Showing posts with label ரயில். Show all posts
Showing posts with label ரயில். Show all posts

Wednesday, November 11, 2015

இனி ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரம் முன்னால் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்

நாளை (நவம்பர் 12-ம் தேதி) முதல், ரயில்கள் புறப்படுவதற்கு அரை மணி நேரம் முன்னால், ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
பயண இறுதி அட்டவணை தயாராகும் முறையில் மாற்றங்கள் செய்துள்ள ரயில்வே, இப்போது இரண்டு முறை அட்டவணையை தயாரிக்க உள்ளது.
முதல் முன்பதிவு பயண அட்டவணை, ரயில் கிளம்புவதற்கு நான்கு மணி நேரங்கள் முன்னால் தயாரிக்கப்பட்டு வந்த முறையோடு இப்போது, அரை மணி நேரம் முன்பாக ஒரு முறை இறுதி முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்பட உள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட விதிகளின்படி, இணையம் மற்றும் முன்பதிவு கவுண்டர்களில் என இரண்டு வழிகளிலும் முன்பதிவு செய்யலாம். இருக்கும் பெர்த்களின் எண்ணிக்கையைப் பொருத்து, குறிப்பிட்ட ரயில்களுக்கு, முதல் முன்பதிவு பயண அட்டவணை தயாரான பின்னரும், முன்பதிவு செய்ய முடியும்.
இதற்காக நவம்பர் 12-ம் தேதியில் இருந்து, முதல் முன்பதிவு பயண அட்டவணையை 4 மணி நேரத்துக்கு முன்னதாகவே இறுதி செய்யும்படி, ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனால், அரை மணி நேரத்துக்கு முன்னதாக ஆன்லைனிலோ அல்லது இல்லை ரயில் நிலையத்திலோ டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு எந்தெந்த ரயிலும் எவ்வளவு இடம் காலியாக இருக்கிறது என்பது தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், ரயில் கிளம்பும் முன்னதாக இரண்டாவது மற்றும் இறுதி முன்பதிவு பயண அட்டவணை, ரயிலில் உள்ள டிக்கெட் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • சென்னையின் போக்குவரத்து நெருசலில் அரை மணிக்கு முன்பாக ஆன் லைனில் முன் பதிவு செய்து விட்டு ரயிலைப்பிடிக்க போனால் ரயில் நம்மை விட்டு போய் குறைந்தது 2 மணி நேரமிருக்கும்.
    2250
    about an hour ago
     (0) ·  (0)
     
    • S
      Siva  from India
      தற்போது உள்ள நடுப்பு பதிவு (Current Booking) முறையை இணைய வழியிலும் பயன் பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால் நீண்ட தூர வண்டிகளில் (எடு) தில்லி - கன்னியாகுமரி இடையில் இருந்து பயணிக்க நினைப்பவர்கள் அரை மணி நேரம் முன்னதாக பதிவு செய்ய முடியாது. எனவே பயணச் சீட்டு பரிசோதகர்களும் மின்னணு முறையில் பரிசோதிக்க ஆரம்பித்தால்தான் முழுமையான பயன் கிட்டும்.
      12250
      about 3 hours ago
       (0) ·  (0)
       
      • B
        Babu  from Saudi Arabia
        Thanks easy way to reach people...
        about 3 hours ago
         (0) ·  (0)
         
        • AS
          Amith Sha  from India
          இது ஏற்கனவே நடைமுறையில் உள்ள கரண்ட் ரேசெர்வேசன் நடைமுறை தான்.ஆன்லைன் வசதி பண்ணிருக்காங்க. பழைய மொந்தைல புது கள்.
          about 4 hours ago
           (0) ·  (0)
           
          • D
            Durai  from India
            சுத்த ஹம்பக் . டிக்கெட் இருந்தால்தானே ! எல்லாம் கலெக்ஷன் ட்ரிக் . ரயில்வே நிர்வாகம் பயணிகளிடமிருந்து பல வழிகளில் பல ரூட்டுகளில் காசு சம்பாதிக்க வகை செய்துகொள்கிறது .
            185
            about 5 hours ago
             (2) ·  (0)
             
            RAJA · ram Up Voted
            • D
              Dawood  from India
              இது மறைமுகமாக அதிகக் கட்டணம் வசூளிப்பதுபோல் இருக்கிறது. தனியார் பேருந்துகளில்தான் இந்தமுறையில் ஏய்க்கிறார்கள் என்றால் அரசு அதனையேதான் செய்கிறது.,
              170
              about 6 hours ago
               (2) ·  (1)
               
              RAJA · ram Up Voted
              yours Down Voted
              • இந்த ஏற்பாடு எல்லோருக்கும் உண்டா அல்லது தத் கால் பயணிகளுக்கு மட்டுமா ?
              thanx - the hindu

              Tuesday, April 02, 2013

              வாடகை வீட்டை தேர்ந்தெடுப்பது எப்படி?

