Showing posts with label ராஜன். Show all posts
Showing posts with label ராஜன். Show all posts

Tuesday, December 04, 2012

சில பதிவுகள் நீக்கமும், அதற்கான என் விளக்கமும்

சில மாதங்களுக்கு முன் நான் குறிப்பிட்ட  சில பதிவுகளை என் வலைத்தளத்தில் இருந்து நீக்கி விட்டேன்.அதை ஒண்ணும் ரகசியமா செய்யலை. ட்விட்டர்ல காரணத்தை சொல்லி தான் நீக்கினேன். உடனே ஏகப்பட்ட விவாதங்கள், கேள்விக்கணைகள், அலை பேசியில் விசாரிப்புகள். எனவே ஒரு தன்னிலை விளக்கமாக இந்தப்பதிவு.


ராஜன் - சின்மயி சர்ச்சைகள் நடந்து கொண்டிருந்தபோது ராஜனுக்கு ஆதரவாக  3 பதிவுகள் எழுதி இருந்தேன். அந்தப்பதிவு வெளியிட்டு ட்விட்டரில் லிங்க் கொடுக்கும்போதே மாயவரத்தான் “ அநாகரீகமான டைட்டில் “ என மென்ஷன் பண்ணி ட்வீட் போட்டிருந்தார். அப்போதே டைட்டிலை மாற்றி விடலாமா? என நண்பர்களிடம் கேட்டபோது வல்கராக எதுவும் இல்லை , வசீகரமான டைட்டில் தான் ,மேலும் பதிவின் சாராம்சம் பற்றி யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை , எனவே நீக்க வேண்டிய அவசியம் இல்லை என குறிப்பிட்டனர். நானும் அப்படியே விட்டு விட்டேன்.


பதிவுகள் வெளியாகி  பல மாதங்கள் கழித்து சின்மயி அவர்களின் அம்மா என்னை  அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ஒருவருடன் நடந்த அலை பேசி உரையாடலையோ , சேட்டிங்க் விபரங்களையோ அப்படியே வெளிப்படுத்துவது  நாகரீகமான செயல் அல்ல என்பதால் நான் அது பற்றி பதிவு ஏதும் இதுவரை எழுத வில்லை. ஆனால் இப்போது ஒரு நெருக்கடி. அதனால் இந்த கட்டுரைக்குத்தேவையான குறிப்பிட்ட அங்கத்தை மட்டும் சொல்கிறேன்.

 பலரும் எள்ளி நகையாடுவது போல், கிண்டல் செய்வது போல் அவர் என்னை மிரட்டவில்லை. கூகுள் சர்ச்சில் சின்மயி என டைப் செய்து சர்ச் குடுத்தால் என் பதிவுதான் வருகிறது எனவும் அது தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது எனவும் சொன்னார். ஒரு பெண் குழந்தைக்கு அப்பாவாக இருக்கும் நீங்கள் அதே போல் ஒரு பெண்ணின் அம்மாவின் மனதைப்புரிந்து கொள்வீர்கள் எனவும் கூறினார்.அவராக நேரடியாக பதிவுகளை நீக்குமாறு சொல்லவில்லை.


 நானாக அவரிடம் “ இந்தப்பதிவு உங்கள் மனதை காயப்படுத்துகிறது என்றால் அதை உடனே நீக்கி விடுகிறேன்” என்றேன்.பதிவு எழுதி அடுத்த நாளே நீங்கள் இதே போல் ஃபோனில் பேசி உங்கள் ஆட்சேபத்தை தெரிவித்திருந்தால் அப்போதே நீக்கி இருப்பேன் என்றும் சொன்னேன். அதே போல் அடுத்த நாளே பதிவுகளை  நீக்கி விட்டு அது பற்றிய அறிவிப்பை ட்விட்டர் டைம் லைனில் தெரிவித்தேன்.


இந்த சம்பவம் நடந்து 5 மாதங்கள் கழித்துத்தான் ராஜன் கைது சம்பவம் நடந்தது.


ஸ்க்ரீன் ஷாட் பர பரப்பாக பேசப்பட்டது .அப்போது நேரடியாகவோ , மறைமுகமாகவோ  சி பி தான் அதை எடுத்திருப்பார் என  யார் யார் எல்லாம் அவதூறாக செய்தி பரப்பினார்கள் , அதற்கான பின் புலங்கள் என்ன என்பதை பார்ப்போம்




1. தளபதி 87 87  - இவர்தான் முதன் முதலாக டைம் லைனில் “ சி பி தான்  ஸ்க்ரீன் ஷாட் எடுத்திருக்க வேண்டும் “ என்று  சொன்னவர். காரணம் இவர் அடிபப்டையில் தீவிர விஜய் ரசிகர். நான் பல முறை விஜய் அவர்களை கலாய்த்து ட்வீட்ஸ் போட்ட போதெல்லாம் பயங்கரமாக பொங்கியவர்.என்னை அஜித் ரசிகர் என தவறாக நினைத்து என்னை கோபப்படுத்த  ஏதோதோ ட்வீட்டி யவர்.


 டைம்லைனை ரெகுலராக வாசிப்பவர்களுக்கு என்னைப்பற்றி நன்றாகத்தெரியும். நான் அனைத்து நடிகர்களையும் ரசிப்பவன். அதே சமயம் அவரவர் படங்கள் ரிலீஸ் ஆகும்போது அந்தப்படத்தை பிரமோட் பண்ணி வரும் நல்ல ட்வீட்ஸ்களை ஆர் டி செய்யும் அதே நேரம்  அந்த ஹீரோவை கலாய்த்தும் ட்வீட்ஸ் போடுவேன். அஜித் , கமல் ரசிகர்கள் ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொள்வார்கள் , ஆனால் விஜய் ரசிகர்கள் ரொம்ப டென்ஷன் ஆகி கண்டபடி திட்டுவார்கள் . அலை பேசியில் கோபத்தை வெளிப்படுத்துவார்கள். பிளாக்கில்  கார சாரமான கமென்ட்கள் போடுவார்கள்.


