ஸ்டார் வேல்யூ உள்ள ஒரு ஹீரோ பட டைட்டிலா ஹீரோயின் கேரக்டர் நேம் வைக்க ஒத்துக்கொள்வது சிரமம். அதை மீறி பல ஹீரோக்கள் அதுக்கு ஒத்துக்கிட்டு இருந்திருக்காங்க .ப்ரியா , காயத்ரி , புவனா ஒரு கேள்விக்குறி சந்திரமுகி இதெல்லாம் ரஜினி வெர்சன். சதிலீலாவதி , அவ்வை சண்முகி கமல் வெர்சன் . இதுல ஹீரோயின் கேரக்டர் நடித்தது ஹீரோதான் .
சந்திரமுகி ரிலீஸ் டைம்ல விஜய் சச்சின் படத்தை ரஜினி படத்துக்குப்போட்டியா விட்டதுக்கு முக்கியக்காரணம் அந்த டைம் ரஜினிக்கு மார்க்கெட் கொஞ்சம் டல், இப்போ நம்ம படத்தை களத்துல இறக்கி ஜெயிச்சுட்டா நாம ரஜினியை விட பெட்டர் என பேர் எடுக்கலாம், சூப்பர் ஸ்டாரை மிஞ்சிய ஸ்டார் என பேர் எடுக்கலாம் என எஸ் ஏ சி மகனுக்கு ஐடியா கொடுத்ததா தகவல் . ஆனா தனியா ரிலீஸ் ஆகி இருந்தா செம ஹிட் ஆகி இருக்க வேண்டிய ச்ச்சின் சந்திரமுகியின் பிரம்மாண்ட வெற்றியால் அர்ண்டு போய் மீடியம் ஹிட் ஆனது . இதன் மூலம் நமக்குத்தெரிய வருவது கண்ட்டென்ட் நல்லா இருந்தா போதும் கவலைப்படத்தேவை இல்லை
ஸ்பாய்லர் அலெர்ட்
ஒரு நாட்டின் இளவரசி தான் நாயகி அவர் தன் நாட்டின் சாதாரண படை வீரரைக்காதலிக்கிறார். நாயகிக்கு ஒரு தம்பி. தம்பியும் காதலரும் ந்ண்பர்கள் . எவ்ளோ சவுகர்யமாப்போச்சு பாருங்க . தூது விட ஆள் தேட வேண்டியதில்லை
ம்ன்னர் ஒரு விசித்திரமான ஆளு . வித்தியாசமான , மாறுபட்ட பொருட்களை கலெக்சன்ல வெச்சிருகற ஒரு ஆளு.அவரோட கேரக்டரை விளக்க நம்ம சொந்த வாழ்க்கைல இருந்து ஒரு சம்பவம் எடுத்து விடறேன். விமர்சனத்துக்கும் இதுக்கும் சம்ப்ந்தம் இல்லை , பிடிக்காதாவங்க அடுத்த 2 பேராவை ஸ்கிப் பண்ணீடுங்க
நான் சின்னப்பையனா இருக்கும்போது ஸ்டாம்ப் கலெக்சன் , சாமி பட கலெக்சன் எல்லாம் பண்ணிட்டு இருந்தேன். அது யாரோ சொல்லிக்கொடுத்ததுனு நினைக்கறேன். முருகர் சிவன் வினாயகர் உட்பட் பலவித சாமிகள் பலவித போஸ்கள் கொண்ட ஆல்பம். அதே மாதிரி உலக நாடுகள் வெளியிட்ட பலவகை ஸ்டாம்ப்ஸ்.
