Showing posts with label மூக்குத்தி அம்மன் – சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label மூக்குத்தி அம்மன் – சினிமா விமர்சனம். Show all posts

Monday, November 16, 2020

மூக்குத்தி அம்மன் – சினிமா விமர்சனம்


சிம்பு தேவன்  இயக்கிய  அறை எண்  305 ல்  கடவுள்  தான்  எனக்கு தெரிஞ்சு  தமிழ்  சினிமாவின்  முதல்  ஃபேண்ட்டசி  வடிவில்  வந்த  கடவுள்  வரம் ஃபார்முலா  கதை , அதுக்கு  முன்  மை டியர்  குட்டிச்சாத்தான் , அலாவுதீனும் அற்புத விளக்கும்  படங்கள்  ஃபேண்டசி  வகைகளை  சார்ந்திருந்தாலும்  அதுல்   கடவுள் . அல்லது  கடவுள்  வரம்  இல்லை . பிறகு  ஹிந்தில  வந்த  பி கே   எனும்  படம்  இதே  ஜர்னர்ல வந்து   தீவிரமாக  சாமியார்களை  பந்தாடிய  படம்.    மை கடவுளே  கூட  ரொமாண்டிக்  ஃபிலிமாக  இருந்தாலும்  அதிலும் கடவுள்  வரம்  உண்டு. இந்த  பட்டியலில்  சிம்புகேவன்   மட்டும்  தோல்வியைத்தழுவினார். மற்றவை  ஹிட்.

 

 இப்போ  ஆர் ஜே  பாலாஜி  இயக்கி  நடித்த  இந்தப்படம் கிட்டத்தட்ட  விஜய்  சேதுபதி நடித்த  சீதக்காதி  படம்  மாதிரி  தான். அதாவது  போஸ்டரிலும், ப்ரமோவிலும்  ஹீரோவாகக்காட்டப்பட்ட  விஜய் சேதுபதி  மொத்த 2 ½  மணி  நேரப்படத்தில்  30  நிமிடங்கள்  தான்  வருவார் .அதே  மாதிரி  டைட்டிலிலும்,  போஸ்டரிலும்  மெயின் ரோலாகக்காட்டப்பட்ட 2  கோடி ரூபா  நாயகி  நயன்  தாரா  படம்  போட்டு 36  நிமிடங்கள்  கழித்து  வந்தாலும்  மொத்தப்படத்திலும்  இருப்பது  போல்  பிரமையைக்கிளப்பினாலும்  அவரது  போர்சன்  மொத்தமே  30 நிமி டங்கள்  தான்

 

ஒரு  மிடில்  கிளாஸ்  இளைஞனின்  புலம்பல்  வேண்டுதலால்  பிரசன்னமான  குல தெய்வ  அம்மன்  அவன் வேண்டும்  வரம்  கொடுத்து   பதிலுக்கு  தனக்குத்தேவையானதை  செய்யச்சொல்லி  கேட்கிறது. அதன்  மூலம்  மக்களிடையே  இருக்கும்  பக்தி  பற்றிய  புரிதலை  ஏற்படுத்தி  நித்யானந்தா , சத்குரு, பிரேமானந்தா, பதஞ்சலி  பாபாராம்தேவ்  மாதிரி  போலி சாமியார்களின்  முகத்திரையை  கிழிப்பதுதான்  படம்

 

ஹீரோவா  ஆர் ஜே  பாலாஜி   நல்லா  பண்ணி  இருக்கார்.இயல்பாவே  காமெடி  சென்ஸ் உள்ளவர்  என்பது  பிளஸ்

 

ஹீரோவின் அம்மாவா  ஊர்வசி  அதகளம்  பண்ணி  இருக்கார் . தாய்மார்களின்  அமோக  ஆதரவு  இவருகுத்தான்.தமிழ்  சினிமாவில்  மனோரமாவுக்கு  அடுத்தபடியாக  காமெடி , குணச்சித்திரம்  உட்பட  எல்லாவித  ரோல்களிலும்  பிரமாதமாக   சைன்  பண்ணக்கூடியவர் . இவரது  படங்களில்  என்னைக்கவர்ந்தவை  முந்தானை  முடிச்சு ,  மகளிர்  மட்டும் .  இதுலயும்  சும்மா பிரிச்சு  மேஞ்சுட்டார்

 