விஜய் ரசிகர் என்ற ஒரே ஒரு காரணத்தினால்தான் அவர் இந்த சந்தர்ப்பத்த்தில் இப்படி என் மீது பழி சுமத்தினார்.



2. யுவ கிருஷ்ணா - லக்கி லுக் யுவா புதிய தலைமுறை பத்திரிக்கையில் முக்கிய பொறுப்பில் இருப்பவர். இவர் தமிழ் இனத்தலைவரும் ,  தன் குடும்பத்தைப்பற்றி கவலைப்படாமல் ஈழத்தமிழருக்காக  ஆட்சியையே துறக்க தயாராக இருப்பதாக சொல்லிக்கொள்ளும்  தனிப்பெரும் தலைவர் கலைஞரின் தீவிர அபிமானி .


நான் கடந்த 2 வருடங்களாகவே கலைஞரை தாக்கி , அவரது சந்தர்ப்பவாதத்தை நக்கல் அடித்து எழுதும் ட்வீட்களை , பதிவுகளை கடுமையாக எதிர்ப்பவர். கூகுள் பஸ்ஸில் ( இப்போ இல்லை முதல்ல ) என் பதிவுக்கான லிங்க் கொடுத்து “ இப்படியும் ஒரு கேவலமான , முட்டாள் தனமான பதிவா? “ என நக்கல் அடித்து கமெண்ட் போட்டு வருபவர் . ஒரு வகையில் எனக்கு அது உதவியாகவும் இருந்தது.

  காற்று வாங்கிக்கொண்டு இருந்த என் பிளாக் அவர் தாக்கி அடிக்கடி லிங்க் கொடுக்க கொடுக்க அதிகம் பேர் என் தளத்திற்கு வர ஆரம்பித்தார்கள் . கூகுள் பஸ்சில் அவருக்கு அதற்காக நன்றி தெரிவித்தேன். உடனே அவர் சுதாரித்துக்கொண்டார். அதற்குப்பின்  அப்படி லிங்க் ஏதும் தருவதில்லை .


 சினிமா விமர்சனங்கள் எழுதும்போது  இயக்குநருக்கு சில கேள்விகள் என்று ஒரு பகுதி வரும். அதில் லாஜிக் மிஸ்டேக்ஸ் பற்றி சொல்லி இருப்பேன். இவர் அவருக்கு  தமிழ் தெரியுமா? என்று நக்கல் அடிப்பார்.ஹாலிவு இயக்குநர் படிப்பதற்குத்தான் அந்த பகுதி என்று நம்பும் அப்பாவி .

 ராஜன் கைது நடந்த போது நான் ட்விட்டரில் இல்லை. என் பிளாக்கில் ஏதோ ஒரு போஸ்ட் போட்டு அதற்கான லிங்க்கை ட்விட்டரில் கொடுத்து விட்டு பின் ட்விட்டர் வந்த போது “ இழவு வீட்டில் சுண்டல் விற்காதீர் “  என்றார். எனக்கு சுருக் என்றது . என்ன விஷயம் என டைம் லைனை பார்த்த பின் தான் ராஜன் கைது விஷயமே எனக்குத்தெரியும்,


 அப்போதே  ராஜன் கைது என்ற போஸ்ட்டை போட்டேன்.


 அப்போது அபாரமான தன் புத்திசாலித்தனத்தை வெ:ளிப்படுத்தும் விதமாக் அவர் “ சி பி ஏன் கோழைத்தனமாக ராஜனுக்கு ஆதரவாக எழுதிய பதிவுகளை இப்போது நீக்கினார்? “ என்று கேள்வி எழுப்பினார். பாவம் அவருக்கு நான் நீக்கி  6 மாதங்கள் ஆன மேட்டர் தெரியவில்லை .


புலனாய்வு இதழ்கள் , நாளிதழ்கள் , ராஜ் டி வி யின் கோப்பியம் ஆகியவற்றில் ஒரு தலைப்பட்சமாக செய்திகள் வந்த போது  நான் யுவகிருஷ்ணாவிடம் டைம் லைனில் கேட்டேன் “ நீங்கள் ராஜனின் நெருங்கிய நண்பர் , புதிய தலைமுறையின் முக்கியப்பொறுப்பில் இருப்பவர் . நீங்கள் நினைத்தால் ஒரு கட்டுரை எழுதி மக்களுக்கு உண்மை நிலவரத்தை புரிய வைத்திருக்கலாமே? என்றேன். அதற்கு அவர் சாமார்த்தியமாக “ அபப்டி நான் முக்கிய பொறுப்பில் இல்லை “ என நழுவிக்கொண்டார். 


ஆக யுவ கிருஷ்ணா எனக்கு எதிராக பேசுவதற்கு இந்த 2 காரணங்கள் தான் .



3.  லாரிக்காரன் - இவர் ஒரு ட்விட்டர் லாங்கரில்  சென்னை பதிவர் சந்திப்புக்குப்பின் ராஜன் சி பி யை தாக்கி போட்ட பதிவின் காரணமாக  அவர் உளவு வேலை பார்த்திருக்கக்கூடும் என யூகத்தின் அடிப்படையில் கேள்வி எழுப்பி இருந்தார். இவருக்கும் , எனக்கும் எந்தபப்கையும் இல்லை . ஆனால் டைம் லைனில் கோவை ஆண்ட்டனி  ஒரு ட்வீட்டில் “ நடுநிலை வகிப்பதாக சொல்லும் சி பி ,லாரிக்காரன், ரைட்டர் சி எஸ் கே மூவரின்  ட்வுசர் கிழிகிறது” என டைம் லைனில் போட்ட ட்வீட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதச்மாக அந்த ட்வீட் லாங்கர் அமைந்தது . எனவே அது ஒரு தற்காப்புக்காக போடப்பட்டது என யூகிக்கிறேன், மற்ற அப்டி லாரிக்காரன் அவர்களுக்கும், எனக்கும் எந்த வித முன்பகையும் இல்லை 



4. ராஜனின் நண்பர்கள்  - ராஜன் கண்டிஷன் பெயிலில் வெளிவந்த அடுத்த நாள் சேட்டைக்காரன் அவர்கள் “ உங்களைப்பற்றி இப்போதான் தெரிந்து கொண்டேன், உங்களைப்பின் தொடர்ந்ததற்கு வருத்தப்படுகிறேன் என்று ட்வீட் போட்டு அன் ஃபாலோ செய்தார். அதை வழி மொழிந்து ஃபிரியாவிடு டேவிட் , புது மாப்ளை ரகு  உட்பட 5 பேர் அன்ஃபாலோ செய்தார்கள் . அவர்கள் ஏன் அபப்டி செய்தார்கள் என்று தெரிய்வில்லை.ஆனால் அவர்களுக்கும் எனக்கும் முன் விரோதம் ஏதும் இல்லை .(சேட்டைக்காரன் என்பவர் பதிவுலகில் உள்ள நாகேஷ் டி பி வைத்தவர் அல்ல, ட்விட்டர் அக்கவுண்ட்டில் கவுண்டமணி டி பி வைத்தவர், நேரில் அறிமுகம் இல்லை)



5. சென்னை செந்தில் CHN -இறுதியாக இந்த லிஸ்ட்டில் வருபவர் சென்னை செந்தில் . இவருக்கும் , எனக்கும் நல்ல பழக்கம் இருந்தது. நேரில் இருவரும் இரு முறை சந்தித்து இருக்கிறோம். நல்ல புரிதல் உண்டு. கருத்து வேற்றுமை எப்போ நிகழந்ததுன்னா கசாப் தூக்கில் இடப்பட்டபோது “ நான் அசைவர்கள் ஆடு கோழி ஆகியவற்றை வெட்டி கொலை செய்து  அந்த டெட் பாடியை சாப்பிடுகிறார்கள், அவர்களுக்கு மரண தண்டனை பற்றி பேச தகுதி இல்லை “ என கருத்து தெரிவித்தேன்.


மனித நேயர்கள் நாளை தீவிரவாதிகள்  ஒரு விமானத்தை கடத்தி வைத்து “ இந்த பயணிகளை விடுவிக்க  கசாப்பை விடுவிக்கச்சொன்னால் என்ன செய்வார்கள்? என கேட்டேன். அதில் அவருக்கு மனஸ்தாபம் .


அவர் நேற்று ஒரு பெண்ணுடன் டைம் லைனில் பேசிய ஒரு ட்வீட்டை ஃபேவரைட் செய்து வைத்தேன். அது வருக்குப்பிடிக்கவில்லை. இப்படி ஃபேவரைட் செய்து வைத்தால் பின்னால் எனக்குத்தான் ஆபத்து. மாடரேட் செய்து ஜாலிக்காக சில ஆர் டி கள் செய்வது , தனிப்பட்ட உரையாடல்களை ஃபேவரைட் செய்வது சரி அல்ல என்றார். நான் உடனே “ ஓக்கே “ என்று சொல்லி விட்டேன் .


 இந்த மனத்தாங்கல்கள் தான் அவரை எனக்கு எதிராக பேசத்தூண்டியது




இப்போ பதிவுகளின் நீக்கம் பற்றி ஒன்றைக்குறிப்ப்ட வேண்டும் .இது எனக்கு முதல் அல்ல . ஆல்ரெடி பல சந்தர்ப்பங்களில் பல பதிவுகளை நீக்கி இருக்கிறேன். நான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால்கள் என என்றுமே நான் அடம் பிடித்ததில்லை . யாராவது மனம் புண்படுமாறு இருக்கு என கருத்து தெரிவித்து அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் , தனி நபர் தாக்குதலாக இருந்த பலவற்றை நீக்கி இருக்கிறேன், வலுவான காரணங்கள் இல்லாமல் நீக்கச்சொன்ன பதிவுகளை நீக்க முடியாது என்று சொல்லி இருக்கிறேன் .



1. 2010 ஆம் ஆண்டு கடைசில் எல்லா செல் ஃபோன்களில் வந்த , பரவிய ஜோக்  ஒன்று - அது கலைஞர் , ஆ ராசா சமப்ந்தப்பட்ட ஜோக். அதை ஜோகஸ் பதிவாக 20 ஜோக்ஸ் கொண்ட ஒரு பதிவாக போட்டிருந்தேன். அது வரம்பு மீறியதாக இருக்கிறது என சென்னிமலை திராவிட முன்னேற்றக்கழக ஒன்றியச்செயலாளர் அலை பேசியில் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி அந்த குறிப்பிட்ட ஜோக்கை மட்டும் நீக்கி விட்டேன் .


2. சிங்கப்பூரைச்சேர்ந்த பிரபல ட்வீட்டர்  கோவை வந்த போது நடந்த சம்பவங்களை கிண்டல் பண்ணி ஒரு காமெடி கும்மி போஸ்ட் போட்டிருந்தேன். தனி மெயிலில் அவர் அந்தப்பதிவு தன் மனதை பாதிப்பதாகவும் , தனி மனித தாக்குதல் இருப்பதாகவும் கேட்டுக்கொண்டதன் பேரில் அந்தபப்திவை நீக்கி விட்டேன்


3. சென்னை ட்வீட்டர் சந்திப்பில் ஒரு ட்வீட்டரைப்பற்றிய வர்ணனைகள் அவருக்குப்பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து அவர் ஏதும் என்னிடம் கேட்டுக்கொள்ளாமலேயே குறிப்பிட்ட வரிகளை மட்டும் நீக்கி விட்டேன் .



