சயின்ஸ் ஃபிக்சன் + டைம் டிராவல் கான்செப்டில் 2015ல் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இன்று நெற்று நாளை , வெங்கட் பிரபு இயக்கத்தில் 2021 ல் வெளியான மாநாடு படத்தில் வரும் டைம் லூப் கான்செப்ட் இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்தால் இக்கதைக்களம் ரெடி . சாதாரணமான கேங்க்ஸ்ட்ர் ரிவஞ்ச் த்ரில்லரை இப்படத்தை வேற லெவலுக்கு எடுத்துச்சென்ற அம்சம் எனில் அது ”நியூ” ஆக்டர் எஸ் ஜே சூர்யா தான்
ஓவர் ஆக்டிங்கை தமிழக மக்கள் எப்போதெல்லாம் ரசித்திருக்கிறார்கள் ? சிவாஜி கணேசனின் பல படங்கள் , எம் ஆர் ராதாவின் வில்லத்தனம் மிக்க கதாப்பாத்திரங்கள் , கேப்டன் பிரபாகரன் மன்சூர் அலிகான் , புரியாத புதிர் ரகுவரன் , கல்கி பிரகாஷ் ராஜ் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம், ஆனால் காட்சிக்கு காட்சி ரசிகர்களின் கை தட்டலில் அரங்கை அதிர வைக்கும் எஸ் ஜே சூர்யாவுக்கு டைட்டில் கார்டில் நடிப்பு அரக்கன் என மகுடம் சூட்டியதில் மிகை இல்லை
விஷால் நடிப்பில் வெளியான படங்களில் 100 கோடி ரூபாய் வசூலைத்தொட்ட முதல் படம் இது . திரையில் நாயகன் டம்மியாகத்தோன்ற வில்லன் கைதட்டல்களை அள்ளிக்கொண்ட முதல் படம் இது
இயக்குநர் ஆதிக் ரவிசந்திரனின் முதல் படம் சி செண்ட்டர் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப்பெற்ற த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா(2015) . இரண்டாவது படம் சிம்பு வின் அன்பானவன் , அசராதவன், அடங்காதவன் என்ற டப்பாபடம், 2023 ல் பிரபுதேவாவின் நடிப்பில் உருவான அட்டர் ஃபிளாப் படம் ஆன பஹீரா. தொடர்ந்து இரு தோல்விப்படங்கள் கொடுத்தாலும் மூன்றாவது பட்த்தில் முத்தான முத்திரையைப்பதித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்திருக்கும் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
1975ல் கதை நடக்கிறது
சம்பவம் 1 - விஞ்ஞானி ஒருவர் கால அலை ஃபேசியைக்கண்டுபிடிக்கிறார். அதன்படி அந்த அலைபேசி மூலம் கடந்த காலத்தில் இருப்பவர்களுடன் பேச முடியும். சில மரணங்களை , துக்க சம்பவங்களை தடுக்க முடியும்
சம்பவம் 2
நாயகன் ஆண்ட்டனி யும் வில்லன் ஜாக்கி பாண்டியனும் நண்பர்கள் , மற்றும் கேங்க்ஸ்டர்கள் . இருவருக்கும் பொது எதிரி இருக்கிறான், பெயர் ஏகாம்பரம். ஏகாம்பரத்தின் தம்பியை நாயகன் போட்டுத்தள்ளியதால் அவன் ஸ்கெட்ச் போட்டு நாயகனை கொலை செய்து விடுகிறான். நாயகனின் மகனை வில்லன் எடுத்து வளர்க்கிறான்
சம்பவம் 3 = கதை 1995க்கு வருகிற்து நாயகன் மார்க் ஒரு மெக்கானிக். தன் அப்பாவின் மேல் அவருக்கு வெறுப்பு , காரணம் தன் அம்மாவைக்கொன்றது தன் அப்பாதான் என நம்புகிறார். வில்லன் ஜாக்கி பாண்டியனின் மகனான மதன் உடன் நாயகனுக்கு நட்பு இருக்கிறது
