கதை நடக்கும் கால கட்டம் 1987 , கதைக்களம் புதுக்கோட்டை மாவட்டம்,சிவகங்கை மாவட்டம். ஒரு கிராமம் 3 நண்பர்கள் காலேஜ்க்குப்போறாங்க . அதுல ஹீரோ தன் கிளாஸ் மேட் பொண்ணை லவ்வறார். ஆனா பொண்ணொட அப்பா காதலுக்கு எதிரி , ஜாதி மதம் எல்லாம் பார்ப்பவர் . ஹீரோவோட நண்பர் கிறிஸ்டியன். அவர் ஒரு இந்துப்பொண்ணை லவ்வறார்.
ஒரு இக்கட்டான நிலைமைல அந்த இந்துப்பொண்ணு சூட்கேஸ் எடுத்துட்டு கிறிஸ்டியன் நண்பர் வீட்டுக்கே வந்து ஊரை விட்டு ஓடிடலாம்குது. வேற வழி இல்லாம அவரும் அவளைக்கூட்டிட்டு கிளம்பறாரு.
உடனே வில்லன் கோஷ்டிங்க அந்த ஜோடியைத்தேடி சல்லடைப்போட்டுத்தேடறாங்க , என்ன நடந்தது என்பதுதான் 144 நிமிசம் ஓடக்கூடிய ர ம்மி படக்கதை .
ஹீரோவா இனிகோ பிரபாகர் . இயல்பான கிராமத்து இளைஞனைக்கண் முன் நிறுத்தறார் . இவரது உயரமும் , நிறமும் இவருக்கு பிளஸ். பாடல் காட்சிகளில் மட்டும் பாடி லேங்குவேஜில் இயல்புத்தன்மை தேவை , மற்ற படி ஓக்கே .
இன்னொரு ஹீரோவாக விஜய் சேதுபதி . பாடி லேங்குவேஜை எந்த எந்த காட்சியில் எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதை மூளை செல்கள் கட்டளை இடும் முன்பே அனிச்சையாக மாற்றும் பிரமாதமான நடிகர் . அசால்ட்டாக இருக்கும் அவர் முகம் காட்சிக்கு ஏற்ற வாறு டக் என ,மாறும் போது சபாஷ் பெறுகிறார்
நாயகியாக காயத்ரி . சூரிய காந்திப்பூவை செடியில் இருந்து பறிக்காமலேயே காலை எட்டு மணிக்கு அதன் மேல் தண்ணீர் தெளித்தால் எப்படி இருக்குமோ அந்த அளவு புத்துணர்ச்சியுடன் மலர்ந்த முகத்துடன் இருக்கிறார் . அவர் மீது அவருக்குப்பிடிக்காத ஆள் நெருங்கும்போது முகத்தில் காட்டும் வன்மம் அபாரம் , தாவணி யில் வலம் வரும் தாமரைப்பூ போல் படம் முழுக்க இவர் ராஜ்ஜியமே .
இன்னொரு நாயகி ஐஸ்வர்யா . தமிழனின் தேசிய நிறமான மாநிற கோதுமை அழகி .கிராமத்து வாசம் கமழும் முகம் . கிணற்றடியில் மஞ்சள் தேய்ச்சுக்குளிக்கும் காட்சி யும் , விஜய் சேதுபதியுடன் கட்டிலில் கொஞ்சும் காட்சியும் சபாஷ் . க்ளைமாக்ஸ் காட்சியில் அப்ளாஸ் அள்ளுகிறார்.
காமெடியனாக புரோட்டா சூரி , வழக்கம் போல் வடிவேலுவின் காதலன் பட பாடி லேங்குவேஜ் . பஞ்ச் வசனங்கள் ., ஒன் லைனர்கள் இல்லாமல் தடுமாறினாலும் திரைக்கதையால் சாமார்த்தியமாகத்தப்பிக்கிறார்.
