1980களில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் ஒரு புரட்சிகர மாணவரின் கதை இது என சொல்லப்படுகிறது . பா ரஞ்சித்தின் படங்களில் சில எப்படி ஜாதி வெறியைத்தூண்டுமோ அது போல இது தமிழன் -மலையாளி என இன வெறியைத்தூண்டும் படமாக அமைகிறது . நல்ல வேளை இது ஃபிளாப் ஆச்சு , ஹிட் ஆகி இருந்தால் ஆளாளுக்கு இன வெறிப்படங்களாக எடுத்துத்தள்ளி இருப்பார்கள்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் மற்றும் அவனது நண்பர்கள் சிலர் மூணாறில் வசிக்கிறார்கள் , அவர்களது அம்மா , அப்பா தேயிலைத்தோட்டத்தொழிலாளர்கள் . ஏழ்மை நிலையிலும் கல்வி கற்க மெரிட்டில் அவர்களுக்கு பாலக்காட்டில் உள்ள ஒரு அரசுக்கல்லூரியில் சீட்டுக்கிடைக்கிறது
அந்தக்காலேஜில் இரு பெரும் சங்கங்கள் உண்டு . இரண்டுமே அரசியல் பலம் மிக்கவை . ராகிங் என்ற பெயரில் அவர்கள் தமிழர்களைக்கேவலப்படுத்துகிறார்கள் , இதில் ஒரு மாணவர் உயிர் இழக்கிறார்.இதனால் வெகுண்டு எழுந்த நாயகன் அவர்களைப்பழி வாங்கக்கிளம்பும்போது காலேஜில் எலக்சன் அறிவிக்கப்படுகிறது
எலக்சனில் நின்று ஜெயித்து விட்டால் அவர்கள் கொட்டத்தை அடக்கலாம் என நாயகன் நினைக்கிறார். ஆனால் பெரும்பாலும் மலையாளிகள் படிக்கும் காலேஜில் அது நடக்குமா? தமிழர்கள் அங்கே 30 % கூட இல்லை
இதற்குப்பின் நாயகன் எடுத்த முடிவு என்ன? என்ன நடந்தது என்பதே மீதி திரைக்கதை
நாயகன் ஆக ஜி வி பிரகாஷ். தாடி, மீசை, பரட்டைத்தலையுடன் பிச்சைக்காரன் போல கெட்டப் . தமிழர்களின் அடையாளம் இதுதானா?இயக்குநரே தமிழர்களைக்கேவலப்படுத்துகிறார்.ஒரு மாணவன் கூட டீசண்ட் ஆக இல்லை , எல்லாருமே பொறுக்கி , ரவுடி போல காட்டுகிறார்கள்
நாயகி ஆக மமிதா பைஜூ அழகிய முகம் , நல்ல நடிப்பு , படத்தில் ஒரே ஆறுதல் இவர் தான் . ஆனால் இவருக்கு அதிக காட்சிகள் இல்லை .முக்கியமான தருணத்தில் இவர் நாயகனுக்கு ஆதரவாக இல்லை ., இந்த இரண்டு விஷயங்களும் பின்னடைவு
மெயின் கதை மாணவர் மோதல் , போராட்டம் , தேர்தல் என்று போனாலும் சைடு டிராக்கில் நாயகன் - நாயகி காதல் கதை மனம் கவர்கிறது
ராகிங் என்ற பெயரில் தெலுங்கு டப்பிங் படத்தை விட மோசமாகக்காட்சிகள் நகர்கின்றன.
வெற்றி கிருஷ்ணனின் எடிட்டிங்கில் படம் 141 நிமிடங்கள் ஓடுகின்றன .முதல் பாதி ரொம்பவே ஸ்லோ ., பின் பாதி பரவாயில்லை
பாடல்களுக்கான இசையில் ஜி வி பிரகாஷ் குமார் பாஸ்மார்க் வாங்குகிறார். பின்னணிக்கான இசை சித்து குமார் . ஆர் ஈ பி ஈ எல் ரிபெல் என தொடங்கும் பாட்டு ஓவர் டோஸ் . ரஜினி அல்லது விஜய் மாதிரி ஸ்டார்களுக்குத்தான் அது பொருந்தும்
அருண் ராதா கிருஷ்ணனின் ஒளிப்பதிவில் நாயகியின் அழகு பிரமாதமாக க்ளோசப் , லாங்க் ஷாட்களில் படமாக்கப்பட்டுள்ளது
ஏ பாரதி ராஜா , எஸ் பாலகிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் நிகேஷ்
சபாஷ் டைரக்டர் ( அறிமுக இயக்குநர் நிகேஷ் )
1 பாலைவனமாகப்போகும் அடிதடிக்கதையில் பாலைவனச்சோலையாய் நாயகி வரும் காட்சிகள்
2 இந்தப்படத்தின் மூலம் நீங்கள் புரட்சி நாயகன் முரளி போல , புரட்சிக்கலைஞர் விஜய்காந்த் போல ஆக்சன் ஹீரோ ஆகி விடலாம் என ஜி வி பி யை நம்ப வைத்து ஹீரோவாக புக் பண்ணிய சாமார்த்தியம்
ரசித்த வசனங்கள்
1 எங்கெல்லாம் ஒருவன் ஒடுக்கப்படுகிறானோ அவன் கரத்தைப்பலப்படுத்த முன் வருவதுதான் கம்யூனிசம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 சாதா மாணவர்கள் 10 பேர் எப்படி ரவுடிகளான 200 பேரை அடிக்க முடியும் ?
2 கொலையே நடந்தாலும் காலேஜூக்குப்போலீஸ் வராதா?
3 நாயகன் ஒரு காட்சியில்நம்ம கொடிக்கு ரெண்டே கலர் தான் இருக்கனும். சிவப்பு , கறுப்பு என்கிறார். ஆனால் கொடியில் வெள்ளை நிறத்தில் லெட்டர்ஸ் டிசைன்ஸ் வருது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் --ஓவர் வன்ம்முறை
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - இது ஒரு டப்பாப்படம், குப்பைப்படம் , விமர்சனத்துக்கான காரணம் யாம் பெற்ற துன்பம் பெறக்கூடாது இவ்வையகம் என்ற எண்ணமே . ரேட்டிங் மைனஸ் 1 / 5
கிளர்ச்சியாளர் | |
---|---|
இயக்கம் | நிகேஷ் ஆர்.எஸ் |
எழுதியவர் | நிகேஷ் ஆர்.எஸ் . ஏ. பாரதிராஜா பாலகிருஷ்ணன் எஸ் |
உற்பத்தி | கே.இ.ஞானவேல்ராஜா |
நடித்துள்ளார் | |
ஒளிப்பதிவு | அருண் ராதாகிருஷ்ணன் |
திருத்தியவர் | வெற்றி கிருஷ்ணன் |
இசை |
|
தயாரிப்பு நிறுவனம் | |
மூலம் விநியோகிக்கப்பட்டது | சக்தி திரைப்பட தொழிற்சாலை |
வெளிவரும் தேதி |
|
நேரம் இயங்கும் | 141 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |