Showing posts with label மெட்ரோ மாலை ( 2019) - ( மலேசியன் ஃபிலிம்) - சினிமா விமர்சனம் (தகாத உறவு). Show all posts
Showing posts with label மெட்ரோ மாலை ( 2019) - ( மலேசியன் ஃபிலிம்) - சினிமா விமர்சனம் (தகாத உறவு). Show all posts

Tuesday, November 10, 2020

மெட்ரோ மாலை ( 2019) - ( மலேசியன் ஃபிலிம்) - சினிமா விமர்சனம் (தகாத உறவு)


படத்தோட  விமர்சனத்துக்குப்போகும்  முன்  96 , திருட்டுப்பயலே   மாதிரி  படங்கள்  எதனால  ஹிட் ஆச்சு? என்பதற்கான காரணங்களைப்பார்ப்போம், திரைக்கதை  , பாடல்கள்  என    முக்கிய  அம்சங்கள்  நல்லா இருந்தாலும்   நாயகி  தடம்  மாறுவாளா? தடம்  புரள்வாளா? அல்லது   மாட்டிக்குவாளா?  என்ற  எதிர்பார்ப்பு  ஒரு சஸ்பென்சோடயே  சொல்லப்பட்டது  ரொம்ப  முக்கியம்  என பரவலாக  பேசப்பட்டது . 96  படம்  ரிலீஸ்  டைமில்  ரைட்டர்  சரவண கார்த்திகேயன்  எழுதிய பல 96  சம்பந்த  பதிவுகள்  வித்தியாசமான  கோணங்களை  அலசியது. படத்தின்  இயக்குநரே  யோசிக்காத  பல அம்சங்களை  அவர்  குறியீடுகளாக  கண்டிருந்தார் . அவை  பின்  தனிப்பெருங்காதல்  என  ஒரு புத்தகமாகவே வந்தது  தனிக்கதை 


எக்ஸ்ட்ரா  மேரிட்டல்  லைஃப்ல  2  விதமான  கதைகள்  உண்டு . மேரேஜூக்கு முன்  காதல்  இருந்திருக்கும், அது  மீண்டும் இப்போ  வந்ததா?  குறுக்கிடுகிறதா? என்பது  மாதிரி    காட்டுவாங்க . அல்லது  மேரேஜ்ஜூக்குப்பின்  புதிதாக  வரும் கள்ளக்காதல்   சக்சஸ்  ஆச்சா? ஒர்க் அவுட்  ஆச்சா?  என்பது  மாதிரி   படங்கள்  வரும் . மாலை  மலர் , மாலை  முரசு  போன்ற   பத்திரிக்கைகளில்  ரெகுலராக  கள்ளக்காதல்  நியூஸ்  இடம்  பெறும்,  அவ்ற்றில்  பல   கட்டுக்கதைகளே. வாசகர்களின்  ஆர்வத்துக்குத்தீனி  போடும் வகையில்  அவங்களாவே   உருவாக்குபவை 


மலேசியாவில்  இருந்து  வந்திருக்கும்  இந்தப்படம்  2019ல்   ரிலீஸ்  ஆச்சு . மொத்தமே  2  கேரக்டர்கள்  தான்.  நாயகியின் கணவன்  கேரக்டர்  முகம்  சரியாக  காட்டப்படலை , இது  வைதேகி  காத்திருந்தாள்  ல  ஆர்   சுந்தர்ராஜன்  கையாண்ட  ஒரு உத்தி . ரேவதியின்  கணவர்  திருமணம்  ஆன சில  மணி நேரங்களிலேயே  ஆற்று வெள்ளத்தில்  இறக்கிறார்  என்பதால்  கணவர்  முகம்   கூட ரேவதியின்  மனதில்  பதியவில்லை  என்ற  கருத்து ஆடியன்சின்  மனதில்  பதிய  வேண்டும்  என்பதற்காக  அந்த  டெக்னிக்கை  கையாண்டார் . ஆக்சுவலா  கே  பாலச்சந்தர்  இந்த  உத்தியை  பிளாக்  அண்ட்  ஒயிட்  காலத்துலயே  கையாண்டார்  என்பது  வேறு விஷயம் 