              வாடகை வீட்டை தேர்ந்தெடுப்பது எப்படி? 
              நீரை.மகேந்திரன்,படம்: தே. தீட்ஷித்.
              மக்களுக்கு வாடகை வீடுதான் நிரந்தரம் என்றாகிவிட்ட நிலையில்,  பிறப்பு முதல் திருமணம், ஓய்வுக்காலம் என ஆயுட்காலம் வரை வாடகை வீட்டில் வசிக்கும் மக்கள் அதிகரித்து வருகின்றனர். ஆனால், தேவைக்கேற்ற வீடு, சரியான வாடகை, நேர்மையான வீட்டு உரிமையாளர், வசதியான ஏரியா என்பது எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை என்பதுதான் வாடகை வீட்டில் உள்ள நிலைமை.


              ஆறு மாதங்களுக்கு முன்பு வாடகை வீடு மாறிய நண்பர், தற்போது அந்த வீடு சரியில்லை, வேறு வீடு பார்க்கவேண்டும் என அலைந்துகொண்டிருக்கிறார். என்ன ஏது என்று விசாரித்தபோது ''அவசர அவசரமாக வந்ததால் அந்த ஏரியா பற்றி தெரிந்துகொள்ளாமல் வந்துவிட்டேன். ஏரியாவில் கழிவு நீர் தேங்கி கொசுத் தொல்லை அதிகமாகிவிட்டது. அதுவும் வீட்டுக்கு அருகிலேயே தேங்குவதால் நாற்றமும் தாங்க முடியவில்லை. அந்த வீட்டுக்குப் போனபோது இந்தச் சிக்கல் இல்லை. தற்போது இதை சகித்துக்கொண்டு இருப்பதைவிட ஏரியா மாறலாம் என இருக்கிறேன்'' என்று வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார்.  


              பழைய அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல் தளத்தில் மழைக்காலத்தில் வீட்டிற்குள் நீர் கசிவு இருக்கிறது என்று வீடு மாறவேண்டிய நிலை வரலாம். இப்படி வாடகை வீட்டினால் எழும் சிக்கல்கள் ஏராளம் இருக்கிறது. இன்னொருபுறம் சின்ன இடம் கிடைத்தாலும்  நான்கு சுவர்களை எழுப்பி வாடகைக்கு விடுவதும் நடக்கிறது. இதுபோன்ற ஏமாற்றங்களைத் தவிர்க்க வீடு பார்க்கத் திட்டமிடும்போதே ஆராய்ந்து அலசி பார்த்துவிட்டால் பிறகு மீண்டும் மீண்டும் வீடு தேடி அலையவேண்டிய வேலையிருக்காது. ''பொதுவாக வாடகை வீடு தேடுகிறோம் என்றால், எந்த தேவைக்காக என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்'' என்கிறார் ரீமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் முரளி.  வீடு பார்க்கும்போதே இந்தத் தெளிவு இருந்தால் நல்ல வீடாகப் பார்க்க முடியும் என்றவர், அதற்கு கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன என்கிற செக் லிஸ்ட் கொடுத்தார்.


              ஏரியா!
              வீடு தேடுவது என்று முடிவாகிவிட்டால் எந்தப் பகுதியைத் தேர்ந்தெடுப்பது என்பதுதான் முக்கியம். அதாவது, உங்களது தேவையைப் பொறுத்து தீர்மானிக்க வேண்டும். அலுவலகத் திற்கு பக்கமாகவோ, குழந்தைகள் பள்ளிக்கு அருகாமையிலோ என திட்டமிடலாம். அதாவது, போக்குவரத்துக்கு ஆகும் செலவை, அலுவலகத்துக்கு அருகில் வீடு பார்த்தால் அதற்கு ஈடாக வாடகைக்குக் கொடுக்கலாம்.


