தொழில் அதிபர்ங்க எல்லாம் நடிகையை கரெக்ட் பண்றது அவுட் ஆஃப் ஃபேஷன் ஆகிடுச்சு. அதனால நம்ம வெட்டாஃபீஸ் ஹீரோ ஒரு தொழில் அதிபர் பொண்ணை லவ்வறாரு. எதிர்ப்பு. சர்ச்சில் காதலிக்கு வேற ஒரு ஆள் கூட மேரேஜ் நடக்க இருக்கு .
நாயகனோட காதலியோட அப்பாவுக்கு தொழில் ரீதியா போட்டியா இருக்கற ஆள் நாயகனைக்கூப்பிட்டு நீ உன் காதலியைக்கடத்திட்டா உனக்கு 30 லட்சம் பணம் தர்றேன்கறான். கரும்பு தின்னக்கூலி! நயன் தாரா கூட சுத்துனா ஜாலி.அதனால ஹீரோ தன் நண்பர்கள் 3 பேரு கூட சேர்ந்து அந்த பிராஜெக்டை பண்றார்.
இதை இப்டியே சொல்லிட்டா அது சாதாக்கதை. ஆனா இயக்கம் சிம்[புதேவன். ஹீரோ இந்த பிராஜெக்டை காலை ல 8.59 க்கு செய்ய ஆரம்பிச்சா என்னாகும்?9 க்கு செய்ய ஆரம்பிச்சா என்னாகும்?,9.01 க்கு செய்ய ஆரம்பிச்சா என்னாகும்? -னு 3 வெவ்வேற கோணத்துல சொல்றாங்க.
1998 -ல் ரிலீஸ் ஆகி சர்வ தேச அளவில் 28 விருதுகளை வாரிக்குவித்த ரன் லோலா ரன் எனும் ஹாலிவுட் படத்தின் பாதிப்பில் எடுக்கப்பட்ட படம் இது .2001 -ல் 12பி -னு ஒரு படம் இதே பாணில சிம்ரன்,ஜோதிகா,ஷாம் காம்போ வில் வந்தது
ஹீரோவா அருள் நிதி. இவருக்கு எளிமையா இருப்பது எப்படி?என்பது நல்லாவே வருது .அந்த ஒரே ஒரு பிளஸ் தான் . வேற நடிப்பு , பாவனை எதுவும் வர மாட்டேங்குது.நல்ல உயரமான ஆளா இருப்பதால் ஆக்சன் காட்சிகள் , சேசிங்க் காட்சிகளீல் சமாளிக்கறார். காமெடி , காதல் காட்சிகளில் பம்மறார் .
ஹீரோயின் அர்ஷிதா ஷெட்டி.கெட்டியான பாலில் ( தண்ணி கலக்காத பால்) செய்யப்பட்ட பால்கோவாவில் ரசகுல்லாவின் ஜீராவை ஊற்றியது போல இனிப்பான,மினுமினுக்கும் முகம்.ஆனா அவர் உதடு தான் ரொம்ப மெல்லிசா இருக்கு ( நாட்டுக்கு ரொம்ப முக்கியம் )
செகண்ட் ஹீரோயினா கஞ்சா கண்ணழகி , மாஞ்சா உதட்டழகி பிந்து மாதவி. இவருக்கு ”பெருசா ” வேலை எதுவும் இல்லை . பாப் கட் ஹேர் ஸ்டைல் ல ஹீரோ கூட ஸ்லோ மோஷன் ல ஓடுவதே அதிக வேலை . நல்லா ஓடி இருக்கார் .