4. ட்விட்டர் டைம்லைனில் பிரபல ட்வீட்டர் டி பி பற்றி நான் அடித்த கமெண்ட் அவருக்கும், அவர் நண்பருக்கும் பிடிக்க வில்லை என்பதை அறிந்ததும் அந்த கமெண்ட்டை நீக்கி விட்டு அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன்.


5. கருங்காலி என்ற படத்தின் சினிமா விமர்சனத்தில் அந்தபப்டம் ஒரு கில்மாபப்டம் என்ற வரியை அகற்றுமாறு அதன் இயக்குநர்  மு களஞ்சியம் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் என்னையும் , கேபிள் சங்கரையும் தனித்தனியே கிட்டத்தட்ட மிரட்டினார், ஆனால் நாங்கள் அந்த  வ்ரிகளை நீக்க ஒத்துக்கொள்ளவில்லை .


6. நடு நிசி நாய்கள் பட விமர்சனம் வந்த  போது  2 பதிவுகள் இயக்குநரை தாக்கி எழுதி இருந்தேன். கவுதம் வாசுதேவ் மேனன் அவர்களின் உதவி இயக்குநர் என தன்னை அறிமுகம் செய்த நபர்  அந்த பதிவை அகற்றுமாறு மிரட்டினார், நான் ஒத்துக்கொள்ளவில்லை. அனானி பெயரில் கேவலமாக கமெண்ட் போட்டார்.


 இதை எல்லாம் எதற்காக இப்போது சொல்கிறேன் என்றால் நான் செய்தது தவறு என்று தெரிந்தால்  அதை ஒத்துக்கொண்டு அதற்காக மன்னிப்புக்கேட்கத்தயங்க மாட்டேன் என்பதையும் , அதே சமயத்தில் செய்யாத தவறுக்காக அவதூறை சுமக்க மாட்டேன் என்பதையும் தெளிவு படுத்தவே..


அட்ராசக்க ஒரு செய்தி ஊடகம். பர பரப்பான செய்திகள் அதில் பகிரபப்டும் . ராஜனின் நண்பர்களுக்கு உள்ள வருத்தம் நான் ராஜனுக்கு எதிராக பத்திரிக்கைகளில் வரும் செய்திகளை எல்லாம் போஸ்ட்டாகப்போடுகிறேன் என்பதே .


 அது தவறு. இதுவரை 11 பதிவுகள் ராஜனுக்கு ஆதரவாக , எதிராக கலந்து கட்டி போட்டிருக்கிறேன். ஆல்ரெடி எங்களுக்குள் கருத்து வேறு பாடு இருந்ததால் என் கருத்து மட்டும் நான் எழுதவே இல்லை. அப்படி எழுதினால் அது ஒரு தலைப்படசமானதாக பார்க்கப்படும் என்பதாலாயே அதை தவிர்த்தேன்.

 நெல்லை டேவிட் ( ஃபிரியா விடு மாமு ) ராஜனுக்கு ஆதரவான பதிவுகளான  துணுக்கு எழுதிய கட்டுரை , விமலாதித்த மாமல்லன் எழுதிய கட்டுரையை எல்லாம் சி பி ஏன் வெளியிட வில்லை என கேட்ட போது ஒரு மணி நேரத்தில் அந்த பதிவை வெளியிட்டேன்.



நேரில் சந்தித்துப்பழகிய பரிசலுக்கும், ராஜனுக்கும் என்னைப்பற்றித்தெரியும், சுற்றி இருப்பவர்கள் தான் சந்தேகங்களை எழுப்புகிறர்கள்.


 கடைசியாக ஒரு வரி - ராஜனுக்கு நான் நண்பனா? எதிரியா? என்பதை காலம் சொல்லும். ஆனால் கண்டிப்பாக துரோகி இல்லை என்பதை உறுதியாக நான் இப்போது சொல்கிறேன். மேலும் எனக்கும் இந்த ஸ்க்ரீன் ஷாட் மேட்டருக்கும் எந்த சமப்ந்தமும் இல்லை என்பதை ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன்



டிஸ்கி -  1 - மிரட்டலுக்குப்பின்னும் நான் நீக்காத பதிவுகள்

1 கருங்காலி - சினிமா விமர்சனம் -http://www.adrasaka.com/2011/08/blog-post_2810.html


2 இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு ஒரு கடிதம் -http://www.adrasaka.com/2011/02/blog-post_7783.html

3 நடுநிசி நாய்கள் - சினிமா விமர்சனம் -http://www.adrasaka.com/2011/02/18_18.html
  டிஸ்கி 2 - இதுவரை என் ட்விட்டர் வாழ்க்கையில் அன்ஃபாலோ, பிளாக் ஏதும் இருந்ததே இல்லை. யாரையும் நான் அப்படி செய்ததில்லை. வீட்டில் , ஆஃபீசில் ஏற்படும் மன அழுத்தத்தை மறக்க ஜாலியாக இருக்கவே இங்கே வருகிறோம், இங்கேயும் பிரச்சனை என்றால்?

