Showing posts with label ராதிகா ஆப்தே. Show all posts
Showing posts with label ராதிகா ஆப்தே. Show all posts

Friday, June 20, 2014

வெற்றிச்செல்வன் - சினிமா விமர்சனம்

 




ஹீரோ  9 வயசுலயே  ஒரு விபத்துல  தன் கண் எதிரே  தங்கையைப்பறிகொடுத்ததால் மன நலம் பாதிக்கப்பட்டு  ஒரு மன நலக்காப்பகத்தில்  சேர்க்கப்படறார்.  20 வருஷம் அதே காப்பகத்தில்  இருக்கார். குணமாகலை.குணாவாத்தான் இருக்கார். அந்த காப்பக இன்சார்ஜ்  டாக்டர்  ரிட்டயர் ஆகிடறார். அவர் நல்லவர் . பொதுவா நல்லவங்களுக்கு  சீக்கிரம் பணி காலம்  முடிஞ்ச்டும். புது டாக்டர் வர்றார்/.இவர் பெரிய  வில்லன் . 

வெளி நாடுகள் ல சில ஆஃபர் வருது . குறிப்பிட்ட மனித உடல் உறுப்புக்ளை  லட்சக்கணக்கில் பணம்  கொடுத்து வாங்கிக்க ஆள் ரெடியா இருக்காங்க வில்லன் அந்த டீலிங்க் ல இருக்கும்போது இன்னொரு  டாக்டர் வந்து சேர்றார்.  திமுக - காங்கிரஸ் கூட்டணி மாதிரி 2 பேரும் சேர்ந்து எல்.லா  மொள்ளமாரித்தனமும் பண்றாங்க . 

மன நலக்காப்பகத்தில்  15 வயசுப்பொண்ணு  இருக்கு . அது மேல வில்லனுக்கு  ஒரு கண் . இந்த மேட்டர் காப்பக வார்டனுக்கு  தெரிஞ்சு அதை ஹீரோ கிட்டே சொல்லி அந்தப்பொண்ணை காப்பாத்த சொல்றார் . ஹீரோ காப்பாத்தப்போகும்போது ஆல்ரெடி அந்த  டாக்டர்  கொலை ஆகி இருக்கார் . ஸ்பாட்லயே ஹீரோவை  பிடிச்சிடறாங்க . அவர்  தான்  கொலையாளிங்கறாங்க . 

டாக்டரைக்கொன்னது யார்? என்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் தான்  இந்தப்படம் . 




கோ பட வில்லன் அஜ்மல் தான் இதுல  ஹீரோ .  குறை  சொல்ல  முடியாத நடிப்பு. பல இடங்களில்  பாஸ் மார்க் வாங்கிடறார் 

 கர்லிங்க் ஹேர் கட்டழகி , அடர் புருவ இடர்  அருவி அழகி  ராதிகா ஆப்டே தான் நாயகி . பார்க்கும்போதே மனசில் பல இடர்பாடுகள் அருவி மாதிரி தோன்றுவதால் இடர் அழகினு பேரு ( யார் வெச்சாங்க? நானே வெச்சுக்கிட்டேன் ) டிரஸ்சிங்க் சென்ஸ் எல்லாம் பக்கா . க்ளோசப்  ஷாட் , லாங்க் ஷாட் எல்லாத்திலும் அழகு தான் . நடிக்க எல்லாம் வாய்ப்பில்லை . கிரிமினல்  லாயர்னு இவங்களா படத்தில்  சொல்லிகாறாங்க . ஒரு சீனில்  கூட இவர் கோர்ட்ல வாதாடவே  இல்லை . 


அழகம் பெருமாள்   பிரமாதமான நடிப்பு . க்மலக்கிட்டார் . தலை வாசல்  விஜய்  வில்லன் ரோல்  , குட் . அவர்  கூட வரும்  இன்னொரு டாக்டர் கூட பக்கா  பொறுக்கி மாதிரியே தத்ரூபமா பண்ணி இக்ருக்கார் . 


ஹீரோவின் நண்பரா பாடகர் மனோவும்  , இன்னொருவரும்  வர்றாங்க . ஓக்கே .  மனோ வை இன்னும் நல்லா பயன் படுத்தி இருக்கலாம் . 


 பாடல்கள்  மதன் கார்க்கி . பெயர்  சொல்ல 2 பாட்டு நல்லா  வந்திருக்கு . இசை அழகன்  புகழ் மரகத மணி . பின்னணி  இசைல  காதை பதம் பார்க்கறார் . பின் பாதி  திரைக்கதையில்   பி ஜி எம் தன் வேலையை  செவ்வனே செய்கிறது 




இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. ரெண்டு  வருசமா  கிடப்பில்  கிடந்த படத்தை  எப்படியோ   தக்கி  முக்கி  இப்பவாச்சும் ரிலிஸ்  செஞ்சது 

2  ராதிகே ஆப்டே , சஞ்சனா , அந்த 15 வயசுப்பொண்ணு  என  கண்ணுக்கு  இளமையான  ஃபிகர்க்ளை  குளிர்ச்சியா காட்டியது 

3   இடைவேளைக்குப்பின் வரும்   திரைக்கதையில்  செம ஸ்பீடு .  எடிட்டிங்க் பக்கா .


