தினமலர் விமர்சனம்
கடல்
படத்திற்குப்பின் கவுதம் கார்த்திக் நடித்து எக்கச்சக்க
எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் என்னமோ ஏதோ.
தென் இந்திய திரையுலகின் பெரும் பவர்சப்ளையரான ரவிபிரசாத் அவுட்டோர்
யூனிட்டாரின் தயாரிப்பில், திரைக்கு வந்திருக்கும் இத்திரைப்படம்
எந்தளவிற்கு அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது என இனி
பார்ப்போம்...
கதைப்படி, கவுதம் கார்த்திக்கிற்கு
காதலை சொல்லத் தெரியாததால் நிறைய கன்னிப்பெண்கள் அவர் கை நழுவி
போகின்றனர். அப்படிபோன ஒருத்தியின் கல்யாணத்திற்கு ஐதராபாத் போகும்
கவுதமின் கண்ணில், அதே கல்யாணத்தில் மணப்பையனாக தன் காதலனைத் தொலைத்த
ராகுல் ப்ரீத்சிங் படுகிறார். காதல் தோல்வி போதையில் கவுதமுடன்
நட்பாகிறார். இவர்களது நட்பு காதலாகிறது. ஆனால் அப்பொழுதும் காதலை
சொல்லத் தெரியாத கவுதமால், காதல் கடலில் அடிக்கும் புயலாக நிலை கொள்ளாமல்
தவிக்க, ஒருக்கட்டத்தில் தடை பல கடந்து, இவர்களது காதல் கரை சேர்ந்ததா.?
கைகூடியதா.? என்பதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல முயன்று,
அதில்பாதி வெற்றியையும், மீதி தோல்வியையும் கண்டிருக்கும் கதை தான் என்னமோ
ஏதோ படத்தின் மொத்த கதையும்!
கவுதம் கார்த்திக்,
அப்பா கார்த்திக் மாதிரி இயல்பாக நடிக்க முயற்சித்து எக்கச்சக்கமாக
உழைத்திருக்கிறார். ஆனால் பாடல் காட்சிகளில் கைகூடி இருக்கும் துடிப்பும்,
நடிப்பும் படக்காட்சிகளில் அவருக்கு கை கூடாது பலவீனம்! நல்ல கதையம்சம்
உள்ள படங்களிலேயே நடித்து பெயர் வாங்கிய கார்த்திக்கின் வாரிசு, கவுதமிற்கு
கதை கேட்கும் புண்ணியவான் யாரோ.?! என காட்சிக்கு காட்சி கேட்க தூண்டுவது
மாதிரியான படங்களிலேயே கவுதம் அடுத்தடுத்து நடிக்க காரணம் என்னமோ? ஏதோ.?!
ராகுல்
பிரீத்சிங், நிகிஷா பட்டேல் என இரண்டு நாயகியர். இருவருமே இளமை துடிப்பில்
ஓ.கே., நடிப்பில்? நாட் குட்! அழகம் பெருமாள், மதன்பாய், அனுபமா குமார்,
சுரேகாவாணி, ரமேஷ் உள்ளிட்டோர் கச்சிதம்!
கோபி
ஜெகதீஷ்வரனின் ஒளிப்பதிவு பளிச்! டி.இமானின் இசையில் செட் அப் யுவர்
மவுத்..., நீ என்ன பெரிய அப்பா டக்கரா... உள்ளிட்ட பாடல்கள் தான் படத்தின்
பெரும்பலம்!
சொட்டை தலையினர் அந்த
விஷயத்தில் கில்லாடி எனும் தொடர் சுவாரஸ்ய தவகல்கள், காதல் துரோகிகளின்
கல்யாணத்தில், நாயகன், நாயகிக்காக பண்ணும் மிமிக்கிரி, அனுபமா குமாரின்
காதல் கல்யாண கலாட்டாவை தன் பிள்ளையான ஹீரோ கவுதமிடம் சொல்லும் சுவாரஸ்யம்
உள்ளிட்ட 'நச்-டச்' சமாச்சாரங்கள் நிறைய இருந்தும் படம் இழுவையாக இருப்பது
குறை.
ஆகமொத்தத்தில், ஆயிரமிருந்தும்,
வசதிகள் இருந்தும்... அலமொதயந்தி தெலுங்கு சூப்பர் - டூப்பர் ஹிட் தமிழ்
ரீ-மேக்கான என்னமோ ஏதோ, ரவிதியாகராஜனின் இயக்கத்தில், என்னமோ ஏதோ
இருக்கிறது.
நன்றி - தினமலர்
டிஸ்கி - நேத்தும் லீவ், இன்னைக்கும் லீவ்னா டேமேஜர் கடுப்பாகிடுவார் என்பதால் இன்னைக்க நை=ுட் செகண்ட் ஷோ இனி தான் போகனும்
( மா.தோ. ம) = மாற்றான் தோட்டத்து மல்லிக
ை