Showing posts with label ராஜூ முருகன். Show all posts
Showing posts with label ராஜூ முருகன். Show all posts

Friday, March 21, 2014

குக்கூ - சினிமா விமர்சனம்



விழி ஒளி இழந்தவர்களின் காதலைச்சொல்வது, அவர்கள் வாழ்க்கையில் படும் துன்பங்களை ஜனரஞ்சகமாகச்சொல்வது  தமிழ்  சினிமாவில்  மிக அபூர்வமாகவே நிகழ்ந்திருக்கிறது. தனது வாழ்நாட்களை சினிமாவுக்காகவே அர்ப்பணித்த ஜீவ கலைஞன் , கலை வித்தகன் கமல் ஹாசன் தனது 100 வது படமான ராஜ பார்வையில் பிரமாதப்படுத்தி இருந்தும் பெரிதாக வெற்றி பெறவில்லை . பணத்துக்காக நடிக்காமல் தன் உடலை வருத்தி அந்த கேரக்டராகவே வாழும் விக்ரம் -ன் காசி படம் விமர்சகர்களிடையே பாராட்டைப்பெற்றாலும் தமிழ் ரசிகனின் கமர்ஷியல் பாதையில் பயணிக்க முடியவில்லை. அதே போல்  வினயன் -ன்  என் மன வானில் படம்  கூட மாற்றுத்திறனாளிகளின் காதலைச்சொல்லித் தோல்வி அடைந்த படமே. கிராமத்து மண் வாசனைக்கலைஞன் பாரதி ராஜா தனது லட்சியப்படமாகச்சொல்லிக்கொண்ட காதல் ஓவியம் இசை ஞானியின் அட்டகாசமான பங்களிப்பு  இருந்தும் வாகை கொள்ள முடியவில்லை



.இவர்கள் வரிசையில் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் வட்டியும் , முதலும்  தொடர் மூலம் லட்சக்கணக்கான வாச்கர்களைக்கட்டிப்போட்ட  சொல் வித்தகன் , அனுபவப்பெட்டகன் ராஜூ முருகன் -ன் குக்கூ  இது வரை தமிழ்  சினிமாவில்  சொல்லப்படாத  ஒரு திரைக்கதை  யுடன் வந்திருக்கிறார் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது ,ஆனாலும் இவர் ஒரு நல்வரவே!விக்ரமன் போல் மனிதர்களை பாசிட்டிவாக காட்டும் , பெண்களை உயர்வாக சித்தரிக்கும் வெகு சில இயக்குநர்களில் இவரும் ஒருவர்

ஹீரோ , ஹீரோயின்  இருவரும் விழி ஒளி இழந்தவர்கள். யதார்த்தமாகப்பழகும் இவர்கள் வாழ்வில் இரு காதல். ஹீரோ ஹீரோயினை லவ்வறார். ஹீரோயின்  கண் பார்வை உள்ள ஒருவரைத்தான் மணக்கனும்னு லட்சியத்தோட இருக்கார். ஹீரோயின்  கூடப்பழகும் இன்னொருவர் நட்பை காதல் என நம்பி ஏமாறுகிறார். ( மனதளவில் தான் ) பின்  ஹீரோவின் காதலை ஏற்றுக்கொள்கிறார்.





ஹீரோயினுக்கு  ஒரு அண்ணன். ஹீரோயினுக்கு அரசு வேலை ரெடி பண்ண 3 லட்சம் ரூபா தந்து உதவும் ஒரு வில்லன்.அதுக்கு பிராயசித்தமா ஹீரோயினை ,மணக்கனும்னு கண்டிசன் .

அந்த 3 லட்சத்தை ஹீரோ பல பக்கம் புரட்டி கொண்டு வர்றார். இருவரும் சேர்ந்தாங்களா? உண்மைக்காதல் ஜெயிச்சுதா என்பதை வெண் திரையில் காண்க.


