நான் சின்னப்பையனா இருக்கும்போது துப்பறியும் சாம்பு அப்டினு படக்கதை படிச்ச நினைவு இருக்கு. அதுல ஹீரோ எது செஞ்சாலும் அவரையும் அறியாம அது மக்களுக்கு நல்லதாவோ , கெட்டவங்களுக்கு எதிராவோ அமைஞ்சு அவரை உலகமே கொண்டாடும் . அந்த மாதிரி ஏ கிளாஸ் கதையை , சம்பவங்களை முடிஞ்சவரை லோ கிளாஸா எடுத்து சி செண்ட்ட்ர் ஆடியன்சை கவர முயன்ற படம் தான் கருணாசின் சொந்தப்படமான ரகளை புரம்
ஹீரோ ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் , பயந்த சுபாவம் .அப்பா அவருக்குன்னு விட்டுட்டுப்போனது கடன் தான். ( எல்லா அப்பாக்களும் கலைஞர் மாதிரியே சொத்து சேர்த்து வெச்சுட்டு இருக்க முடியுமா? ) தென்னை மரத்துல தேள் கொட்டுனா பனை மரத்துல நெறி கட்டுவது மாதிரி , நயன் தாரா ஏதாவது விழாவுக்கு வரும்போது எதேச்சையாவோ , ஏதாவது ஒரு இச்சையாவோ சிம்புவும் அங்கே ஆஜர் ஆவது போல் மத்த போலீஸ் செய்யும் சாகசங்களால் ஹீரோவுக்கு நல்ல பேரு கிடைக்குது .
சக போலீஸ் ஒருவரின் சதியால் ஹீரோவுக்கு பிளட் கேன்சர் இருப்பதா தவறான தகவல் ஹீரோவுக்கு தெரிய வருது . இதனால வாழ்க்கைல விரக்தி அடைஞ்ச அவரு தன் காதலி தன்னை வெறுக்கட்டும்னு வேணும்னே மத்த பொண்ணோட சுத்துவது மாதிரி டிராமா பண்றார் , போலீஸ் டியூட்டி ல வீரசாகசம் செய்யும்போது செத்தா ஏராளமான பணம் வரும் , அது தன் குடும்பத்துக்கு உபயோகமா இருக்கும்னு அவர் பண்ணும் கோமாளிக்கூத்துக்கள் தான் மிச்ச மீதி திரைக்கதை .
தயாரிப்பாளர் கம் ஹீரோ கருணாஸ் . எடுத்துக்கொண்ட கதை அவருக்கு கனகச்சிதம் , ஆனா திரைக்கதை அமைக்கும்போது போதுமான சிரத்தை இல்லை . இப்பவெல்லாம் காமெடி டிராக் எழுதறவங்க சிரிப்பு வர்ற மாதிரி எழுதறதே இல்லை , காமெடி நடிகர்கள் ஏதாவது மொக்கை போட்டா மக்கள் சிரிச்சுடுவாங்கன்னு தப்பா கணக்கு போட்டுடறாங்க .
கருணாஸ் டூயட் எல்லாம் ஆடறார் ., முன்னணி ஹீரோக்கள் மாதிரி போஸ் கொடுக்கறார் , ஒரு லிப் கிஸ் வேற ( சென்சார் கட் ) ஒரு நல்ல குத்தாட்டப்பாட்டுக்கு கேவலமான டான்ஸ் மூவ்மெண்ட் தர்றார் . ஹூம். லோ கிளாஸ் ஆடியன்ஸ் கிட்டே கிளாப்ஸ் வாங்கனும்னா லோ லெவல் ல இறங்கனும்னு இவங்களா நினைச்சுடறாங்க .
ஹீரோயின் புதுமுகம் அங்கனாராய் , நேட்டிவ் பெங்களூராம் , இனி அங்கனவே இருக்கவேண்டியதுதான் . சுமார் மூஞ்சி குமாரி . மேக்கப் மட்டும் சுமாரைத்தாண்டி.. இப்பவெல்லாம் லட்டு ஃபிகருங்க போடற மேக்கப்பை விட அட்டு ஃபிகருங்க போடும் மேக்கப் தான் தூக்கலா இருக்கு , அதுவே அவங்களைக்காட்டிக்கொடுத்துடுது. இந்த 35 மார்க் ஃபிகருக்கு இதெல்லாம் ஓவர்.