டைட்டில் ரோல்  நாயகி , 2  கோடி ரூபா  சம்பளம் வாங்கும்  ஒரே தமிழ்  நாயகி , சிவன்  சொத்து ல கை வெச்சா  குல  நாசம் தான்  எனும்  வாட்சப்  ஜோக்  பரவக்காரணமானவர்   , ஹைட்  வெயிட்  எல்லாம்  கனகச்சிதமான  நாயகி  நயன் தாரா  இதில்  அம்மனாக  , சாமியாக  வர்றார். ஐயா  படத்தில்   செமயாக  இருந்தவர் , பில்லா  படத்தில்  அசால்ட்டாக  கார்  மேல்  ஏறி  நடப்பவர் , அறம்  படத்தில்  கலெக்டராக  பட்டாசைக்கிளப்பியவர்  இதில்   அம்மன்  ரோலிலும்  கெத்து  காட்டி இருக்கார்

 

 வழக்கமா  அம்மனாக  நடித்த  கே ஆர்  விஜயா, நளினி   இவர்களிடம்  தெய்வீகக்களை  இருக்கும், ஆனால் இவரிடம் ஒரு கெத்து , தெனாவெட்டு , எல்லாம் கலந்த  தெய்வீகக்களை  இருக்கு இனி  ராமநாராயணன்  டைப்  டைரக்டர்கள்  சாமி  படமாக  எடுத்து  தள்ளாமல்  இருக்கனும்

 

 சபாஷ்   டைரக்டர்

 


1    ஊர்வசி  மாதிரி  ஒரு   பிரமாதமான  நடிகையை  அருமையாக   டீல்  பண்ணிய விதம்  மற்றும்  அவருக்கான  கேரக்டர்  ஸ்கெட்ச்  குட்

 

2   ப்ரீ  வெட்டிங்  ஷூட்  என்ற  பெயரில்  இப்போ  பலரும்  பண்ணும் கோமாளித்தனங்களை  நக்கல்  அடித்த  விதம்  டாப். மாப்ளைக்கு  டெமோ  காட்றேன்னு   ஃபோட்டோகிராஃபர்  பெண்ணை  க்ளோசப்பில்   வெச்ச  கண்  வாங்காமல்  பார்ப்பதும்  அதைத்தொடர்ந்து  நடத்தும்  காமெடிகளும்  கலக்கல்

 

3     பாட் சா  பாரு  பாட்ஷா  பாரு  பட்டாளத்து  நடையைப்பாரு  பாட்டு  ரீமிக்சில்   ஊர்வசியை  யூஸ்  பண்ணியது  கலக்கல். தியேட்டரா  இருந்தா  கைதட்டல்  அள்ளி இருக்கும்

 

4   ஹீரோ  தன்  தங்கையிடம்  என்ன  வரம் வேண்டும் ? என கேட்க  சண்டே  கூட லீவ் இல்லாம  வீட்ல  வேலை  செய்யறேன், இந்த  சமையல்  ஒர்க் ல இருந்து  ஒரு நாள்  லீவ்  வேணும்  என கேட்பது   பெண்களை  டச்  செய்யும்  வசனம்

 

 நச்  வசனங்கள்

 

1        நாம  பண்ற  சின்ன  சின்ன தப்பை  எல்லாம்  கண்டு  கோபப்படும்  கடவுள்  ஏன்  பெரிய பெரிய  தப்பு  பண்றவங்களை  கண்டுக்கறதே  இல்லை?

2        வீட்ல  இருக்கற  மகாலட்சுமியை வெளில  அனுப்பும்  முன் உள்ளே  ஒரு லட்சுமியை  கொண்டு வரனும், அதாவது  உன் தங்கைகளை  கட்டிக்குடுக்கும் முன்  நீ ஒரு பொண்ணைக்கட்டிக்கனும்

 

3   இவருக்குப்பேச வராதா?  அப்றம்   எதுக்கு  பாட்டுப்பாடி  சித்தர்னு பேரு?

