1996ல் அகத்தியன் இயக்கிய காதல் கோட்டை ,1998ல் மணி ரத்னம் இயக்கிய தில்சே (உயிரே) , 2018ல் Timur Bekmambetov இயக்கிய ப்ரொஃபைல் என்ற படம் இந்த மூன்று படத்தையும் பட்டி டிங்கரிங் மன்னன் அட்லீ இடம் கொடுத்து ஒரு படம் எடுக்கச்சொன்னால் எப்படி இருக்கும் ? அப்படித்தான் இந்தப்படம் இருக்கிறது
முறைப்படி மூலக்கதை = : In the Skin of a Jihadist; by Anna Erelle என்று தான் டைட்டிலில் வர வேண்டும், ஆனால் டைட்டிலில் கதை - முருகதாஸ் என போடுகிறார்கள், அது ஏன் என தெரியவில்லை
spoler alert
லிபியா என்ற நாட்டில் எண்ணெய் வளம் அதிகம் இருக்கிறது. அந்நாட்டு அதிபர் எண்ணெய் விற்கும்போது தங்கத்துக்கு மட்டும் தான் விற்பேன் என கறாராக இருக்கிறார், இதனால் அமெரிக்காவுக்கு அந்த நாட்டின் அதிபர் மீது கோபம். உள்ளூரில் கலவரக்காரர்களைத்தூண்டி நாட்டில் குழப்பத்தை உண்டு பண்ணுக்கிறது அமெரிக்கா, பின் பஞ்சாயத்து பண்ணுகிறேன் என்ற போர்வையில் நாட்டிற்கு தன் குழுவை அனுப்பி நாட்டை தன் வசம் ஆக்க முனைகிறது . புரட்சிகர இளைஞர்கள் அவர்களை எதிர்த்து இயக்கம் ஆரம்பிக்கிறார்கள். அவர்களை தீவிரவாதிகள் என அறிவித்து அமெரிக்கா அவர்களை பிடிக்க முயல்கிறது
அந்த தீவிரவாதிகளில் ஒருவன் 17 வயதான நாயகன். இவன் போராட்டங்களில் , சண்டையில் ஈடுபட்ட நேரம் போக ஃபேஸ் புக்கில் ஒரு பெண்ணுடன் சேட் செய்கிறான், அந்தப்பெண்ணுடன் காதலில் விழுகிறான்.இந்த தூண்டிலை வைத்து அமெரிக்க போலீஸ் அந்த தீவிரவாதியைப்பிடிக்க நாயகனின் காதலியை ;புழுவாகப்பயன்படுத்த நினைக்கிறது
நாயகி ஒரு மீடியா ரிப்போர்ட்டர். ஆக்சுவலாக நாயகனுடன் சேட் செய்வது நாயகி தான். ஆனால் தன் அண்ணன் மகள் ஃபோட்டோ வை வைத்து ஃபேக் ஐடி யில் தான் சேட் செய்கிறார். அவருக்கு காதல் எல்லாம் இல்லை அவருக்கு பரபரப்பான நியூஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக இதை செய்கிறார். நாயகியின் அண்ணன் மகளுக்கு நாயகன் யார் என்றே தெரியாது , இன்னும் தெளிவாகச்சொல்ல வேண்டும் என்றால் நாயகன் காணும் ஃபோட்டோவில் இருக்கும் நபர் வேறு , நாயகனுடன் சேட் செய்யும் நபர் வேறு , இருவருக்கும் நாயகன் மீது காதல் கிடையாது
ஒரு கட்டத்தில் நாயகனை போலீஸ் சுட்டுக்கொல்ல பிளான் போடும்போது நாயகி என்ன முடிவு எடுக்கிறார் என்பதே க்ளைமாக்ஸ்
நாயகியாக த்ரிஷா பிரமாத,மாக நடித்திருக்கிறார். ஓப்பனிங் சீனில் தன்னிடம் வாலாட்டும் போலீஸ் ஆஃபீசருக்கு பாடம் கற்பிக்கும் இடத்தில் ஃபோர் அடிக்கிறார் எனில் தன் அண்ணன் மகளிடம் சேட் செய்த 18 ஆண்களை ஹோட்டல் ரூம்க்கு வரச்சொல்லி நோஸ் கட் கொடுக்கும் இடத்தில் சிக்சர் அடிக்கிறார்
நாயகியின் அண்ணன் மகளாக அனஸ்வரா ராஜன் அழகாக வந்து போகிறார். நாயகியின் அண்ணியாக லிசி ஒரு செண்ட்டிமெண்ட் வசனம் பேசுவதில் கவனம் பெறுகிறார்
சத்யாவின் பிஜிஎம் பரபரப்பாக படத்தைக்கொண்டு செல்கிறது லைவ் லொக்கேஷன்களில் படத்தைப்பதிவு செய்த வகையில் சக்திவேலு வின் ஒளிப்பதிவு அருமை . 2 மணி நேரத்தில் கனகச்சிதமாக ட்ரிம் பண்ணிய எடிட்டர் சுபாரக் பாராட்டுப்பெறுகிறார்
எம் சரவணனின் வசனங்கள் படத்துக்குப்பெரிய பிளஸ், ஆனால் திரைக்கதையை இன்னும் வலுவாக எழுதி இருந்தால் மாறுபட்ட படமாக மலர்ந்திருக்கும்.