Sunday, October 28, 2012

சின்மயிக்கு எதிரான சில ஆதாரங்கள்

article, says he was harassed to remove Rajan's name

This story is being presented without prejudice on either side. For starters, an article written by Mr.Mahesh Murthy is claimed to be the beginning of the issue which has shook tamil twitter world.
  1. maheshmurthy
    Is @Chinmayi a vindictive liar? She harassed me to remove @RajanLeaks from oh.pn/ii3 I said no: now she has him jailed
  2. Chinmayi
    @maheshmurthy :) Why did you remove Shreya's entry alone? Who harassed you for that? Please use your words carefully Mr Murthy.
  3. Chinmayi
    @maheshmurthy My question was clear even then. I said it doesnt make sense you named him as the sole rep of from here.
  4. Chinmayi
    @maheshmurthy i questioned the veracity of your study. You had no answer and now you call it a harassment.
  5. maheshmurthy
    @Chinmayi article was abt bloggers. Shreya said her blog was written by others not her. So removed. u threatening me? Haha
  6. maheshmurthy
    @Chinmayi dont lie again. U just wanted @rajanleaks name removed. Thats all
  7. Chinmayi
    @maheshmurthy also saying i m known as a blogger and not as a singer is bizarre, Mr Murthy. Your article was up for major criticism
  8. maheshmurthy
    @Chinmayi dont bullshit. You took your personal animus to @rajanleaks and tried to get me to delete his name. I refused
  9. Chinmayi
    @maheshmurthy :) my tweets are in the open. You can try and say anything now :) We ll have to see why you named him of all people.
  10. Chinmayi
    @maheshmurthy Well sir I have no interest in speaking to you further. A lot of people are questioning the tool anyway. Thanks.
  11. Chinmayi
    @maheshmurthy Article was NOT about bloggers. Your article says its across Twitter blogger linkedin facebook.
  12. Chinmayi
    @maheshmurthy if you were calculating influence Rajan had more influence than a famous writers and bloggers here? Seriously?
  13. maheshmurthy
    @Chinmayi Don't know what lie you told TN cops to arrest @rajanleaks but it wont wash with me. Truth is YOU harassed me to remove his name

  14. SACHIN_DINESH
    @Chinmayi This is one of the replies that he got for his irresponsible article. pic.twitter.com/VX1guZRf
  15. sunda_m
    @maheshmurthy also she is a much admired and respected person and it wd be nice if you cd be refined in ur tweets.
  16. maheshmurthy
    @sunda_m so @chinmayi may be admired and respected - but she harassed me and lies to others about it. i will call a spade a spade
  17. maheshmurthy
    @Chinmayi Don't need a lecture from you on social media. U may have conned cops & press in TN but u can't fool ppl online
  18. maheshmurthy
    @Chinmayi You bugged me for days to remove @RajanLeaks name & I told u to buzz off & take yr personal enmity elsewhere
  19. maheshmurthy
    @Chinmayi Listen, u idiot, my article may've been wrong or right, but I'm responsible for it. I don't take orders from u.
  20. maheshmurthy
    @Chinmayi Suddenly u discover need to criticise article - when in past all u wanted was to remove @Rajanleaks name haha:)
  21. maheshmurthy
    @Chinmayi I don't know u or @rajanleaks personally, have no bias either way. But he never intimidated me to censor,u did
  22. maheshmurthy
    @Chinmayi i don't take kindly to ppl who try to intimidate me. you tried it again today. you're foolish to.
  23. Chinmayi
    @maheshmurthy My tweets are in the open Sir. I dont call people names in an argument. I questioned you i had the right to. Thanks
  24. maheshmurthy
    @Chinmayi Your tweets are NOT in the open, madam. You have deleted them repeatedly, lied about them, misrepresented events & more
  25. maheshmurthy
    @Chinmayi Even now you're sly-tweeting about reactions to my article. you've gone from @rajanleaks critic to literary critic?:)










    நன்றி - திருப்பூர் பிரசாந்த் ,மகேஷ் மூர்த்தி, சின்மயி ,
    chandsethuSethuraman,பாலாஜி ராகவன்


    டிஸ்கி - 1 - சின்மயி போலீசில் புகார் - http://www.adrasaka.com/2012/10/blog-post_3736.html



    டிஸ்கி 2 - சமாதான முயற்சிகள் , சின்மயி தரப்பு விளக்கங்கள் | அட்ரா சக்க


    http://www.adrasaka.com/2012/10/blog-post_24.html

    டிஸ்கி 3 -  ஆனந்த விகடனில் சின்மயி சர்ச்சை | அட்ரா சக்க

    http://www.adrasaka.com/2012/10/blog-post_25.html


    டிஸ்கி 4  -சின்மயி - புதிய தலைமுறை - நேர்படப்பேசு - விவாதங்கள் | அட்ரா சக்க

    http://www.adrasaka.com/2012/10/blog-post_7117.html


    டிஸ்கி 5 -  சாருநிவேதிதா சின்மயி புகார் பற்றி சொன்ன கருத்து |

    http://www.adrasaka.com/2012/10/blog-post_26.html


    டிஸ்கி 6. - ஜெயமோகன் கருத்து - சின்மயி புகார் பற்றி | அட்ரா சக்க

    http://www.adrasaka.com/2012/10/blog-post_27.html


    டிஸ்கி 7 -ட்விட்டர் ராஜன் கைது ! சின்மயி விளக்கக்கடிதம்
    http://www.adrasaka.com/2012/10/blog-post_5516.html


    டிஸ்கி 8- லீனா மணிமேகலையின் ஃபேஸ்புக்கில் நிகழ்ந்த சின்மயி சர்ச்சை விவாதங்கள் http://www.adrasaka.com/2012/10/blog-post_4186.html

    டிஸ்கி 9 -மனுஷ்ய புத்திரனின் சின்மயிக்கு எதிரான நிலைப்பாடு http://www.adrasaka.com/2012/10/blog-post_866.html

    டிஸ்கி 10 - சின்மயிக்கு விமலாதித்த மாமல்லன் எழுதிய கடிதம் | அட்ரா சக்க- http://www.adrasaka.com/2012/10/blog-post_7687.html


