Showing posts with label ரெண்டாவது படம் - கில்மா. Show all posts
Showing posts with label ரெண்டாவது படம் - கில்மா. Show all posts

Sunday, November 25, 2012

ரெண்டாவது படம் - கில்மாப்படமா? தமிழ் படம் புகழ் சி.எஸ். அமுதன். பேட்டி

http://chennaionline.com/images/articles/September2012/00ba38d2-7975-44a4-9d14-600af2093050OtherImage.jpg 

 

சீரியஸ் சினிமாதான் பிடிக்கும்!

 

என் முதல் படமான தமிழ் பட'த்தை காமெடி தவிர்த்து வேறு எந்த வகையிலும் வைத்து பார்க்க முடியாது. போஸ்டர் பார்க்கும் போதே அதன் வகை தெரிந்தது. ஆனால் இப்போது நான் எடுத்துக் கொண்டிருக்கும் "ரெண்டாவது பட'த்தை அப்படி எந்த வகையிலும் சேர்க்க முடியாது.


இதுதான் என தீர்க்கமாக முடிவெடுத்தால், இல்லை இல்லை இது வேறு எதுவோ சொல்லுகிறது என தோன்றும். காமெடியாக பார்த்தால் சட்டென்று சீரியஸ் தோற்றம் கொடுக்கும். எந்த வகை படம் என பார்த்து விட்டு சொல்லுங்கள்.'' திண்டுக்கலில் இருந்து மொபைலில் பேசுகிறார் சி.எஸ். அமுதன்.


http://liveupdates.in/wp-content/gallery/rendavathu-padam-movie-stills/rendavathu-padam-movie-stills-4.jpg

"தமிழ் படம்' மூலம் கோலிவுட் ஸ்டார்களுக்கு கிலி கொடுத்த இயக்குநர்.
எந்த வகை படம் இதுவென உங்களுக்கே குழப்பம் இருந்தால்.... ரசிகர்கள் என்ன ஆவார்கள்?





ரசிகர்கள் எப்போதுமே தெளிவுதான். சினிமாக்காரர்கள்தான் ஏதாவது சொல்லி அவர்களை குழப்புகிறார்கள். ""இது நல்ல படம். பாருங்கள்'' என வரும் பப்ளிசிட்டிகளை அவர்கள் நம்புவதே இல்லை. ஏதோ ஒரு ரசிகன் பார்த்து விட்டு, வெளியே வந்து ""இது நல்ல படம். பார்க்கலாம் பாஸ்'' என சொன்னால் போதும், நம்பி தியேட்டருக்கு போகிறார்கள்.



 பெரிய ஸ்டார், ஸ்டார் இயக்குநர், கிளாமர் குயின் எதுவுமே இல்லாத படங்கள்தான் இந்த வருஷ ஹிட். அந்த வகைதான் இந்தப் படம். ஆனால் காமெடியா, சீரியஸô இதில் எது அதிகமாக இருக்கும் என சொல்லத் தெரியவில்லை. ஒரு சினிமா கதைன்னா ஹீரோ, ஹீரோயின் இருவருக்கும் சம்பந்தமான சிலர், ஒரு காமெடியன், வில்லன் நடிகர்கள் இதுவெல்லாம்தான் இருக்கும். இதையெல்லாம் தவிர்த்து இதில் முப்பது பேர் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் கூட இல்லாமல் கதை நகராது. இதை எந்த வகையிலும் சேர்க்க முடியாதென சொன்னதற்கு காரணம், திரைக்கதை ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு முகம் காட்டும்.




இதுவரை எடுத்த காட்சிகளையெல்லாம் போட்டு பார்த்த போது இது எந்த வகை படம் என எங்களுக்கே புரியவில்லை. சென்டிமெண்ட் கிடையாது. எமோஷன் கொஞ்சம் கூட இல்லை. காதல் இருக்கிறது. சண்டை காட்சிகள் நிறைந்த படம். உருக வைக்கும் திரைக்காவியம் என எதுவுமே போட முடியாது. எது மாதிரியாகவும் இல்லாமல் புது மாதிரியாக இருக்கும். அது எப்படி இருக்கும் என தெரிந்து கொள்வதற்காகவே ரசிகர்கள் இந்தப் படத்தை அவசியம் பார்க்க வேண்டும்


http://liveupdates.in/wp-content/gallery/rendavathu-padam-movie-stills/rendavathu-padam-movie-stills-16.jpg

அப்படி என்ன கதை?



