எம் ஜி ஆர் -ன் 100 வது பட,ம் ஒளிவிளக்கு பிரம்மாண்ட வெற்றி பெறவில்லை. அவரது டாப் 3 லிஸ்ட் 1 உலகம் சுற்றும் வாலிபன் 2 நாடோடி மன்னன் 3 அடிமைப்பெண். இந்த மூன்றும் அவரது சொந்தத்தயாரிப்பு . .சிவாஜியின் 100 வது பட,ம் நவராத்திரி வெற்றிப்பட்ம் தான் என்றாலும் பிரம்மாண்ட வெற்றி பெறவில்லை.. அவரது டாப் 3 லிஸ்ட் 1 முதல் மரியாதை 2 பராசக்தி 3 திருவிளையாடல்.
ரஜினியின் 100 வது பட,ம் ஸ்ரீ ராகவேந்திரர். இது தோல்விப்படம். பரீட்சார்த்த முயற்சி. ஆத்ம திருப்திக்காக எடுத்த படம். இவரது டாப் 3 . 1 பாட்ஷா 2 படையப்பா 3 சந்திரமுகி .கமலின் 100 வது பட,ம் ராஜ பார்வை.இது இவரது முதல் சொந்தப்படம். தோல்விப்படம். இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் + கமல் காம்ப்போ வில் அனைத்துப்படங்களும் கமர்ஷியல் சக்சஸ். இது மட்டும் விதிவிலக்கு
சத்யராஜின் 100வது படம் வாத்தியார் வீட்டுப்பிள்ளை . சுமார் ரகம். இவரது டாப் 3 லிஸ்ட் 1 அமைதிப்படை 2 முதல் வசந்தம் 3 நடிகன்
.பிரபுவின் 100வது படம் ராஜகுமாரன். தோல்விப்படம்.இவரது டாப் 3 லிஸ்ட் 1 சின்னத்தம்பி 2 அக்னி நட்சத்திரம் 3 குரு சிஷ்யன் . கார்த்திக்கின் 100வது படம் உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன் வெற்றிப்படம் , இவரது டாப் 3 லிஸ்ட் 1 உள்ளத்தை அள்ளித்தா 2 பொன்னுமணி 3 கிழக்கு வாசல்
விஜயகாந்த்தின் 100வது படம் கேப்டன் பிரபாகரன். பிரம்மாண்ட வெற்றி. இவரது டாப் 3 லிஸ்ட் 1 கேப்டன் பிரபாகரன். 2 புலன் விசாரணை 3 செந்தூரப்பூவே
எம்ஜிஆர் , சிவாஜி , ரஜினி , கமல், சத்யராஜ் , பிரபு , கார்த்திக் போன்ற நட்சத்திரங்கள் செய்யாத சாதனையை விஜய்காந்த் மட்டுமே செய்திருக்கிறார். அதாவது ஒரு நடிகரின் 100 வது படம் பிரம்மாண்ட வெற்றி + டாப் 1 வசூல் படம் என்ற பெருமை
தமிழ் சினிமா ரசிகர்கள் வித்தியாசமானவர்கள். கதாநாயகி விழி ஒளி இழந்தவராக நடித்த பல படங்கள் ஹிட் ஆகி உள்ளன. ஆனால் கதாநாயகன் விழி ஒளி இழந்தவராக நடித்த அனைத்துப்படங்களும் தோல்வியே. .முரளி நடித்த இரவு சூரியன் , விக்ரம் நடித்த தாண்டவம் , காசி , பாரதிராஜாவின் காதல் ஓவியம் , ஆர் பார்த்திபன் நடித்த சபாஷ் என பட்டியல் நீள்கிறது
சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதை கமல் பெற்றார்.இப்படம் தெலுங்கில் அமாவாசய சந்துருடு என்ற டைட்டிலில் வெளியானது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் விழி ஒளி இழந்தவர் . சிறு வயதில் அம்மாவை இழந்தவர் . அப்பா இரண்டாம் தாரமாக ஒரு பெண்ணைக்கட்டிக்கொண்டாலும் அவரை அம்மாவாகவோ , சித்தியாகவோ அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை .சித்தியும் ஒரு கட்டத்தில் நாயகனை அனாதை ஆசிரமத்தில் அதாவது விழி ஒளி இழந்த மனிதர்கள் பராமரிப்பு நிலையத்தில் அவரை சேர்த்து விடுகிறார்
வளர்ந்த பின் நாயகன் சொத்துக்களை எதிர்பாராமல் சொந்தக்காலில் நிற்க வயலின் வாசிப்பவர் ஆக தன் வாழ்க்கையைத்தொடங்குகிறார்
