பாஸ்கர் சாரை முதன் முதலா எனக்கு ஹிந்தி ட்யூஷன் செண்ட்டர்ல தான் அறிமுகம், ஹிந்தி மொழியை கத்துக்கனும்னோ , வடக்கே வேலை பார்க்க தேசிய மொழி அவசியம்னோ அந்த மொழியை நான் கத்துக்க ட்ரை பண்ணலை , நமக்குத்தெரிஞ்ச மூணே மொழி தமிழ் மொழி ,மேத்ஸ் க்ரூப் தேன்மொழி , கனிமொழி . ஊர்ல கில்லி விளையாடறவன் , கோலி விளையாடறவன், வாழ்க்கைல நொந்தவன், பொண்டாட்டியைப்பிரிஞ்சு வந்தவன் எல்லாம் திடீர்னு ஹிந்தி பண்டிட் பரமேஸ்ஜி கிட்டே ஹிந்தி டியூஷன் போகும்போது மைல்டா டவுட் வந்து விசாரிச்சேன் . அவருக்கு ஒரு பொண்ணு இருக்காம் . கேரளத்துப்பெண் குட்டி அல்லே.
நாமளும் மாநிறம் , நம்ம ஊர்ல இருக்கும் ஃபிகர்களும்மாநிறம்.அதனால கலரா ஒரு ஃபிகர் குடி வந்தா காலரா வந்து படுத்துக்கிடப்பவன் கூட எந்திரிச்சு உக்காந்துக்குவானே.நாமும் ஃபிகரை பார்க்கும் சாக்கில் டியூஷன் போவோம்னு கிளம்பினேன் . அங்கே அறிமுகம் ஆனவர் தான் இந்த பாஸ்கர் .
இவர் அமரர் சுஜாதாவின் தீவிர ரசிகர். நான் அப்போதான் பாலகுமாரனிலிருந்து சுஜாதாவுக்கு மாறிட்டு இருந்த நேரம் .பாஸ்கர் வீட்டில் ஒருஅலமாரி நிறைய சுஜாதா புக்ஸா குவிஞ்சு கிடக்கும் . என் கிட்டே இருக்கும் பால குமாரன் நாவல் எல்லாம் அவருக்கு குடுத்துட்டு அவர் கிட்டே இருக்கும் சுஜாதா நாவல் எல்லாம் நான் வங்கிட்டுவந்து படிப்பேன்.
ஆரம்பத்தில் இலக்கியம் , நாட்டு நடப்பு , அரசியல் அக்கிரமங்கள் பத்தி பேசிட்டு இருந்தவர் கொஞ்சம் கொஞ்சமா பர்சனல் லைஃப் பத்தி பேச ஆரம்பிச்சார் .
எங்க ஊர்ல மணி டாக்டர் மணி டாக்டர்னு ஒருத்தர் இருந்தார் . ஆக்சுவலா அவர் ஒரு கம்பவுண்டர் தான் . ஏதோ ஒருடாக்டர் கிட்டே கம்பவுண்டரா இருந்து டைரக்டா அவரே பிரமொஷன் தனக்குத்தானே குடுத்துட்டு டாக்டர் ஆகிட்டார் . இதுல என்ன காமெடின்னா அவர் ஊர்ல ராசியான டாக்டர் ஆனது தான்.
அந்த டாக்டர்க்கு ஒரு பொண்ணு, பேரு கீதா. ரொம்ப அமைதியான டைப்பாம்.சாந்தின்னே பேர் வெச்சிருக்கலாம்.டெய்லி சாயங்காலம் ஆஃபீஸ்ல இருந்து அவர் வந்ததும் கிரி வீட்டுக்கு வந்துடுவார். கேரம் போர்டு , செஸ் போர்டுடன் ஒரு கூட்டம் தயாரா இருக்கும். 8 டூ 9 கேம் , 9 டூ 10 அரட்டை கச்சேரிநடக்கும் . போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரே ஒரு திண்ணை இருக்கும் , அங்கே உக்காந்து தான் அரட்டை.
