Showing posts with label ராஜபக்சே. Show all posts
Showing posts with label ராஜபக்சே. Show all posts

Sunday, May 25, 2014

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சே வருவதை தவிர்க்க முடியாது: வெளியுறவு முன்னாள் செயலாளர் ரோனன் சென் பேட்டி

புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வதை தவிர்க்க முடியாது என மத்திய வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர் ரோனன் சென் கூறியுள்ளார். அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கான இந்திய தூதராகவும் பணிபுரிந்த அவர், 'தி இந்து'வுக்கு அளித்த சிறப்பு பேட்டி: 



நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு பல நாட்டு அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது குறித்து தங்கள் கருத்து... 



நம் நாடு சுதந்திரம் பெற்ற பின் முதன்முறையாக இதுபோன்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வேறு எந்த நாட்டின் அதிபர் பதவி ஏற்பிலும் இதுபோல் மற்ற நாடுகளின் அதிபர்களுக்கு அழைப்பு விடப்பட்டது இல்லை. இதன் நோக்கம் பிரதமர் பதவியின் முக்கியத்துவத்தை அதிகப் படுத்துவதாக இருக்கலாம். இதுபோல் வேறு என்ன காரணம் என்பதை, அதை முடிவு செய்தவர் கள்தான் சொல்ல வேண்டும். 



ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்காமல் இருந்திருக்க முடியாதா? 




ராஜபக்சே, சார்க் நாடுகளின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டு விட்டதால், அவருக்கு அழைப்பு விடுக்காமல் இருக்கவே முடியாது. அவரது வரவை புதிய பிரதமர் பதவி ஏற்பு விழாவில் தவிர்க்க முடியாது. ஒருவேளை நம் அண்டை நாடுகளுக்கு மட்டுமான அழைப்பு என்றாலும் ராஜபக்சேவை தவிர்க்க முடியாது. இதில் அவரை தவிர்த்தால், சீனா போன்ற நாடுகளுடன் இலங்கை தன் நெருக் கத்தை வளர்த்துக் கொள்ளும். 



ராஜபக்சேவை அழைத்ததன் மூலம் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை புதிதாக அமையும் அரசு கவனத்தில் கொள்ளவில்லை எனக் கூற முடியுமா? 




இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் தமிழகத்து மக்களின் உணர்வுகள் கண்டிப்பாக மதிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. ஆனால் இந்த விஷயத்தில் அதைச் செய்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஏனெனில், சார்க் நாடுகளின் அதிபர்களுக்கு அழைப்பு விடுப்பது என்பது அடுத்து ஆட்சி அமைக்கவிருக்கும் கட்சியான பாஜகவின் கொள்கை முடிவாக உள்ளது. இதில் நம் எதிரிநாடாகக் கருதப்படும் பாகிஸ்தான், ஊடுருவல் உட்பட பல பிரச்சினைகளுக்காக பாஜகவின் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதில் இலங்கையை மட்டும் புறக்கணிப்பது என்பது சாத்தியமாகாது. 



இதற்காக, சார்க் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கும் முடிவை எடுக்காமல் இருந்திருக்கலாமே? 


இந்த விஷயத்தை அவ்வளவு ஆழமாக எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம், இது ஒரு சடங்கு போன்ற பதவி ஏற்பு விழா மட்டுமே. இதில், எந்தவிதமான முக்கியப் பேச்சுவார்த்தையோ புதிய ஒப்பந்தங்களோ போடப் போவதில்லை. மாறாக, இந்த விழாவின் பெயரிலான சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு நல்லெண்ணத்தை வளர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 



இதனால், தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் நியாயம் இல்லை என்கிறீர்களா? 



நான் அப்படிச் சொல்லவில்லை. 2007-ல் இலங்கை படுகொலைகள் நடந்தபோது உலகம் முழுவதும் அமைதி நிலவியது. அப்போது அங்கு நடந்த படுகொலைகள் மீதான கண்டிப்புகள் எழவில்லையே... 



நம் நாட்டின் ஒரு சிறிய பகுதியில் சிறிய மாநிலமான தமிழகத்தின் பிரச்சினை இது எனக் கருதி பாஜகவினர் கருத்தில் கொள்ளாமல் இருந்து விட்டார்களா? 



எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் மூலை, முடுக்கில் நடக்கும் பிரச்சினைகளும் கண்டிப்பாகக் கருத்தில் கொள்ளப்படும். இலங்கை யின் வட மாகாணத்தில் ஒரு தமிழர் முதல்வராக தேர்தெடுக்கப்பட்ட போது அங்குள்ளவர்கள் நம் பிரதமருக்கு அழைப்பு விடுத்தனர். அங்கு பிரதமர் செல்லாமல் இருந் தது, வட மகாணத்தின் தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் போனதாக ஆகாதா? எனவே, ஒரு நாடு என்பது, அதன் அரசியல் பிரச்சினை, கொள்கைகள், நாட்டின் அமைதி, கவுரவம் எனப் பலவற்றையும் கொண்டது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது ஜெய வர்தனாவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்திலும் அனைவரும் திருப்தியாகவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதில், இலங்கையினரும் கூட முழு திருப்தி அடையவில்லை (இதன் விளைவாகத்தான் சிங்கள சிப்பாய் ஒருவன், ராஜீவ் காந்தியை துப்பாக்கியின் பின்பகுதியால் தாக்க முயன்றான்). 



இந்த விழாவின் பலனாக நம் நாட்டிற்கு கிடைக்கப்போவது என்னவாக இருக்கும்? 



இவர்களை பிரதமராகும் மோடி எப்படி பயன்படுத்திக் கொள்கிறார் என்பதை பொறுத்தது. 