இவ்வளவு விவரம் சொன்ன பிறகும் கதை என்னவென்று கேட்டால் என்ன பாஸ் சொல்லுவது? உங்களுக்காக சொல்கிறேன். சென்னை திருவல்லிக்கேணி மேன்ஷனில் தங்கியிருக்கிற மூன்று இளைஞர்கள். காதல், நட்பு என அவர்களின் வாழ்க்கையில் வந்து போகும் மூன்று பெண்கள். இந்த ஆறு பேரையும் சுற்றி வருவதுதான் கதை.



 இது தவிர இன்னும் முப்பது பேர். அவர்களுக்கு படத்தில் என்ன வேலை? அதுதான் கதையின் சுவாரஸ்ய பகுதி. எல்லோரும் படுத்தி எடுக்கிற விஷயங்கள் இன்னும் பிரதான விஷயமாக இருக்கும். இதுவரை இப்படியொரு கதைக் களம் நம் சினிமாவில் கையாளப்படவில்லை. அந்தளவுக்கு விறுவிறுப்பு கூட்டியிருக்கிறேன்.



 படத்தின் இறுதி வரை உங்களால் கணிக்க முடியாத கதையும் இருக்கிறது. அதுதான் திரைக்கதையின் பலம். ரிச்சர்ட் என் கூட படித்தவன். கிட்டத்தட்ட 16 வருஷ பழக்கம். எப்போதுமே மிடுக்காக இருக்கும் மேனரிஸம்தான் அவன் பாணி. ஆனால் இதில் அவனை சுத்தமாக மாற்றியிருக்கிறேன். சும்மா ஒரு அரை மணி நேரம் படம் பார்த்தே அதிர்ச்சியாகி விட்டான்.



""தியேட்டரில் விசிலடிக்கும் ரசிகர்களுக்கு மத்தியில்தான் இந்தப் படத்தை பார்க்க வேண்டும்'' என சொல்லி அதன் பின் எந்த காட்சியையும் பார்க்கவில்லை. "களவாணி' படம் பார்த்து விட்டு விமலுக்கு வாழ்த்து சொன்னேன். ""தமிழ் படம்' முடிந்த பின் அடுத்த படத்தில் நடிக்கிறீங்க''ன்னு சொன்னேன். அதுதான் இது.



அர்விந்தும் என் நண்பன். அவனுக்கும் நல்ல பிரேக் வைத்திருக்கிறேன். நண்பர்களாக சேர்ந்து ஒரு படம் செய்யும் போது, கதைக்கு தேவையான விஷயங்களை கூடி பேச முடிகிறது. விமலுக்கு ஜோடி ரம்யா நம்பீசன். செம ஸ்கோர் கொடுத்திருக்கிறோம். அவங்க கண்களை உற்றுப் பார்த்தால் ஒரு சோகம் தெரியும். அது ஒரு நடிகைக்கு ரொம்பவே ஸ்பெஷல். அதை சரியாக நான் பயன்படுத்திருக்கிறேன்.



ரம்யாவின் கேரக்டருக்கு முதலில் பிடித்து வைத்திருந்தது விஜயலட்சுமியை. ஆனால் பழகிய விதம், ஸ்டைலான மேனரிஸங்கள் எல்லாமும் இடம் மாற்றி போட்டு விட்டது. இத்தனை வருஷம் பார்க்காத விஜயலட்சுமியை இதில் பார்க்கலாம். கிளாமரில் உச்சம் தொட்டிருக்கிறார். அவரே நினைத்தால் கூட இது மாதிரியான ஒரு கிளாமரில் இனி நடிக்க முடியாது. ஒவ்வொரு பாடலுக்கு வந்து ஆடி விட்டுப் போகும் சஞ்சனா சிங்குக்கு இதில் முக்கிய பாத்திரம். இவர்களையெல்லாம் திரைக்கதையின் புள்ளிகளாக வைத்து இணைத்திருக்கிறேன். படம் பார்த்து விட்டு சொல்லுங்கள், புது அனுபவத்தை.