இயக்குநர்  ராஜூ முருகன் கதை சொல்லியா ஓப்பனிங்க் ல வந்து அவரே கதை சொல்றார். மிக நிதானமான திரைக்கதை உத்தி . நெஞ்சை கனக்க வைக்கும் காட்சிகளில் இயக்குநர் சேரன் -ன் முத்திரை .முதல் படம் என்ற அளவில் 60 மார்க் வாங்கி முதல் வகுப்பில் பாஸ் ஆகிறார் .


நாயகன்  அட்டக்கத்தி தினேஷ்  விழி ஒளி இழந்தவராக  ரொம்ப சிரமப்ப்ட்டு நடித்திருக்கிறார்.இவரது உழைப்பில் எந்தக்குறையும்  இல்லை. ஆனால் விழி ஒளி இழந்தவர் எனறால் இப்படித்தான் இருக்கனும் என்ற க்ளிஷேக்கள் சலிப்பு . இப்பவெல்லாம் அவங்க எவ்வளவோ அப்டேட்டா இருக்காங்க .



நாயகி மாளவிகா அசால்ட்டா அமைதியா நடிச்சு நடிப்பில் இப்படத்தில்  முதல் மார்க் வாங்கறார். பல வருடங்களா கட்சி நடத்தி  வை கோ  7 சீட் , மது விலக்கை ஆதரித்து பல நன்மைகள் செய்த டாக்டர் ராம் தாஸ் க்கு 8 சீட் என கொடுத்த பிஜேபி அசால்ட்டா கேப்டனுக்கு 14 சீட் கொடுத்து அவரைத்தூக்கிக்ல்கொண்டாடுன மாதிர் தமிழ் சினிமா ரசிகர்கள் , மீடியாக்கள் இவரைக்கொண்டாடப்போகுது . அட்டகாசமான நடிப்பு . ஒரு சீனில்  கூட ஓவர் ஆக்டிங்க்  இல்லை . குறிப்பாக  பெண்ணுக்கே உரிய ஜாக்கிரதை உணர்வுகளை அவர் வெளிப்படுத்தும் காட்சிகள் சபாஷ் போட வைக்கின்றன. ஒப்பனை இல்லாத அவர் முகம் சந்தனம் தடவிய நந்தியா வட்டப்பூப்போலே  ஜொலிக்கிறது


ஹீரோவின் நண்பராக வருபவரின்  குணச்சித்திர நடிப்பு கலக்கல் . விஜய் , அஜித் , சந்திரபாபு , எம் ஜி ஆர் மாதிரி வருபவர்கள்  ஓப்பனிங்க் கொண்ட்டாட்டத்துக்கு பக்க பலம்




இய்க்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள் 


1.   நாயகி   தான் விரும்பிய ஆள் தன்னை த்னியாகப்பேச அழைத்து வந்த போது இவர் தான் நான் கட்டிக்கப்போகும் பெண் என அறிமுகப்படுத்தும்போது அவர் முக பாவனை , பின் அந்த லேடி என்னோட பழைய துணிகள் எல்லாம் வாஷ் பண்ணி அ யர்ன் பண்ணி வெச்சுத்தந்திருக்கேன் , டேக் இட் எனும்போது அவர் காட்டும் எக்ச்ஸ்பிரசன் அபாரம் . அந்தக்காட்சியில் சொல்ல மறந்த கதையில் சேரன்  தன் தம்பிக்கு செருப்பு தரும் காட்சிக்கு நிகரான பாதிப்பு


2  ஃபேஸ் புக்கில் லைக்ஸ் வாங்குவதற்காக போலியான சமூக அக்கறைவாதிகளை அடையாளம் காட்டும் விதம்


3  நாயகன் தன் நண்ப்ர்கள் முன் மார்க் போட்டு ஒப்பீடு செய்யும் காட்சியில் நாயகியின் மன வேதனை அபாரம்


4  பாடல் காட்சிகள் எல்லாம் 3 நிமிடக்க்விதை கள்
பின்னணி இசை  குட்





இயக்குநரிடம்  சில கேள்விகள் 


1. வில்லன் நாயகியை அடைய 3 லட்சம் பணம்  தர்றான்/ நாயகன் அந்தப்பணத்தை தந்துடறேன் என்றதும் அவன் எப்படி அதை ஒத்துக்குவான் ? அவனோட டார்கெட் நாயகி தானே? பணம் இல்லையே ?