நன்றி தமிழ் இந்த

  • BABUBAGATH  
    தமிழனும் சேர்ந்துதானே இந்தியன்?
    about 20 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • Boopathi.r  
    why ? it's not like for all tamil people...... .......
    about 21 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • karthi  from Coimbatore
    என்ன காரணம் சொன்னாலும் எங்களால் ஏற்றுகொள்ள முடியவில்லை,
    about 24 hours ago ·   (3) ·   (1) ·  reply (1) ·  promote to News Feed
    • Subramanyam  from Chennai
      உணர்ச்சி வசப் படாமல் பார்த்தால் புரியும். இந்தியர்களே எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள். அதிலும் தமிழர்கள் கேட்கவே வேண்டாம். அதானல் தான், "தமிழ் மக்களுக்கு இதுதான் கதியா", "தமிழனும் சேர்ந்துதானே இந்தியன்?" என்ற வாதங்கள் யோசிக்காமல் முன் வைக்கப் படுகின்றன.
      about 19 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • Mahendran.pn  
    political parties in tamilnadu have lots of sympathy on Sri Lankan tamils, but you should see their treatment in refugee camp to them.
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • செல்வி  from Salem
    தமிழக பிஜேபி கூறுவதை ஆல் இந்திய பிஜேபி ஏற்றுக்கொள்வது ஆகாத காரியம் அதே சமயம் அழைப்பு நடவடிக்கைகள் நடந்து முடிந்து விட்டன மாற்றுவது எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் தமிழக கட்சிகள் இந்த விவகாரத்தில் தீவிரமாகவும் கடுமையாகவும் நடந்து பிஜேபியை எதிர்க்கின்றன இதனால் தமிழகத்திற்க்கும் மத்திய அரசுக்கும் இடையே ஏற்படும் இடைவெளியை இலங்கை தனக்கு சாதகமாக் பயன்படுத்தி புதிய இந்திய அரசுடான நட்பை வழுபடுத்த தமிழக அரசியல் கட்சிகள் உதவி செய்வதுதான் நடக்கிறது. இதை நாம் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளவேண்டும் இனி வரும் காலங்களில் இலங்கை சம்பந்தமான வெளியுறவு நடவடிக்கைகளில் தமிழக கூட்டனி கட்சிகளை மத்திய பிஜேபி கலந்து ஆலலோசிக்க வேண்டும் விதமாக ராஜதந்திர ரீதியில் நெறுக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும்.அதற்க்கு ஏற்றவாறு தமிழக பிஜேபி கூட்டனி கட்சிகள் நடந்து கொள்வதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம்
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • செய்யது ஹுசைன்  
    பதவியேற்பு வைபவம். சிங்களவர்களுடைய உணர்வுகளை எமக்கு எதிராக எவ்வாறு வக்கிரப்படுத்தமுடியுமோ, அதை இங்கு ராஜபக்ச காவிப்படையினரிடம் ஒப்படைத்து இருக்கிறார்.திரு மோடி அவர்களும் காவி நாட்டம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவர்கள் இருவரும் ஒரே அணியில் இருப்பவர்கள் என்று கூடக் கூறலாம். அதன் அடிப்படையில்தான் உலகத்தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக மோடி அவர்கள் ராஜபக்சாவை தனது பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார் என்று சந்தேகம்கொள்ள வைக்கிறது.உங்களது மேலான கருத்துக்களை வையுங்கள் இதனுடன் முரண்படுகின்ற கருத்துக்களை ஆரோக்கியமாக ஏற்றுக்கொள்கின்றேன் காரணம் முரண்பாடுகளுக்கும் பலன்கள் இருக்கின்றன என்பதை அறிந்திருக்கின்றேன். செய்யது ஹுசைன். ஸ்ரீ லங்கா.
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • vettupuliveeran  from Ranipet
    600 இந்திய தமிழ் மீனவர்கள் கொன்றவனுக்கு இந்திய அரசு அழைப்பு விடுப்பது தவாறன முன் உதாரணம்.இலங்கையாள் தமிழகத்தை தவிர வேறு யாருக்கும் பாதிப்பு இல்லை என்றால் பாகிஸ்தான் ,பங்களாதேஷ் சீனா மியான்மர் போன்றவைகள் தமிழ் நாட்டின் நட்பு நாடு தான்.அந்த நாட்டினால் எந்த தமிழனும் இறக்கப்போவது இல்லை
    a day ago ·   (1) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • Raja  
    உடனடியாக நாம் எதையும் கூறிவிட முடியாது குறைந்த பட்சம் 6 மாதம் பொறுத்திருக்க வேண்டும்
    a day ago ·   (1) ·   (1) ·  reply (0) ·  promote to News Feed
  • Sembiyan@Thiruvallur  from Tirunelveli
    இந்த ஆள் என்ன சொல்லவருகிறார்?? 2007 / 2009 படுகொலைகளின்போது எதிர்ப்பு எழவில்லை என்பதால், நாங்களும் சேர்த்து கொலை செய்வோம்..இனப்படுகொலை தவறல்ல என்று சொல்கிறார் போல உள்ளது. இந்த மாதிரி, தனது சொந்த நாட்டின் தேசிய இனங்களைப்பற்றிய அடிப்படை அறிவே இல்லாத மேட்டுக்குடி, athikaarikalaal என்ன saathikka mudiyum?? இவர்களால் என்ன பயன்????
    a day ago ·   (8) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
    THIRUMOORTHI  · sivaram.   Up Voted
  • samy kumara  from Paris
    தனிநாட்டு நிகழ்ச்சி நிரலிலிருக்கும் இந்த புலம்பெயர் அமைப்புகளின் பொருளாதார உபயம் காரணமாகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் தனிநாட்டுக்குக் குறைவான தீர்வுத் திட்டம் ஒன்றைப் பகிரங்கமாக வைக்க முடியவில்லை நிதி தரும் அமைப்புகள் நிரந்தர எதிரியாகத் தீர்மானித்து விட்டிருக்கும் இலங்கையரசுடனோ சிங்கள சமூக சக்திகளுடனோ பேசச் செல்ல முடியவில்லை. இந்த சூழ்நிலையில் புலம்பெயர் தமிழர் ஒருவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் கருத்துக்களில் சிறுபகுதியை தமிழ் மக்கள் சிந்தனைக்காக இங்கே தரவேண்டும்: புலம்பெயர் மண்ணில் சொகுசாக இருந்தபடி புலிக்கொடி போர்த்தபடி அரசியல் வியாக்கியானம் பேசி பிரிவினை, தமிழ் தேசியம், போராட்டம் என்று பிதற்றுவதை நாம் முதலில் நிறுத்துவோம். நடந்துமுடிந்த ஆயுதப் போராட்ட அழிவுகள் எம் கண்முன்னே அகன்று விரிந்து நிற்கிறது! முதலில் நிபந்தனை அற்று அதை நாம் முற்று முழுதாக நிராகரிப்போம்.
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • samy kumara  from Paris
    தகுதியான மனிதர்களாக மாறுதல்! புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சில, எப்படியாயினும் மீண்டும் இங்கே தமிழீழப் போராட்டத்தை ஆரம்பிக்க முடியுமானால், அதை முன்னெடுக்க முயற்சிகளைத் தொடர்ந்து வருவதும், இலங்கை அரசுடனும் சிங்கள மக்களிடமும் பேசி இங்கே அரசியல் தீர்வொன்றைக் காணுவது எக்காலத்திலும் இயலாது என்று முடிந்த முடிபாகப் பிரச்சாரம் செய்து வருவதும் எல்லோருக்கும் தெரிந்ததே. இந்த அமைப்புகள் இன்னும் புலிகளின் காலத்தில் சேர்க்கப்பட்ட நிதி மற்றும் சொத்து வளங்களைப் பெருமளவில் தம்வசம் வைத்திருக்கின்றன. அந்த சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், அதிலிருந்து பணபலன்களைப் பெற்றுக் கொள்கிறவர்களும் உள்ளுரிலும் வெளியூரிலுமாக அந்தப் பிரச்சாரத்தைச் செய்து வருகிறார்கள். மற்றும்படி, தனிநாடும் அதற்கான ஆயுதப் போராட்டமும் சாத்தியமில்லாதது என்பதும், அந்த முயற்சிகளை ஆதரித்தால் இங்கு வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளப்போகும் அவலங்களும் தொடரும் அந்தரிப்புகளும் பேய்க்கனவாகவே அவர்களை அச்சுறுத்துவதாகும் என்பதும் யாவரும் இன்று விளங்கிக் கொண்டிருப்பதுதான்.
    a day ago ·   (2) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
    N.Sadagopan   Up Voted
  • sundaram  
    இதில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணம் வெளி உறவு துறையும் கட்சி தொடர்பாளர்களும் தான் காரணம் தமிழ் மக்கள் முனுமுனாக தொடங்கியவுடன் அழைப்பு கொடத்து போல் இருக்கவும், ராஜபக்ச வாராமல் இருக்கவும் ஒரு நிலபாடட்டை இந்திய வெளி உறவு துறை எடுத்து இருக்க வேண்டும் மோடி இக்கு இந்த ஆடம்பரங்கள் தேவை இல்லை .ஆனால் சில பழைய விசுவாசிகள் மோடிக்கு தலை குனிவை உண்டாக்க துவங்கி விட்டனர் .பீஜீபீ தான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கவில்லை மோடி தான் பிரதமர் ஆவோம் என நினய்க்க வில்லை பீஜீபீ தேர்தல் அறிகையில் தமிழர் பிரச்சனை அலசி பேசப்படவில்லை .சரிப்பு ராஜபக்ச போன்றவர்கள் வருவது எந்தவைளும் மோடி இக்கோ இன்டியாவிக்கோ பெருமை இல்லை .ராஜபக்ச ஒரு கடைந்து எடுத்த இனவாதி சஹ்ரிப்ப் செல்வாக்கு இல்லாத அரசியல்வாதி ரானுவாம் தான் பாகிஸ்தான் இல் அதிகாரம் கொண்டது. பீஜீபீ கட்சினர் வீண் டாம்பிக பதவி ஏற்பு விழாவை தவிர்த்து இருக்கலாம் இது எல்லாம் காங்கிரஸ் கலச்சராதிற்கு சரி பட்டுவரும் பீஜீபீ போன்ற தேசிய வாத கட்சிக்கு பொருந்தி வராது .மோடி இதுபோன்ற விசயங்களில் இனி சிக்கி கொள்ளமால் கவனமாக இருக்கவேண்டும் -சுந்தரம்
    a day ago ·   (2) ·   (1) ·  reply (0) ·  promote to News Feed
    gopi  · hari   Up Voted
  • B ANANDH  
    இந்த விஷயத்தை அவ்வளவு ஆழமாக எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம், இது ஒரு சடங்கு போன்ற பதவி ஏற்பு விழா மட்டுமே. இதில், எந்தவிதமான முக்கியப் பேச்சுவார்த்தையோ புதிய ஒப்பந்தங்களோ போடப் போவதில்லை.....
    a day ago ·   (1) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • Muthusamy  
    முன்னாள் செயலரின் கருத்து சரியானது .பதவிஎர்ப்பு ஒரு விழாதான்.அதில் என்ன தவறு நமது வீட்டு கல்யாணத்திற்கு நமது எதிரிக்கு கூட அழைப்பு கொடுக்கிறோமே .தமிழ் நாட்டு கட்சிகளுக்கு பிரச்சனைகளை தீர்ப்பதை விட அது தொடர்த்தால் வைத்துக்கொண்டு அரசியல் பிழைப்பு நடத்தலாம் என்று கருதுகிறார்கள். ஜே வை பொருத்தவரை அவர் தேர்தலில் வெற்றி அடைந்து விட்டார்கள். ஆனால் மத்தியில் அதிகாரம் செய்யலாம் என்றிருந்த அவர்கள் நினைப்பில் மண் விழுந்து விட்டது ஆதலால் எதிர்ப்பு காரல் கொடுக்கிறார்கள்.
    a day ago ·   (3) ·   (1) ·  reply (0) ·  promote to News Feed
    Chinnappan   Up Voted
    Sembiyan@Thiruvallur   Down Voted
  • SHAN  from Nagapattinam
    தமிழ் மக்களுக்கு இதுதான் கதியா :' அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்'
    a day ago ·   (3) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
    h   Up Voted
  • SHAN  from Nagapattinam
    தமிழ் மக்களுக்கு இதுதான் கதியா :' அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்'

