கவில்லை 

தொடர்ந்து  மெகா   ஹிட்  படங்களையே  கொடுத்து  வந்த  லோகேஷ் ஏன்  2005ல்  வெளியான  படத்தை  ரீமேக்  செய்ய  நினைத்தார்  என்பது  தெரியவில்லை . அதுவும்  அதன்  மூலக்கதை  1996ல்  எழுதப்பட்டது . கிட்டத்தட்ட  27  ஆண்டுகள்  பழமையான  ஒரு  கதையை  இப்போது  படம்  எடுப்பது  ரொம்பவே  ரிஸ்க்  தான். என்  எனில்  அதே கதையை  வெவ்வேறு  பாணியில்  பலரும்  அடித்து  துவைத்து காயப்போட்டிருக்க  வாய்ப்பு  உண்டு 


   ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு  கேங்க்ஸ்டரின்  மகன். அப்பா , சித்தப்பா  இருவருமே  போதைப்பொருள்  கடத்தலில்  ஈடுபடுபவர்கள். நாயகன்  அவர்களுக்கு  உதவியாக  இருக்கிறார். சட்டத்துக்குப்புறம்பான  வேலைகள்  செய்வது , கொலைகள்  செய்வது  என  வன்முறையின்  பக்கம்  தான்  இவரது வாழ்க்கைப்பாதை  போகிறது . இவருக்கு  ஒரு  ட்வின்  சிஸ்ட்ர்  உண்டு ., அவர்  மேல்  உயிரையே  வைத்திருக்கிறார்


 நாயகனின் அப்பாவுக்கு  மூட  நம்பிக்கை  உண்டு . ஒவ்வொரு  தொழில்  தொடங்கும்போதும்  மாதாமாதம்  ஒரு  பலி  கொடுப்பவர் /அந்தப்பலி  ஆடு , மாடு, எருமை  ஏன்   மனிதன்  ஆகக்கூட  இருக்கலாம்.  


 நாயகனின்  அப்பாவின்  ஆஸ்தான  ஜோதிடர்  அடுத்த  நரபலி  ஆக  மகன்  அல்லது  மகளை  நரபலி  கொடுத்தால்தான்  தொழில்  சிறக்கும்  என்கிறார். வேறு  வழி  இல்லாமல்  நாயகனின்  அப்பா  தன்  மகளை  பலி  ஆக்க   முயல்கிறார்


இந்த  சம்பவத்தைக்கண்  முன்  க்ண்ட  நாயகன்  தங்கையைக்காப்பாற்ற  முடியாமல்  வேறு  வழி  இல்லாமல்  தப்பிப்போக  முயலும்போது  நடந்த  களேபரத்தில்  துப்பாக்குண்டு  பட்டுக்காயம்  அடைகிறார்


 நாயகனின்  அப்பா  நாயகன்  இறந்து  விட்டதாக  நினைக்கிறார். 


 20  வருடங்கள்  கழித்து  நாயகனின்  ஃபோட்டோ  மீடியாக்களில்  வருகிறது . அவர்  செய்த  வீர  தீர  சாகசம்  பற்றி  நியூசில்  வருகிறது . அதைப்பார்த்து  நாயகனின்  அப்பா  நாயகனைத்தேடி  வருகிறார். இதற்குப்பின்  நிக்ழும்  திருப்பங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  விஜய். இவரது  விக்  சரி  இல்லை .  சச்சின் , ஜில்லா  படங்களில்  இவரது  ஹேர்  ஸ்டைலும்  , குறும்பு  சிரிப்பும்  ரசிக்கும்படி  இருக்கும், ஆனால்  ஆக்சன்  ஹீரோ  ஆகும்  ஆசையில்  அல்லது  ரஜினியின்  இடத்தைப்பிடிக்கும்  எண்ணத்தில்  அவரது  ஸ்பெசல்  அம்சமான  சிரிப்பைத்தொலைத்து  விட்டார் . இவரது  பிளஸ்  பாயிண்ட்டே  டான்ஸ் , காமெடி  கலாட்டாதான் . இந்தப்படத்தில்  அவை  மிஸ்  ஆனது  வருத்தமே 


 ஆனால்  ஆக்சன்  சீக்வன்சில்  அதகளம்  செய்திருக்கிறார். விஜய்  நடித்த  படங்களிலேயே  அதிக  வன்முறை , அதிக  ஸ்டண்ட்  காட்சிகள்  நிறைந்த  படம்  இதுதான் . ஆக்சன்  பிரியர்களுக்கு  விருந்து 