சாதாரண மீடியா ரிப்போர்ட்டரான நாயகி லேடி ஜேம்ஸ்பாண்ட் போல பறந்து பறந்து சண்டை சாகசம் செய்வது , போலீஸ் - தீவிரவாதி துப்பாக்கி சண்டையில் அத்தனை பேர் இறக்க நாயகிக்கும் நாயகியின் அண்ணன் மகளுக்கும் ஒரு கீறல் கூட விழாதது என விடை இல்லாக் கேள்விகள் நிறைய உண்டு
ரசித்த வசனங்கள்:
1 நம்ம ஊர் அரசியல்வாதிகள் மக்கள் நலனுக்காகவா பாடுபடப்போறாங்க ? ஃபாரீன் போய் இங்கே எங்க நாட்டு மக்கள் உங்களுக்கு அடிமையா வேலை செய்யத்தயாரா இருக்காங்க, வந்து நீங்க ஓனரா இருங்கனு கேட்கப்போறாங்க.. வேற என்னத்தைப்பேசிடப்போறானுக ?
2 ஆபத்தே இல்லாத விஷயத்தைப்பற்றி எழுதி நானும் ரிப்போர்ட்டர்தான் காட்டிக்குவோம்
3 ஏம்மா, ஒரு ரிப்போர்ட்டருக்கு இந்நேரத்துல இங்கே என்ன வேலை ?
சார் போலீஸ்க்கு இங்கே என்ன வேலை ?
க்ரைம் நடக்காம பார்த்துக்கறோம்’’.. நீ?
க்ரைம் நடந்தா ரிப்போர்ட் எழுதுவோம்’’
பார்த்தும்மா, க்ரைம் நடக்க நீயே ஒரு காரணம் ஆகிடாத
4 மத்தவங்களுக்கு ஏதாவது நடந்தா அதை நியூஸ் ஆக்கி ஹாட் நியூஸ்னு போட்டுடறோம், ஆனா நமக்கே ஒரு சம்பவம் நடந்தா என்ன பண்றதுன்னே தெரியாம பரிதவிச்சு நிக்கறோம்
5 கோயிலுக்கோ சர்ச்சுக்கோ வர்ற பொண்ணுங்களையே விடாதவனுங்க இவனுங்க, ஃபேஸ் புக் வந்த பொண்ணுங்களை விடுவானுங்களா?
6 நல்லவங்க என்பதற்கு சாமி கும்பிடுவது ஒரு தகுதி கிடையாது
7 சாமி கும்பிடற பலரும் அடுத்தவங்க காசுல உக்காந்து சாப்பிடறவங்க தான்
8 எல்லா நாட்டுலயும் ஆண்களுக்கு பெண்களை லவ் பண்ண நல்லா தெரிஞ்சிருக்கு , ஆனா தொடர்ந்து அதே பெண்ணை லவ் பண்ணதான் தெரிய மாட்டேங்குது
9 தீவிரமாக பணம் சம்பாதிப்பவன் கோடீஸ்வரன், தீவிரமாக அரசியல் பேசுபவன் அரசியல்வாதி , ஆனால் தீவிரமாக நியாயம் கேட்பவன் மட்டும் நியாயவாதி அல்ல தீவிரவாதி அல்லது பயங்கரவாதி
10 ஸ்கூலுக்கு லீவ் கேட்டு லீவ் லெட்டர் எழுதும்போது தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அப்டிம்போம், ஜாதிச்சான்றிதழ் வேணும்னா தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அப்டிம்போம்,, வருமானச்சான்றிதழ் வேணும்னா தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அப்டிம்போம், எல்லாமே தாழ்மையுடன் கேட்கிறோம்னா நாம் எப்படி எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள் ஆவோம் ?