Wednesday, March 27, 2013

ராஜபக்சேவை அமெரிக்கா, இந்தியா ஆதரிக்கும் மர்மம் - பழ நெடுமாறன் ஜூ வி கட்டுரை

கண்டனமா? கண்துடைப்பா?
'தமிழர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்​தினரைத் திரும்பப் பெற வேண்டும்


; இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள் குறித்து நம்பகமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்’ - இப்படி முக்கியமான கோரிக்கைகளை ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் ஆணையர் நவநீதம் பிள்ளை, ஜெனிவாவில் கூடிய கூட்டத்தில் 38 பக்கங்கள் கொண்ட அறிக்கையாக முன்​வைத்தார். இந்தச் செய்தி வெளியானபோது உலகெங்கும் உள்ள தமிழர்களின் உள்ளங்களில் நம்பிக்கை ஒளி படர்ந்தது.



அந்த அறிக்கையில் வேறு முக்கியமான அம்சங்கள் என்ன இருந்தது தெரியுமா?


இலங்கையில் போர் நடைபெற்ற வேளையில் வயதானவர்களும் சிறுமிகளுமாக ஆயிரக்கணக்கான​வர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க எந்த நடவடிக்கையையும் இலங்கை மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் போருக்குப் பிறகும் ஆள் கடத்தல் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.



தமிழர்கள் வசிக்கும் பகுதியில் சிங்கள ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிவில் நிர்வாகத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருகி​றார்கள். இதன் விளைவாக அங்கு வாழும் தமிழ்ப் பெண்களுக்கு பாலியல் வன்முறை அச்சம் நிலவுகிறது.


போருக்குப் பின் செய்ய வேண்டிய நிவாரணப் பணிகள், மீள் குடியமர்த்தல் போன்​றவை நிறைவேற்றப்படவில்லை. இலங்கை அரசின் தேசிய செயல்திட்டத்திலும் அவை புறக்​கணிக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் போர் நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளன.



மனித உரிமை மீறல்கள் குறித்து விசா​ரணை நடத்துவதாகக் கூறிய இலங்கை அரசு முழுமையான விசாரணை எதுவும் நடத்தவில்லை. இடம்பெயர்ந்த மக்களைக் குடியமர்த்தும் பணியையும் செவ்வனே செய்ய​வில்லை. 2006-ம் ஆண்டு அதிபர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை. சிறுபான்மையினரான தமிழர்​களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.


தமிழர்களின் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணு​வத்தினரைத் திரும்பப் பெறவேண்டும். இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்​கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிறது அந்த அறிக்கை.


ஆணையர் நவநீதம் பிள்ளையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆலோசனைகளை உள்ளடக்கிய தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதற்கு அமெரிக்கா தவறிவிட்டது.


அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தில் ஆணையரால் குறிப்பிடப்பட்ட முக்கியமான ஆலோசனைகள் இடம்பெறவில்லை. நீர்த்துப்போன தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்தது. இதற்கு இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பு இருந்தது.


அமெரிக்கத் தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள் இதுதான்... 'இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள ராணுவத்தினரை உடனே அகற்ற வேண்டும். போரின்போது தமிழர்கள் பலர் காணாமல்போனது கவலை அளிக்கிறது. இலங்கை அரசு நியமித்த நல்லிணக்கக் குழுவின் பரிந்துரைகளை முழுமை​யாக நிறைவேற்றும் திட்டம் இலங்​கைக்கு இல்லை. இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வாதாரம், நீதி, நல்லிணக்கம் முழுமையாகச் செய்யப்படவில்லை. போர்க் குற்றம் தொடர்பாக இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும்.’ - இவைதான் அமெரிக்கத் தீர்மானத்தின் சாராம்சம்.


உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சார்பில் இரண்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளாகி வருவது குறித்தும் போர்க் குற்றங்கள் குறித்தும் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைகள் முக்கியமாக வலியுறுத்தப்பட்டன. ஆனால் இந்த இரண்டு கோரிக்கைகளையும் அமெரிக்கத் தீர்மானம் புறந்தள்ளிவிட்டதுடன், அதற்கு எதிராகவும் அமைந்துவிட்டது.


அமெரிக்கத் தீர்மானம் போர்க் குற்றங்கள் குறித்த சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணை என்பதை ஏற்கவில்லை. மாறாக இலங்கையே அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்கிறது.


இலங்கையின் வடக்கு மாநிலத்தில் சீர்திருத்த நடவடிக்கைகளும் மனித உரிமைகளும் நிலை​நிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்கத் தீர்மானம் வலியுறுத்துகிறதே தவிர, கிழக்கு மாநிலத்தைப் பற்றி எதுவும் கூறவில்லை. இதன் மூலம் கிழக்கு மாநிலம் சிங்களவர்களுக்குச் சொந்தமானது என மறைமுகமாக அமெரிக்கத் தீர்மானம் கூறுகிறது.


வடக்கு மாநிலத்தில் மாகாண சபைக்கான தேர்தல் சுயாதீனமாக நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கத் தீர்மானம் கூறுவது கொடுமையான வேடிக்கை. ஏனெனில் வடக்கு மாநிலத்தில் வாழ்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் சொந்த வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு இன்னமும் அகதிகளாக அலைந்து திரிகிறார்கள். தமிழர் பகுதிகளில் வேகமாகவும் தங்குதடையில்லாமலும் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றன. வடக்குப் பகுதி ராணுவமயமாகிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் சுதந்திரமான தேர்தல் எப்படிச் சாத்தியமாகும்? ஒரு போலியான தேர்தலை நடத்துவதற்கு சிங்கள அரசுக்கு அமெரிக்கத் தீர்மானம் உதவுகிறது.



வெற்று வாக்குறுதிகள் நிறைந்த இந்தத் தீர்மானத்​தில் கூறப்பட்டவற்றை நிறைவேற்றுவதற்கு சிங்கள அரசுக்கு ஓர் ஆண்டு கால அவகாசத்தை அமெரிக்கத் தீர்மானம் அளித்திருப்பது அவல நகைச்சுவையின் உச்சக்கட்டம். கடந்த ஆண்டு நடந்த மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இதைப் போல ஓர் ஆண்டு கால அவகாசம் சிங்கள அரசுக்கு அளிக்கப்பட்டபோது எத்தகைய நிவாரண நடவடிக்கைகளும் அங்கு நடைபெற​வில்லை.


கடந்த ஆண்டு இலங்கை அரசுக்குக் கொடுக்கப்பட்ட அவகாசத்தில் மேலும் மேலும் தமிழர்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்​பட்டனவே தவிர, நிலைமை சிறிதளவுகூட மாறவில்லை. இப்போது இன்னும் ஓர் ஆண்டு கால அவகாசம் அளிப்பது எஞ்சியுள்ள தமிழர்களை முற்றிலுமாக அழிப்பதற்கே உதவும். அமெரிக்கத் தீர்மானத்தை இலங்கை எதிர்ப்புத் தீர்மானம் என அழைப்பது மிகத் தவறானதாகும். உலகக் கண்டனத்தில் இருந்து இலங்கையைக் காப்பாற்றும் தீர்மானமே அது.



அமெரிக்கத் தீர்மானம் குறித்து நடைபெற்ற விவாதத்தில் இந்தியாவின் பங்கு என்பது சூழ்ச்சிகர​மானது. தான் நேரடியாக சம்பந்தப்படாமல் பின்னணியில் இருந்து இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவின் தீர்மானத்தை வடிவமைத்தது இந்தியாதான். இலங்கைப் பிரச்னை சம்பந்தமாக இலங்கை அரசுடன் பேசுவதற்கு வழக்கமாக அனுப்பப்படும் பிரதமரின் ஆலோசகர் சிவசங்கர​மேனன் இம்முறை அனுப்பப்படவில்லை


. மாறாக அரசாங்கத்துடனோ காங்கிரஸ் கட்சியுடனோ எந்தவிதத்திலும் சம்பந்தப்படாத சுப்பிரமணியன் சுவாமியை, இந்திய அரசு தனது தூதுவராக இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் அனுப்பியது. அவர் சென்று இந்தியாவின் கருத்தோட்டத்துக்கு ஏற்ப அமெரிக்கா தனது தீர்மானத்தை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்தார். சுப்பிரமணியன் சுவாமி ஒரு தனி நபர். 


 ஆனால் இலங்கை அதிபர் ராஜபக்ஷே, அமெரிக்காவின் வெளியுறவுத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் ஆகியோரை அவர் சந்தித்துப் பேசிய விவரங்கள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. ஒரு தனி நபருக்கு இவ்வளவு செல்வாக்கு அரசு வட்டாரங்களில் இருக்க முடியாது. இந்தியாவின் சார்பில் அவர் சென்றார் என்பதினால்தான் அவரைச் சந்தித்துப் பேச, இலங்கை, அமெரிக்க அரசு உயர் மட்டத்தினர் முன்வந்தனர்.



அது மட்டுமா? நாடாளுமன்றத்தில் முலாயம்சிங் யாதவ் போன்றவர்கள் இந்திய அரசின் இலங்கைக் கொள்கையைக் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ஆனால், இப்போது அவர்கள் மாறிவிட்டனர். இதற்குப் பின்னணி என்ன? இந்தியாவில் இலங்கைத் தூதுவராக இருக்கும் பிரசாத் கரியவாசம், முலாயம் சிங் மற்றும் பல்வேறு வட மாநில முதல்வர்களை எல்லாம் சந்தித்துப் பேசி சிங்கள அரசின் நிலைக்கு ஆதரவாக அவர்களை மாற்றியிருக்கிறார். வெளிநாட்டுத் தூதுவர் ஒருவர் டெல்லியைவிட்டு வெளியேச் செல்ல வேண்டுமானால்கூட இந்திய அரசின் அனுமதி தேவை. மாநில முதலமைச்சர்களைச் சந்திப்பதற்கும் இந்திய அரசு அனுமதிக்க வேண்டும். ஆக, இந்திய அரசுதான் அவருக்கு இத்தகைய ஆலோசனைகளை வழங்கி, எதிர்க்கட்சித் தலைவர்களையும் முதல்வர்களையும் சந்தித்துப் பேசச் செய்திருக்கிறது.



    ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கடும் எதிர்ப்பும், இதுவரை கூட்டணிக் கட்சியாக இருந்த தி.மு.க. வெளியேறியதும் மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுத்தவில்லை. அதைப்போல, உதட்டளவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசும் அமெரிக்காவும் இந்தப் பிரச்னையில் இரட்டை வேடம் போடுகிறது. அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் நிலைப்பாடு என்பது ஈழத் தமிழர் பிரச்னையைப் பயன்படுத்தி இலங்கை அரசை மிரட்டி சீனாவிடமிருந்து பிரிக்க நினைக்கிறது.