              மேலும், ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் வீடு பார்க்கலாம் என முடிவு செய்துவிட்டால், அந்த ஏரியாவில் பஸ், ரயில் மற்றும் வேறு பொது போக்குவரத்து வசதிகள் எப்படி உள்ளன என தெரிந்துகொள்ளவேண்டும். உங்களிடம் போக்குவரத்திற்குரிய வாகனங்கள் இருந்தாலும் பொதுபோக்குவரத்து இருக்கும் ஏரியா என்றால் வசதியானது. மேலும், அலுவலக வாகனம், குழந்தைகளின் பள்ளி, கல்லூரி வாகனங்கள் வந்து செல்லும் ஏரியா என்றால் கூடுதல் வசதிதான்.


              இடம் அமைந்துள்ள பகுதி!

              ஓர் ஏரியாவில் எந்தப் பகுதியில் வீடு பார்க்கப் போகிறோம் என்பதுவும் முக்கியமானது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்கும் வாய்ப்புள்ளதா, கழிவுநீர் தேங்கும் இடங்களா என்பதை அறிந்துகொண்டு அதற்கேற்ப இடங்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும் கடைகள், மருத்துவமனை, வழிபாட்டுதலங்கள், பள்ளிக்கூடம் போன்றவை இருக்கும் இடமாக இருந்தால் கூடுதல் வசதியாக இருக்கும்.


              குறிப்பிட்ட பகுதி நமக்குத் தோதாக இருக்கும் என்று திட்டமிட்டாலும், அந்த ஏரியாவில் பாதுகாப்பு எப்படி இருக்கும் என்பதை உறுதி செய்துகொள்வது நல்லது. ஒதுக்குப்புறமான பகுதியா? மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியா? இரவில் தாமதமாகத் திரும்பினால் ரிஸ்க் இருக்குமா? என பார்ப்பது முக்கியம். இதுபோன்ற புற விஷயங்களைக் கவனத்தில்கொண்டு வீடு தேடவேண்டும்

              .
              வீட்டு உரிமையாளர்!
              வாடகைக்குச் செல்லும் வீட்டின் உண்மையான உரிமையாளர் யார் என்பதில் கவனம்வேண்டும். வீடு தொடர்பான ஆவணங்களை வாங்கிப் பார்ப்பதில் தப்பில்லை. ஏற்கெனவே வாடகைக்கு இருக்கும் நபர் நமக்கு உள்வாடகை விட வாய்ப்பு அதிகம். எனவே, வாடகை போடும்போதே வீட்டின் உண்மை குறித்த ஆவணங்களையும் சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.


              வீடு அமைப்பு!
              சில வீடுகளில் ஃபேன், ஏ/சி, சோபா மற்றும் அலமாரிகளோடு அப்படியே வாடகைக்குக் கிடைக்கும். அதுபோன்ற நிலைமைகளில் அந்தப் பொருட்கள் நல்ல நிலைமைகளில் இருக்கிறதா என்பதைப் பார்ப்பதும், அதற்கு தனியாக எவ்வளவு வாடகை கணக்கிடப்படுகிறது என்பதிலும் தெளிவுவேண்டும். வீட்டு வாடகையோடு ஒப்பிட்டால் அதிகபட்சமாக 40 சதவிகிதத்திற்கும் அதிகமாக இதற்கு வாடகை இருந்தால் அதிகம்தான். மேலும், பொருட்களுக்கு விலையில் ஏழு வருடத்திற்கு தேய்மானம் கணக்கிட்டு, அதிலிருந்து ஒரு மாதத்திற்கு எவ்வளவு தொகை கொடுக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இதற்கு வாடகை வசூலித்தால் அந்தப் பொருட்கள் தேவையில்லை என்று தவிர்த்து விடலாம்.



              வாடகை!
              புதிய வீடா அல்லது பழைய வீடா என்பதைப் பொறுத்து வாடகை வித்தியாசம் இருக்கும். வீட்டின் வசதிக்கு ஏற்ப வாடகை சொன்னாலும், அந்தப் பகுதியில் நிலவும் வாடகை நிலவரங்களோடு ஒத்துப்போவதாக இருக்கவேண்டும். பொதுவாக, வீட்டின் இன்றைய மதிப்பில் 2.5 - 3 சதவிகிதம் ஆண்டு  வாடகை இருந்தால் சரியான வாடகை என்று சொல்லலாம். பழைய வீட்டிற்கும், புது வீட்டிற்குமான வாடகை வித்தியாசம் 30 சதவிகிதத்திற்கு மேல் இருந்தால் வாடகை தொகை அதிகம்தான். பழைய வீடு எனில், எத்தனை வருடம் பழைமையானது, மழைக்காலங்களில் நீர்க்கசிவு இருக்குமா என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். லீசுக்கு எடுக்கும்போது, அந்தத் தொகைக்கு அதிகபட்சமாக 3 சதவிகிதம் வட்டிக் கணக்கிட்டால் எவ்வளவு வருமோ அந்தத் தொகைக்குள் தகுதியான வீடாக இருக்க வேண்டும்.