ஈரோடு கோ ஆப்டெக்ஸ் ல ப்ரிண்ட்டிங்க் செக்ஷன் மேனேஜர்.சென்னிமலைல சென் டெக்ஸ்,சென்கோப்டெக்ஸ் , சென் குமார் டெக்ஸ், ஜீவாடெக்ஸ் , அண்ணா டெக்ஸ்னு ஏகப்பட்ட சொசயிட்டி இருக்கும். இங்கே இருக்கும் மக்களுக்கு வாழ்வாதாரம் நெசவுதான்.ஜக்காடு பெட்ஷீட் ,போர்வை உற்பத்திக்கு பேர் போன ஊர் . இந்தியா முழுக்க இருந்து வியாபாரிகள் சென்னிமலை பெட்ஷீட்டை ஈரோட்ல வந்து வாங்கிட்டுபோவாங்க . வாரா வாரம் திங்கள், செவ்வாய் குடோன் வியாபாரம் மட்டும் 5கோடிக்கு ஆகுமாம்.
பொங்கல் டைம் ல இலவச வேட்டி சேலைக்கு அரசு சார்பா சொசயிட்டில குவாலிட்டிகண்ட்ரோல் ல ஏகப்பட்ட ஊழல் நடக்குதுன்னு புலம்புவாரு. அதாவது ஒரு சொசயிட்டில தயாராகும் வேட்டியை, சேலையை பார்த்து ஓக்கே பண்ண 5 ரூபா கமிஷன் .இந்த சைடு பிஸ்னெசில் பல சொசயிட்டி மேனேஜர்கள் ஏகப்பட்ட பணம் சம்பாதிச்சதாகவும் அவரையும் லஞ்சம் வாங்கச்சொல்லி பிரஷர் குடுப்பதாகவும் புலம்புவார் .
இருக்கும் வரை நேர்மையாக இருக்க விரும்புவதாவும் , அப்படி இருக்க முடியலைனா வேலையை ரிசைன் பண்ணிட விரும்புவதாவும் அடிக்கடி சொல்வார் . தனியார் வேலைக்கே நாய் படாத பாடு படும் இந்தக்காலத்துல ஒரு செண்ட்ரல் கவர்மெண்ட் ஸ்டாஃப் இப்படி சொன்னதும் எனக்குஅவர் மேல மரியாதை கூடிப் போச்சு.
அவர் ஒருஆதர்ஷ புருஷனா என் கண்ணுக்கு தெரிய ஆரம்பிச்சார்.அவர் எது சொன்னாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும் என எண்ண வெச்சார்.
பொது வாழ்க்கைல ஒரு மேனேஜரா , நண்பர்கள் வட்டாரத்துல ஒருஜாலிமேனா உலா வந்தவர் பர்சனல் லைஃப்ல மட்டும் சராசரியாத்தான் இருந்தார் . இது என்னை கொஞ்சம் உறுத்துச்சு .
கீதா பாஸ்கரின் தெய்வீகக்காதலி என தெரிஞ்ச பிறகு அவர் கிட்டே கீதா பற்றிய சம்பவங்களை ஆர்வமா கேட்க ஆரம்பிச்சுட்டேன் . வழக்கம் போல காதலியின் அப்பா காதலுக்கு எதிர்ப்பு , காதலி அப்பாவுக்கு பயந்த டைப்பு , சாப்ட் டைப் ப்ளாப்ளா ..
பரஸ்பரம் நாங்க 2 பேரும் ஒருவரை ஒருவர் விரும்பினாலும் யாரும் வெளிப்படையா ஐ லவ் யூ சொல்லிக்கலை அப்டினுஅடிக்கடி சொல்வார். இந்த காதல் கதையோட க்ளைமாக்ஸ் சீக்கிரமா முடிவுக்கு வந்துச்சு. கீதாவுக்கு வேற பக்கம் மாப்ளை பார்த்து மேரேஜ் பண்ணி வெச்சுட்டாங்க
பாஸ்கர் சரக்கு அடிக்கும் பழக்கமோ, தம் அடிக்கும் பழக்கமோ இல்லாதவர். அதனால அவர் எப்படி சோகத்தை மறக்கப்போறார்னு நாங்க எல்லாம் கவலைப்பட்டுட்டேஇருந்தோம்.