Wednesday, October 24, 2012

சமாதான முயற்சிகள் , சின்மயி தரப்பு விளக்கங்கள்

http://www.tolly9.com/uploads/news/politics/thumb/professor-arrested-for-harassing-female-singer.jpg 

ட்விட்டர் ஆல்தோட்ட பூபதி ( கரூர் ஜெகன்)  எழுதிய கடிதம் -


சகோதரி சின்மயி அவர்களுக்கு வணக்கங்கள். உங்களுக்கு என்னை தெரியுமா என தெரியவில்லை. இதுவரை உங்களுடன் பேசியதில்லை, அதனால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உங்கள் குரலின் இனிமையை ரசிக்கும் ஒரு கடைக்கோடி ரசிகனால் வைக்கப்படும் ஒரு வேண்டுகோளாய் நினைத்து வாசியுங்கள்.


 இந்தச் சமுதாயத்தால் வளர்ச்சி பெற்று வரும் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்ற அளவு சமுதாயம் வளரவும் பங்களிப்பு தரவேண்டும் என்ற நம்பிக்கை உடைய நீங்கள், வெறும் ஒரு தனி மனிதனின் குடும்பத்திற்காகவும் அந்த பச்சிளம் குழந்தையின் புன்சிரிப்புக்காகவும் தயவு கூர்ந்து பெரிய மனதுடனும், பெருந்தன்மையுடனும் அவர்களை மன்னித்தருள வேண்டுகிறேன். ஒரு அன்பான தாயாரால் வளர்க்கப்பட்டு, வார்த்தைக்கு வார்த்தை அவரின் அன்பையும் அரவணைப்பையும் பற்றி புகழ்ந்து சந்தோஷப்படும் ஒரு மகளான உங்களுக்கு நிச்சயம் இந்த பச்சிளம் பெண் குழந்தையின் பரிதவிப்பு புரியும் என நம்புகிறேன். 



ஒரு விளையாட்டில் ஜெயித்த நான்கு லட்ச ரூபாயை குழந்தைகள் நல அமைப்பிற்கு நன்கொடையாக கொடுக்குமளவு நல்ல நெஞ்சம் இருக்கும் உங்களால் நிச்சயம் இன்னமும் ஒரு பிறந்தநாள் கூட கொண்டாடாத இந்த குழந்தைக்காக  மிக மிக பெருந்தன்மையும் நீங்கள் வளர்ந்த உயர்ந்த முறையையும் காட்டி மன்னிதருளலாம். இது போல ஒவ்வொருவர் வீட்டிலும் இன்னமும் உலகத்தை அறியா குழந்தைகள் இருக்கலாம், வயதானவர்களும் இருக்கலாம். ஒருவரின் செயலுக்காக எல்லோரும் பாதிக்கப்பட வேண்டுமா என கொஞ்சமே கொஞ்சம் யோசியுங்கள். 



உங்களின் வார்த்தைகளின் மூலம், உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் மன உளைச்சலும், பெரும் மன வருத்தமும், இறுக்கமும், கால விரயமும் புரிந்துக்கொள்ள கூடியது. உண்மையில் ஒரு சக மனிதனாக அதற்கு வெட்கமும் வேதனையும் படுகிறேன். நிச்சயமாய் அது மறக்க கூடியது இல்லை, ஆனால் உங்களை போன்ற பெருந்தன்மையான ஆளுமைகளுக்கு அது மன்னிக்க கூடியது தான். புகாரின் பேரில் இருக்கும் அந்த ஐந்து / ஆறு நபர்கள் செய்ததை நியாயப்படுத்த நான் இதனை எழுதவில்லை. அதில் எந்நாளும் எனக்கு உடன்பாடும் கிடையாது. அதில் சிலருடன் (இருவர்) பழகி இருப்பதாலும் இதனை எழுதவில்லை. ஏன், உங்களின் மனதை புண்படுத்தியதற்கு பொதுவிடத்தில் மன்னிப்பு கேட்கவும் வைக்க கூட எனக்கு தோன்றுகிறது.ஏன், ஒரு ஆணாக நானே கூட கேட்கலாம்.


http://lh4.ggpht.com/_leK5390n0fE/TNlabtJQefI/AAAAAAAAEu8/gA4USvRjxd8/Single-Photo-.jpg

நான் இந்த வேண்டுகோளை வைப்பதற்கும் எழுதுவதற்கும் காரணம், நானும் ஒரு ஒன்னரை வயது பெண் குழந்தையின் தகப்பன் என்பதால், ஒரு குழந்தையின் தேடலும் ஆசையும் விளையாட்டும் புன்சிரிப்பும் தவிப்பும் எப்படி இருக்கும் எதை நோக்கி இருக்கும் என்று அறிந்த ஒரு சக சகோதரனாய் தான் இந்த வேண்டுகோளை வைக்கிறேன். இந்த வேண்டுகோளை பரிசீலிக்கவும், நிராகரிக்கவும், பதில் அளிக்காமல் விடவும் உங்களுக்கு உரிமை உண்டு.



