அறிமுக இயக்குனர் ஆன ராமதேவ் இயக்கி நாயகன் ஆக அறிமுக ம் ஆகி இருக்கும் படம் இது . குடி கூடாது , கள்ளக்காதல் கூடாது என்ற சோசியல் மெசேஜ் சொல்ல ஆசைப்பட்டிருக்கிறார் .இந்த இரண்டாலும் பர்சனலாக ரொம்பவே பாதிக்கப்பட்ட ஒருவரால் தான் இப்படித்திரைக்கதை அமைக்க முடியும் . க்ரைம் அல்லது சஸ்பென்ஸ் த்ரில்லர் ஆக இருந்தாலும் குடும்பப்பாங்கான படமாக அமைத்த விதம் குட் .பெரிதும் கவனிக்கப்படாத இப்படம் அண்டர் ரேட்டட் மூவியாக எனக்குத் தோன்றுகிறது . வன்முறை இல்லாத , டமால் டுமீல் இல்லாத , ஹீரோயிசம் இல்லாத படம் பார்க்கஆசைப்படுப வர்கள் பார்க்கலாம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி ஒரு கடையில் சேல்ஸ் கேர்ள் ஆகப்பணிபுரிகிறார் . நாயகன் உடன் பெற்றோர் நிச்சயித்த திருமணம் நடக்கிறது . இருவருக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது . நாயகனுக்கு சில கடன் பிரச்சனை காரணம் ஆக வெளியூரில் தங்கி வேலை பார்க்க நேரிடுகிறது . அப்போது குடிப்பழக்கம் வந்து விடுகிறது .சம்பாதிக்கும் பணத்தில் பாதியை குடிக்க செலவிடுகிறார்
நாயகி இப்போது ஒரு போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிகிறார் .இவர் தான் கதையின் வில்லன் . இவரது மனைவி தான் வில்லி . வில்லி க்கு தன கணவன் மேல் ஒரு சந்தேகம் . பணிப்பெண்ணுடன் அவருக்குத்தொடர்பு இருக்குமோ? என சந்தேகிக்கிறார்
இந்த விஷயத்தை தன பள்ளித்தோழன் உடன் பகிர்கிறார் . வீட்டிலேயே ஒரு ஹிடன் கேமரா செட் பண்ணி கணவனை உளவு பார்க்கிறார் . ஆனால் அவர் சந்தேகப்பட்டபடி கணவருக்கும் , பணிப்பெண்ணுக்கும் இடையே எதுவும் இல்லை
ஆனால் இப்போது இங்கு புதுப்பிரச்சனை முளைக்கிறது . பள்ளித்தோழன் இதுதான் சமயம் என வில்லி குளிப்பதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு வில்லியை மிரட்டுகிறான்
இந்த விஷயம் வில்லனுக்குத்தெரிந்து விடுகிறது . தன மனைவி இப்படி ஆகி விட்டாளே என்ற ஆதங்கத்தில் தன சோகத்தை தன பணிப்பெண்ணிடம் பகிர்கிறார் .இதற்குப்பின் தான் வில்லனுக்கும் நாயகிக்கும் தொடர்பு உண்டாகிறது
இப்பொது வில்லன் கொலை செய்யப்பட்டுக்கிடக்கிறான் . இந்தக்கொலையை செய்தது யார்?
1 வில்லனின் மனைவி ஆன வில்லியா?
2 வில்லனின் கள்ளக்காதலி ஆன நாயகியின் கணவனா?
3 வில்லியின் பள்ளித்தோழனா?
4 வில்லனே திட்டம் போட்டு தான் கொலை ஆனது போல செட்டப் செய்தாரா?
என்பதுதான் மீதி திரைக்கதை
இந்தகேசை டீல் செய்யும் போலீஸ் ஆபிஸராக கே பாக்ய ராஜ் கச்சிதமான நடிப்பு ஆனால் நான் சிகப்பு மனிதன் அளவுக்கு கலகலப்பு இல்லை .