இலங்கையிலும், குறிப்பாக இந்துமாக்​கடலிலும் சீனாவின் ஆதிக்கம்  ஏற்படுவது தன்னுடைய உலகளாவிய நலன்களுக்கு எதிரானது என அமெரிக்கா கருதுகிறது. இந்தியாவும் தனது தென்னாசிய நலன்​களைப் பொறுத்தவரையில் சீனாவின் தலையீட்டை விரும்பவில்லை. எனவே, அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து இந்தப் பிரச்னையைப் பயன்படுத்தி ராஜபக்ஷே அரசுக்கு நெருக்குதல் கொடுத்து, சீனாவின் பிடியிலிருந்து அவரை மீட்பது ஒன்றே அவர்களது நோக்கம். ஏனெனில், அமெரிக்காவின் இந்துமாக் கடலின் நலன்களும் இந்தியாவின் பிராந்திய அரசியல் பொருளாதார நலன்களும் முக்கி​யமே தவிர, ஈழத் தமிழர்களின் வாழ்வு அவர்களுக்கு முக்கியமல்ல.



ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலை, போர்க் குற்றம், மனித உரிமை மீறல் ஆகியவை குறித்து எவ்வளவோ உண்மைகளை வெளிப்படுத்தியும்கூட, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தங்களின் அரசியல், பொரு​ளாதார நலன்களை மட்டுமே மனதில்கொண்டு ராஜபக்ஷேவின் ரத்த வெறிக்கு ஈழத் தமிழர்களைக் காவு கொடுக்கத் துணிந்துவிட்டன என்பதைத்தான் அமெரிக்கத் தீர்மானம் எடுத்துக்காட்டுகிறது.


எனவே, இது கண்டனத் தீர்மானம் அல்ல... கண்துடைப்புத் தீர்மானம்!


நன்றி - ஜூ வி

Saturday, March 17, 2012

சிங்கள கேமராவில் எடுக்கப்பட்ட படங்கள், சேனல் 4 காட்டும் கொடூரப் பதிவுகள்

லகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பி இருக்கிறது சேனல் 4 தொலைக்காட்சி! 

நெஞ்சில்ஈரம் உள்ள வர்களைக் கண்ணீர் வடிக்கவும், ரத்தம் சூடானவர்களைக் கொதிக்க வைக்கும் அளவுக்கும் ஈழத்துக் காட்சிகளை அந்தத் தொலைக்காட்சி அம்பலப்படுத்தி உள்ளது. இப்போது, ஈழத்தில் நடந்த போர்க்குற்றங்களையும் மனிதஉரிமை மீறல்களையும் ஐக்கிய நாடுகள் சபை விவாதித்துக்கொண்டு இருக்கிறது. ஆனால், இந்த நேரத்திலும், 'ஈழத்தில் நடந்தது போர்க்குற்றம்தான்’ என்பதை ஒப்புக்கொள்வதற்குக்கூட பல நாடுகள் யோசிக்கின்றன என்பதுதான் வேதனை.


வியட்நாம் போர் தாக்குதலில் ஒரு சிறுமி பதறியபடி நிர்வாணமாய் ஓடி வந்த புகைப்படம் வெளியானதற்கே, இந்த உலகம் பதைபதைத்துத் துடித்தெழுந்தது. ஆனால், ஈழத் தமிழர்கள் கொத்துக்கொத்தாய் நிர்வாணக் குவியலாய் லட்சக்கணக்கில் செத்து அழிந்தபோதும்கூட, 'ஒரு புகைப்படத்துக்காக கண்ணீர் வடித்த உலகச் சமூகம்’ அமைதியாகவே இருக்கிறது.


இலங்கையின் இனப்படுகொலை களுக்கு ஆயிரமாயிரம் சாட்சியங்கள் இருந்தும், 'தீவிரவாதத்துக்கு எதிரான போர்’ என்று சாயம் பூசியதே தவிர, 'இது மனிதத்துக்கு எதிரான போர்’, 'தமிழர் களை அழிக்கும் போர்’ என்று சிறு முணுமுணுப்பும் எழவில்லை. ரசாயனக் குண்டுகளில் கருகிப் பொசுங்கி, பிய்த்து எறியப்பட்ட உடலையும் விடாமல் புணர்ந்து சிரித்து தமிழர்களைத் தின்று தீர்த்தது சிங்கள இனவெறி. மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த இலங் கையின் இனப்படுகொலையும் ஈழத் தமிழர்கள் வெந்து துடித்து அனுபவித்த ரணங்களையும் சொற்களால் வர்ணித்துவிட முடியாது.


உயிர் கொடுத்த சேனல் 4 


இறுதிக்கட்டப் போரின் முடிவுக்குப் பிறகு, உலகச் சமூகத்துக்கு பொட்டில் அடித்தது போல், சேனல் 4 தொலைக்காட்சி சில காட்சிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. 'இலங்கையின் கொலைக்களங்கள்’ என்ற காணொளியை வெளியிட்டது. இலங்கைக்கு எதிரான இந்தக் காணொளியைப் பார்த்து, இங்கிலாந்து நாடாளு மன்றம் தொடங்கி நார்வே, கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியாவின் செனட் வரை அதிர்ந்தன. அந்தக் காணொளி திரையிடப்படாத நாடே இல்லை என்ற அளவுக்கு உலகெங்கும் அதிர்ச்சியை உரு வாக்கியது. இப்போது நீதிக்காகப் போராடும் ஈழத் தமிழர்களுக்கு, பக்கபலமாக இருப்பது இந்தக் காணொளிக் காட்சிகள்தான். இப்போது மீண்டும், 'இலங்கையின் கொலைக்களங்கள் -  தண்டிக்கப்படாத குற்றங்கள்’ என்ற பெயரில் புதிய காணொளியை சேனல் 4 கடந்த புதன்கிழமை வெளியிட்டது!


அதிர வைத்த ஆவணப் படம்!
கடந்த மார்ச் 11 அன்று ஓர் ஆவணப் படம், மனித உரிமைத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இலங்கைஅரசு பாதுகாப்பான பகுதி என்று அறிவித்த பகுதிகளில் இருந்த அப்பாவி மக்கள் மீது செல் குண்டு தாக்குதல்கள் நடத்தியது முதல், பெண் புலிகள் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாகி இறந்த பிறகும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானது வரை அதில் இரு ந்தது. இதையே சேனல் 4 வெளியிட்ட நேரத்தில், 'அது பொய்யானது, ஜோடிக்கப்பட்டது’ என்று, இலங்கை அரசு சொன்னது. ஆனால், இப்போது காட்டப்பட்ட ஆவணப் படத்தில் சம் பந்தப்பட்ட குற்றவாளிகள் யார் என் பதும்  தெளிவாக அடையாளம் காணும் அளவுக்கு இருக்கிறது.


பாதுகாப்பான வளையம் என்று சொல் லப்பட்ட பதுங்கு குழிகள், ஐ.நா. உதவியுடன் அப்பாவி மக்கள் பாதுகாப்புக்காக இலங்கை அரசால் அமைக்கப்பட்டன. அதன் மீதே குண்டுகள் வீசித் தாக்கியுள்ளார்கள். பாதுகாப்பு வளையத்துக்கு வந்த மக்களுக்கு உணவு தரப்படவில்லை. காயம்பட்ட வர்கள் மருந்து இல்லாமல் இறந்து போயிருக் கிறார்கள். புதுமாத்தளன் மருத்துவமனை மீது செல்குண்டுத் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இதற்கான அத்தனை ஆதாரங்களும் இந்த ஆவணப் படத்தில் இருக்கின்றன.