வில்லன்கள் இருவர் நடிப்பும் கன கச்சிதம் , காலேஜ் லைஃபில் வரும் வில்லன் களவாணி வில்லன் சாயலில் இருக்கார்
பாடல் காட்சிகள் அச்சு அசல் விக்ரமன் பட சாயல் . பூவே உனக்காக பட பாடல்களை நடன அமைப்பை பிரதி எடுத்ததுபோல் இருக்கு
இயக்குநர் சபாஷ் பெறும் காட்சிகள்
1. நாயகி வீட்டில் பெற்றோர் “ இவ இப்படி செஞ்சா ஊர்ல கண் , மூக்கு வெச்சுப்பேச மாட்டாங்களா ? என கேட்கும்போது காலேஜ் கிளாஸ் ரூமில் நாயகி நாயகனின் படத்தை ஓவியமாக கண் , மூக்கு வைக்கும் டச்சிங்க் காட்சி
2 விஜய் சேதுபதி - நாயகி ஐஸ் இருவரும் கிணற்றடியில் செய்யும் ரொமான்ஸ் காட்சிகள் , பாடலுக்கான லீடில் வரும் காதல் பார்வை பரிமாறல்கள் அருமை
3 சுந்தர பாண்டியன் , சுப்ரமணிய புரம் , காதல் படங்களின் சாயல் இருந்தாலும் கதைக்குத்தேவை இருந்தும் வன்முறையைத்தவிர்த்தது பிளஸ் , அதே போல் குடிக்கும் காட்சிகள் அதிகம் இல்லாதது ஆறுதல்
4 டி இமான் -ன் இசையில் 2 பாடல்கள் சூப்பர் ஹிட் . லொக்கேஷன் செலக்ஷன் அபாரம் . ரம்மி டைட்டில் போடும்போது வரும் தீம் மியூசிக்கை பதட்டமான காட்சிகளில் எல்லாம் உபயோகப்படுத்துவது பம்பாய் சாயல் என்றாலும் ரசிக்க முடிகிறது
இயக்குநரிடம் சில கேள்விகள்
1 படத்தின் பெரிய மைனசே இடைவேளைக்குப்பின் வரும் காட்சிகளை சுலபமாக யூகிக்க முடிவதுதான் . பல படங்களில் பார்த்த திரைக்கதை தான்
2 பெரியப்பா கார் பாதையில் எதிரே வந்ததும் ஹீரோ மரத்தின் பின் ஒளிகிறார் . கார் தாண்டிப்போன அடுத்த விநாடியே லூஸ் போல் இருவரும் ஜோடி போட்டு கிராமத்தில் நடப்பாங்களா? கார் ரிவர்யூமிரரில் பார்ப்பாங்கன்னு தெரியாதா?
3 படத்தின் முன் பாதியில் எல்லாக்காட்சிகளிலும் நெற்றியில் விபூதிப்பட்டையோடு வரும் சூரி எக்சாம் ஹாலில் மட்டும் வெறும் நெத்தியில் வருவது ஏனோ? பொதுவா அந்த டைம் ல தானே நம்மாளுங்க பக்தி முத்திப்போய் இருப்பாங்க ?
4 பொன்னமராவதி என்னும் ஊர் புதுக்கோட்ட்டையில் இருந்து 38 கிமீ தூரத்தில் இருக்கு , மதுரையில் இருந்து 60 கிமீ . புதுக்கோட்டை டூ மதுரை 100 கிமீ . ஆனால் படத்தில் வரும் ஒரு வசனத்தில் புதுக்கோட்டையில் கதை நடக்கையில் “ உனக்காக மதுரைக்குப்பக்கத்துல இருக்கும் பொன் அமராவதி யில் வாழை மரத்து ஜவுளி ஸ்டோரில் புடவை வாங்கி வந்தேன் என வருது .
5 நாயகி நகை , பணத்துடன் வந்திருக்கா . தூர தேசம் அல்லது 500 கிமீ தள்ளிப்போகாம அருகிலேயே ஏதோ ஊருக்குப்போய் மாட்டிக்கொள்வது ஏனோ ?
நச் வசனங்கள்
1. உன் பையன் 1200 க்கு 500 , எதிர் வீட்டுப்பையன் 500 க்கு 400 .
எப்படிப்பார்த்தாலும் என் பையன் தான் ஜாஸ்தி மார்க் ( மாலை மலரில் கன்னியப்பன் எழுதிய ஜோக் இது )
2 ஹாய் . நீயும் பாண்ட்ஸ் பவுடர், நானும் பாண்ட்ஸ் பவுடர் . இது பத்தி என்ன நினைக்கிறே ?