நாயகி வசதி மிக்க கிறிஸ்துவக்குடும்பத்தில் பிறந்தவர் . சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் உடையவர் . விழி ஒளி இழந்த நபர் பற்றி ஒரு கதை எழுதிக்கொண்டு இருக்கிறார்
நாயகன் - நாயகி சந்திப்பு ஒரு மோதலில் ஆரம்பித்து பின் நட்பாகி காதல் ஆகிறது
வழக்கமாக காதலுக்கு மதம், ஜாதி , அந்தஸ்து பேதம் தானே தடையாக இருக்கும் ? இருவருமே வசதி என்றாலும் நாயகனின் பார்வைக்குறைபாடு வில்லன் ஆக ஆகிறது
நாயகனின் வீட்டில் வேறு பெண் பார்க்கிறார்கள் . நாயகி யின் வீட்டில் அவருக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணமும் நிச்சயம் ஆகிறது . இருவரும் இணைந்தார்களா? இல்லையா? என்பது க்ளைமாக்ஸ்
நாயகன் ஆக கமல் பிரமாதப்படுத்தி இருக்கிறார். வழக்கமாக தமிழ் சினிமாவில் நாயகனுக்கு கண் தெரியாது என்றால் ஒரு கூலிங்க் கிளாசைப்போட்டு விட்டால் மேட்டர் ஓவர் . ஆனால் இதில் கண்களை இமைக்காமல் நடித்திருக்கிறார். நாயகி வீட்டில் நாயகனைப்பற்றி திட்டுவதை எதேச்சையாகக்கேட்கும்போது அவரது குமுறல் அருமை
நாயகி ஆக மாதவி . அகண்ட விழி கொண்ட இவரை விழி ஒளி இழந்தவருக்கு ஜோடியாக ஃபிக்ஸ் செய்தது சூப்பர் . வழக்கமாக கமல் + மாதவி காம்போ படங்கள் எல்லாவற்றிலும் இருவரும் ஆரம்பத்தில் மோதிக்கொள்வார்கள் , பின் காதல் ஆகும். ( காக்கிச்சட்டை , டிக்டிக் டிக் , சட்டம் , மங்கம்மா சபதம் ) இதிலும் அதே பாணி , ஆனால் ரசிக்க வைக்கிறது . பல இடங்களில் கமலை ஓவர் டேக் செய்யும் நடிப்பு
மூன்றாம் பிறையில் படம் முழுக்க ஸ்ரீதேவி ராஜ்ஜியம் தான்., க்ளைமாக்சில் மட்டும் கமல் கலக்கி இருப்பார் . அது போல இதில் மாதவியின் நடிப்பு படம் முழுக்கவே பிரமாதம்
நாயகனின் நண்பன் ஆக ஒய் ஜி மகேந்திரன் மொக்கைக்காமெடி போடுகிறார். நாயகியின் தாத்தா ஆக எல் வி பிரசாத் இளமைத்துள்ளல் ஆன நடிப்பு
நாயகனின் அப்பாவாக சந்திரஹாசன் , சித்தி ஆக லலிதா இருவரும் சிறப்பான நடிப்பு
நாயகியின் அப்பா ஆக தனுஷ் கோடி கச்சிதம்
கெஸ்ட் ரோலில் கங்கை அமரன், எஸ் பி பி . சந்தான பாரதி வருகிறார்கள்
இசை இளைய ராஜா . பின்னணி இசையில் ஒரு ராஜாங்கமே நடத்தி இருக்கிறார் 3 பாடல்களில் இரண்டு மெகா ஹிட்டு
ஒளிப்பதிவு பருன் முகர்ஜி , இவர் வங்காள ஒளிப்பதிவாளர். காட்சிகள் கண்களில் ஒற்றிக்கொள்வது போல் இருக்கிறது , குறிப்பாக மாதவியின் கண்களை க்ளோசப்களில் காட்டும் காட்சி கள் அருமை
கமல் , மாதவி இருவருக்குமான காஸ்ட்யூம் டிசைன் அருமை
வி ஆர் கோட்டகிரி யின் எடிட்டிங்கில் படம் இரண்டரை மணி நேரம் ஓடுகிறது
கே பாலச்சந்தரின் ஆஸ்தான உதவியாளர் அனந்து திரைக்கதை எழுத இயக்கி இருப்பவர் சிங்கீதம் சீனிஆசராவ்
ஆர்ட் டைரக்சன் தோட்டா தரணி
சபாஷ் டைரக்டர்
1 நாயகன் ஆன கமல் படம் முழுக்க ஒரு சீனில் கூட கண்களை ஒரு முறை கூட இமைக்காமல் ( சிமிட்டாமல் ) நடித்த விதம் . அந்த ஐடியா
2 விழி ஒளி இழந்த நாயகனின் கதைக்கு டைட்டில் ராஜ பார்வை என வைத்தது . அதற்கான விளக்கத்தை நாயகி மூலம் வசனமாக படத்தில் சொன்னது
3 அந்தி மழை பொழிகிறது பாடலின் காட்சிகள் ஒளிப்பதிவு செய்யபப்ட்ட விதம் செல்லுலாய்ட் கவிதை
4 ஒரு காட்சியின் முடிவில் என்ன சீன் வருதோ அடுத்த காட்சியின் ஆரம்பம் அதுவாகவே பெரும்பாலும் அமைவது . இதே யுக்தியை கே எஸ் ரவிக்குமார் புரியாத புதிர் படத்தில் கையாண்டிருப்பார்
5 நாயகியின் தாத்தா ரோலில் பிரபல தயாரிப்பாளர் எல் வி பிரசாத்தை அருமையாக நடிக்க வைத்த பாங்கு
6 கமலின் குடும்பத்தை நடிக்க வைத்தது . நாயகனின் அப்பா ரோலில் சந்திரஹாசன் , சர்ச் ஃபாதர் ஆக சாருஹாசன் ஆகியோரை நடிக்க வைத்தது
7 மாறுபட்ட டைட்டில் டிசைன். வழக்கமாக இன்ன இன்ன துறை இன்னார் தான் கையாண்டார் என திரையில் ஓடும் விதமாக டைட்டில் அமையும், ஆனால் இதில் பெயர்கள் மட்டுமே இடம் பெறும்,நாமாக யூகித்துக்கொள்ள வேண்டியதுதான்
8 இப்போது பான் இண்டியா படங்களில் ஒவ்வொரு மாநிலத்தைச்சேர்ந்த பிரபலத்தை நடிக்க வைத்து டிமாண்ட் ஏற்படுத்துவது போல அந்தக்காலத்திலேயே அதை செய்தது .. நாயகனின் சித்தியாக மலையாள நடிகை ஆன கே பி ஏ சி லலிதாவை நடிக்க வைத்தது , தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் ஆன எல் வி பிரசாத்தை நாயகியின் தாத்தாவாக நடிக்க வைத்தது
9 நாயகி நாயகனை சந்திக்கக்கிளம்பும்போது அவருக்கு மட்டுமே நேரம் மிக மெதுவாக நகர்வது போல கடிகார முள் மெதுவாக நகர்வது . அவரை சுற்றி இருக்கும் மனிதர்கள் ஸ்லோ மோஷனில் நடப்பது போன்ற காட்சிகள்
10 நாயகனுக்கு திருமணம்செய்ய ஒரு பெண்னை அழைத்து வர இருவருக்குமான சந்திப்பு , உரையாடல் ஒரு கவிதை , அந்தக்காட்சியில் சித்ராவின் நடிப்பு,ம் அட்டகாசம் . வி கே ராமசாமியின் பங்களிப்பும் அருமை
செம ஹிட் சாங்க்ஸ்
1 அந்தி மழை பொழிகிறது , ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
2 அழகே அழகு தேவதை
3 விழி ஓரத்துக்கனவு
ரசித்த வசனங்கள் ( பால குமாரன் + அனந்து + சந்தான பாரதி )
1 என் லைஃப் பற்றி தெரிஞ்சுக்கனும்னு ஆசைப்பட்டீங்க இல்ல? எங்க பகல் கூட உங்க ராத்திரியை விட இருட்டா இருக்கும்
2 நீங்க அழக்கூடாது .உங்களை ஏமாற்றிய இயற்கையை தோற்கடிக்க இருப்பவர் நீங்கள்
3 உங்கள் பார்வை அந்தகப்பார்வை அல்ல , அந்தரப்பார்வை
4 என் அப்பாவால இன்னொரு பெண்ணை மனைவியா ஏத்துக்க முடிஞ்சுது , ஆனா என்னால இன்னொரு பெண்ணை அம்மாவா ஏத்துக்க முடியலை
5 இவன் இதுவரை 12 1//2 பெண்களின் வாழ்க்கையைக்கெடுத்திருக்கான்
அதென்ன அரைக்கணக்கு ?
ஆக்சுவலா 13 தான். ஆனா 13 வது பெண்ணைக்கெடுக்க முயற்சிக்கும்போது நான் உள்ளே வந்து காரியத்தைக்கெடுத்துட்டேன்
6 இந்த விக்ஸ் வாசனையை விட உன் கிட்டே விஸ்கி வசனை ஜாஸ்தி
7 கொலை நடந்தாலே நம்மூர்ல பஞ்சாயத்தைத்தான் கூட்டுவோம், ஆனா இங்கே வெறும் கார் மோதலுக்கே போலீசைக்கூப்பிடறாங்க
8 இந்தக்குழந்தைகளுக்கு இருக்கும் மனசு பெரியவங்க கிட்டே இல்லை
9 உன் கதை எழுதும் வேலை எந்த லெவல்ல இப்போ இருக்கு ?
என்னை மேரேஜ் பண்ணிக்குவீங்களா?
அருமையான முடிவு
10 ரகுவுக்கு கால் கட்டு போடலம்னு இருக்கோம்
ஏன் ?அவனுக்கு கால்ல அடியா?
11 புளித்தண்ணி என் மேல கொட்டிடுச்சு ‘’
ச்சீ ச்சீ இந்தப்பழம் புளிக்கும்
12 எனக்கும் கண் தெரியாது , உனக்கும் கண் தெரியாது , நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா குடும்பம் நடத்த முடியாது , கண்ணாமூச்சி தான் ஆட முடியும்
13 எருமை மாட்டுக்கு முன்னால போய் புல்லாங்குழல் வாசிச்சா அதுக்கு என்ன தெரியும் ?
14 பொண்ணுங்க எப்பவுமே அப்படித்தான்,,, தகறாருன்னா ஒதுங்கிடுவாங்க
15 இந்த்க்கதையை எப்படி வேணாலும் முடிச்சுக்கோ, ஆனா சோகமான முடிவு மட்டும் வேணாம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 டைட்டிலில் கதை = கமல் என போட்டுக்கொண்டாலும் இதன் ஒரிஜினல் வெர்சன் ஆன ஹாலிவுட் படமான பட்டர்ஃபிளைஸ் ஆர் ஃப்ரீ (BUTTERFLIES ARE FREE -1972 படத்துக்கு க்ரெடிட் தராதது
2 படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி THE GRADUATE(1967) என்ற படத்தில் இருந்து உருவப்பட்டிருக்கிறது
3 நாயகன் தன் அப்பாவின் இரண்டாம் தாரத்தை சித்தியாக தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்கிறார். ஆனால் சில இடங்களில் அம்மா என அழைக்கிறார்.பல இடங்களில் சித்தி என்கிறார்
4 நாயகனின் சித்தி கேரக்டர் டிசைனில் தெளிவில்லை .அவருக்கு கமல் மீது பாசம் எல்லாம் இல்லை . சொத்துக்காகத்தான் என்பதாக சொல்கிறார்கள் . ஆனால் கமலுக்கு உடல் நிலை சரி இல்லாத போது அவரை நன்கு கவனித்துக்கொள்கிறார். உடல் நலனில் அக்கறை செலுத்துகிறார்
5 நாயகன் நாயகி இருவரும் காலையில் சந்திக்கிறார்கள் . அப்போதே நாயகி வீட்டுக்குப்போகிறார்கள் .அங்கே பிரச்சனை. நாயகன் நாயகி வீட்டை விட்டுக்கிளம்புகிறார். இத்தனை சம்பவங்களும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணிக்குள் முடிந்து விடுகிறது , ஆனால் அடுத்த காட்சியில் நாயகன் அனாதை ஆசிரமத்துக்கு லேட்டாக மிட் நைட்டில் வருகிறார்., அடடா . பர்த்டே கொண்டாட முடியலையே . எல்லாரும் தூங்கிட்டாங்களே என்கிறார். மதியம் 1 டூ மிட் நைட் 12 எங்கே போனார் ?
6 நாயகியின் வீட்டு வாசல் முன் நாயகன் உட்பட ஐந்து பேர் குடித்து விட்டு தகறாரு செய்கிறார்கள் . டெல்லி கணேஷ் தனி ஆளாக என்ன தைரியத்தில் அவர்களை மிரட்டப்போகிறார் ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - தரமான படம் , காதல் கதைகளை ரசிப்பவர்கள் மிஸ் பண்ணக்கூடாத படம் . ஆனால் யூ ட்யூப் , ஓடிடி யில் கிடைப்பதில்லை .தியேட்டரில் , டி வி யில் பார்த்தால் தான் உண்டு . ரேட்டிங் 3 /. 5
ராஜ பார்வை | |
---|---|
இயக்கம் | சிங்கீதம் சீனிவாச ராவ் |
எழுதியவர் | அனந்து கமல்ஹாசன் பாலகுமாரன் சந்தான பாரதி |
உற்பத்தி | சந்திரஹாசன் சாருஹாசன் கமல்ஹாசன் |
நடிக்கிறார்கள் |
|
ஒளிப்பதிவு | பருண் முகர்ஜி [1] |
திருத்தியவர் | வி.ஆர்.கோத்தகிரி |
இசை | இளையராஜா |
தயாரிப்பு நிறுவனம் | |
வெளியீட்டு தேதிகள் |
|
நேரம் இயங்கும் | 144 நிமிடங்கள் [1] |
நாடு | இந்தியா |
மொழிகள் |
|