 நாயகி  ஆக  த்ரிஷா . முகம்  சதைப்பிடிப்பாக  மாறி  இருக்கிறது ., இருவருக்குமான  கெமிஸ்ட்ரி  குட் 


வில்லன்கள்  ஆக  அப்பா, சித்தப்பா  ரோல்களில்  சஞ்சய் தத் ,அர்ஜூன்  இருவரும்  மிரட்டி  இருக்கிறார்கள் 


அனிரூத்தின்  பின்னணி  இசை  அமர்க்களம், ஆனால்  பாடல்கள்  பெரிதாக  ஹிட்  ஆகவில்லை .விஜய்  படங்களில்  சோலோ  டான்ஸ் , டூயட்  சாங் , குத்தாட்ட  சாங்  இல்லாத  சமீப  கால  படம்  இது  ஒன்று தான் 


ஸ்டண்ட்  மாஸ்டர்  அன்பறிவின்  ஆக்சன்  சீக்வன்ஸ்  அமர்க்களம், குறிப்பாக  காஃபி  ஷாப்  ஃபைட் , மார்க்கெட்  ஃபைட்  இரண்டும்   தரமான சம்பவங்கள்


ஃபிலோமின்  ராஜ்  எடிட்டிங்கில் 160  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது . பின்  பாதி  காட்சிகள்  இழுவை , இன்னும்  ட்ரிம்  பண்ணி  இருக்கலா,ம் . மனோஜ்  பரமஹம்சா  ஒளிப்பதிவு  காட்சிகளில்  பிரம்மாண்டம்  காட்டி  இருக்கிறார். 


திரைக்கதையை  ரத்னகுமார் உடன்  இணைந்து  லோகேஷ்  எழுதி இருக்கிறார். முதல்  பாதி  கதை  ஹிஸ்டரி  ஆஃப் வயலன்ஸ்  சின்  டிட்டோ  என்றாலும்  பின்  பாதி  நரபலி மேட்டர்  எல்லாம்  இவர்கள்  கைங்கரியம்  தான்  போல 



சபாஷ்  டைரக்டர் (லோகேஷ்  கனகராஜ்) 


1  படம்  வெளியாகும்  முதல்  நாள்  வரை  இது  ஒரு  ரீ மேக்  படம்  என்பதை  வெளிவராமல்  பார்த்துக்கொண்டது 


2  படத்தின்  ப்ரமோக்க்ளில்  தனி  ஒரு  ஆளாக  ஓவர்  பில்டப்  பேட்டிகள்  எல்லாம்  கொடுத்து  ஹைப்  ஏற்றியது 


3   ஃபிளாஸ்பேக்  காட்சியில்  வில்லன்  கேங்க்  இருக்கும்  இடத்தை  டாப்  ஆங்கிளில்  பிரம்மாண்டமாகக்காட்டியது . நான்  ரெடி  பாடல்காட்சியில்  நடனக்கலைஞர்களின்  பங்களிப்பு 


4  ஹீரோவுக்கு  பஞ்ச்  டயலாக்  வைக்காமல்  விட்டது , காமெடி  டிராக்  எதுவும்  இல்லாமல்  கதையை  நேரடியாக  சொன்ன  விதம் 


5   இயக்குநரின்  முத்திரைக்காட்சியாக     ஃபைட்  சீனில்  பாடல்   ஒலிக்க  விடும்  புதுமை 

செம  ஹிட்  சாங்க்


1  நான்  ரெடி 


  ரசித்த  வசனங்கள் 


1   சொல்ல  வந்த  சேதி  முக்கியமானதா  இருக்கனும்னு  கடவுளை  வேண்டிக்கோ , இல்லைன்னா  செத்துடுவ 


2   எத்தனை  பேரை  அனுப்பனும் ?


 பார்த்திபனா  இருந்தா   நாலு  பேர்  போதும், லியோன்னா  மொத்த  ஊரையே  அனுப்பனும் 


3  உனக்கு  உன்  அப்பா  மேல சந்தேகம்  ஏதும்  இல்லையே?