கிளாமருக்காக சஞ்சனாசிங்க் . இதுவும் தேறாத ஃபிகர் தான் . பொதுவா தமிழனுக்கு குதிரை மாதிரி வாட்டசாட்டமா இருக்கும் ஃபிகரை பிடிக்கும், ஆனா குதிரை மாதிரி நீள் வட்ட முகம் பிடிக்காது . ( டேய் , ராஸ்கல் நீ பொண்ணா கட்டற?” )
கோவை சரளா , சிங்கம் புலி காமெடி ஆங்காங்கே கலகலப்பூட்டுது . சிங்கம்புலியின் டைமிங்க் சென்ஸ் , வாய்ஸ் மாடுலேஷன் அருமை .
மனோபாலா தோற்றத்திலேயே சிரிப்பை வரவழைக்கும் நல்ல ஒரு காமெடி நடிகர் அவருக்கு இன்னும் வாய்ப்பு கொடுத்திருக்கலாம், ஆனால் சைக்காலஜிக்கலாகப்பார்க்கும்போது ஒரு காமெடி ஹீரோ , ஹீரோவாக நடிக்கும்போது அதுவும் அவர் சொந்தப்படமாக இருக்கும் பட்சத்தில் தன்னைத்தவிர வேறு யாரும் காமெடி செஞ்சு பேர் வாங்கிடக்கூடாது என நினைப்பது இயல்பு , கருணாசும் அதற்கு விதி விலக்கல்ல
டெல்லி கணேஷ் , உமா பத்மனாபன் எம் எஸ் பாஸ்கர் உட்பட ஏராளமான நட்சத்திரப்பட்டாளங்கள் .
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் சுடுகாட்டு கானா செம கலக்கு கலக்குது . அதே போல் அடி தேவலோக ரதியே , சூடாமணி , ரகள புரம் என எல்லாப்பாட்டுக்களுமே சராசரிக்கும் மேலே .
2. படம் மொக்கைக்காமெடியாக இருந்தாலும் ரொம்ப பொறுமையை சோதிக்காம உட்கார்ந்து பார்க்கும் விதத்தில் திரைக்கதை அமைச்சது
3 போஸ்டர் டிசைனில் சிங்கம் 3 வருது என பில்டப் கொடுத்தது . பாவம் சூர்யா .
4. ஜெயிலில் இருந்து வெளியே வரும் லாரியில் கைதிகள் இருப்பதாக ஹீரோ அள்ளி விட நிஜமாகவே அங்கே கைதிகள் இருப்பதும் அதைத்தொடர்ந்து வரும் சேசிங்க் காட்சியும் . ஹீரோ எதேச்சையாக செய்யும் விஷயங்கள் எல்லாம் சாதனை ஆகும் 4 வெவ்வேறு சம்பவங்களின் நம்பகத்தன்மை
5 லோ கிளாஸ் ஆடியன்சின் கவனம் கவரும் ஷகீலா டான்ஸ்
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. ஒரு கான்ஸ்டபிள் ஏதோ ஒரு ரவுடியை பிடிச்சுக்கொடுத்தார் என உடனே அவருக்கு இன்ஸ்பெக்டராக பிரமோஷன் கிடைப்பது எப்படி? சட்டப்படி சப் இன்ஸ்பெக்டர் ஆன ;பின் தானே இன்ஸ்பெக்டர் ஆக முடியும் ?
2. ஒரு போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக இருப்பவருக்கு (ஒரு பேச்சுக்கு) இன்ஸ்பெக்டர் பதவி கிடைத்தால் அவர் அதுவரை பார்த்த ஸ்டேஷனில் வேலை பார்க்க முடியாது . வேறு ஸ்டேஷனுக்கு ட்ரான்ஸ்ஃபரோடுதான் பிரமோஷன் கிடைக்கும்
3 ஹீரோ தன் முத மாச சம்பளம்னு அம்மா கிட்டே பணம் கொண்டு வந்து தரும்போது ஹால் ல மாட்டி இருக்கும் டெய்லி ஷீட் காலண்டர்ல 16ந்தேதி காட்டுதெ? மாசா மாசம் 28ந்தேதியே அரசு சம்பளம் பட்டுவாடா பண்ணிடுவாங்களே, இது தமிழக் அரசை அவமானப்படுத்துவது ஆகாதா?
4 சப் இன்ஸ்பெக்டர் ஒரு கமிஷனர் முன் அடக்கமாக இருக்கனும்னா அட்டென்ஷன் பொசிசனில் தான் நிற்பார் , இப்படி கை கட்டி நிக்க மாட்டார் . அவர் என்ன அரசியல்வாதியிடம் வேலை பார்க்கும் அல்லக்கையா?