3 டேய் , இது க்ளாஸ் ரூம் , இங்கே என்ன கரகாட்டமா நடக்குது ? முன்னால போய் உக்கார ?
4 தெரியாதாஆஆ? நெடில் இல்லை . தெரியாது குறில்
என்னது ? லவ்வா?ஆஆ? லவ்வா? நெடில் இல்லை , லவ் குறில்
5 கொஞ்சம் மெதுவா பேசுடா மனசுல பேசுவது வெளில கேக்குது
6 வீட்டுக்குள்ளே யாருங்க ?
யாரும் இல்லை , இங்கே கிணத்துக்குள்ளே பாருங்க , விழுந்துட்டேன்
7 இவன் எல்லாம் நல்லா வருவான்
போற போக்கைப்பார்த்தா புள்ளையோட தான் வருவான் போல
8 நம்பி வந்த பொண்ணை கூட்டிட்டுப்போகாம என்னடா செய்யச்சொல்றே ? அவன் நிலைமைல யாரா இருந்தாலும் இதாண்டா செஞ்சிருப்பாங்க
9 கெட்டது தானா தேடி வந்துடுச்சு.நல்லதை நாமதான் தேடிப்போகனும் # ரம்மி
10 கடைசி வரை என்னை வெச்சுக்காப்பாத்துவீங்களா?
அது முடியாது.
என்னது ? அப்போ என்னை விடுங்க, நான் போறேன்
ஆனா நான் இருக்கும் வரை காப்பாத்துவேன் # ரம்மி
11 அடியேய்.நீ காலேஜ்ல மட்டும் தான் 3 வருசம்.நான் எட்டாவதுல,10 வதுல 12 வதுல 3 வது வருசம் படிச்சவன்.இப்ப சொல்லு.யார் சீனியர்? # ரம்மி
12 படத்துக்குப்போலாமா?
அய்யோ.தனியாவா?
ச்செ ச்சே 2 பேரும் சேர்ந்து தான் #1987 எ லவ் ஸ்டோரி @ ரம்மி
13 அங்கே அவன் கிட்டே என்ன பேச்சு?
கூடை விழுந்துடுச்சுக்கா.
கூடவே நீயும் விழுந்துடாதே # ரம்மி ரொமான்ஸ்
"அப்ப அது நீ சுட்ட வடைன்னு சொல்லு" #ரம்மி
15 வர்றான் பாரு படிக்குற புள்ள
,
எப்படி சொல்ற,
அதான் கண்ணாடி போட்டிருக்கான்ல
16 நண்பன மதிக்குற நண்பனுக்கு நண்பனா இருக்கிறது பெருமை
படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ்
1 கிராமத்துப்பின்னணியில் 1987 ல் நடக்கும் 2 ஜோடி காதல் கதை.இடை வேளை வரை நார்மல் # ரம்மி
2 கூடை மேல கூடை வெச்சு கூரை மேல போறவளே # இமான் ன் மெலோடி
3 புதுக்கோட்டை மாவட்டம் வட காடு # லொக்கேஷன் செலக்சன் குட்
4 இப்பவெல்லாம் ஹீரோவை விட காமெடியனுக்குத்தான் ஓப்பனிங் அப்ளாஸ் # புரோட்டா சூரி
5 சாதாரணமான ,இயல்பான ஓப்பனிங் டூ அசாதாரணமான விஜய் சேதுபதி
6 விஜய் சேதுபதிக்கு இத்தனை ரசிகைகளா? ஒரே காலேஜ் கேர்ள்ஸ் கூட்டமா இருக்கே? # ஈரோடு அபிராமி ரம்மி @11am
சி பி கமெண்ட் - ரம்மி - எம் சசிகுமார் பார்முலாவில் வில்லேஜ் லவ் த்ரில்லர் - பி சி செண்ட்டர்களில் மீடியமா ஹிட் ஆகிடும்
எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் = 43 ,
குமுதம் ரேட்டிங்க் = ஓக்கே
ரேட்டிங் 3 / 5