சம்பவம் 4 - அந்த அலைபேசி மூலம் நாயகனுக்கு கடந்த காலத்தில் சிலருடன் பேசியதில் தன் அப்பா நல்லவர் என்ற உண்மை தெரிய வருகிறது . தன் அம்மா, அப்பா இருவரையும் கொன்றவர் வில்லனான ஜாக்கி பாண்டிய்ன் என்ற உண்மை உணர்ந்து கடந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவமான அப்பாவின் இறப்பை மாற்ற நினைக்கிறார். வில்லன்கள் ஆன ஜாக்கி பாண்டியன் , மதன் இருவரும் அதை எப்படி எதிர் கொண்டார்கள் என்பது மீதிக்கதை
படிப்பதற்கு கொஞ்சம் தலை சுற்ற வைக்கும் ஒன் லைன் ஆக இருந்தாலும் திரையில் மிகத்தெளிவாக சாமான்யனுக்கும் புரியும் வகையில் காட்சிகளை அமைத்த இயக்குநருக்கு ஒரு சபாஷ்
வில்லன் ஆக அப்பா , மகன் என இரு வேடங்களில் நடித்த எஸ் ஜே சூர்யா தான் மேன் ஆஃப் த மேட்ச் . கேப்டன் ஆஃப் த ஷிப் எல்லாமே . கலக்கி விட்டார் நடிப்பில் அவரது உடல் மொழி அபாரம். நாயகன் உடன் டான்ஸ் ஆடும் காட்சியில் மட்டும் தடுமாறுகிறார். மற்ற அனைத்துக்காட்சிகளிலும் நாயகனை அசால்ட் ஆக ஓவர் டேக் செய்திருக்கிறார்
நாயகன் ஆக விஷால் அப்பா , மகன் என இரு வேடங்களில் நடித்திருக்கிறார். அப்பா கேங்க்ஸ்ட்ர ரோலில் கட்டைக்குரலிலும், மகன் மெக்கானிக் ரோலில் பயந்த சுபாவம் உள்ள சாமான்யன் ஆகவும் கச்சிதமாக நடித்திருக்கிறார். ஆனால் எஸ் ஜே சூர்யாவுடனான காம்பினேஷன் ஷாட்களில் எல்லாம் அவர் நடிப்பு எடுபடவில்லை
கலைஞர் மேடையில் பேசிக்கொண்டு இருந்தபோது லேட்டாக மீட்டிங்க்கு எம் ஜிஆர் வந்தபோது ரசிகர்கள் , தொண்டர்கள் கூட்டம் ஆர்ப்பரிக்க தன் பேச்சு எடுபடாதது கண்டு மனம் வெதும்பி கலைஞர் மேடையில் போய் அமர்ந்து விட்டாராம், அந்த சம்பவம் தான் நினைவு வருகிறது
நாயகி ஆக ரிது வர்மா அதிக வேலை இல்லை என்றாலும் வந்த வரை ஓக்கே ரகம்
ஏகாமப்ரம் ஆக சுனில் நடிப்பு கச்சிதம் . விஞ்ஞானி ஆக இயக்குநர் செல்வராகவன் கெஸ்ட் ரோலில் வருகிறார்
சில்க் ஆக விஷ்ணு பிரியா காந்தி ஒரு காட்சியில் வந்தாலும் ரசிகர்கள் அப்ளாஸ் அள்ளுகிறார். வக்கீல் ஆக நிழல்கள் ரவி , காமெடிக்கு கிங்க்ஸ்லீ வருகிறார்
151 நிமிடங்கள் படம் ஓடும்படி ட்ரிம் செய்து இருக்கிறார் எடிட்டர் விஜய் வேலுக்குட்டி . சவாலான வேலை
ஜி வி பி யின் இசையில் பழைய ஹிட் பாடல்களை ரீ மிக்ஸ் செய்த விதம் அருமை ., பிஜிஎம் மில் தெறிக்கிறது
அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில் கவனிக்க வைக்கிறார்/ ஆர்ட் டைரக்சன் கச்சிதம்
சபாஷ் டைரக்டர் (ஆதிக் ரவிசந்திரனின்)
1 நீங்க இவ்ளோ பேசறீங்க , ஆனா உங்க ஃபிரண்ட் எதுவுமெ பேசாம இருக்காரெ? என சில்க் கேட்க அவன் பெண்களை மதிப்பவன் என விஷால் சொல்ல எஸ் ஜே சூர்யா கற்பனையில் அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி பாட்டுக்கு ஆடும் காட்சி அடிபொலியான கூஸ்பம்ப் காட்சி
2 சில்க் ஸ்மிதாவை ரீ க்ரியேட் பண்ணி அதே முகச்சாயலில் இருப்பவரை நடிக்க வைத்தது , அந்த சீன் ப்ளேஸ் செய்யப்பட்ட இடம் அருமை
ரசித்த வசனங்கள்
1 நீ என் ஆளை லவ் பண்றேன்னு முதல்லியே தெரிஞ்சிருந்தா கிஸ் பண்ணி இருக்க மாட்டேன் ...