              இதர வசதிகள்!
              மின்சாரம் / குடிநீர் போன்ற இதர வசதிகளையும் பார்ப்பது அவசியம். வாடகை வீட்டிற்கு என்று தனி மின் மீட்டர் இருக்கவேண்டும். மின் வாரியம் குறிப்பிடும் கட்டணத்தை, நாமே நேரடியாகச் செலுத்துவதற்கு ஏற்ப மின் கட்டண அட்டை நம்மிடம் கொடுத்துவிட வேண்டும். மேலும், தனி குடிநீர் தொட்டியா? அல்லது இணைப்பா,  கேபிள் இணைப்பு போன்றவை உள்ளதா, அதற்கான டெபாசிட்கள் ஏதேனும் கட்டவேண்டுமா என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும்.  


              ஒப்பந்தம்!
              வாடகைக்குச் செல்வதாக முடிவெடுத்து விட்டால், வாடகை, முன்பணம், மாதத்தில் எந்த தேதியில் வாடகை கொடுக்கப்படும் என்கிற விவரம், அல்லது லீசுக்குக் கொடுக்கப்படும் தொகை, வாடகைதாரருக்கு உள்ள உரிமைகள், வீட்டை காலி செய்வதற்குரிய நடைமுறை மற்றும் ஒப்பந்தம் எவ்வளவு நாட்களுக்குச் செல்லு படியாகும் என்கிற விவரங்களைக் குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டும்.
              என்னதான் பார்த்து பார்த்து வாடகைவீடு பிடித்தாலும், அக்கம்பக்கம் குடியிருப்பவர்கள், சுற்றுச்சூழல் என எல்லாமே ஒத்துப்போனால்தான் வாடகை வீட்டின் வசதிகளை அனுபவிக்க முடியும். இல்லையென்றால், வாடகை வீடு தேடுவதே பெரிய பணிசுமையாகிவிடும்.



              பத்தாண்டுகள் ஒரே வீட்டில்!
              சரஸ்வதி,
              அண்ணா நகர், திருச்சி.


              '' நாங்கள் கடந்த 12 வருடமாக ஒரே வீட்டில்தான் தங்கியுள்ளோம். ஆரம்பத்தில் 300 ரூபாய் வாடகைக் கொடுத்தேன். என் பணி காரணமாகவும், எனது குழந்தையின் கல்விக்காகவும் இந்தப் பகுதியைத் தேர்வு செய்தேன். தற்போது 4,500 ரூபாய் வாடகையைச் செலுத்தி வருகிறேன். சொந்த வீடு வாங்கும் அளவிற்கு வசதி இல்லை. அதனால்தான் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். வாடகையை உரிமையாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தி வருகிறேன். கரன்ட் பில்லை தனியாகக் கட்டி விடுகிறேன். பராமரிப்பு வேலைகளை நாங்களே செய்து விடுகிறோம். உரிமையாளர் சிக்கல் இல்லை, அக்கம்பக்கம் பழகிவிட்டோம், ஏரியாவும் சிக்கல் இல்லை என்பதால் வீடு மாறவேண்டிய வேலையே இல்லை.''

              thanx - vikatan

              Sunday, June 03, 2012

              சென்னை மெட்ரோ ரயில் திட்டம்

              சென்னை நகர வளர்ச்சியில் முதல் பாய்ச்சல் நடந்தது 1670-களில். சென்னை கோட்டையில் இருந்து பரங்கிமலை வரை மவுன்ட் ரோடு அமைக்கும் பணி தொடங்கிய காலகட்டம் அது. இன்றைய முழு வடிவத்தை மவுன்ட் ரோடு அடைய கிட்டத்தட்ட 130 வருடங்கள் பிடித்தன.


              அந்தச் சாலையையட்டிதான் வளர்ந்தது சென்னை. இரண்டாவது பாய்ச்சல் 1856-ல் நடந்தது, ராயபுரத்துக்கும் ஆற்காட்டுக்கும் இடையே ரயில் பாதை அமைக்கப்பட்டு, ரயில் ஓடத் தொடங்கியபோது. 1875-ல் தொடங்கிய துறைமுக மேம்பாட்டுப் பணியை மூன்றாவது பாய்ச்சல் என்று சொல்லலாம். இப்போது நான்காவது பாய்ச்சலுக்குத் தயாராகிக்கொண்டு இருக்கிறது சென்னை!