 ஆனால் உங்களின் பெருந்தன்மையால் அவர்களை மன்னித்தால், அது அவர்களை மட்டும் மன்னித்தது இன்றி, அவர்களின் குடும்பத்தையும் காப்பாற்றிய அழியா புகழ் உங்களை வந்து சேரும். இரண்டு நிமிடம் மட்டும் என் வேண்டுகோளுக்கு ஒதுக்கி, நல்ல முடிவை எடுங்கள். உங்களை போன்ற படித்தவர்களுக்கு நிச்சயமாய் தெரிந்திருக்கும் ' இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண / நன்னயஞ் செய்து விடல்'



( இந்த வேண்டுகோளை பற்றி விவாதிக்கவோ, பெரிது படுத்தவோ நான் விரும்பவில்லை. ஏனினில் இது முழுக்க முழுக்க உங்கள் விருப்பத்தையும் உரிமையையும் சார்ந்தது.மீண்டும் சொல்கிறேன், இந்த வேண்டுகோளை பரிசீலிக்கவும், நிராகரிக்கவும், பதில் அளிக்காமல் விடவும் உங்களுக்கு உரிமை உண்டு. இதனை உங்கள் இருவரை ( / ) தவிர யாருடனும் பேசவும் விவாதிக்கவும் நானும் விரும்பவில்லை )

PS : Please dont think that am negotiating with sentiment(s), am just writing this by considering and believing you as a real peace lover. And importantly, am requesting you and not forcing you ;) Blesses and wishes ;)


http://lh3.ggpht.com/_leK5390n0fE/TNladS4wikI/AAAAAAAAEvM/ht6YBoimxkw/Single-Photo-.jpg


சின்மயி-யின் அம்மா வின் ரிப்ளை  -1




பிரஷாந்த் , we never wanted this to happen. அதுனால தான் ரெண்டு வருஷம் பொறுத்தோம். இன்னிக்கி மிருகம்னு அழைக்கிரவங்கள நான் approach செஞ்சு as a friend ராஜன் கிட்ட அந்த குழந்தைக்காகவும் அவர் இளம் மனைவிக்காகவும் அவரை சற்று கௌரவமாக இருக்கசொல்லுங்கன்னு கெஞ்சினேனே.. He said no body can talk to Rajan. முயற்சி கூட பண்ண ரெடியா இல்லியே. 


 தொட்டிலையும் ஆட்டி தொடையையும் கிள்ளுவாங்கன்னு சொல்லுவாங்க. அந்தமாதிரி எனக்கு நேற்றைய விஷயங்கள 'அம்மா அம்மா' ன்னு கூப்பிட்டு சொல்லிவிட்டு இன்னிக்கி நல்லவன் போல நடிக்கறதுல என்ன அர்த்தம்னு நான் கேட்டேன்னு கேளுங்க. நல்ல ஒரு ப்ரொஜெக்டை விவரிச்சு அதுல அவர (Rajan) ஈடுபடுத்தி மனசை மாத்தலாம்னு சொன்னேனே. அந்த விஷயத்த ராஜனுக்கு கொண்டு போயானும் சேர்த்தாரா?


 ஒங்க எல்லாரையும் விட நான் தான் தொல்வியடைஞ்சதா நெனைக்கிறேன்.. செந்தில்cp மற்றும் சிலரை நான் அன்பால வென்றது மாதிரி ராஜனையும் வென்றிருந்தா அது என்னோட நிஜமான சந்தோஷமா இருந்திருக்கும் . கூடவே இருந்து இந்தநிலமைக்கி தள்ளி விட்டது வேற யாரும் இல்ல மிருகம்னு அழைக்கிற இவரே தான் . எனக்கும் நிறைய விஷயங்களை அம்மா அம்மான்னு கூப்பிட்டு , தன்மனிதன் போல சொல்லிவிட்டு மனுஷாபிமான இல்லாம இந்த நெலமைக்கி ஆளாக்கினது வேற யாருமே இல்லே இவருக்குத்தான் பெரிய்ய பங்கு .


இனப்பிச்சனை , ஸ்ரீலங்கன் பிரச்சனைன்னு பிறர் வீட்டு இளம் பெண்ணை அவதூறில் மாட்டிவைக்கிறமாதிரி திசை திருப்ப முயற்சி பண்ணற நேரத்தில ஒருமுறை அவரை நல்லதை உணர வைத்திருக்கலாமில்லையா ? யாராவது முயன்றீர்கள ? நான்குநாட்களில் ஒருவருக்கும் தோன்றவில்லையா?


Answering you Prashanth because we feel obligated to you for your stance for Chinmayi in the recent past which made you take a lot of muck. You proved a real anger of a brother when provoked on an issue of his sister. Now that the issue has gone to the police, and judiciery we all have to wait and let us not mince words or be emotional. Let the future bring change in all our minds to be a good and better humanbeings.  


http://gallery.southdreamz.com/cache/music-dance-celebrities/chinmayi/singer-chinmayi-exclusive-photo-gallery-9_720_southdreamz.jpg


பரிசல்காரன் -ன் ( திருப்பூர் கே பி கிருஷ்ணகுமார்) ட்வீட் 

ராஜன் கஸ்டடிக்கு போனது குறித்து மகிழ்ச்சி அடையும் மிருகங்களுக்கு ஆதிரையின் இந்தப் புன்னகையைப் பரிசளிக்கிறேன்.

 ராஜனின் குழந்தை படம் பகிர்ந்தார். அந்த படம் கே டி வி கிருஷ் வேண்டுகோளுக்கிணங்க நீக்கப்பட்டது 
ஆ.ராதாமணாளன்

சின்மயி-யின் அம்மா வின் ரிப்ளை  -2



உங்களை முழுக்க முழுக்க நம்புகிறேன். நீங்கள் திருமதி ரேவதியை பற்றி கவலைப்படாத நேரமில்லை என்பது எனக்கு தெரியும். நானும் அந்த குழதையையும் ரேவதி அவர்களை பற்றியும் எவ்வளவு feel பண்ணினேன் என்று உங்களுக்கு தெரியும். உங்களிடம் நான் முதலில் பேசிய போது உங்களின் தொடர்பு ராஜனுடன் அட்வைஸ் செய்யும் அளவில் இல்லை என்பதால் உங்கள் நண்பர் பரிசலிடம் எத்தனை முறை வாதாடினேன். அவர் நிஜமான நண்பராக இருந்திருந்தால் எங்களுக்காக வேண்டாம் அவர் நண்பருக்காக எடுத்துரைத்து இருக்கலாமில்லையா.