அத்தியாயம் 2   நாயகி  அறிமுகப்படலம்


ஹீரோயின்  நல்ல  வசதியான  பொண்ணு  வாழ்க்கைப்பட்ட  இடமும்  குட். கணவர்  பெரிய  கம்பெனில  ஒர்க் பண்றார்.  எப்பவும்  பிசியாவே  இருப்பார் . அவரோட  கான்செட்ரேசன்  பூரா  பிஸ்னெஸ் , ஆஃபீஸ், கம்பெனி  என்றுதான்  இருக்கும் . அதனால மனைவியை  அதிகம்  கண்டுக்கறதில்லை . இந்த  இடத்துல  கண்டுக்கறதில்லை  என்பது  உடல்  தேவைகளைக்குறிக்கலை . சும்மா  ஜாலியா  அரட்டை  அடிப்பது .  கருத்துக்களை  ஷேர்  பண்ணிக்குவது  இதெல்லாம்  கிடையாது . நாயகி  அதைத்தான்  எதிர்பார்க்கிறார்


 நாம  எங்காவது  பிக்னிக் போலாமா  என  கேட்கும்போது  அவர்  அதுக்கெல்லாம் எனக்கு நேரமில்லைங்கறார். நான்  தனிமைல  இருந்தா  போர் அடிக்குதுன்னா  சரி  குழந்தை  பெத்துக்கோ  , அதைக்கவனிக்கவே  உனக்கு  டைம்  சரியா  இருக்கும்கறார்.  இதனால  நாயகி  மனம்  வருந்தறார்


அத்தியாயம் 1  நாயகன்  அறிமுகப்படலம்


 ஹீரோ  ஒரு லவ் ஃபெய்லியர்  பார்ட்டி . தாடி , தம், சரக்கு  என  எல்லாம்  உண்டு . ஆக்சுவலா  படத்துல  முதல்ல  காட்டறதே  இவரைத்தான். ஆனா  என்னடா  எடுத்ததுமே  அமங்கலமா  சோகம் , தாடினு  ஜனங்க  கடுப்பாகிடுவாங்க  என்பதால்   நான்  நாயகி  பார்ட்டை  மங்களகரமா  முதல்ல  சொல்லிட்டேன் 


தன்னைக்காதலித்த  பெண்  வசதி  வாய்ப்புக்காக  தன்னை  உதறிட்டு  வெல்  செட்டில்டு  லைஃப்க்கு  போய்ட்டானு  அவரால  ஜீரணிக்கவே முடியலை. எப்போபாரு   அவளையே  நினைச்சுட்டு  இருக்காரு . நண்பர்களோட  பேசும்போதும்  லவ் ஃபெய்லியர்  புலம்பல்கள் தான். ஒரு சோகப்பாட்டும்  உண்டு 



 அத்தியாயம்  3  - நாயகன்  நாயகி  பழக்கம்  ஆகும்  படலம் 


ஹீரோ  ஒரு பாடகர் .  நைட்  கிளப்களில்  ஆல்ட்டர்நேட்டிவ்  சிங்கரா  இருக்கார் . அதாவது  பிரபல  பாடகர்களை  புக் பண்ணி  அவங்க  வர  முடியாம  போகும்போது  இவர்  பாடுவார். இப்போ  ரஜினி  பற்றிய  அப்டேட்  நியூஸ்களை  தமிழருவி மணியன்  தர்றார்  இல்லையா?  கமல்  கட்சில  சினேகனோ, ஸ்ரீப்ரியாவோ  நியூஸ்  தர்றாங்களே  அது  போல  இவர்  அவங்க  வராதப்ப  பாடுவார் 


 ஹீரோயின்  ஒரு டைம்  இவரது  பாட்டைக்கேட்டு  தானே  வந்து  இண்ட்ரோ ஆகிக்கறார். இரண்டு பேரும்  உலக நடப்புகள்  அவங்கவங்க  விருப்பு  , வெறுப்பு பற்றி  பேசிக்கறாங்க . பின்  பிரியறாங்க 


 மீண்டும்  அடிக்கடி  இவங்க  சந்திப்பு  நடக்குது . ஒரு டைம்  அருவில  இருவரும்  ஒன்றாக  குளிக்கறாங்க , அப்போ  ஹீரோ  ஹீரோயின் கிட்டே நமக்குள்  எதுக்கு தீண்டாமை?  அப்டினு  டச்  பண்ன  முயற்சி  பண்றாரு . ஹீரோயின்  விலகிடறார்.   இனிமேல்  நாம  சந்திச்சுக்க வேண்டாம்  என்கிறார்.  


