Showing posts with label ர - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label ர - சினிமா விமர்சனம். Show all posts

Friday, December 05, 2014

ர - சினிமா விமர்சனம் ( அமானுஷ்ய க்ரைம் த்ரில்லர் )


 ஓப்பனிங் லயே  ஹீரோ    ஹீரோயின் 2 பேருக்கும்  மேரேஜ் ஆகிடுது.அன்னைக்கு நைட்  ஹீரோ வீட்ல  பெரியவங்க  எல்லாம்   வெளில  போய்டறாங்க .அப்போதான்  அவங்களுக்குத்தனிமை கிடைக்கும் ?

படம் பார்த்துட்டு  இருக்கும்  தமிழன்  உற்சாகம் ஆகிடறான்.


முதல் இரவு நடக்கறதுக்குத்தடங்கலா  ஹீரோவோட  ஃபிரண்ட்ஸ்  வந்துடறாங்க . மேரேஜ்க்கு பார்ட்டி. சரக்கு அடிக்கறாங்க . அன்னைக்கு நைட்  என்ன நடந்ததுன்னு  சஸ்பென்ஸ்.


அடுத்த நாள்  காலை  நாயகி ஆள் அவுட். போலீஸ்  விசாரிக்குது, ஹீரோ  மேல சந்தேகப்படுது.

 3  மாசம்  கழிச்சு   ஹீரோ  வீட்டில்  சில தடங்கள் . பேயா?  ஹீரோயின் மீண்டும்  வந்தாரா?ஹீரோயின்  சாவில்  என்ன  மர்மம்?இதுதான்   பின் பாதி  திரைக்கதை


நாயகனோட மனைவி  , அக்கா , ஃபேமிலி டாக்டர்  இவங்க  3  பேரும்   ஹார்ட் அட்டாக்கில்  இறந்ததா  போஸ்ட் மார்ட்டம்  ரிப்போர்ட்  சொல்வதால்  போலீஸ்  எப்படி  தடுமாறுது ? கேஸ்  எப்படி  முடியுது ? இது  வெண்  திரையில் காண  வேண்டியது


ஹீரோவா வரும்  அஷ்ரப்  நல்ல  நடிப்பு  . முன்   பாதியில்  அப்பாஸ்  சித்தார்த்  போல் மழு மழு  அப்பாவி  முகமாய் வருபவர்  பின் பாதியில்  தாடியுடன்  மெச்சூர்டு  கேரக்டராய் வருவது  குட் .ஆனால் அவருக்கு   பாடி லேங்குவேஜ்  செட் ஆகலை 



ஹீரோயின்  அதிதி செங்கப்பா . நல்லா  தான்  இருக்கார்/ பேயாக   வரும்  காட்சிகள்   மிரட்டல் 

இவருக்கு   ஓப்பனிங்கில்  இன்னும்   கிளுகிளுப்பு   காட்சிகள் வெச்சிருக்கலாம். ரொம்ப கண்ணியமா   காட்டி  இருக்காங்க . ஐ  மீன்  காட்டாம இருக்காங்க .


மனதைக் கவர்ந்த  வசனங்கள்


1 புதுசா மேரேஜ் ஆன  ஜோடி.வீட்டில் தனியா  இருக்கட்டும்.பெரியப்பா வீட்டில் தங்கிட்டு வரவா?


வேணாம்மா.சித்தப்பா வீட்டுக்குப்போ.அதான் தூரம்#ர



இதுக்குத்தான்  பணக்காரப்பசங்களுக்கு  வேலை  தரக்கூடாதுங்கறது, இவங்க  இஷ்டத்துக்கு  லீவ் போட்டுடுவாங்க @ர


3  16  ம் நூற்றாண்டிலேயே   ஒருவர்  ஹிப்னாடிஸ் மூலமா  பேய்  கூட  பேச  ட்ரை  பண்ணி  இருக்கார்


4  தீய சக்தி  100  வருடங்களுக்கு  ஒரு முறை  ஒரு ஆளைத்தேர்ந்தெடுக்கும்



 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  தேன்மழைஇவள்பாட்டு   காதல்வைரஸ்  பட பாட்டான ஏய் ஏய்  என்ன ஆச்சு உனக்கு ? நெருப்பாய்க்கொதிக்குது  மூச்சு  பாட்டின் சாமார்த்திய உல்டா#ர