5 இன்ஸ்பெக்டரின் சம்பளம் 30,000 என ஒரு இடத்தில் வசனம் வருது . கைல வாங்குவதே அவ்வளவு என்பது மாதிரி , ஒரு இன்ஸ்பெக்டரின் டேக் ஹோம் சேலரி ரூ 24,500 தான்
6 பிளட் கேன்சர் ஒரு தீராத வியாதி என நம்பிக்கை வருவது போல் காட்சி அமைப்புகளும் , வசனங்களும் வருது இது கண்டிக்கத்தக்க ஒன்று , படம் பார்க்கும் ஆடியன்சிடம் இது தவறான பயத்தைக்கொடுக்கக்கூடும்
7 சாதாரணமா ஒரு வைரஸ் காய்ச்சல் வந்தாலே ரெண்டு , மூணு ஹாஸ்பிடல் ல செக் பண்ணி கன்ஃபர்ம் பண்ணுபவன் தமிழன் . பிளட் கேன்சர் என தெரிஞ்சா ரீ செக்கப் ஏன் செய்யல ?
8 போலீஸ் ஸ்டேஷன் ல சம்பந்தமே இல்லாம எம் ஜி ஆர் படம் மாட்டப்பட்டு இருக்கே, எதுக்கு ? ஆட்சியாளர்களை குஷிப்படுத்தவா? முன்னாள் முதல்வர்கள் என சால்ஜாப்பு சொன்னா அங்கே கலைஞர் ஃபோட்டோவும் இருக்கனுமே?
9 பணயக்கைதியா பப்ளிக் 15 பேரைப்பிடிச்சு மிரட்டும் ஒரு தீவிரவாதி ஒரே ஒரு போலீஸ் ஆல்ட்டர்நேட்டிவ் பணயக்கைதியா வந்ததும் 15 பேரை எப்படி விடுவிப்பான்?
10 போலீஸ் கான்ஸ்டபிளா வர்ற எல்லோரும் காக்கி பெல்ட் போட்டிருக்கும்போது சிங்கம் புலி , கோவை சரளா மட்டும் ஏன் ப்ளூ பெல்ட் போட்டிருக்காங்க ?
11 காமெடி என்ற பெயரில் பயந்தாங்கொள்ளி பயத்தில் பேண்ட்டோடு நெம்பர் ஒன் போவதை ஒரு டைம் காட்டலாம். 2 டைம் காட்டலாம் . 10 நிமிஷத்துக்கு ஒரு டைம் காட்டிட்டே இருக்க அது என்ன நமீதா முதுகா?
12 படம் முழுக்க ஏகப்பட்ட டபுள் மினிங்க் டயலாக்குகள் , கேவலமான கேமரா கோணங்கள் இந்த லட்சணத்துல இதுக்கு யூ சர்ட்டிஃபிகேட் வேற ,. நிஜமாவே சென்சார் ஆஃபீசர்ஸ்க்கு டபுள் மீனிங்க் டயலாக்ஸ் புரியலையா? கை நீட்டிட்டாங்களா?
13 குறிப்பிட்ட தீவிரவாதியைப்பிடிச்சா ரூ 10 லட்சம் பரிசுனு சொல்லப்படுது , ஆனா ஹீரோ 20 லட்சம் கிடைச்சிடுச்சுன்னு டயலாக் ல சொல்றார் , பணத்தோட மதிப்பு அவ்ளவ் குறைஞ்சிடுச்சா?
13 குறிப்பிட்ட தீவிரவாதியைப்பிடிச்சா ரூ 10 லட்சம் பரிசுனு சொல்லப்படுது , ஆனா ஹீரோ 20 லட்சம் கிடைச்சிடுச்சுன்னு டயலாக் ல சொல்றார் , பணத்தோட மதிப்பு அவ்ளவ் குறைஞ்சிடுச்சா?
மனம் கவர்ந்த வசனங்கள்
1. செய் அல்லது செத்து மடி சார்
என்னது மடிசாரா?
2 அக்யூஸ்ட்டைப்பார்த்தாத்தான் லத்தியைத்தூக்கனும் , சும்மா சும்மா தூக்கிட்டே இருந்தா நஞ்சுடும் ( நைந்து போய்டும் )
3 டியுட்டிக்குப்போன உன் புருஷன் வர்லை , ஊட்டிக்குப்போன என் பொண்டாட்டி வர்வே போறதில்லை , கடவுள் ஏதோ கால்குலேட் பண்ணித்தான் நம்மளை சேர்த்திருப்பாரோ ?
4 சரியான வயசுல மேரேஜ் பண்ணலைன்னா பொண்ணுப்பார்க்க முடியாது , பொம்பளை தான் பார்க்கனும்
5 பேர் என்ன ?
கல்யாணி ?
உங்கப்பா டாஸ்மாக்ல இருக்காரா? பீர் பேர் வெச்சிருக்காரு?