2  நாயகியின் அண்ணன்  தன் மனைவியிடம்   கவனமா இவளைப்பார்த்துக்க , ஓடிடுவா என எச்சரித்துச்சென்ற பின்னும்  அசால்ட்டா அண்ணி  தூங்குவ்து ஏனோ? திமுக வின் கூட்டணிக்கதவுகள் 24 மணி நேரமும் திறந்தே இருப்பது மாதிரி பெட்ரூமை சாத்தாம வெச்சிருப்பது  எப்படி ?


3 க்ளைமாக்ஸ் காட்சியில்  மூன்றாம் பிறை க்ளைமாக்ஸ் வாசம்  தூக்கல் . ரயில் நிலையத்தில் நாயகன்  ஓடி வரும்போது  கம்பத்தில் இடிப்பது எல்லாம் டிட்டோ


4  பருத்தி வீரன் க்ளைமாக்ஸ் மாதிரி லாரி டிரைவர் நாயகியை அடைக்கலம் கொடுத்துக்கூட்டிச்செல்வது  அதே  வண்டியில் நாயகன் வருவது எல்லாம்  நம்ப முடியவில்லை


5  பின் பாதிக்காட்சிகள்  இழுவை . அதுவும் க்ளைமாக்ஸை   ரொம்ப சுத்த விட்டு ரசிகர்களை ஏங்க விட்டு சுப முடிவைத்தர படாத பாடுபட்டிருக்கிறார்

6  ஓப்பனிங்க் காட்சியில் வரும் நடன நாட்டியக்குழு கலாய்ப்புகளில் நான் கடவுள் பாதிப்பு அதிகம்,

7 படம்  முழுக்க நாயகியை கண்ணியமாகக்காட்டி விட்டு கிரிக்கெட் ஆடும் காட்சியில் வலியனா ஒரு கிளாம்ர் காட்சி ஏனோ? அவர் குனிந்து பந்தை எடுப்பது  சென்சாரில் கட் பண்ண வேண்டிய காட்சி




நச் வசனங்கள் 


1. சாரி சார்.என் பேமிலி கொஞ்சம் பெருசு. 



ஹூம்.பெருசு தான்.கஷ்டம் தான் # குக்கூ டபுள் மீனிங்


2 ஒவ்வொரு ஆணும் வீட்டுக்கு வெளில புரட்சித்தலைவர் ,வீட்டுக்குள்ளே வந்துட்டா நடிகர் திலகம் # குக்கூ டயலாக் டேக்கன் fரம் ட்விட்டர்


3 இந்தியாவோடமுக்கியப்பிரச்சனை 1 பவர் கட் 2 ஜனத்தொகை.2 க்கும் சம்பந்தம் இருக்கு .லைட் ஆf் ஆனதும் எப்டியாவது ஒரு எமர்ஜென்சி லைட் ஏத்திடுங்க


4 காரைப்பார்த்தும் ,மாரைப்பார்த்தும் வர்ற காதலுக்கு மத்தில பார்க்காம ஒரு காதல் # குக்கூ


5 விழி இல்லா உனக்கு ஒளி ஆவேன்.தமிழ் மொழி ஆவேன் # குக்கூ


6 நான் டோனி மாதிரி.கீப்பிங் மட்டும் இல்லை.கேப் ல பவுலிங்கும் போடுவேன் # குக்கூ டபுள் மீனிங்


7 அவனவன் 15 வயசுலயே பக்குவம் ஆகிடறான்.21 வயசு வரை எவன் வெயிட் பண்றான் ? # குக்கூ உள் குத்து


8 நம்மை ஒருத்தர் லவ் பண்ணது நமக்கு கடைசி வரை தெரியாமயே போய்டக்கூடாது # குக்கூ ராக்ஸ்


9 கிறுக்குத்தனமான சாகசங்கள் செஞ்சா பொண்ணுங்களுக்குப்பிடிக்கும்.நமக்காக இதெல்லாம் செய்யறானேனு அவனை விட்டுப்போகவே மாட்டாங்க # குக்கூ

10 பெரிய அண்ணனுக்கு எல்லாம் பவர் இல்லடா.சின்ன அண்ணன் கிட்டே தான் எல்லாப்பவரும் # குக்கூ திமுக உள்குத்தல்கள்

11 தேன் எடுத்துட்டு வந்தது தினேஷ் ,தேனை நக்குனது கணேஷ் னு ஆகிடக்கூடாது # குக்கூ

12 டேய்.என்னை கை விட்ராதடா.  