11 எங்களுக்கான உரிமைகளை நாங்களே எடுத்துக்குவோம், உங்களை மாதிரி அடி பணிந்து தாழ்மையுடன் கேட்டுக்கொண்டிருக்க எங்களால் முடியாது
12 இவ்வளவு கிரிட்டிகலான சூழ்நிலைலயும் தனக்குப்பிடிச்ச பொண்ணுக்கு எந்த ஆபத்தும் வந்துடக்கூடாதுனு பசங்க நினைக்கறாங்க பாருங்க, இதுலதான் பொண்ணுங்க விழுந்துடறாங்க
13 நாம ஜெயிச்சா தான் போராளி , தோற்றா தீவிரவாதி அப்டினு சொல்லிடுவாங்க
14 போலீஸ் உன்னை எதுக்காக அரெஸ்ட் பண்ணினாங்க ?
இந்த போலீஸ்க்கு காரணம் எல்லாம் தேவை இல்லை , பிடிச்சாலும் அரெஸ்ட் பண்ணுவாங்க , பிடிக்கலைன்னாலும் அரெஸ்ட் பண்ணுவாங்க
சபாஷ் டைரக்டர்
1 டைட்டிலைப்பார்த்து , போஸ்டர் டிசைனைப்பார்த்து இது ஒரு அடிதடி ஆக்சன் படம் என்று வந்தால் ஏமாந்து போவோம். எதிர்பார்க்காத ஒரு சர்வதேச அரசியலை லவ் ஆக்சன் ஃபிலிம் ஆக்கித்தந்த விதம்
2 மொத்தப்படமான 2 மணி நேரக்காட்சிகளில் முதல் 25 நிமிடக்காட்சிகள் மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லை என்றாலும் சுவராஸ்யமாகத்தந்து அதை மெயின் கதையோடு கனெக்ட் பண்ணிய விதம் அருமை
3 நாயகன் நாயகியைப்பார்த்தது இல்லை , நாயகிக்கு நாயகன் யார் என்றே தெரியாது . இருவரையும் அறிந்த த்ரிஷா வுக்கு நாயகன் மீது பரிதாபம் மட்டுமே காதல் இல்லை என்ற சுவராஸ்யமான முடிச்சு கச்சிதம்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 தன் அழகுக்கு அங்கீகாரம் கிடைக்கலைன்னா ஒரு பொண்ணு ஃபேக் ஐடில அழகான பெண்ணா காட்டிக்கொள்ள முயற்சிப்பது சரிதான் , ஆனால் அந்த ஃபேக் முகமா தன் நெருங்கிய தோழி முகத்தை வைப்பது அபாயம், மாட்டிக்குவாங்க . எப்படி அந்தப்பொண்ணு அந்த ரிஸ்க் எடுக்குது ?
2 சேட் செய்யும் பெண்ணிடம் தீவிரவாதி நீ எந்த நாடு எந்த ஊர் என கேட்கிறான். ஐ பி அட்ரசை வைத்து ஈசியாக அவனே கண்டு பிடித்து விடலாமே?
3 தன் அண்ணன் மகளுக்கு ஆபத்து என தெரிந்தும் நாயகி த்ரிஷா எப்படி அந்த அட்ரசை ஓப்பனாக தீவிரவாதிக்குத்தருகிறார் ?
சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - குறைகள் சில இருந்தாலும் பார்த்து ரசிக்க வேண்டிய படம் தான் இது , இப்போது நெட் ஃபிளிக்சில் ரிலீஸ் ஆகி உள்ளது ரேட்டிங் 2.75 / 5
Raangi | |
---|---|
Directed by | M. Saravanan |
Written by | M. Saravanan AR Murugadoss |
Produced by | Allirajah Subaskaran |
Starring | Trisha |
Cinematography | K. A. Sakthivel |
Edited by | M Subarak |
Music by | C. Sathya |
Production company | |
Distributed by | Lyca Productions |
Release date | 30 December 2022 |
Running time | 121 min |
Country | India |
Language | Tamil |