4   விட்டு  விட்டுத்தூவும் வெட்கம் கெட்ட வானம் பாடல் வரிகள் அருமை . படம் ஆக்கப்பட்ட  விதமும்  குட் . இதய்மே தீண்டும்  எரிதணல்  நீ  பாட்டு நடன அமைப்பு  குட் 

5  திடீர் என வரும்   நிலச்சரிவு காட்சிகள் தத்ரூபமான  படப்பிடிப்பு


6  மெக்கானிக்  ஷாப் ஓனராக  வரும் சலக்கு சலக்கு சிங்காரி சஞ்சனா வின் மிதப்பு மினு மினுப்பு . அவருக்கான  க்ளோசப் காட்சிகள்   கேமராமேனின்  நுடபமான அறிவைக்காட்டுகிறது


7   க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட் அபாரம் / . இவர்  தான்  வில்லன் என்பது  யூகிக்க முடியாத  திருப்பம்



இயக்குநரிடம் சில கேள்விகள் 


1. கிட்டத்தட்ட 20 வருஷம் மன நலக்காப்பகத்தில்  கொடுமையை அனுபவிச்ச  ஹீரோ  சரியா சாப்பாடே  கிடைக்காதவர் சேது  விக்ரம் அளவுக்கு  இல்லைன்னாலும்  ஓரளவாவது  இளைச்சு காட்டக்கூடாதா? அவர் என்னடான்னா தில் விக்ரம் மாதிரி  கும்முனு இருக்கார் . 


2    வில்லன் அந்த  15 வயசுப்ப்ப்பொண்ணு  மேல கண் வைக்கறான் . டக்னு  மேட்டரை  முடிக்காம நாள் நட்சத்திரமா பார்த்தான் ? ஏன் அவ்வளவு  லேட் ? 


3  முதல்  பாதி  திரைக்கதை  சரியான சொதப்பல் . பொறுமையை ரொம்பவே சோதிக்குது . கஞ்சா  கறுப்பு  மொக்கை காமெடி  ஷப்பா ., முடியல 


4  கிரிமினல்  லாயரான  ஹீரோயின்   ஹீரோ மேல் லவ் எதுக்கு வருது ? அவர் ஏன் கேனம் மாதிரி கெக்கெ பிக்கேனு சிரிச்சுட்டே இருக்காருனு  தெரியலை . எந்த  லேடி லாயர் இப்படி ஸ்லீவ் லெஸ்  சுடி  போட்டுட்டு லோ ஹிப் ல கோர்ட்ல சுத்திட்டிருப்பாங்கன்னும்  தெரியலை 


5  படத்தில் வரும் அந்த  நிலச்சரிவுக்காட்சி  எதுக்கு ? படத்தோட  மேட்சே ஆகலையே ? 


6 சொத்துப்பத்திரத்தில்  சைன் பண்ண மறுக்கும்  லூஸ் அப்பாவை கொலை செய்ய மகனே  ஏற்பாடு  செய்வதும் அதுக்கு டாக்டர் அவ்வளவு கஷ்டப்பட்டு   தலையணை அமுக்கி  கொலை செய்வதும்    தலையை சுத்தி காதைத்தொடும்  வேலைகள்




மனம் கவர்ந்த வசனங்கள்

1. வாழ்க்கையை எப்பவும் ரசிச்சு வாழனும்.கல்யாண விஷயத்துல மட்டும் காம்ப்ரமைசே பண்ணிக்கக்கூடாது # வெ செ


2   கொலைக்கேஸ் ல சின்ன கேஸ்  , பெரிய கேஸ்-னு  2  இருக்கா ? எப்படி ?


 கோர்ட்ல வாதாட வக்கீலுக்குக்கூட ஃபீஸ்  தர பணம் இல்லாதது சின்ன கேஸ் , லட்சக்கணக்கான பணம்  கொடுத்து  செஞ்ச  தப்பை மறைச்சா  அது  பெரிய கேஸ்


3  ஏய் , எப்பவும்  என் கோபம் எல்லாம்  மத்தவங்க  கிட்டேதான் , உன் கிட்டே இல்லை


4   டூ  வீலர்  ஓட்டத்தெரியாதா ? அடடா. கல்யாணத்துக்கு முன்னால எல்லாம் கத்துக்குங்க


 எல்லாம்னா ?

 எல்லாம் தான்


5  பைக் ல காதலனை கட்டிப்பிடிச்சுக்கிட்டே  போக  எல்லா பொண்ணுங்களுக்கும்  பிடிக்கும்   ( சி பி = பெட்ரோல் காசு யார் தருவா? )





படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S

1. இயக்குநர் ராஜேஷ் குமார் ரசிகர் போல.காதல் கலாட்டா அத்தியாயம் 1 ,க்ரைம் சேப்டர் 2 னு மாத்தி மாத்தி ரயில் ஓடுது # வெ செ

2. ஹீரோயின் பேரு ராதிகா ஆப்டே .(மத்தியானத்தில்) ராதிகா ஆப் நைட் ( விளக்கு வெச்ச பின்) # வெ செ

3. ஹீரோ மொக்கை ஜோக் சொல்லும்போது சிரிக்கும் ஹீரோயினைக்கூட மன்னிக்கலாம்.ஆனா ஹீரோ எதுவுமே பேசாதப்பக்கூட கெக்கேபிக்கே னு சிரிக்குது

சி பி கமெண்ட் -வெற்றிச்செல்வன் = மனநலக்காப்பக முறைகேடுகளின் பின்னணியில் ஒரு க்ரைம் த்ரில்லர் - விகடன் மார்க் =40 ,ரேட்டிங் = 2.5 / 5 (முதல் பாதி இழுவை)




எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 40





குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் =  2.5/5




Embedded image permalink

  பெரம்பலூர் சுவாமி  டீலக்ஸ் தியேட்டர்


டிஸ்கி =

வடகறி - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2014/06/blog-post_591.html



நேற்று இன்று - சினிமா விமர்சனம் 

http://www.adrasaka.com/2014/06/blog-post_5435.html  

சூறையாடல் - சினிமா விமர்சனம்

 

http://www.adrasaka.com/2014/06/blog-post_7814.html