புதன்கிழமை காணொளி! 

'அய்யோ! இந்தப் பச்சப் பிள்ளையைக் காப்பாத்த முடியலையே’ என்ற மரணத்தை  விழி முன்னே நிறுத்தும் தாயின் கதறலின் ஊடே சேனல் 4 தொலைக் காட்சியின் புதிய காணொளி கடந்த புதன்கிழமை வெளியானது. சுமார் 53:12  நிமிடங்கள் ஓடும் இந்தக் காணொளிக் காட்சிகளை கல்லம் மெக்ரே இயக்கி உள்ளார்.


''உலக நாடுகள் பலவற்றில் காட்சிப்படுத்தப்பட்டும், உலக சமுதாயமும் ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கைக்குத் தண்டனை அளிப்பதில் இருந்து ஒதுங்கிக் கொண்டன. இத்தகைய தருணத்தில்தான் இந்தக் காட்சிகளை வெளியிடுகிறோம்'' என்ற விளக்கத்துடன் தொடர்கிறார் ஜான் ஸ்னோ.


''சேனல் 4 வெளியிட்ட இலங்கைக் கொலைக் களங்கள் வீடியோவைப் பார்த்துவிட்டு என் 28 வயது மகன் கதறி அழுதான். இந்தக் கொடூரத்தைக் கண்டுவிட்டு நான் சிங்களன், இலங்கை பிரஜை என்று சொல்லிக்கொள்ளவே வெட்கமாக இருக்கிறது என்றான்'' என்று, இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க சொல்வது அடுத்து வருகிறது.


இங்கிலாந்து முன்னாள் வெளியுறவுச் செயலாளர் டேவிட் மில்லிபேன்ட், ''26 ஆண்டு காலமாகப் போராடிய விடுதலைப் புலிகளை அழிப்பதாகக் கூறி, பெருந்தொகையான மக்களை இரு சகோதரர்களான கோத்தபயவும் மகிந்தாவும் அழித்து உள்ளனர். அவர் கள் தயாரித்த நல்லிணக்க அறிக்கையில் இந்தக் கொடூரங்களுக்கு யார் காரணம் என்பதைக் கூற மறுத்து விட்டனர்'' என்று குற்றம் சாட்டுகிறார்.


கத்தினால் ராணுவம் சுடும்! 

2009 ஜனவரி 23 அன்று பொதுமக்களைக் காப்பதற்காக ஐ.நா. சார்பில் பதுங்கு குழிகள் அமைக் கப்பட்டன. 'பாதுகாப்பு வளையம்’ என்று இலங்கை அரசால் முதலில் சொல்லப்பட்ட உட்டியகட்டுப் பகுதி அருகே பீட்டர் மெக்கே என்ற ஐ.நா. பணியாளர் மேற்பார்வையில் இது அமைக்கப்பட்டது. ஆனால், அடுத்த இரண்டு நாட்களில் ஐ.நா-வின் பதுங்கு குழிகள் மீதே எறிகணைகள் விழுந்திட.. இந்தத் தகவலை சரத் பொன்சேகா, கோத்தபய ஆகியோரிடம் பீட்டர் மெக்கே சொல்கிறார். உடனே, பாதுகாப்பு வளைய ங்களுக்கு கொஞ்சம் தள்ளி எறிகணைகளை வீசியிருக்கிறார்கள்.


பாதுகாப்பு வளையத்தில் இருந்து காயங்களுடன் தப்பி வந்த ஆண் ஒருவர், 'நாங்கள் பட்ட காயங்களுக்கு மருந்து இல்லாமல் கத்திக்கொண்டே கண் சொருகி விழுந்து விடுவோம். அதுதான் எங்களுக்கு வலி நிவாரணி. அடிபட்டவர்கள் கத்திக்கொண்டே இருப்பதைக் கண்டால், இழுத்துப்போட்டு சுட்டுக் கொன்று விடுவார்கள் ராணுவத்தினர்''  என்கிறார் அதே வலியோடு.  


பிரபாகரனின் இளைய மகன் படுகொலை! 

மே 17-ம் தேதி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது அழுத்தமாக இந்தக் காணொளியில் பதிவாகி உள்ளது. பாலச்சந்திரனின் மெய்க்காவலர்கள் ஐந்து பேரும் கண்கள் கட்டப் பட்டு, கைகள் முதுகின் பின் கட்டப்பட்ட நிர்வாண நிலையில் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

 பாலச்சந்திரன் உடம்பில் இரண்டடி முதல் மூன்று அடி தூரத்தில் இருந்து சுடப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில் ஐந்து குண்டுகள் பாய்ந்து ள்ளன. இவர், பிரபாகரனின் மகன் என்பதாலேயே இவ்வாறு கொலை செய்யப்பட்டு உள்ளார் என்று சேனல் 4 குறிப்பிடுகிறது.


தலைப்பகுதி மோசமாக சிதைக்கப்பட்டு, உடலில் சேறு பூசி, உடைகளை அகற்றிக் காட்டப்படுகிறது புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல். 'இது பிரபாகரன்தான்’ என்று கருணா உறுதிப்படுத்தியதாக சிங்கள ராணுவம் சொல்கிறது. ஆனால், இது வரை மருத்துவச் சான்றிதழை இந்தியாவுக்குத் தராமல் மறைக்கிறது இலங்கை அரசு. சிங்கள ராணுவத்தினரால் காட்டப்பட்ட அதே காட்சிகள், சேனல் 4 தொலைக்காட்சியிலும் காட்டப்பட்டன. ஆனால், இவை உண்மையில் பிரபாகரன்தானா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எந்த தகவலும் சொல்லப்படவில்லை.


ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரம் இல்லை! 


இலங்கையில் போர் நடைபெற்ற போதும், அதன் பின்னரும் ஊடகவியலாளர்கள் நிலை குறித்து இலங்கையின் சுதந்திர ஊடகவியலாளர் பாஷன அபயவர்த்தனே பேசி இருக்கிறார். ''இலங்கையில் ஊடகவியலாளர் யாராக இருந் தாலும் அவர் கொல்லப்படவோ அல்லது நாட்டை விட்டு விரட்டப்படவோ வேண்டும் என்ற நிலையே இப்போதும் தொடர்கிறது. இது வரை, 60 பத்திரிகையாளர்கள் நாட்டை விட்டு விரட்டப்பட்டு உள்ளனர். 2005-ம் ஆண்டு முதல் இதுவரை சிங்களர்கள், தமிழர்கள் என்று 26 பத்திரி கையாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்'' என்று சொல்கிறார்.


இதில் ஆவணப்படுத்தப்பட்ட அனைத்துக் காட்சிகளும், படங்களும் தடயவியல் நிபுணர் டென்ரிக் ஃபவுன்டர் மூலமாக ஆராயப்பட்டுள்ளன. ''இந்தக் காட்சிகள் அனைத்தும் உண்மை. இதில் சந்தேகத்துக்கு இடமே இல்லை. ஜோடிக்கப்பட்ட காட்சிகளோ, பொய்யானவையோ அல்ல.