 இங்கு தோட்டா அவர்களின் முயற்சியை மதிக்கிறேன். பரிசலுக்கு எப்படி இப்படி ஒரு ....? அவர் எனக்கும் சரி ராஜனுக்கும் சரி நம்பிக்கை துரோகம் தான் செய்திருக்கிறார். திருமண வயதில் பெண்ணை வைத்திருக்கும் ஒரு தாயின் மன வேதனையை நீங்களும் மற்ற சிலரும் புரிந்து கொண்டீர்கள். இன்று தோட்டா அவர்களை retweet செய்த யாரவது பேசி இருப்பார்களா? நானும் அந்த குழதையையும் ரேவதி அவர்களை பற்றியும் எவ்வளவு feel பண்ணினேன் என்று உங்களுக்கு தெரியும். ?


ராஜனை உங்கள் மொழியில் உசிப்பெத்தி உசுப்பேத்தி விட்டு சற்று நேர கேளிக்கை அனுபாவித்தர்களே. அன்று சின்மயி மற்றும் அவளைப்பெற்ற நானும், நிஜமான அண்ணன் போல நீரும் மேலும் சிலரும் துடித்தோம். அதையும் கேளிக்கைப் பொருளாக்கியவர்களுக்கு இன்று ராஜனுக்காக வருத்தப்பட உரிமையில்லை. இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற இந்த குறளை மேற்கோள் காட்டி எத்தனை முறை நான் சின்மயியை சமாதானப்படுத்தினேன் என்று உங்களுக்கு தெரியும்.


எங்கள் பொறுமையை இயலாமை என்றுதானே மிதித்தார்கள்? Please read my tweet reply to .


நானும் சின்மயியும் இந்த கைதுகளால் சிறிதும் மகிழ்ச்சி அடையவில்லை. இன்று நீங்கள் கதறும் இதே possible நிலைமையை சுட்டிக்காட்டி ராஜனை புரியவையுங்கள் என்று பரிசலிடம் கதறினேனே அன்று வீணாக இருந்துவிட்டு இன்று குழந்தையை போட்டோ பிடித்து போடலாமா? குழந்தையை வெளியில் காண்பிக்கலாமா. மீண்டும் மக்களை தூண்டிவிட்டு பிரச்னையை பெரிதாக்கும் பரிசலை வன்மையாக கண்டிக்கிறேன். திரு தோட்டாவின் செண்டிமெண்ட்சை மதிக்கிறேன். 



 தினமணி செய்தி 


பாடகி சின்மயி தனக்கு டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் ஆபாசமாகக் கருத்துகள் எழுதி மன உளைச்சல் ஏற்படுத்துவதாக 6 பேர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.


தன்னைப் பற்றியும் தன் தாயாரைப் பற்றியும் மோசமாக சித்திரித்து கருத்துகள் எழுதுவதாக அவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் நேற்று நிப்ட் மையத்தின் துணை பேராசிரியர் சரவணக்குமார் பெருமாள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

http://haryanaabtak.com/wp-content/themes/NewsTime/thumb.php?src=http://haryanaabtak.com/wp-content/uploads/2012/10/7042_singerchinmayi.jpg&w=568&zc=1&q=80&bid=1

தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணை அடிப்படையிலும், மேலும் தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடைப்படையிலும், ஏ.ராதாமணாளன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.



இவர் சென்னை பெரியமேட்டில் உள்ள தர்பார் ஹோட்டல் முன்பு செவ்வாய்க்கிழமை இன்று கைது செய்யப்பட்டதாக போலீஸார் கூறினர்.




திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் இவர். இவர் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிகிறார். டிவிட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களில் மிகவும் துடிப்பான உறுப்பினர்.



 இவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இவர், சின்மயிக்கு தான் எழுதிய கருத்துகள் குறித்து ஒப்புக்கொண்டார். மேலும், தனது @rajanleaks என்ற பெயரிலான தளம் குறித்தும், தான் அதன் மூலம் சின்மயிக்கு ஆபாசக் கருத்துகளை எழுதியதையும் போலீஸாரிடம் ஒப்புக்கொண்டார். பின்னர் இவர் எழும்பூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.




மேலும் சின்மயி கொடுத்த புகாரின் அடிப்படையில், கிரைம் பிரிவு போலீஸார், @losongelesram, @vivajial, @rajanleaks, @senthilchn, @thyirvadai, Asharavkay ஆகிய ஆறு பேர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

@காலைக்கதிர்



@காலைக்கதிர்





டிஸ்கி - சமாதானப்பேச்சு இன்னும் தொடர்வதால் ட்விட்டர் நண்பர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யும்போது பொறுமை காக்கவும், ஆவேசமான, ஆக்ரோஷமான எதிர் வாதங்கள் எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்.சின்மயி , மற்றும் அவர் அம்மா பற்றிய தனி மனித தாக்குதல்களை தவிர்க்கவும்.வழக்கை வாபஸ் பெற வைக்க கடைசி நிமிடம் வரை முயற்சிகள் தொடரும். அதற்குள் அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டி சமாதானத்திற்கு யாரும் பங்கம் விளைவிக்க வேண்டாம்


டிஸ்கி 2 - ட்விட்டர் ராஜன் கைது ! சின்மயி விளக்கக்கடிதம்-
http://www.adrasaka.com/2012/10/blog-post_5516.html


டிஸ்கி 3 - சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்யப்பட்ட பிரபல ட்வீட்டர்கள் விபரம்
http://www.adrasaka.com/2012/10/blog-post_7456.html