என்னடா.. முதல்லியே தெரிஞ்சிருந்தா ...தெரிஞ்சிருந்தா
... நு சொல்லிச்சொல்லி இப்படி தெறிக்க விட்டிருக்கே?
2 அமராவதி பட ஹீரோ பேரு என்ன?
ம் ம் அஜித் குமார்
இப்போ நீ யோசிச்சு யோசிச்சு சொல்ற பேரை நாளை உலகம் யோசிக்காம சொல்லப்போகுது
3 அண்ணே, நம்மைப்போட்டுத்தள்ள 40 பேர் துப்பாக்கியோட வந்திருக்காங்க
நம்மகிட்டே எத்தனை பேருடா இருக்காங்க ?
ரெண்டு வெள்ளைக்கரிங்களும் நாலு கிட்டார் பாக்சும்
4 உயிரோட இருக்கனும்னு ஆசைப்படறவன் என்னை நேரில் வந்து பார்க்க மாட்டான், ஏன்னா என்னை நேரில் பார்த்தா அவன் உயிரோடயே இருக்க மாட்டான்
5 அவன் ஒளிவிளக்குன்னா நான் பச்சை விளக்கு
அவன் தெய்வத்தாய்னா நான் தெய்வ மகன்
அவன் தனிப்பிறவின்னா நான் தெய்வப்பிறவி
அவன் அரச கட்டளைன்னா நான் ஆண்டவன் கட்டளை
6 நான் தான் உன் அன்பே ஆருயிரே. என் கண்ணுக்குக்கீழே நீ எப்பவும் பார்த்ததில்லை
நான் என்னைக்கு உன் கண்ணைப்பார்த்தேன் ? எத்தனை தடவை உன் இடுப்பைப்பார்த்து குஷி ஆகி இருக்கேன் ?
7 எல்லாரும் பொணத்துக்கு முன்னாடி தான் ஆடுவாங்க, ஆனா ஆண்ட்டனி ஒருத்தன் முன்னால ஆடறான்னா அந்த ஒருத்தன் பொணம் ஆகப்போறான்னு அர்த்தம்
8 நான் உங்க விசுவாசி, என்னைக்கொல்லாதீங்க
என் ப்ல்லாவே இருந்தாலும் அது சொத்தையா இருந்தா பிடுங்கி தானே ஆகனும் ?
9 எதுக்காக அவனைக்கொன்னே?
லேடீஸ் மேட்டர்
என்னது லேடீஸ் மேட்டரா? கேங்க்ஸ்டர்னா ஒரு டிசிப்ளீன் வேணும், எத்தனை லேடீஸ் எனக்கு பிரப்போஸ் பண்ணி இருப்பாங்க
10 அவனுக்கு என்னடா தெரியும் சில்க்கோட அருமை , ? சான்சை விட்டுடாதடா எருமை
11 நான் விழவும் மாட்டேன் , விடவும் மாட்டேன்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 விபத்தில் காலை இழந்த மனைவியின் காலை சரி செய்ய கடந்த காலத்துக்குப்போய் தன்னிடமே பேசி சரி செய்து விபத்து நடக்காமல் தடுக்கும் செல்வராகவன் தனக்கு நேர்ந்த விபத்தை அதே ஐடியா படி தடுக்க முடியாதது ஏன்? யார் பேசறது என கேட்கும்போது பேர் சொல்லாமல் உன்னோட ஃபியூச்சர் தான்னு சொல்லி இருக்கலாமே? சயிண்ட்டிஸ்ட்க்குப்புரியாதா?