வ குவாட்டர் கட்டிங்க் ல காமெடி செஞ்சவர் இதுலயும் பட்டாசு கிளப்பும் சிச்சுவேசன் காமெடி செஞ்சிருக்கார்.குட்
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1. ஓப்பனிங்க்கில் வரும் டீக்கடை காமெடி கலக்கல் ரகம்.போலீசைப்பார்த்ததும் அதிர்ச்சியில் விக்கல் எடுக்கும் காமெடியன் போலீஸ் தண்ணியைக்குடி என டம்ளரை கன் -னால் தள்ளும்போது பம்முவது பிரமாதம்
2 ஜூலை மாத நிலவே பாடலில் கவிதை நயம் எழுத்து வடிவிலும் , ஒளிப்பதிவின் காட்சி வடிவிலும் போட்டி போட்டுக்கொண்டு மனதை வருடி வசீகரிக்கிறது
3 ஒவ்வொரு காட்சியிலும் மேக்சிமம் எவ்வளவு காமெடி சிச்சுவேசனைப்புகுத்த முடியுமோ அந்தளவு நகைச்சுவைத்தோரணத்தைக்கட்டி இருப்பது
4 மூன்று வெவ்வேறு சம்பவங்கள் , ஆனால் ஒரே சிச்சுவேஷன் .இதுக்கான திரைக்கதை அமைக்கும் பணி மிகக்கடினம், பிரமிப்பு ஏற்படுத்தும் உழைப்பு
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. இசை அமைப்பாளர் பப்பிலஹரியிடம் என்ன பிரச்ச்னை? ஹிப்பி லஹரி வில்லன் கேரக்டர்?
2 தன் எதிரியைப்பழி வாங்க எதிரியின் மகளைத்தானே கடத்தி ரேப் பண்ணாமல் காதலனை கடத்தி வரச்சொல்லி சேர்த்து வைப்பது என்ன மாதிரி பழி வாங்கல்? நல்லா யோசிச்சுப்பார்த்தா உதவி தான் பண்றார்.
3 ஓப்பனிங்கில் எடுத்ததுமே டாப் கீரில் கடத்தல் காட்சியை ஆரம்பிக்காமல் நாயகன் -நாயகி காதல் காட்சிகள் காட்டப்பட்டால் தான் ரசிகனுக்கு கடத்தல் காட்சியில் ஆர்வம் ஏற்படும்.
4 முதல் 2 கதைகளிலேயே லேசாக சலிப்புத்தட்ட ஆரம்பிக்குது. 3 வது கோணத்தில் சொல்லும்போது சாதா ரசிகன் புலம்ப ஆரம்பிச்சுடறான். படத்தை முடிங்கப்பா சீக்கிரம்-னு புலம்பல் வேற
5 படத்துக்கு ப்ரமோ சரியாத்தர்லை. தியேட்டர்ல கூட்டமே இல்லை. போஸ்டர் டிசைனும் சுமார் தான் ., படம் இருக்கும் குவாலிட்டியில் 25 % கூட விளம்பரம், போஸ்டர் டிசைன் இல்லை . இது படத்துக்குப்பெரிய பின்னடைவு
மனம் கவர்ந்த வசனங்கள்
1. நமக்கு சொந்தமான தை யாருக்கும் விட்டுத்தரக்கூடாது .தூக்கிடனும் .#1F3M
2 தண்ணிக்குள்ளே வாத்து காலால நீந்திட்டிருக்கறது வெளில இருந்து பார்த்தா தெரியாது.அது மாதிரி நம்ம பயம் முகத்துல தெரியக்கூடாது #1 F 3M
3 போலீசால ஓட முடியாது.சினிமா தவிர வேற எங்காவது போலீஸ் ரோட்ல ஓடி பார்த்திருக்கியா? # 1F3M
4 லேடி - பசங்க போன் பண்ணா உடனே போனை எடுக்கக்கூடாது.விட்டுப்பிடிக்கனும்.அப்போதான் அவனுங்க நம்ம சொல்படி ஆடுவாங்க#1F3M
5 பொறுப்பை ஏத்துக்காம நல்லவனா இருந்தா என்ன பிரயோஜனம் ? # 1F3M
6 உயிருக்கு பயந்தவனை கடவுளாலகூட பிடிக்க முடியாது # 1+3
7 வானத்துல புல் இருந்தா மான் கூடப்பறக்கும். ம்க்கும்.full இருந்தா மனுசன் கூடப்பறப்பான் #1+3
8 லவ் பண்ற நீயெ என் கிட்டே படிப்பு ,தகுதி எல்லாம் பார்க்கறே.உன் அப்பா என்னென்ன எல்லாம் எதிர்பார்க்கறாரோ? #1+3
====
9 உங்கப்பா கல் நெஞ்சக்காரராமே?