சிங்கள ராணுவத்தினர் எடுத்த காட்சிகள்தான் இவை. பிரபாகரனின் மகன் படுகொலை செய்யப்பட்டதில், அவருக்கு உடல் அளவில் எந்தக் கொடுமைகள் செய்யப்பட்டதற்கும் ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், அவர் மனதளவில் கொடுமை படுத்தப்பட்டிருப்பார் என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது'' என்கிறார்.
இசைப்பிரியாவை சீரழித்த முந்தைய காட்சிகள், பெண் போராளி கழுத்தில் கயிறைக் கட்டி இழுத்துச் செல்வது, உயிரற்ற போராளிகளைக் குப்பைகளைப் போல் ஆடைகளை அகற்றி டிராக்டரில் தூக்கி வீசும் சிங்களப் படை, உயிரைக் காத்துக்கொள்ள கடலிலும் காடுகளிலும் தஞ்சம் புகுந்து தப்பிக்கும் மக்கள் என்று ரத்தசாட்சிகளாய் சிவக்கிறது திரை.


போர் முடிந்ததும் சிங்களப் படையின் கொண் டாட்டங்கள், இந்திய அரசின் சார்பாக சிவசங்கர மேனன் ராஜபக்ஷேவுடன் நடத்திய சந்திப்புகள் போன்ற காட்சிகளும் வருகின்றன. 2013 காமன்வெல்த் கூட்டம் இலங்கையில் நடக்க இருக்கும் சமயத்தில், '40 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை ஐ.நா-வும் உலகச் சமூகமும் மறந்துவிட வேண்டாம்’ என்று, குற்றவாளிகளை அடையாளம் காட்டிய நீதியுடன் இருள்கிறது காட்சிகள்.


என்ன செய்யப்போகிறது இந்தியா?

ஈழத்தமிழனின் ஈடுகட்ட முடியாத இழப்புக்கு நீதி கேட்டு வெடித்திருக்கும் ட்விட்டர் புரட்சி

 ஈழமக்களுக்கு இழைக்கப்பட கொடுமைகள் உலகம் முழுக்க கவனத்தை ஈர்க்க வேண்டும், அனைவருக்கும் அந்த கொடுமைகள் பற்றி அறியச்செய்ய வேண்டும் என்ற உந்துதலில் ட்விட்டரில் புரட்சி கோஷங்கள் எழுப்பப்படது.. என் அளவில் நான் எழுதியவை..

http://www.eelamview.com/wp-content/uploads/2011/09/prabhakaran-mgr.jpg


1.ஆங்கிலேயன் இந்தியாவை கொள்ளை அடித்தான், ஒரே ஒரு இத்தாலிப்பெண் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையே பலி ஆக்கினாள்"


----------------------------

2. தமிழனை காட்டி கொடுக்கத்தயங்காதவன் கருணா,தமிழன் வெட்டி எரியப்பட்டபோதும் வேடிக்கை பார்த்தவர் கலைஞர் "


------------------------------

 3. திமுக கொடியின் நிறத்துக்கான விளக்கம்- ஈழத்தமிழனின் ரத்தமும்,அவன் எதிர்காலமுமா?-சிவப்பு,கறுப்பு


------------------------------

4. தமிழக அரசியல் தலைவர்கள் அனைவர் சொத்துக்களையும் பறிமுதல் செய்து, எல்லாரையும் ஒரு வருடம் இலங்கையில் தங்கவைத்தால் என்ன?"


----------------------------------------

5. சாப்பாட்டில் கை வைக்கும்போது இலங்கையில் ஓடிய ரத்த ஆறுதான் நினைவு வருகிறது, கை கழுவினால் அவர்கள் கண்ணீர் நினைவு 

-------------------------------

 6. தமிழ் நாட்டை பீடித்த ரோகி, தமிழ் இனத்தை ஆண்ட துரோகி, அவர் கலைஞரா? கொலைஞரா.?


-------------------------------------

7. தமிழ் இனத்தலைவர் என்றழைக்கப்பட்டவர் தமிழ் இனத்தை அழிக்கத்துணை போன தலைவர் என்று வரலாறு அழைக்கட்டும் 

--------------------------

 8. இந்தியா நான்கு எழுத்து,தமிழன் நான்கு எழுத்து,இலங்கை நான்கு எழுத்து,கலைஞர் நான்கு எழுத்து துரோகம் நான்கு எழுத்து


-----------------------------------

9. உயிரைக்கொடுத்து இன மானம் காக்க பலர்.. மானத்தைக்கெடுத்து,அடுத்துக்கெடுத்து பதவியைத்தக்கவைக்க சிலர் 

------------------------------------

 10. இந்தியப்பெருங்கடல் நீர் மட்டம் உயர்ந்தால் அது ஈழத்தமிழர்களின் நிலை கண்ட நம் கண்ணீராய் இருக்கும்


-----------------------------------

http://rajkanss.files.wordpress.com/2008/10/cartoon_1991.jpg

11. அரசியல் லாபத்துக்காக ஒரு இனத்தையே பலியிடத்துணிந்த இரு குடும்பங்களும் மன உறுத்தல்களுடனே எஞ்சிவாழ்நாளை கழிக்கட்டும் 


-----------------------------------------

12. கடவுள் அரக்கனை கொன்ற நிகழ்வு சூரசம்ஹாரம், ஒரு அரக்கன் பல வீரர்களை சூழ்ச்சி செய்து தின்ற நிகழ்வு வீர சம்ஹாரம் 

------------------------------

13. இலங்கையில் ராகுலையும், கூடங்குளத்தில் பிரியங்காவையும் நிரந்தரக்குடி வைத்து விட வேண்டும் 


-----------------------------------

14. அகதிகளின் கதி அதோ கதி, அனைத்தும் அரசியல் சதி, தமிழனின் நெற்றியில் பலவந்தமாக எழுதப்பட்ட விதி 

------------------------------

15. கையில் இருப்பதை எல்லாம் கொடுத்தான் கர்ணன், கைக்கு அகப்பட்டவர்களை எல்லாம் கொன்றான் கர்ண கொடூரன் ராஜபக்சே 

--------------------------------

16. தமிழ்நாட்டைவிட்டு கலைஞர் , இந்தியாவை விட்டு சோனியா காந்தி 2 குடும்பமும் தள்ளி வைக்கப்பட்டால் நாடு சுபிட்சம் பெறும் 


---------------------------------

17. ஒரு ஊர் வாழ ஒரு குடும்பத்தை இழக்கலாம், ஆனால் ஒரு குடும்பம் வாழ ஒரு இனத்தையே அழிக்க வழி செய்தார் கலைஞர் 

----------------------------

18. இத்தாலி தன் ஒரு தாலி இழந்ததற்கு ஒரு லட்சம் தாலிகளை பலி கொடுத்தது, பழி தீர்த்தது# 

-------------------------------

19. ஒரு இந்தியன் இத்தாலிக்கு வாழ்வு கொடுத்தான், பல தமிழர்களின் வாழ்வு கெடுத்தான்


----------------------------------

20. காந்தியின் பெயரை தன் பெயருடன் கொண்டிருந்தும் அவர் குணங்கள் எதுவுமே வரப்பெறவில்லை எனில் எதற்கு அந்த பதவி? 