6 மாசம் அமைதியா எந்த ஒரு சம்பவமும் இல்லாம போச்சு . ஹிந்தி டியூஷன் ல ஜோதின்னு ஒரு பொண்ணு படிக்க சேர்ந்தது . ஜோதிக்கு ஆரம்பத்துல இருந்தே பரமேஸ்ஜிக்கு போட்டியா ஒரு ஹிந்தி டியூஷன் செண்ட்டர் நடத்தனும்னு ஒரு ஆர்வம் , வெறி இருந்துச்சு . பிராத்மிக் , மத்யமா, ராஷ்ட்ரபாஷா , பிரவேஷிகா,அப்டினு மொத்தம் 8 எக்சாம் டக்டக்னு 6 மாசத்துக்கு ஒரு எக்சாம் எழுதி பாஸ் ஆகிடுச்சு . நாங்க எல்லாம் வருசம் ஒரு எக்சாம் தான் எழுதுனோம்
அதாவ்து 8 வருசம் நாங்க படிச்சதை ஜோதி 4 வருஷத்துல படிச்சு ஹிந்தி பண்டிட் ஆகிடுச்சு .ஊர்ல எல்லாரும் பிரமிச்சுட்டாங்க . 30 வருசமா அந்த ஊர்ல ஹிந்தி பண்டிட்னா பரமேஷ் ஜி தான் அப்டினு ஒரு பேர் இருந்தது. அதை நாலே வருசத்துல தூக்கி சாப்ட்டுட்டு ஹிந்தி டியூசன் தனியா நடத்துச்சு
பரமேஷ் ஜி க்கு ஒரு பொண்ணு இருக்குன்னு சொன்னேனே அந்த பொண்ணை சைட் அடிக்க வந்தவங்க , கரெக்ட் பண்ண ட்ரை பண்ணி தோத்தவங்க கொஞ்சம் பேர் ஜோதி கிட்டே ஹிந்தி படிக்க போனாங்க .
ஜோதி கிட்டே ஹிந்தி படிக்க போனவங்கள்ல வெங்கடேஷ்னு ஒருத்தன் எப்போ பாரு சிரிச்சு சிரிச்சு ஜோதி கிட்டே பேசிட்டுஇருப்பான் . எல்லாரும் ஜோதி - வெங்கடேஷ் கிசுகிசுவை ஊர் பூரா பரப்பிட்டு இருந்தாங்க.
ஊரை விட்டு ஓடிப்போகும் ஜோடி மாசம் ஒண்ணாவது எங்க ஊர்ல இருக்கும்.இந்த ஜோடி எப்போ போகப்போகுதோ அப்டினு பேசிட்டு இருக்கும்போது ஒரு எதிர்பாராத திருப்பம். ஜோதி சாமார்த்தியமா பாஸ்கர் சார்க்கு வலை வீசி அவரை லவ் மேரேஜ் பண்ணிக்குச்சு. இது எல்லாருக்கும் அதிர்ச்சி
ஏன்னா பாஸ்கர் ஆல்ரெடி கீதா காதல் நிறைவேறாத சோகத்துல இருந்தவர் . அவர் இன்னொரு காதலை 4 வருசத்துல ஏத்துக்குவார்னோ , மேரேஜ் பண்ணிக்குவார்னோ யாரும் நினைச்சுக்கூட பார்க்கலை .