 இல்லை   ஏன்னா  நீ  என்  அப்பா 


4 ஒரேயடியா  ஆண்டவன் இவ்ளோ ச்ந்தோஷம்  கொடுக்கறான்னா  அடுத்து  ஏதோ  நடக்கப்போகுதுனு  அர்த்தம், தயாரா  இருந்துக்கனும் . அடுத்து  என்ன  நடக்கும்னு  யாருக்கும்  தெரியாது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஹீரோவுக்கு  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  சீன்  வைக்கனும்னு  முடிவு  பண்ணிட்டா  ஹீரோவுக்கு  ஓப்பனிங்  ஃபைட்  சீனோ ,ஆக்சன்  சீனோ  வைக்கக்கூடாது . உதா - பாட்ஷா , ரன் , சத்ரியன் , விஸ்வரூபம்  உட்பட  பல  படங்கள் . ஹைனா  வை  ஹீரோ  அடக்கும்  சீன்  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாதது


2  கூகுள்  ப்ண்ணினாலே  தெரியக்கூடிய  சில  ஹைனா  பற்றிய   விபரங்களை  நாயகன் கூறும்போது  அந்த  ஃபாரெஸ்ட்  ஆஃபீசர்  அப்டியா? என  ஆச்சரியமாக  கேட்டுக்கொள்கிறார். அவர்  படிச்சு  பாஸ்  பண்ணுனாரா? சிபாரிசில்  வந்தாரா?


3  ஸ்கூல்  மெயின்  கேட்டை முதலில்  ,மூடாமல்  ஹீரோ  அங்கேயும்  இங்கேயும்  ஓடி  எல்லோரையும்  அலர்ட்  பண்ணுகிறார்  


4  தான்  லியோ இல்லை  என  நாயகன்  தன்னையே  நம்ப  வைத்துக்கொள்கிறாராம், அதற்காக  தன்னையே  கெட்ட  வார்த்தையில்  திட்டிக்கொள்கிறார். கேவலமான  உத்தி 


5  மகளை  நரபலி கொடுக்க  முடிவு  எடுத்த  பின்  எதற்கு  மகன்  முன்  அதை  செய்ய  வேண்டும்? ரக்சியமாக  பலியை நடத்தி  மக்ளைக்காணவில்லை  என  நாடகம்  ஆடி  இருக்கலாமே? 


6  ஒருவர்  சொத்து  சேர்ப்பதே  தன்  மகன்  மகள்  வாரிச்களுக்காகத்தான்  அவர்களையே  பலி  கொடுத்தால்  தான்  வியாபாரம்  செழிக்கும்  எனில்  அது  ஏழைக்குடும்பத்திற்கு  ஓக்கே ., போதை  மருந்து  கடத்தல்  பிஸ்னெஸ்  பண்றவங்களுக்கு  அது  எதுக்கு ? 

7    நான்  ரெடி  பாடல்  காட்சியில்  எம் ஜி ஆர்  போல  அரசியல் பிரவேசம்  செய்ய  தான்  ரெடி  என்பதை  சூசகமாக  உணர்த்துகிறார். ஆனால்  ஆசை  மட்டும் எம் ஜி ஆர்  போல  ஆக  உண்டு  ஆனா நடத்தையில்  நடிப்பில் கூட  நல்லவராகக்காட்டிக்கொள்ள  முடியவில்லை ., அந்தப்பாட்டு  பூரா  தம்  அடிக்கிறார்   சரக்கு  அடிக்கிறார் . இவர் எப்படி  நல்ல  தலைவராக  நல்ல  வழிகாட்டியாக  இருக்க  முடியும் ? 

8  ஃபிளாஸ்பேக்  காட்சியில்  நாயகனுக்கு  தலைமுடி  சாதாரணமாக  இருக்கிறது  , ஆனால்  இருபது  வருடங்கள்   கழித்து அவ்ளோ  அடர்த்தியா  வளர்ந்தது  எப்படி ?   நாள் ஆக  ஆக  முடி  அடர்த்தி  குறையத்தானே  செய்யும் ?


9  நாயகன்  நாயகி  கூட  அழுது  கொண்டே  வச்னம்  பேசும் உருக்கமான  காட்சியில்  அவர்  நாயகியை  ஏமாற்றுகிறார்  அலல்து  தன்னைத்தானே  தான்  லியோ  இல்லை  என  நம்ப  வைக்க  முயல்கிறார்  என்பதால் அந்த   சோக  நடிப்பு  எடுபட  வில்லை 

10  காஃபி ஷாப்பில்  நாயகனை  ஒரு  வில்லன்  துப்பாக்கி  முனையில்  மடக்க  இன்னொரு  வில்லன்  நாயகனை  அட்டாக்  செய்யாமல்  பேக்கு  மாதிரி  நாயகனின்  குழந்தையை  அட்டாக்  செய்ய  போகிறான். நாயகன்  தடுக்க  வருவான்  என  தெரியாதா? நாயகனை  அடித்து , தாக்கி  , கட்டிப்போட்டு  பின்  தானே  மகளை  அட்டாக்  செய்ய  வேண்டும் ? 