இப்போ ட்விட்டர்ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணினப்ப அங்கே இருக்கும் பெண்கள் பலரும் புத்திசாலித்தனமா அவங்க சொந்த ஃபோட்டோவை டி பி யாக வைக்காம பூ படம் பேபி ப்டம் இப்படி வெச்சுட்டு இருந்தாங்க . அப்பப்ப ஏதோ ஒரு சேலஞ்ச் ஹேஸ்டேக் வரும் .கண் சேலஞ்ச் அப்டினா இவங்க அவங்களோட கண்களை மட்டும் க்ளோசப்ல ஃபோட்டோ எடுத்து டி பி யா வைப்பாங்க . அப்போ நம்ம ஆட்களெல்லாம் இன்னைக்கு எங்க வீட்ல லெமன் ரைஸ்ங்க , உங்க ஐஸ் ரெண்டும் வெரி நைஸ்ங்க அப்டினு கமெண்ட் போடுவாங்க
அடுத்து ஜிமிக்கி சேலஞ்ச். அதுல அவங்க ஜிமிக்கியோட இருக்கும் காது ஃபோட்டோ. அடுத்து மூக்குத்தி சேலஞ்ச். இப்போ மூக்கு . அடுத்து லிப்ஸ் சேலஞ்ச். இபடியே எல்லா சேலஞ்சுக்கும் எதுனா ஃபோட்டோ போட ட்விட்டர்ல வேலை வெட்டி இல்லாத தன்மானத்தமிழன் ஒருத்தன் ( நான் அவன் இல்லை ) ஃபேமசான முன்னணி பெண் ட்வீட்டர்கள் 25 பேரை செலக்ட் பண்ணி அவங்க அப்பப்ப போட்ட சேல்ஞ்ச் ஃபோட்டோசை எல்லாம் சேர்த்து அவங்க முழு முகத்தையே ரெடி பண்ணி போஸ்ட் போட்டுட்டாங்க . அவனை சைபர் க்ரைம் போலீஸ்ல சேர்த்திருந்தா டிபார்ட்மெண்ட்டுக்கு உதவியா இருந்திருக்கும்
இது எப்படி இருக்குன்னா தேர்கடைல முதல்ல எல்லாம் ஒரு கவ்ர்ல மரத்துண்டுகள் கலெக்சன் இருக்கும் அது கூட ஒரு ஃபோட்டோ பேப்பர் இருக்கும் அந்த பேப்பர்ல இருக்கற உருவத்தை அந்த மரத்துண்டுகளை வெச்சு அமைக்கனும். அந்த வேலையைத்தான் அந்தாள் பண்ணி இருக்காப்டி
ஓக்கே எங்கேயோ போய்ட்டோம் மன்னருக்கு இந்த மாதிரி விசித்திர கலெக்சன் மேனியா இருந்ததுனு சொன்னேனே ஒரு நாள் தர்பார்க்கு வந்த ஒரு ஆள் தன் கிட்டே ஒரு மரக்குதிரை இருக்கு அது பறக்கும் சக்தி கொண்டது
இதை என்ன விலை கொடுத்தாவது வாங்கிக்கறேன் உன் விலையைச்சொல் என மன்னர் சொல்ல அந்த ஆள் உங்க பொண்ணை எனக்குக்கட்டிக்குடுங்க என்கிறார்
இதைக்கேட்டு காண்டு ஆன நாயகன் , நாயகி இளவரசி , சகோதர இளவரசன் மூணு பேரும் இந்த மேரேஜை நிறுத்த ஐடியா பண்றாங்க
அந்த ஐடியாப்படி இளவரசர் அந்தக்குதிரையை ஓட்டிப்பார்க்கறேன் செக் பண்றேன்னு சொல்லி அதை ஏதாவது மலைல மோதி அழிச்சிடுவ்து , இளவரசைக்கொல்ல முயற்சித்தார்னு அந்த ஆளை போட்டுத்தள்ளிடறதுனு திட்டம் தீட்றாங்க
இந்த திட்டம் அந்த ஆளுக்கு தெரிஞ்சிடுது
இதுக்குப்பின் நடந்த சுவராஸ்யமான சம்பவங்கள் தான் திரைக்கதை’
‘ நான் சொன்னது முதல் 30 நிமிடக்கதை தான் மொத்தம் ரெண்டே முக்கால் மணி நேரம் பட்ம் ஓடுது
இளவர்சி மோகினியா வி என் ஜானகி எம் ஜிஆர் அவருக்கு ஜோடியா எம்ஜியார் இளவர்சனாக நம்பியார் நல்லவனா நடிச்சிருப்பாரு
‘
‘ஒரு அதிர்ச்சியான செய்தி இதில் எம் ஜி ஆர் நாயகனா இருந்தாலும் நம்பியாரை விட காட்சிகள் குறைவு
வாள் சண்டைகாட்சிகள் அப்பவே நல்லாருந்தது போல . படத்தில் மொத்தம் எட்டு பாட்டு எதுவும் சூப்பர் ஹிட் எல்லாம் இல்லை
ரசித்த வசனங்கள்
1 கட்டழகியைக்கொண்டு போய் காண்டாமிருகத்திடம் தருவீரோ?