2 தன் அப்பாவைப்பற்றி தகவல் சேகரிக்க பல குறளீ வித்தைகள் எல்லாம் செய்யும் நாயகன் தன் அம்மாவுக்கு ஃபோன் செய்து அப்பாவைப்பற்றிகேட்டிருந்தால் அவரே விளக்கமாக எல்லாம் சொல்லி இருப்பாரே?
3 முன் பின் அறிமுகம் இல்லாத வக்கீலுக்கு ஃபோன் பண்ணி அவர் உயிரைக்காப்பாற்றும் நாயகன் கடந்த கால அம்மாவுக்கு ஃபோன் பண்ணி அவர் உயிரை ஏன் காப்பாற்றவில்லை ?
4 வில்லன் ஆன எஸ் ஜே சூர்யா நாயகன் ஆன விஷாலை தன்னுடன் ஒப்பீடு செய்யும்போது தன்னை சிவாஜி ஆகவும் , நாயகனை எம் ஜி ஆர் ஆகவும் உருவகப்படுத்தி சினிமா டைட்டில்களால் எம் ஜி ஆர் VS சிவாஜி என காட்டுகிறார். அதன்படி வில்லன் நடிப்பு சிவாஜி போல் ஓவர் ஆக்டிங்க் டைப்பில் வில்லன் கேரக்டர் டிசைனை வடிவமைத்த இயக்குநர் அதே போல் நாயகனை எம் ஜி ஆர் போல் இமிடேட் செய்ய வைத்திருக்க வேண்டாமா?
5 டபுள் டெக்கர் பஸ்சில் நாயகனும், வில்லனும் பயணிக்கும்போது துரத்தும் 3 ஜீப் நிறைய ஆட்கள் லூஸ்கள் மாதிரி சிரமப்ப்ட்டு பஸ் சை துரத்திட்டு இருக்கும் நேரம் பஸ் டிரைவரை அட்டாக் பண்ணி இருக்கலாமே? பஸ் ஒரு இடத்தில் நிற்கும், பெட்ரோல் செலவு இரு தரப்புக்கும் மிச்சம் ஆகும்
6 ஒய் ஜி மகேந்திரனின் கேரக்டர் டிசைன் , பெண் தன்மை நளினத்துடன் அவரது உடல் மொழி இதெல்லாம் சகிக்க வில்லை , கேவலமான கற்பனை . இதை எல்லாம் யார் ரசிக்கிறார்கள் ??
7 அப்பா எஸ் ஜே சூர்யா சிவாஜி பட டைட்டிலாக சொன்னவர் ஒரு கட்டத்தில் நினைத்ததை முடிப்பவன் என எம் ஜி ஆர் டைட்டிலை யூஸ் பண்ணுவது எதற்கு ? அதே அர்த்தம் வரும்படி சிவாஜி நெகட்டிவ் ரோலில் நடித்த அந்த நாள் அலல்து சிவந்த மண் டைட்டிலை யூஸ் செய்திருக்கலாமே?
8 சிவாஜி படத்தில் மொட்டை பாஸ் ஆக ரஜினி வரும்போது தியேட்டரில் விசில் பறக்கும், ஆனால் இதில் நாயகன் விஷால் க்ளைமாக்சில் மொட்டை கெட்டப்பில் வரும்போது ரசிகர்களுக்கு உற்சாகமாகவே இல்லை . வில்லன் எஸ் ஜே சூர்யா தான் ஜெயிக்க வேண்டும் என எண்ணுகிறார்கள் ., இது எஸ் ஜே சூர்யாவின் நடிப்புக்குக்கிடைத்த வெற்றி என்றாலும் திரைக்கதை அமைப்புக்குக்கிடைத்த தோல்வியே
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -யு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - தியேட்ட்ரில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்க வேண்டிய படம், டோண்ட் மிஸ் இட் , ரேட்டிங் 3 /. 5