--------------------------------------

http://farm4.static.flickr.com/3564/3577976220_6551920c3f_o.jpg

21. இரண்டு தனி நபர்கள் நினைத்திருந்தால் ஒரு இனமே அழிக்கப்படாமல் இருந்திருக்கும் 


-----------------------------------

22. நம்மிடம் கொடுப்பதற்கு, காப்பதற்கு மனம் இல்லை, அவர்களிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லை 

---------------------------------

23. எட்டு மணி நேர மின்வெட்டையே தாங்கிக்கொள்ள முடியாதவன் தமிழகத்தமிழன், 24 மணிநேரமும் மனித வெட்டை சந்திப்பவன் ஈழத்தமிழன்#KILLINGFIELDS

-------------------------------------------

24 இல்பொருள் உவமை அணிக்கு மிகக்கொடூரமான உதா”ரணம்” கருணையே இல்லாத துரோகி கருணா#Killingfields


----------------------------------

25. ஈழத்தமிழனின் வீட்டில் அரிசி உலை கொதிப்பதில்லை,எந்த சிங்களனும் அவர்களை மதிப்பதில்லை#KillingFields


---------------------------------

26. அமைதிக்கான நோபல் பரிசை தருவதற்கு முன் அட்டூழியத்துக்கான அகோர தண்டனை ராஜபக்சேவுக்கு அளிக்கப்பட வேண்டும்#KillingFields


------------------------

27. இறந்தான் இறந்தான் ஈழத்தமிழன் இறந்தான், மறந்தான் மறந்தான் தமிழகத்தலைவன் தாய் நாட்டை நேசிக்க, காப்பாற்ற  மறந்தான்#KillingFields


----------------------------------

28. ஈழத்தில் பிறந்து ஈழத்தில் அழிந்த பிரம்மபுத்திரர்கள்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாய் பிரம்மபுத்ரா நதியே வற்றிவிட்டதாம்#KillingFields

----------------------------------

29. வெண்ணைகள் எல்லாம் அன்னைகள் ஆகின்றனர்,தலை எடுக்க விடாமல் துரத்தப்பட வேண்டியவர்கள்  தலைவராக இருக்கிறார்கள்#KillingFields

--------------------------------

30. உயிருடன் ஈழத்தமிழனை எரித்த ராஜபக்சேவுக்கு விருந்து வை, கண்டனம் தெரிவிக்க உருவ பொம்மை எரித்தால் சிறையில் வை #KillingFields

----------------------------------

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/BloG%20fotos/4.jpg

31. ஈழத்தமிழனுக்காக போராடிய புலிகளை அரசியல் லாபத்துக்காக வஞ்சித்தன தமிழக நரிகள் #killingfields

------------------------------

32. கடல் கடந்து ஈழத்தில் தமிழன் மண்டையைப்போட்டுக்கொண்டிருக்கிறான்.இங்கே நாம் கடலை போட்டுக்கிட்டு இருக்கோம் :(


---------------------------------------

 33. ஓ! தமிழர்களே! நீங்கள் அனைவரும் கடலில் மூழ்கி இறந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன், எனக்கு என் குடும்பம் தான் பெருசு

----------------------------------

34. ஈழத்தில் சாதம் வடிக்க வழி இல்லாமல் தமிழன், இங்கே சச்சின் சதம் அடித்தால் என்ன? அடிக்கா விட்டால் என்ன?  

---------------------------

35. எந்த குடுகுடுப்பைக்காரராலும் நம் நாட்டுக்கு நல்ல காலம் எப்போ பிறக்கும்னு சொல்லவே முடியலை :(  

------------------------------

36. தமிழக அரசியல் தலைவர்களில் முதல்வராக இருந்தவர்களில் எம் ஜி ஆர் மட்டுமே ஈழத்தமிழனுக்கு ஏதாவது செய்ய நினைத்தவர் ””

------------------------- 

 நண்பர் சிவா அனுப்பிய மெயிலில் இருந்து-

( #killingfields ).. @இந்தியா சும்மா சொல்லக் கூடாது..ஆனாலும் நீங்க ரொம்ம்ம்ப அறிவாளிங்கடா... நாளைக்கே உலகப்போர் என்று வந்தாலும் கூட இலங்கைகாரன் சீனாப்பக்கம்தான் நிற்பான்னு நல்லாத்தெரிஞ்சிருந்தும்.. ஆயுத உதவி,ரேடார் உள்ளிட்ட தொழில் நுட்ப உதவி, ஆயிரக்கணக்கான கோடிகள் பண உதவின்னு எத்தனையோ உதவிகள் செஞ்சதும் இல்லாம..இப்ப 7.21 கோடி பேர் கெஞ்சலையும் ஹேருக்குச் சமானமா நெனச்சு தூக்கிக் கெடாசிட்டு.. "இலங்கைக்கு எதிரா எந்த ஒரு நிலைப்பாட்டையும் எப்போதும் இந்தியா எடுக்காது!"னு சொன்னீங்க பாத்தீங்களா.. அங்க நிரூப்பிச்சுட்டீங்கடா உண்மையிலேயே உங்க நிலைப்பாடு என்னன்னு.!


 போகட்டும்... இன்னுமும் உங்க மேல துளியூண்டு நம்பிக்கை வச்சிருக்கோம்..இந்த கொடூரத்தை நிகழ்த்தி முடிச்சு 3 வருசமாச்சு..! நீங்க செய்த பச்சைத்துரோகத்துக்கு பரிகாரமா தயவுசெய்து இந்த ஒரு காரியமாச்சும் செய்ங்க..ஜெனீவால நடைபெறப்போகும் வாக்கெடுப்புல இலங்கைக்கு எதிரா வாக்களியுங்க..

'இல்லை..அப்டி செஞ்சா என் முகமூடி கிழிஞ்சிடும்'னு இப்பவும் துரோகத்த செஞ்சீங்கன்னா..இனி இந்தியாவும் தமிழ்நாடும் உணர்வுரீதியா மட்டுமில்ல..அனைத்துரீதியுலும் வேற வேற ஆகிடும்.. இதற்கு மேல நாங்க இந்தியன்னு சொல்லிக்கறது நாங்க குடிச்ச தமிழ்ப்பாலுக்கு கேவலம்.


 @தமிழன் ..இனியாச்சும் நிஜமாவே இனப்பற்று, மொழிப்பற்றோட இருந்துக்கோங்க...இல்லாட்டி இவனுங்க தமிழ்நாட்டையும் அழிச்சு..அடியோட பொதச்சு.. சோனியா குடும்பமும், ராஜபக்ஷே குடுபமும் தமிழ்நாட்டில தன் சந்ததிகள உருவாக்கி குதூகலமா வாழ்வாய்ங்க!! :-(((( 



டிஸ்கி -1   ட்விட்டர் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள்  ”” இந்த டேக்கில் வரும் அனைவர் ட்வீட்ஸையும் ஆர் டி செய்யவும்.. அது உலக அரங்கில் கவனம் ஈர்க்கும்.. RT பட்டனை க்ளிக் செய்ய வேண்டாம், தனி ட்வீட்டாய் ஆர் டி செய்யவும்

டிஸ்கி 2 - சமூக வலைத்தளங்களால் என்ன சாதித்து விட முடியும்? என்ற அலட்சியமோ, அங்கலாய்ப்போ வேண்டாம்.. ஒபாமாவின் ஆட்சிக்கு ட்விட்டர் மற்றும் சமூக வலைதள புரட்சியே முக்கிய காரணம்.. ஒரு சிறு தீ பற்றிக்கொண்டால் புரட்சித்தீ வெடித்தே தீரும்..


http://rajkanss.files.wordpress.com/2008/11/pg2a.jpg