வில்லி ஆக சோனியா அகர்வால் .அழகாக இருக்கிறார் . ஆனால் அவருக்குக்காட்சிகள் குறைவு
நாயகி ஆக பிரணா மொத்தப் படத்தையும் தாங்கி நிற்கும் கேரக் டர் . பிரமாதமாக செய்திருக்கிறார் . நாயகனாக இயக்குனர் ராம்தேவ் பரவாயில்லை ரக நடிப்பு
ஒளிப்பதிவு , இசை ,ஆர்ட் டைரக்ஸன் போன்ற டெக்கினிக்கல் அம்சங்கள் பரவாயில்லை ரகம்
பல காட்சிகள் சொல்வதெல்லாம் உண்மை டி வி நிகழ்ச்சி போல் இருப்பதும் , ஓவர் டிராமாட்டிக்காக இருப்பதும் மைனஸ்
சபாஷ் டைரக்டர்
1 கே பாக்யராஜ் , சோனியாஅகர்வால் ஆகிய இருவரை மட்டும் தெரிந்த முகங்களாக புக் பண்ணிவிட்டு மற்ற அனைவரையும் புதுமுகங்களாக உலவ விட்டது தைரியம் தான்
2 நான் லீனியர் கட்டில் திரைக்கதை அமைத்த பாணியும் ஓகே ரகம்
ரசித்த வசனங்கள்
1 உலகத்தில் எத்தனை சந்தோஷங்கள் இருந்தாலும் குடிகாரனுக்குக்குடி தான் முக்கியம்
2 யோவ் , அன்பு , பேர்ல அன்பை வெச்சுக்கிட்டு ஒயிப் கிட்டே அதைக்காட்டலைன்னா எப்படி ?
3 சாராயம் விக்கறவன் எல்லாம் வி ஐ பி , அதைக்குடிக்கிறவன் எல்லாம் அக்யுஸ்ட்
4 போதைல இருக்கறவன் போய் பேசமாட்டான்
5 உலகிலேயே அழகான விஷயம் புருஷன் கிட்டே பொண்டாட்டி வெட்கப்படுவதுதான்
6 பொண்டாட்டி காட்டாற்று வெள்ளம் மாதிரி , புருஷன் என்னும் அணையில் அடங்கி இருந்தாதான் யூஸ் ஆகும் இல்லைன்னா கடலில் கலந்து வேஸ்ட் ஆகும்
7 இப்படி எல்லாம் நடக்கும்னு நான் கனவுலயும் நினைக்கலை
நான் நினைப்பது நடக்கணும்
8 நமக்குப்பிடிச்ச மாதிரியே எல்லாம் நடக்கும்னு நினைச்சா கடவுளே எதிரி ஆவான்
9 பொண்ணுங்க எவ்ளோ உயரத்துக்குப்போனாலும் கற்பு தான் அவங்க கவுரவம்
10 உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு மனுசனுக்கும் ஒரு போதை , அது தலைக்கு ஏறிட்டா அவனைத்திருத்தவே முடியாது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 படத்தில் ஏகப்பட்ட கள்ளக்காதல்கள் .ஓவர் டோஸ் . நாயகிக்கும் , வில்லனுக்கும் கள்ளக்காதல், இரு வேறு இளைஞர்கள் அவரவர் அம்மா வுக்கு தலா ஒரு கள்ளக்காதல் .வில்லிக்கும் பள்ளித்தூழனுக்கும் கள்ளக்காதல் அமைக்க முயற்சி
2 ஒரு சாதா ஆள் ஒரு போலீஸ் ஆபிசரின் மனைவியை மிரட்ட துணிய மாட்டான் .லாடம் கட்டிடுவாங்கனு தெரியாதா?
3 திருமணம் ஆன வில்லி க்கு செமன் ஸ்மெல் தெரியாமல் இருக்குமா? டெஸ்ட் பண்ண லேபில் தருவது எதனால் ?
4 கள்ளக்காதலனுடன் வீடியோ சேட்டிங் செய்யும் நாயகி ஜன்னல் கதவைத்திறந்து வைத்துக்கொண்டா செய்வார்?
5 வில்லி தன பள்ளித்தோழனுடன் பேசிய கால் ஹிஸ்ட்ரியை அழிக்காமல் தூங்கப்போவது எப்படி ? புருஷன் போலீஸ் . ஜாக்கிரதையா இருக்க மாட்டாரா?
6 நாயகியின் வீட்டுக்கு அடிக்கடி வரும் இளைஞர் நாயகியின் கணவரை போட்டோவில் கூட பார்த்தது இல்லையா?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 18+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஸ்லோவாக மூ வ் ஆகுது . யூ டியூபில் கிடைக்குது . பார்க்கலாம், ரேட்டிங் 2.25 / 5