ஆமா.குடும்பத்தை விட சமுதாயத்துக்காக அதிகம் பாடுபட்டவர்.#1+3
10 கோபக்கார ஏழை தான் திருடன் # சிம்புதேவன் ராக்கிங்
11 ஒரு விநாடிக்கு 4 குழஃந்தைங்க பிறக்குது பாப்புலேசன்
12 விதி என்பது தீர்மானிக்கப்பட்டது எனில் எல்லா நேரத்திலும் அது ஒரே மாதிரி தானே இருக்கனும்?
13 என்னப்பா? ஒரே பைக்ல 3 பேரு?
3 பேரும் 3 பைக்ல வந்தாத்தான் ஆச்சரியப்படனும்
14 காதல் என்பது குழந்தை மாதிரி ஒருவரை ஒருவர் பார்த்துக்குவது
15 சின்ன முள் எங்கே இருக்கு ?
9 ல
பெரிய முள் ?
6 ல
அப்போ டைம் 9.06 ?
நோ 9.30
அது எப்படி?
16 கொள்கைக்காக வாழ்பவன் இல்லை , கோபத்துக்காக வாழ்பவன் நான்
17 உன் ஆளைத்தூக்கிடுவியா?
ரொம்ப ஈசிங்க. 46 கிலோ தான். பல டைம் தூக்கி இருக்கேன்
படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S
1. இளைய தளபதியின் அடுத்த பட இயக்குநர் சிம்பு தேவன் ன் ஒரு கன்னியும் 3 களவாணிகளும் நம்ம அடுத்த டார்கெட் @ ஈரோடு சண்டிகா #,1F 3 M
2 பிந்து மாதவி ஸ்லோமோசன் ல ஓடி வரும்போது கேமராவை கூந்தலுக்கு க்ளோஸப் ஷாட் வைக்கறாங்க .டீசன்ட்டான போட்டோகிராபர் போல # 1F 3M
3 RUN LOLA RUN ,12B பட திரைக்கதை பாணியில் மாறுபட்ட காமெடி த்ரில்லர் மூவி #,ஒரு கன்னியும் 3 களவானிகளும்.இடைவேளை
4 இளைய தளபதி -ன் அடுத்த் பட கால்ஷீட்டை சிம்பு தேவன் க்கு தரும் முடிவை மறு பரிசீலனை செய்தால் நல்லது # ஒ க 3 க ளவானியும் ஊ ஊ
சி பி கமெண்ட் -ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் -ஒரே கதையை 3 விதமாகச்சொல்லும் காமெடி த்ரில்லர் - ஏ சென்ட்டர்ல மட்டும் ஓடும்.விகடன் =42 .ரேட்டிங் =2.75/ 5
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =42
குமுதம் ரேட்டிங்க் = ok
ரேட்டிங் = 2.75 / 5
ஈரோடு சண்டிகாவில் படம் பார்த்தேன்
அ
டிஸ்கி 1 -மான் கராத்தே சினிமா விமர்சனம் -http://www.adrasaka.com/2014/ 04/blog-post_4.html
டிஸ்கி - ஒரு கன்னியும் 3 களவாணிகளும் - வீடியோ விமர்சனம் பை சி பி எஸ் -
ஈரோடு சண்டிகாவில் படம் பார்த்தேன்
அ
டிஸ்கி 1 -மான் கராத்தே சினிமா விமர்சனம் -http://www.adrasaka.com/2014/
டிஸ்கி - ஒரு கன்னியும் 3 களவாணிகளும் - வீடியோ விமர்சனம் பை சி பி எஸ் -