2  வித்தியாசமான அமானுஷ்ய த்ரில்லரான ‘‘ர’ தமிழ்ல ‘பறிமுதல், அபகரித்தல்’ – னு அர்த்தம்













இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்



1  நாயகி  ஓப்பனிங்  ஷாட்டில்  காரில் நாயகனைப்பேசவே  விடாமல்   தனது வாதத்தை  முடித்ததும்   செட் வால்யூம் அதிகப்படுத்துவதும்  பின்  வால்யூம்  குறைத்து  பேசி  பின் மீண்டும்  சவுண்ட்  வைப்பது  தற்காலப்பெண்கள்  மனதின் வெளிப்பாடு . குட் டைரக்சன்


2  நேர்த்தியான  ஒளிப்பதிவு  , எடிட்டிங்.படத்தில் 5  பாடல்கள்  சிடியில் ஆடியோ  மார்க்கெட்டிங்க்காக வெச்சாலும்   தியேட்ட  ரில்   ஒரே  ஒரு பாட்டு மட்டும்  வெச்ச லாவகம் . 


3   போஸ்டர்  டிசைன்  ஓக்கே. ஆனால்  டைட்டில்   வேற  ஏதாவது வெச்சிருக்கலாம். ஓர்  எழுத்து  டைட்டில்   3 செண்ட்டர்  ரசிகர்களைக்கவராது . ஏ செண்ட்டர் ஆடியன்ஸ் மட்டுமே வருவாங்க






இயக்குநரிடம்  சில கேள்விகள்


1   நாயகி துர் மரணம்  நிகழ்ந்து  பேயா  அல்லது அமானுஷ்ய சக்தி யா மாற    எதுக்கு  3 மாசம்   பிரேக் எடுத்துக்குது?


2   ஹீரோ  ஏதோ  ஒரு டென்சன் ல  தன் உயர் அதிகாரியிடம்   வாடா  போடா ரேஞ்சுக்குபேசியும்  அவர் அதை  பெரிசா  எடுத்துக்காதது  எப்படி?


3  பேச்சிலர்  பார்ட்டி  பெரும்பாலும்  மேரேஜ்க்கு   முந்தின  வாரம் அல்லது  முன் தினம்  தானே  நடக்கும் ? எப்படி  முதல்  இரவு அன்னைக்கு?


4   சரக்கு  எப்போ  வேணா  அடிச்சுக்கலாம். ஆனா   முதல்  இரவு  போனா வருமா?  ஹீரோ அதில் ஆர்வம் காட்டாம சரக்கில் ஆர்வமா  இருப்பது ஏன்? அவர் என்ன சரக்கு லிங்கமா?


5   மேரேஜ் ஆன முதல் நாளே   நாயகி எப்படி  நாயகனை அவனோட நண்பர்களுடன்  சரக்கு அடிக்க அனுமதிக்கறா? நிஜ வாழ்வில்  இந்த  பொண்டாட்டிங்க  எல்லாம்  சாதாரண டைம்ல  கூட நண்பரோட   பேசிட்டு இருக்க விட மாட்டாங்களே?


6  பெரும்பாலான காட்சிகள் நாயகன்  ஒரே  ரூமில் அல்லல்படுவதுபோல்  தான்  இருக்கு. இது சலிப்பை ஏற்படுத்துது, சட்டு புட்டுனு மெயின்  சஸ்பென்சை  உடைங்கப்பா  என கத்தத்தோணுது




சி  பி  கமெண்ட்  -
ர -  ஏ  செண்ட்டர் ஆடியன்சுக்கான  அமானுஷ்ய  க்ரைம் த்ரில்லர் .திரைக்கதையில்  வேகம்  குறைவு - விகடன் மார்க் - 41   , ரேட்டிங் - 2.5 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 41



குமுதம்  ரேங்க் ( கணிப்பு)  = ஓக்கே



 




நெய்வேலி  டவுன்ஷிப்  நிதி ரத்னா வில்  படம் பார்த்தேன் . 4 பேர் தான் டோட்டல் ஆடியன்சே. கரண்ட் சார்ஜ்க்குக்கூட கட்டுபடிஆகாது