6 பெரிய விஷயத்துக்கு ஆசைப்பட்டா புதுசா பிளான் பண்ணி ஹார்டு ஒர்க் பண்ணனும் ]
7 நம்ம குத்து விளக்கை வெச்சு இவன் குத்துவிளக்கை ஏத்திடுவான் போல இருக்கே?
8 சாரி மேடம், என் கிட்டே சில்லறை இல்லை
இருந்தா மட்டும் தந்துடப்போறியா?
9 நாம பண்ணப்போற இந்த ஆபரேஷனுக்கு நான் கொ ஆபரேட் பண்றேன் , யூ டோண்ட் ஒர்ர்ரி
10 நீங்க பைக் சூப்பரா ஓட்டறீங்க
நான் பழைய லாரியே நல்லா ஓட்டுவேன்
வ்
11 காதலனா இருந்தா அவ தொடவே விடமாட்டா, கணவனா இருந்தா அவன் தொடவே மாட்டான், அநெகமா இது கள்ளக்காதலாத்தான் இருக்கனும்
12 . சாரி எனக்கு ஹிந்தி தெரியாது
பாடி லேங்குவேஜ்க்கு எதுக்கு அந்த லேங்குவேஜ்?
13 ஹூம் , நான் போகாத பொண்ணில்லை , வாங்காத புண்ணில்லை
14 வாழப்போறவன் தான் பயப்படனும், சாகப்போறவன் சந்தோஷமா இருக்கனும்
சி பி கமெண்ட் - டி வி ல போட்டா பார்க்கலாம் , தியேட்டர்ல போய்ப்பார்க்கும் அளவு ஒர்த் இல்லை . 10 ரூபா கொடுத்து பெஞ்ச் டிக்கெட் ல பார்க்கும் அளவு இருக்கு
3 டியுட்டிக்குப்போன உன் புருஷன் வர்லை , ஊட்டிக்குப்போன என் பொண்டாட்டி வர்வே போறதில்லை , கடவுள் ஏதோ கால்குலேட் பண்ணித்தான் நம்மளை சேர்த்திருப்பாரோ ?
4 சரியான வயசுல மேரேஜ் பண்ணலைன்னா பொண்ணுப்பார்க்க முடியாது , பொம்பளை தான் பார்க்கனும்
5 பேர் என்ன ?
கல்யாணி ?
உங்கப்பா டாஸ்மாக்ல இருக்காரா? பீர் பேர் வெச்சிருக்காரு?
6 பெரிய விஷயத்துக்கு ஆசைப்பட்டா புதுசா பிளான் பண்ணி ஹார்டு ஒர்க் பண்ணனும் ]
7 நம்ம குத்து விளக்கை வெச்சு இவன் குத்துவிளக்கை ஏத்திடுவான் போல இருக்கே?
8 சாரி மேடம், என் கிட்டே சில்லறை இல்லை
இருந்தா மட்டும் தந்துடப்போறியா?
9 நாம பண்ணப்போற இந்த ஆபரேஷனுக்கு நான் கொ ஆபரேட் பண்றேன் , யூ டோண்ட் ஒர்ர்ரி
10 நீங்க பைக் சூப்பரா ஓட்டறீங்க
நான் பழைய லாரியே நல்லா ஓட்டுவேன்
வ்
11 காதலனா இருந்தா அவ தொடவே விடமாட்டா, கணவனா இருந்தா அவன் தொடவே மாட்டான், அநெகமா இது கள்ளக்காதலாத்தான் இருக்கனும்
12 . சாரி எனக்கு ஹிந்தி தெரியாது
பாடி லேங்குவேஜ்க்கு எதுக்கு அந்த லேங்குவேஜ்?
13 ஹூம் , நான் போகாத பொண்ணில்லை , வாங்காத புண்ணில்லை
14 வாழப்போறவன் தான் பயப்படனும், சாகப்போறவன் சந்தோஷமா இருக்கனும்
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க்-37
குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்
ரேட்டிங் = 2.25 / 5
இந்தப்படத்தை விருதாச்சலம் அருகே உளுந்தூர்ப்பேட்டை ஸ்ரீ நாராயணா தியேட்டர் ல பார்த்தேன் . 40 ரூபா தான் பால்கனி டிக்கெட்டே . படத்துக்கு ஏகப்பட்ட கள்ளக்காதல் ஜோடிங்க வந்திருந்தாங்க . அதுல ஒரு ஜோடி தியேட்டர்லயே டான்ஸ் வேற ஆடுனாங்க, இது தியேட்டரா? விழா மேடையா?>னு டவுட்டே வந்துடுச்சு , இது பற்றித்தனி பதிவு விரைவில்