ராஜா ராணி - லவ்பெயிலியர்-பேமிலி எண்டர்டெயினர்
அட்லிக்கு வாழ்த்துகள் சொல்லி ஆரம்பிப்போம்!
”There is a love after love failure
There is a life after love failure” இதான் படத்தோட டூ லைனர்!(ரொம்ப புதுசா இருக்குல்ல)
இத தான மெளனராகம் படத்துல மணிரத்னம் சொன்னாரு.. (இப்பெல்லாம் தமிழ் படத்துல இருந்தே சுட ஆரம்பிச்சுட்டாங்கே) ரேவதிக்கு ஒரு லவ்ஸ்டோரி இருந்த மாதிரி மோகனுக்கு ஒரு லவ் ஸ்டோரி இருந்து ரெண்டையும் சேர்த்தா ராஜா ராணி படம்!
படம் எடுக்குறதுல comfort zone, safe zone சேர்த்து தெளிவா தேர்ந்து எடுத்திருக்காப்ல அட்லி.. எப்படியும் லவ்பெயிலியர் கோஷ்டி, லவ் பண்ற கோஷ்டி, லவ் ப்ளாப் ஆகி கல்யாணம் ஆன கோஷ்டி இந்த மூணு கோஷ்டில எல்லாம் குரூப்பும் வந்திருச்சா...(இவிங்கல டார்கெட் வச்சா போதும்ல)
அடுத்து காஸ்டிங்ஸ் நயன்தாரா, நஸ்ரியா (எல்லா பயலும் வாய பொழந்துட்டு வந்திருவாங்கே)
ஹீரோ ஆர்யா, ஜெய் (புள்ளைகளும் ஆர்யாடி,ஜெய்டி, க்யூட்டி, சார்மிங்டினு கெளம்பி வந்திரும்ங்க)
காமெடிக்கு சந்தானம் (இப்ப எல்லா பயலும் வந்திருவாங்கே)முடிஞ்சா.. அப்ப கண்டிப்பா ஹிட்!
பொதுவா 2 ஹீரோ, 2 ஹீரோயின் இருந்தா அதுல ஒரு ஹீரோ, ஒரு ஹீரோயின் தமிழ் சினிமா வழக்கபடி சாகனும்.. இங்கயும் இதே நடக்குது அப்புறம் மோகன்-ரேவதி மாதிரி மொறைச்சிட்டு திரியுறாங்க நயனும் ஆர்யாவும்!
ஃபர்ஸ்ட் ஆஃப் ஜெய் வந்து போற அரைமணி நேரம் நல்லா போச்சு படம்! ஜெய் வர்ற சீன் எல்லாம் அழுதுட்டே(கண் வேர்த்துட்டே) இருந்தாலும் நம்ம எல்லாரையும் சிரிக்க வைக்கிறாப்ல! குட் வொர்க் ப்ரோ!
நயன்தாரா கொஞ்ச வெயிட் போட்டு கொலுக் மொலுக்னு இருக்கு (தமிழ் சினிமாவுக்கு ஒரு நமீதா போதும் தாயி) ரொம்ப வெயிட் போட்டா பார்க்க பயமாயிருக்கு!
செகண்ட் ஆஃப் சந்தானம் தான் படத்த கொஞ்சம் நல்லா கொண்டு போனாப்டி!
நல்ல கவுண்டர், நல்ல ஒன்லைன் வசனம்னு சந்தானம் வர்ற சீன்ஸ் ஓகே!(சந்தானம் இல்லாட்டி படம் வரட்டு மொக்க)
பட்டத்துயானைனு ஒரு மொக்க படத்துல நடிச்சதுக்கு இது எவ்வளவோ பெட்டர்!
படம் ரொம்ப ஸ்லோவ் இந்த மாதிரி கதைகளுக்கு திரைக்கதை+மியுசிக் தான் வலு கொடுக்கும்! இங்க அந்த ரெண்டுமே மைனஸ்! காலம் காலமா பார்த்த சீன்ஸ் தான்!
க்ளைமாக்ஸ்ல தேவையே இல்லாம செத்துபோனதா சொல்லும் ஜெய்’ய திரும்ப வர வச்சு ஆர்யா போய் பேசுற மாதிரி ஒரு வெட்டி க்ளைமேக்ஸ்
அதாவது பாக்யராஜின் மெஹா ஹிட் வசனமான “என்ற காதலி உன்ற மனைவியாகலாம் பக்ஷே உன்ற மனைவி என்ற காதலியாக முடியாது” டயலாக்க சொல்லாம சொல்லிட்டு போறாராம்! உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
மொத்ததில் படம் “ஒகே”
2.5/5 கொடுக்கலாம் அதுவும் சந்தானத்துக்காக!
அட்லி பாஸ் நீங்களும் உங்க குரு மாதிரி அரைச்ச மாவையே அரைக்காம புதுசா எதாவது மக்களுக்கு குடுங்க!
நன்றி - திருட்டுக்குமரன் , பெருங்காயம்