              பெருநகரத்தின் பெரும் சவால்!

              16 நகராட்சிகள், 20 நகரப் பஞ்சாயத்துகள், 214 கிராமங்கள் என 1,189 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு விரிந்துகிடக்கும் சென்னைப் பெருநகரின் மிகப் பெரிய சவால் அதன் போக்குவரத்து. சென்னையைச் சுற்றி 732 தடங்களில் 3,500 பஸ்களை இயக்குகிறது மாநகரப் போக்குவரத்துக் கழகம். சென்னை கடற்கரை - தாம்பரம்; சென்ட்ரல் - அரக்கோணம்; சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ஆகிய மூன்று பாதைகளில் 450 ரயில் சேவைகளை அளிக்கின்றன புறநகர் ரயில்கள்.


              சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே 62 ரயில் சேவைகளை அளிக்கின்றன பறக்கும் ரயில்கள். ஆனால், 50 சதவிகிதத்தினருக்குக்கூட இவை போதுமானவையாக இல்லை.


               பெருகும் லட்சக் கணக்கான கார்களாலும் மோட்டார் சைக்கிள்களாலும் சென்னையின் சாலைகள் நிரம்பி வழிகின்றன. துறைமுகத்துக்குள் செல்ல வாரக்கணக்கில் லாரிகள் அணிவகுத்துக் காத்திருக்கும் எண்ணூர் துறைமுகச் சாலையும் வண்டலூர் தொட்டதுமே வாகனங்கள் முக்கிமுக்கி நகரும் திருச்சி நெடுஞ்சாலையும் உதாரணங்கள். போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க பொதுப்போக்கு வரத்தும் முக்கியமான நடவடிக்கை களில் ஒன்று.


               ஆனால், சென்னையில் அது பெரிய அளவில் வெற்றி அடைய வில்லை. இதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்குக் குறித்த நேரத்துக்குள் செல்ல வசதியாக ரயில் - பஸ் போக்குவரத்து இணைப்பு இல்லாதது. இந்தக் குறையைக் களையப்போகும் முதல் நடவடிக்கையாக மெட்ரோ ரயில் சேவையைக் குறிப்பிட லாம்.


              மெட்ரோ நல்ல மெட்ரோ!

              14,600 கோடியில் நிர்மாணிக்கப்படும் மெட்ரோ ரயில் பாதை இரு தடங்களைக்கொண்டது. முதல் தடம், வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரையிலானது.

              23.1 கி.மீ. நீளம் உடைய இந்தப் பாதையில், வண்ணாரப்பேட்டையில் இருந்து மண்ணடி - உயர் நீதிமன்றம் - சென்ட்ரல் ரயில் நிலையம் - தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை வரையிலான 14.3 கி.மீ. பாதை நிலத்துக்கு அடியில் சுரங்கப்பாதை யாக அமைக்கப்படுகிறது. சின்னமலை முதல் கிண்டி - ஆலந்தூர் - விமான நிலை யம் வரையிலான 8.7 கி.மீ. பாதை உயர் நிலைப் பாலத்தில் அமைக்கப்படுகிறது.


               இதேபோல, சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் பரங்கிமலை வரையிலானது இரண்டாவது தடம். 22 கி.மீ. நீளம் உடைய இந்தப் பாதையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து எழும்பூர் - கீழ்ப்பாக்கம் - ஷெனாய் நகர் - திருமங்கலம் வரையி லான 9.7 கி.மீ. பாதை சுரங்கப் பாதையாக அமைக்கப்படுகிறது. கோயம்பேடு முதல் அரும்பாக்கம் - வடபழனி - ஆலந்தூர் - பரங்கிமலை வரையிலான 12.3 கி.மீ. பாதை உயர்நிலைப் பாலத்தில் அமைக்கப்படு கிறது.


              உயர்நிலைப் பாலத்தில், தரையில் இருந்து சுமார் 12 மீட்டர் உயரத்திலும் சுரங்கப் பாதையில் 17 மீட்டர் ஆழத்திலும் ரயில்கள் ஓடவிருக்கின்றன.

              ''முதல் கட்டமாக கோயம்பேடு - பரங்கிமலை வரையிலான பணிகள் 2013 டிசம்பருக்குள் முடியும்; முழுப் பணியும் 2015 டிசம்பருக்குள் முடியும்!'' என்கிறார் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனப் பொது மேலாளரான க.ராஜாராமன்.