 

4  பக்தில  யாரும்  சாமி   கும்பிடறதில்லை , பயத்துல தான்.   யாரும்  தப்பு பண்றோமேனு பயந்து    கும்பிடறதில்லை . பண்ற  தப்பு  வேற  யாருக்கும்  தெரிஞ்சு  நாம  மாட்டிக்கக்கூடாதுனு  போறாங்க

5    கடவுள்  இல்லைனு சொல்றவன் கூட ஓக்கே , ஆனா  ஒரு கடவுளை  உசத்தி   இன்னொரு  கடவுளை  திட்றான்  பாரு  அவன்  டேஞ்சர்

 

6  பக்தியால  ஃபேமஸ்  ஆகற  கோயில்  மாதிரி  பிரசாதத்தால  ஃபேமஸ்  ஆகற  கோயில்களும் உண்டு

 

7   தமிழ்  நாட்டில் மட்டும் தான் இன்னும்  மதத்தை  வெச்சு  ஓட்டு வாங்க  முடியலை

 

8  நீ  எந்தக்கடவுளை  காப்பாத்தப்போறே? உன்னை உருவாக்குன  கடவுளையா? நீ  உருவாக்குன  கடவுளையா?

 

9  யாராவது  ஒருத்தர்  கேள்வி கேட்டா, நீங்க  செஞ்ச  தவறுகளை  சுட்டிக்காட்டினா  நீ எந்த  மதம்?  -னு கேட்டு  டைவர்ட்  பண்றே?

 

10  சாமியார் ஏன்  அதை  விக்கனும்? இதை  விக்கனும்? ஏன் விக்கனும்?

 

 


லாஜிக்   மிஸ்டேக்ஸ், திரைக்கதையில்  சில  நெருடல்கள்

 

1  பெண்  பார்க்கும்  படலத்துலயே  ஹீரோ  தன் அப்பா  ஓடிப்போய்ட்டார்  என்பதை  என்னமோ  ஜனாதிபதி  அவார்டு வாங்குன  மாதிரி  பெருமையாக சொல்வது  சகிக்கலை . 12  இடங்களில்  பெண்  பார்க்கும்  படலத்தில்  இப்படி  உளறியும்  அவருக்கு  புத்தி  வர்லை  என்பது   நம்ப முடியல

 

2  மவுலி  மாதிரி  பிரமாதமான  நகைச்சுவை  நடிகரை  சரியா  யூஸ்  பண்ணீக்கலை , ஒரு வேளை   ஆர்  ஜே  பாலாஜி  தன்  முக்கியத்துவம்  குறைஞ்சிடும்னு நினைச்சாரோ? அப்டி நினைச்சிருந்தா  தவறான  முடிவு

 

3        ஆர் ஜே  பாலாஜி  எதுக்கெடுத்தாலும்  கத்தி  கத்திப்பேசுவது  சகிக்கலை .  சாதா  வாய்ஸ்லயே பேசலாமே?

4          என்னென்னெ  வரம்  வேண்டும்? என சாமி  கேட்கும்போது  பங்களா, வசதி  வாய்ப்புகள் ,  தாத்தாவின்  ஹோட்டல்  இப்படி கேட்கும் ஹீரோ  ஓடிப்போன அப்பா  எங்களுடன்  இருக்கனும்னு ஏன் கேட்கலை ? அவருக்கு  அப்பா   மேல   வெறுப்பு  ஏதும்  இல்லையே?

5        எதன்  மீதும்  பற்றில்லாத  மூக்குத்தி  அம்மன்  மஃப்டில  வரும்போது  கூட அவ்ளோ  நகைகளுடன் ஏன் வரனும்?

6        பின் பாதியில்  வரும்  சாமியாரை  ஹீரோ  மடக்கும்  காட்சியில்  அருவி  டி வி ஷோ , முதல்வன்  அர்ஜூன் – ரகுவரன்  இண்ட்டர்வ்யூ  சீன்கள்  நினைவு  வருது

7        பின் பாதியில் வரும்  பாடல் காட்சிகள்  ஸ்பீடு பிரேக்கர்

சி.பி. ஃபைனல்  கமெண்ட் =  பெண்களுக்கு   பிடிக்கும். முதல்  பாதி  வேகம்  பின் பாதியிலும்  இருந்திருந்தால்   ஆடி  வெள்ளி  மாதிரி  செம ஹிட் ஆகி இருக்கும். பிரமாதமான  வெற்றியைப்பெறாவிட்டாலும் மீடியம் ஹிட் ஃபிலிம் தான் இது . ஹாட் ஸ்டார்ல  கிடைக்குது . ஆனந்த  விகடன்  எதிர்பார்ப்பு  மார்க் - 41 , குமுதம் ரேட்டிங் ( யூகம் ) நன்று   அட்ரா சக்க  ரேட்டிங்  2.25 / 5