பாஸ்கர் மேரேஜ்க்குப்பின் நண்பர்கள் வட்டாரத்துடன் கலந்து பழகுவதை குறைக்க ஆரம்பிச்சார். இது எல்லா வீட்லயும் நடப்பதுதான்.நட்பு என்பது மேரேஜாகும் முன் ஒரு மாதிரி, மேரேஜ்க்குப்பின் வேற மாதிரி தான் இருக்கும்
மேரேஜ் ஆகி 6 மாசம் கழிச்சு ஒரு நாள் பாஸ்கர் என்கிட்டே தனியா சில மேட்டர் பேசினார் . அவர் சொன்னசில விஷயங்கள் எனக்கு அதிர்ச்சியா இருந்தது
ஜோதி பொசசிவ் டைப். கீதா ஃபோட்டோவை வீட்ல எங்கயாவது பார்த்தாக்கூட ஜோதியால தாங்கிக்க முடியலை. அழுதுஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க. நெருக்கமான தருணங்களில் இப்போ யாரை நினைச்சுட்டு இருக்கீங்க ? என கேட்டு டார்ச்சர் பண்ணுவாங்களாம்.கிட்டத்தட்ட புரியாத புதிர் ரகுவரன் மாதிரி.
இதெல்லாத்துக்கும் சிகரம் வெச்சமாதிரி ஜோதி கிட்டே இன்னொரு கெட்ட பழக்கம் இருந்திருக்கு .ஜோதி 3 மாசம் முழுகாம இருந்திருக்காங்க. பாஸ்கர் ஜோதி எதுகேட்டாலும் வாங்கித்தரும் மனோநிலைல தான் இருக்கார் . அவர் அட்டாச்மெண்ட்டைபயன் படுத்தி ஜோதி பாஸ்கரை மிரட்ட ஆரம்பிச்சிருக்கார்
அவர் டியூட்டி ல இருக்கும்போது திடீர் திடீர் -னுபோன் பண்ணி உடனே கிளம்பி வா.வயிறு வலிக்குது. வர்லைன்னா தற்கொலை பண்ணிக்குவேன் அப்டினு மிரட்டுவது. இவர் அவசர அவசரமா லீவ் போட்டுட்டு வந்தா “ நீ என் மேல பாசம் வெச்சிருக்கியா?ன்னு டெஸ்ட் பண்ணினேன் “ என சொல்வது .
இந்த மாதிரி 3 டைம் ஜோதி பண்ணி இருக்கு . 7வது மாசம். ஜோதி அவங்கம்மா வீட்டுக்கு போறேன் -னு கேட்டிருக்கு . பாஸ்கர் “வேணாம், இங்கேயே இரு, எங்கம்மா பக்கத்து வீட்ல தான் இருக்காங்க , உங்க வீட்டுக்குப்போனா நான் உன்னைப்பார்க்க அடிக்கடி வரமுடியாது, உங்கம்மாவும் உன்னை நல்லா பார்த்துக்க முடியாது “ அப்படினு சொல்லி இருக்கார்
எந்தப்பொண்ணுக்கும் அவங்கவங்க அம்மா வீட்டுக்குப்போறது ஒரு ஏக்கமாவும் , வரமாகவும் இருக்கும் , என்னதான் அம்மா வீட்ல வறுமை , புருஷன் வீட்ல செல்வம் பொங்குதுன்னாலும் ,மாசமா இருக்கும்போது அம்மா வீட்டுக்கு ஏங்குவது இயல்பு.
ஜோதி இந்ததடவை பாஸ்கருக்கு ஃபோன் பண்ணி “ நான் 20தூக்க மாத்திரை சாப்பிட்டுட்டேன் , நீங்க உடனே வந்து என்னை எங்கம்மா வீட்டுக்கு கூட்டிட்டுப் போங்க அப்டினு சொல்லி இருக்கு . இவர் ஏதோகோபத்துல ஆஃபீஸ்லயே இருந்துட்டார் . எப்பவும் போல இதுவும் ஒரு மிரட்டல் வகையறா அப்டினு நினைச்சுட்டாராம்
ஆனா வயிறுவலி தாளாம ஜோதி அழுது புரண்டதை பார்த்து பக்கத்து வீட்டு ஆளுங்க ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணியது கேள்விப்பட்டு அடிச்சு பிடிச்சு ஊருக்கு வந்தார்.