விட்ராத விட்ராதன்னா எவனாவது உசுரை விட்ருவானா? #குக்கூ


13 உண்மைக்காதலில் மாற்றங்கள் நிகழ்வதில்லை # குக்கூ


14 பொண்ணோட வலியைப்பூரணமா புரிஞ்சுக்கிட்டவன் இந்த பூலோகத்துலயே இல்லை # குக்கூ


15 பொண்ணுங்க கிட்டே போட்டியை உண்டாக்கிட்டே இருக்கனும். காவியக்காதலுக்கு ஐடியா குடுன்னா கணிகைக்காதலுக்கு ஐடியா தர்றியா? # குக்கூ





படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ் 

1. நேற்று சிட்டுக்குருவி தினம்.இன்று குக்கூ தினம் # ராஜூ முருகன் ராக்ஸ்


2 இளையராஜா வின் பல பாடல்களுடன் ராஜூ முருகன் ன் குக்கூ ஓப்பனிங் அசத்தல்கள்


3 ராஜூ முருகன் ன் இயக்கத்தில் பாலா நான் கடவுள் ஸ்டைல்


4 விஜய் ,அஜித் இருவரையும் மரண கலாய் # தியேட்டர் அதிர்கிறது # குக்கூ


5 பிரபல ஹீரோக்களின் முகச்சாயலில் நடன நாட்டியக்குழுவினர் மூலம் கதை சொல்வது இயக்குநர் சாமார்த்தியம் # குக்கூ


6 கல் வீசிய குளத்தின் அலை போல மெதுவாக நகரும் அழகான திரைக்கதையில் ரசிகர்கள் காட்சிக்கு காட்சி ரசித்து கை தட்டுகிறார்கள் #குக்கூ


7 ஹா ஹா இதுவரை சோகம் வர்லை.வாழ்விலும் சினிமாவிலும் பின் பாதியில் தான் : கர்ச்சீப் எடுத்துட்டு போகவேண்டிய அவசியம் இருக்குமா?"


8 அழகான காட்சிகள் வரும்போதெல்லாம் இளையராஜாவின் முன் தின ஹிட்ஸ் BGM ஒலிப்பது இதம் # குக்கூ


9 பிரபல ஹீரோக்கள் கால்ஷீட் கேட்டுக்கிடைக்கவில்லை எனில் அதைப்படத்தில் வைக்கும் கலாய்ப்புக்காட்சிகள் மூலம் பழி தீர்த்துக்கொள்கிறார்கள்

10 85 நிமிடங்கள் பெரிய சோகம் ஏதும் இல்லாமல் கழிந்தது @ குக்கூ இடைவேளை.இயக்குநர் பாஸ்


11 பெண்களைக்கலாய்க்கும் வசனங்கள் ,காட்சிகள் 1 கூட வைக்காதது இயக்குநரின் டார்கெட் லேடி ஆடியன்ஸ் என்பதை உணர்த்துகிறது





சி பி கமெண்ட் - குக்கூ - களிப்பூட்டும் முன் பாதி ,லேசாக சலிப்பூட்டும் பின் பாதி-வசனம் ,இயக்கம் ஜொலிப்பு-ஏ செண்ட்டர் ஆடியன்சைக்கவரும். பி சி யில் சரியாப்போகாது , பெண்கள் விரும்பிப்பார்ப்பார்கள்


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 43 

குமுதம் ரேட்டிங்க் = நன்று 

ரேட்டிங் =3 /5

பெரம்பலூர் ராம் தியேட்டரில் படம் பார்த்தேன் , செம கூட்டம்