http://www.kollytalk.com/wp-content/uploads/2011/12/Vijayalakshmi-hot-pic.jpg-large.jpg


ஒரு புறம் பார்த்தால் தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்டம் பற்றி மேடைக்கு மேடை முழங்குகிறார்கள். ஆனால் உங்களை மாதிரியான சில பேர் சினிமாவை சீரியஸாக கூட எடுத்துக் கொள்வதில்லையே? ஏன்?



எனக்கும் சீரியஸ் சினிமா பிடிக்கும். அதை எடுக்கிறவர்களையும் ரொம்பவே பிடிக்கும். ஆனால் அந்த மாதிரியான சினிமாவுக்குள் என்னால் போகவே முடியாது. இப்படித்தான் சினிமாக்கள் இருக்க வேண்டும் என எந்த கொள்கையும் எனக்கு கிடையாது. போகிற போக்கில் கதை கிடைக்கும். அப்படித்தான் "தமிழ் பட'த்தை பிடித்தேன். அதில் நிச்சயம் கதை கிடையாது.



 "ரெண்டாவது பட'த்தில் இருக்கும் கதை என்ன பாணியென்று நிச்சயம் தெரியாது. இதுதான் என் சினிமா புரிதல். "தமிழ் படம்' தயாரிப்பாளரை நிம்மதியாக தூங்க வைத்தேன். ஒவ்வொரு நிமிடமும் டென்ஷனாகி கிடந்த ரசிகர்களை அந்தப் படம் மூலம் சிரிக்க வைத்தேன். இது போதும். "பருத்தி வீரன்', "சுப்பிரமணியபுரம்' எடுத்தவர்களை பார்த்து பாராட்டி இருக்கிறேன். அது மட்டுமேதான் என்னால் செய்ய முடியும். என் பாதை வேறு. என்னை அப்படியே விட்டு விடுங்கள்


http://liveupdates.in/wp-content/gallery/rendavathu-padam-movie-stills/rendavathu-padam-movie-stills-12.jpg
.நிறைய கோலிவுட் ஸ்டார்களுக்கு "தமிழ் படம்' தந்த வருத்தம் இன்னும் இருக்குமே? ஒவ்வொரு நடிகரின் ரியாக்ஷன் எப்படி இருந்தது.




நிறைய பேர் இன்னும் வருத்தமாகத்தான் இருக்கிறார்கள். எங்கேயாவது பார்த்தால் கூட பேசமால் போகிறவர்களை பார்த்திருக்கிறேன். ஏன் என்னை மட்டும் குறி வைத்தீர்கள் என சில பேர் கேட்டார்கள். ""ஜாலியா ஒரு சினிமா. தேவைப்பட்டதை எடுத்துக்கிட்டோம். யாரையும் கஷ்டப்படுத்த எடுக்கலை''ன்னு சொன்னேன். இருந்தும் அவர்களுக்கு வருத்தம்தான். இன்னும் சில பேர். ""ரசித்து பார்த்தேன்''னு சொன்னார்கள். முதல் ஆளா பாரதிராஜா சார். "ஏய் என்னையே கிண்டல் பண்ணிட்டியாய்யா''ன்னு கேட்டார். பதில் சொல்ல தெரியாமல் நின்றேன். ""ஏன் என்னுடைய "அயன்' படத்தை கிண்டல் செய்யவில்லை என கே.வி.ஆனந்த் கேட்டார். இது மாதிரி நிறைய அனுபவங்களை "தமிழ் படம்' கொடுத்தது. சிலருடைய வருத்தங்களை வரப்போகும்"ரெண்டாவது படம்' மாற்றும் என்று நம்புகிறேன்
thanx - dinamani
http://gallery.oneindia.in/viewimage.php?module=ph&size=big&path=2012/10/&file=rendavathu-padam_134907398114.jpg