ஆனா அவர் ஜோதியை உயிரோட பார்க்க முடியலை. கர்ப்பத்தில் உள்ள 7 மாசக்கரு, ஜோதி இரண்டு பேரும் அநியாயமா இரந்துட்டாங்க.
சுடுகாட்டில் பாஸ்கர் மண்ணில் விழுந்து அழுது புரண்டதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. மாசமா இருக்கும் பொண்ணு செத்துட்டா புதைக்கும் முன் கர்ப்பிணியின் வயிற்றை கத்தியால் ஒரு கீறு கிறிட்டுதான் புதைக்கனுமாம் , அது ஒரு ஐதீகம் ( குழந்தை இந்த உலக காற்றை சுவாசிக்கனுமாம் ) . அப்படி ஜோதி வயிற்றை கத்தியில் கீறக்கூட அவர் ஒத்துக்கலை. அவ்வளவு உயிரா இருந்தாரு .
பாஸ்கரின் வாழ்க்கைல 2 வது பெரிய சோகம் . ஆள் அடிச்சுப் போட்ட மாதிரி ஆகிட்டாரு. கண் கொண்டு பார்க்க முடியலை ,நமக்கு மிகவும் அந்நியோன்யமான பழக்கத்தில் இருப்பவங்க உற்சாகமா இருக்கறப்ப கூடவே இருந்த நாம் அவங்க பயங்கரசோகத்தில் இருக்கும்போது எப்படி அதை எதிர்கொள்வதுன்னே நமக்குத்தெரியாது.
ஒரு வருஷம் இப்படியே சோக மயமா போச்சு. பாஸ்கரின் முதல் காதலி கீதாவையோ , 2 வது காதலி ஜோதியையோ அவர் வீட்டில் ஏத்துக்கலை. அதனால ஜோதியின் மரணம் பாஸ்கர் வீட்டில் எந்த பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தலை .
ஈரோட்டுக்கு அருகே இருக்கும் பள்ளிபாளையம் கற ஊர்ல ஒரு ஏழைப்பொண்ணா சொந்தத்துல பார்த்து கல்யாணம் பண்ணிவெச்சுட்டாங்க. பாஸ்கரின் பிடிவாதத்துக்கு இடையே எப்படியோ அவரை சம்மதிக்க வெச்சு இந்த மேரேஜ் நடந்தது .
3 வருஷம் தாம்பத்ய வாழ்க்கைல பாஸ்கருக்கு 2 பொண்ணுங்க பிறந்தது. மேரேஜ்க்குப்பின் பாஸ்கர் வீட்டுக்கு அடிக்கடி போக முடியாவிட்டாலும் வாரம் ஒரு முறை சண்டே அன்னைக்கு போவேன் .
அப்போ நான் கவனிச்ச ஒரு விஷயம் பாஸ்கர் தன் ம்னைவியை மத்தவங்க முன்னால் அடிக்கடி மட்டம் தட்டற பழக்கம் வெச்சிருக்கார். அவர் மனைவிக்கு படிப்பு கம்மி, வசதியும் இல்லை. இதை 4 பேர் முன்னால அடிக்கடி சொல்லிக்காட்டி கிண்டல்செய்வது . ஹெரால்ட்ராபின்சன் , வைரமுத்து, அகதாகிறிஸ்டி பத்தி உனக்கு என்ன தெரியும்? னு கேட்டு டார்ச்சர் பண்ணுவது அப்டினு ஏதோ எனக்கு நெருடலாவே இருந்துச்சு
திடீர்னு பாஸ்கர்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுச்சு. அவர் ஒரு சுகர் பேஷண்ட் என்பதும் , அடிக்கடி பிரசர் மாத்திரையும் சாப்பிடுபவர் என்பதும் பின்னர் தான் தெரிய வந்தது . வி ஆர் எஸ் வாங்கிட்டு வீட்டுக்கு வந்துட்டார் .