அதுக்குப்பின் நாயகன  பல  டைம் ட்ரை  பண்ணியும் நாயகி  ஃபோன்  அட்டெண்ட்  பண்ணவே  இல்லை . அவரும்  விலகிடறார்


 அத்தியாயம் 4    வசந்த  அழைப்புகள் 


இந்த  சம்பவங்கள்  எல்லாம்  முடிஞ்சு  ஒரு 6  மாசம்  ஆச்சு . கிட்டத்தட்ட  ஹீரோ  ஹீரோயினை  மறந்துடும் நேரம் , திடீர்னு  கால்  வருது . நாம  இங்கே  இப்போ  மீட்  பண்ணலாம்னு  கூப்பிடுது. இவரும்  போறாரு . கம்யூனிஸ்ட்  அல்லது  திருமா   திமுக  கிட்டே  இருந்து  கூட்டணிப்பேச்சு  வார்த்தைனு  கூப்ட்டா விழுந்தடிச்ட்டு  ஓடுவாங்களே  அப்டி  இவரும்  போறார் , அடுத்த  நாள்  காலை  நாயகி  ஃபாரீன்  போகனும் , பர்மணெண்ட்டாவே  அங்கே  செட்டில்  ஆகப்போறாங்க , போகும்  முன்  கடைசியா ஒரு டைம்  சந்திக்கலாம்னு வந்தேன்கறாங்க . இப்போ  ஹீரோ  ஹீரோயின்  இருவருக்கும்   என்ன  ஆச்சு?  தப்பு  நடந்ததா? இல்லையா? என்பதுதான்  க்ளைமாக்ஸ்


 சபாஷ்  டைரக்டர்



1   கேரக்டர்கள்  அதிகம்  இல்லாததால்  ஹீரோ ஹீரோயின்  , ஹீரோயினின்  தோழி , கணவர் , ஹீரோவின்  நண்பர்கள்  என  மொத்த,மே  7 பேர்  தான்.  சம்பளப்பிரச்சனை  இல்லை . அதுக்குத்தகுந்த  மாதிரி  கதை 


2    படம்  ஒரு மெலோ டிராமா  மாதிரி  ஸ்லோவாதான்  போகுதுன்னாலும்  போர் அடிக்கலை 


3   கதையின்  கரு  அப்டி இப்டி இருந்தாலும்  காட்சிகளில்  கண்ணியம் 


 நச்  வசனங்கள் 


1    எனக்குன்னு  ஒரு பிரேக்கிங்  பாய்ண்ட்  இருக்கு , உன்னை  மாதிரி  எல்லாமே  என்  கணவன்  தான்னு  கொண்டாடிட்டு  இருக்க  முடியாது , ஒரு கட்டத்துல எல்லாத்தையும்  தூக்கிப்போட்டுட்டு  போய்க்கிட்டே இருப்பேன்


2   நாம  யாரோட  மெமரீஸை  மறக்க விரும்பறமோ  அவங்க  பேரை  ஒரு சீட்ல எழுதி  அந்த  துண்டு  சீட்டை  கடல்ல விட்டு எறிஞ்சுடனும், அல்லது  தீயில்  எரிச்சிடனும், இது  சைக்காலஜி படிச்சவங்க  சொன்னது , மறக்க வாய்ப்பு இருக்காம் 


3    ஏன்  இப்படி  விட்டேத்தியா  இருக்கே? சாமியார்  ஆகப்போறியா?


  இப்போ எல்லாம்  சராசரி  மனுசங்களை  விட  சாமியாருங்களுக்குதான்  ஆசை அதிகம் 


4   உண்மையான  காதலர்களுக்கு  கிடைக்கும்  வலியும், வேதனையும் தான்  அவங்களுக்கான பரிசு போல 


5  என்னங்க , போர்  அடிக்குது , என் கிட்டே  எதுனா  பேசிட்டு இருங்களேன்


 கம்பெனில  ஏகப்பட்ட  வேலை  இருக்கு . வேணும்னா  ஒண்ணு  செய் , ஒரு குழந்தை  பெத்துக்கோ 


 போர் அடிக்குதுங்கறதுக்காக  என்னால  குழந்தை  எல்லாம்  பெத்துக்க  முடியாது 


 சி.பி  ஃபைனல்  கமெண்ட் -    பர  பரப்பான , விறுவிறுப்பான  ஆக்சன்  த்ரில்லர்  படங்களைப்பார்த்தவர்களுக்கு  இது  மாதிரி  படம்  பிடிக்காது , ஸ்லோவாகப்போகும்  மெலோ டிராமா . ஒன்றரை  மணி  நேரப்படம்  தான். யூ  ட்யூப் ல கிடைக்குது   ரேட்டிங்  2.25  / 5