2 காதல் ஒரு புளியங்கா . கடமை ஒரு கத்திரிக்கா
3 நம்மிடம் இருக்கும் அந்த அயோக்கியனை இழுத்து வா
எந்த அயோக்கியனை? நம்ம கிட்டே ஏகப்பட்ட அயோக்கியனுங்க இருக்கானுங்க
4 குருநாதா எல்லாம் உங்க தயவு ( நம்பியார் பஞ்ச் டயலாக் ப்டம் பூரா வருது
5 பீம்சிங்
உத்தரவு மன்னா ( இந்த ஒரே டயலாக் வெவ்வேறு தொனியில் படம் பூரா வருது . காமெடி டிராக் )
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 பறக்கும் குதிரை யை நிர்மாணிக்கும் ஆள் தான் வில்லனா காட்றாங்க ஆனா அவர் எந்தத்தப்புமே பண்ணலை. அவர் கண்டு பிடிச்ச மந்திரக்குதிரையைக்காட்டி வேணும்னா வாங்கிக்குங்க, இளவரசியைக்கட்டிக்குடுங்கனு டீச்ண்ட்டாதான் நடந்துக்கறாரு. ஹீரோ ஹீரோயின் தான் சதித்திட்டம் போடறாங்க . எந்திரன் டூ பாய்ண்ட் ஓ ல இதே பிரச்சனை வில்லன் மேல தப்பே இல்லை செல் ஃபோன் கதிர்வீச்சை எதிர்க்கறாரு உலக நன்மைக்காக ., அந்த ஆளைக்கொல்ல நினைக்கும் வீழ்த்த நினைக்கும் ஹீரோ வை எப்ப்டி ஆடியன்ஸ் ஆதரிக்க முடியும் ?
2 சாதாரண படை வீரரான ஹீரோ கொள்ளைக்கூட்டத்தலைவன் ஆவது நம்ப முடியலை பொதுவாவே ஒரு அர்சியல் கட்சி தலைவர் அல்லது கொள்ளைக்கூட்டத்தலைவன் தன் வாரிசைத்தான் அடுத்த தலைவனா கொண்டு வருவாங்க . யாருன்னே தெரியாத ஆளை தலைவன் ஆக்க சம்மதிப்பது எப்படி ?
3 தன் கண்டுபிடிப்பான மாயக்குதிரையை தன் இருப்பிடத்தில் வெச்சுக்கிட்டுன் மன்னரை அங்கே வரவழைத்துக்காட்டுவதுதான் புத்திசாலித்தனம். மன்னர் அப்படி வரக்கூடிய ஆள் தான் , மாறாக சிங்கத்தின் குகைக்குள் போய் யாராவது வாண்ட்டடா மாட்டிக்குவாங்களா?
4 எம் ஜி ஆர் ஜானகி லவ் போர்சன் ஓப்பனிங்கில் பிரமாதமா இருந்தது வசனம் செமயா ரசிக்கும்படி இருந்தது , ஆனா அதுக்கு இனையாகக்காட்டப்பட்ட நம்பியார் லவ் போர்சன் எடுபடலை
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சாண்டிலயன் கதை ரசிகர்கள் , எம் ஜி ஆர் ரசிகர்கள் பார்க்கலாம். போர் அட்க்காம போகுது . எம் ஜியார் படம் முழுக்க வருவார் என எதிர்பார்க்காமல் பார்க்கவும் யூ ட்யூப்ல கிடைக்குது ரேட்டிங் 2.25 /5