              ஒரு ரயில் = 600 மோட்டார் சைக்கிள்கள்!


              ஆறு பெட்டிகள் இணைக்கப்பட்ட ஒரு மெட்ரோ ரயிலில் 1,580 பேர் பயணிக்கலாம். ஒரு தடத்தில் மூன்று நிமிடங்களுக்கு ஒரு ரயிலை இயக்கத் திட்டமிட்டு இருக்கிறார் கள். எனில், அலுவலக நேரத்தில் ஒரு மணிக்கு இரு தடங்களிலும் 54,162 பேர் பயணிக்கலாம்.


              அதிகபட்சம் 80 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயிலின் சராசரி வேகம் 35 கி.மீ. நீங்கள் விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டைக்கு 45 நிமிடங்களில் வந்துவிட முடியும் (இதே பயணத்தை பஸ்ஸில் மேற்கொள்ள ஒன்றரை மணி நேரம் ஆகும்). மெட்ரோ ரயில் சேவை தொடங்கும்போது, ஒரே டிக்கெட்டில் ரயில்களிலும் பஸ்களிலும் பயணம் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டு உள்ளதால், ஒரு மெட்ரோ ரயில் 16 பஸ்கள் அல்லது 300 கார்கள் அல்லது 600 மோட்டார் சைக்கிள்களின் பயன்பாட்டைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!


              விசேஷமான 2016

              சென்னைக்கு 2016 விசேஷமான ஆண்டாக அமையலாம். டெல்லிக்கோ, பெங்களூருக்கோ அமைந்ததுபோல, மெட்ரோ ரயில் திட்டம் இங்கு மேலும் ஒரு வசதியாக மட்டும் அமையப்போவது இல்லை. அது இன்னொரு பெரிய அடித்தளமும் ஆகும்.



               தமிழக அரசு ஒரு பிரமாண்ட திட்டத்தில் இருக்கிறது. மேற்கில் ஸ்ரீபெரும்புதூர், தெற்கில் காஞ்சிபுரம், வடக்கில் திருவள்ளூர் என மூன்று மாவட்டங்களின் பகுதிகளையும் இணைத்து 2016-க்குள் 8 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவைக்கொண்ட நகரமாக சென்னையை விரிவாக்க விரும்புகிறது அரசு.


               இப்போது இருப்பதைப் போல, கிட்டத்தட்ட ஏழு மடங்கு பெரிய நகரமாக சென்னை உருவாகும்போது, அதற்கான முக்கியமான அடித்தளமாக மெட்ரோ ரயில் பாதை அமையும். பறக்கும் ரயில் திட்ட விரிவாக்கப் பணி முடிந்து வேளச்சேரி - பரங்கிமலை இடையே ரயில் இயங்கும்போது மெட்ரோ ரயில் சேவைக்கும் பறக்கும் ரயில் சேவைக் கும் புறநகர் ரயில் சேவைக்கும் இடையே முழுத் தொடர்பு உருவாகும்.

              அப்போ மோனோ?

              இதற்கிடையே, மோனோ ரயில் திட்டம் நான்கு வழித்தடங்களில் கொண்டுவரப்பட உள்ளது. வண்டலூர் - வேளச்சேரி,  பூந்த மல்லி - கிண்டி, பூந்தமல்லி - வடபழனி,வண்ட லூர் - புழல் என நான்கு வழித் தடங்கள். 'மோனோ வெற்றிகரமான திட்டமா’ என்ற விவாதங்களைக் கண்டுகொள்ளாமல், அரசு அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் முழு முனைப்போடு இருக்கிறது.


              தொடரவிருக்கும் திட்டங்கள்

              சென்னையின் இரண்டாவது விமான நிலையம் ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட உள்ள நிலையில், அங்கு தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் புதிய ரயில் பாதைகளை அமைக்கவும் திட்டங்கள் தீட்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இவற்றில் பல திட்டங்கள் மெட்ரோ ரயில் ஓடும் பாதைகளாக அமையலாம். 2025 வாக்கில் திட்டமிட்டபடி இந்தப் பணிகள் எல்லாம் படிப்படியாக நிறைவேறினால், அப்போது உலகின் பெரிய நகரங்களில் ஒன்றான 'கிரேட்டர் சென்னை’யை நெருக்கடி இல்லாமல் நாம் பார்க்கலாம்!


              நன்றி - விகடன்