எனக்கு ஒரு விஷயம் புரியலை. எதுக்காக வி ஆர் எஸ் வாங்கனும்? மெடிக்கல் லீவ் போட்டுட்டு 6 மாசம் கழிச்சு பின் மீண்டும் டியூட்டிக்கு போலாமே?
பாஸ்கர் அடிக்கடி கேரம் விளையாட கிரி வீட்டுக்கு வருவார்னுசொன்னேனே அவர் ஒரு நாள் ஃபோன் பண்ணி “ பாஸ்கர் இறந்துட்டார்”னு சொன்னார். எனக்கு செம ஷாக்.
திடீர்னு அவர் இறந்தது எனக்கு பெரும் அதிர்ச்சியா இருந்தது . நமக்கு நெருக்கமான நபர் இறந்தா நம்மை ஒரு வெறுமை சூழும் . அது என்னை அப்படியே ஆக்ரமிச்ட்டே இருந்துச்சு.
தகவல் கிடைச்சு பஸ் பிடிச்சு வர்றதுக்குள்ளே பாஸ்கரை எரிச்சுட்டாங்க. கடைசி கடைசியா அவர் முகத்தைக்கூட பார்க்க முடியாம போச்சு.
சுடுகாட்டிலிருந்து வெளியே வந்து கிரியிடம் அழாதகுறையாய் பேசிட்டு இருந்தேன் . அவர் சொன்ன சில தகவல்கள் எனக்கு புதிராய் இருந்துச்சு
பாஸ்கர்க்கு ஆஃபீசில் ஏதோ ஒரு பெண்ணுடன் கனெக்ஷனாம். அந்தப் பொண்ணோட அடிக்கடி திருப்பூர் , ஊத்துக்குளின்னு சுத்துவாராம் . ஆபீஸ் வேலையா 2 பேரும் கேமப் அடிக்கும்போது கனெக்ஷன் ஆகிடுச்சாம் .பெண்கள் விஷயத்தில் அவர் வீக் என்பதை என்னால் ஜீரணிக்கவே முடியலை. அதுவும் இன்னொரு தகவலைஅவர் சொன்னதும் எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடுச்சு .
பாஸ்கர்க்கு எய்ட்ஸ். அதனால் தான் அவர் உருக் குலைஞ்சு போய் இருந்தார் .கடைசி காலத்துல அவருக்கு மனைவியிடம் உரிய மரியாதை கிடைக்கலை . பணிவிடை செய்ய ரொம்ப சங்கடப்பட்டுட்டு செய்யுமாம் .
கிரி கண் முன்னாலயே பாஸ்கரை அவர் மனைவி அலட்சியமா நடத்துச்சாம். அவர் இறப்பே கூட சந்தேகத்துக்கு உரியதுதான் . அப்டினு ஒரு குண்டைத்தூக்கி போட்டார் .
அவர் கிட்டே நான் புலம்பினேன் . அவர் வாழ்க்கைல எதையும் அனுபவிக்கவே இல்லை , ஜோதி , கீதா என2 காதல் தோல்வி என்றேன்.
அப்போதான் கிரி இன்னொரு குண்டைத்தூக்கிப்போட்டார். ஜோதிக்கு வெங்கடேஷ் அப்டினுஒரு பையன் கூடகனெக்ஷனாம். அவங்க 2 பேரும் ஒண்ணா இருந்ததை ஒரு டைம் நேர்ல பாஸ்கர் பார்த்துட்டாராம் . திட்டம் போட்டு கொலை தான் பண்ணி இருக்கனும் . மாசமா இருக்கும் பொண்ணு தற்கொலை செஞ்சா ஏன் போஸ்ட் மார்ட்டம் பண்ணவே இல்லை ? அவசர அவசரமா பாடியை எடுக்க்னும்? வழக்கமா புதைக்கும் வழக்கம் உள்ளவங்க ஜோதியை ஏன் எரிக்கனும் ? என்றார்.
சரி , பாஸ்கரை எரிச்சாங்களா? புதைச்சாங்களா?
எரிச்சுட்டாங்க