11  தெலுங்கானாவில்  இருந்து  வில்லன்  க்ரூப்  லூஸ்  மாதிரி  காஷ்மீர்  வரை  காரில்  வருவது  ஏன்?  பெட்ரோல்  டீசல்  தண்டச்செலவு .  ரயிலில், விமானத்தில் வந்து  இறங்கி  ஓலா  டாக்சி புக்  பண்ணி  வரலாமே? 


12   ஆக்சன்  ஹீரோ  படங்களில்  நாயகன்  தானே  ஆக்சனில் இறங்க  வேண்டும்  என  தான்  ரசிகர்கள்  எதிர்பார்ப்பார்கள் . புத்திசாலித்தனமாக  கண்ணி  வெடி  வைப்பது .  , போன்ற  ட்ரிக்  வேலைகள்  சாதா  ஹீரோ  படங்களில்  தான் எடுபடும் , நாட்டுக்கு  ஒரு  நல்லவன்  படம்  நல்ல  உதாரணம் .ரஜினி  அதில்  செய்த  அதே  தப்பை  விஜய்  இதில்  செய்திருக்கிறார்’

13   திருப்பூர்  சுப்ரமணி  ,மீது என்ன  கடுப்போ  அவர்  பெயரை  ஹைனா  என்னும் விலங்குக்கு  வைத்து  காண்டேற்றி  இருக்கிறார்கள் 

14   கடந்த  20  வருடங்களாக  இங்கே  குண்டுச்சத்தமே  கேட்டதில்லை  என  ஹீரோ  பேசுகிறார். அவர்  இருப்பது  ஹிமாச்சல்  பிரதேசம், அவர்  சொன்னது  உண்மையா  என்பதை  கூகுள்  பண்ணிப்பார்த்தாலே  தெரியும் 


15  மகளை  நரபலி  கொடுத்த  பின்  வியாபாரம்  கடந்த  20 வருடங்களாக  ஏதாவது  முன்னேற்றம்  இருந்ததா  என்பதை  வில்லன்  அப்டேட்  பண்ணவே  இல்லை 

16    மகனை  நரபலி  கொடுக்க  முடிவு  செய்தால்  மகன்  தூங்கும்போது   தூக்க  மருந்தை  ஊசி  மூலம்  செலுத்தி  காரில்  ஏற்றிக்கொண்டு போனால்  வேலை  முடிந்தது , ஆனால்  வில்லன்  படம்  பூரா  நீ  லியோ  தானே? ஒத்துகோ, ஒத்துக்கோ  என  ஹீரோவையும்  ஆடியன்சையும்  டார்ச்சர்  செய்கிறார்

17   ஜோசியம், ஜாதகம் , நரபலி  இதெல்லாம்  இந்துக்கள்  மட்டுமே  ஃபாலோ  செய்கிறார்கள் , கிறித்துவர்கள் , முஸ்லீம்கள்  ஃபாலோ  செய்வதில்லை , நாயகன் , அப்பா  ,சித்தப்பா  எல்லோரும்  கிறித்துவர்களாக  காட்டுகிறார்கள் , ஆனால்  ஹிந்துக்களாக  வாழ்கிறார்கள் 



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  லிப்  லாக்  சீன்  உண்டு . பயங்கர  வன்முறைக்காட்சிகள்  உண்டு , ரத்தம்  தெறிக்கும்  சீன்கள்  உண்டு , போதைப்பொருள்  யூஸ்  செய்வது  , தம்  அடிப்பது   சரக்கு  அடிப்பது  எல்லாம்  உண்டு ,   

சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சமூக  வலைத்தளங்களில்  கழுவிக்கழுவி  ஊற்றியது  போல  இது  டப்பாப்படம்  எல்லாம்  கிடையாது , மாமூல்  மசாலா  ஆக்சன்  கேங்க்ஸ்டர்  படம் .  டி வி  ல  போட்டா  பார்க்கலாம் , ரேட்டிங் 2.25 / 5 


Leo
Theatrical release poster
Directed byLokesh Kanagaraj
Written by
Based onA History of Violence
by David Cronenberg[1]
Produced by
  • S. S. Lalit Kumar
  • Jagadish Palanisamy
StarringVijay
Sanjay Dutt
Arjun
Trisha
CinematographyManoj Paramahamsa
Edited byPhilomin Raj
Music byAnirudh Ravichander
Production
company
Distributed bysee below
Release date
  • 19 October 2023
Running time
164 minutes[2]
CountryIndia
LanguageTamil
Budgetest. ₹250 crore[3]
Box officeest. ₹557 crore[4]