பாலாஜி தரணிதரன் கதை எழுத அக்சய் சுந்தர் இயக்கி இருக்கும் படம் இது இது ஒரு மியூசிக்கல் லவ் ஸ்டோரி எனவும் சொல்லலாம் , அடலசண்ட் லவ் ஸ்டோரி எனவும் சொல்லலாம், இசை சம்பந்தப்பட்ட படத்துக்கு இளையராஜா இசை என்பது சாலப்பொருத்தம்
நாயகி ஒரு டீன் ஏஜ் மாணவி . இவரது பெற்றோருக்கு விவாகரத்து ஆகி விட்டதால் அப்பாவுடன் வசித்து வருகிறார். அம்மா அவரை ஏற்றுக்கொள்ளவில்லை , இதனால் சோகத்தில் இருக்கும் நாயகிக்கு ஒரே ஆறுதல் இசைதான் , அப்பா ஒரு கீ போர்டு பிளேயர் என்பதால் நாயகிக்கும் அதில் ஆர்வம் பிறக்கிறது
ஊரில் உள்ள சர்ச்சில் நாயகி இசை வகுப்புக்கு செல்கிறாள் , அங்கே இசை பயில வரும் வெளி மாநில மாணவனுடன் காதல் வசப்படுகிறாள் . இவர்களது காதல் வாழ்க்கை எப்படி கழிந்தது என்பதுதான் மீதிக்கதை
நாயகியாக சஞ்சுலா சாரதி தன் அகண்ட விழிகளால் பார்வையாளர்களைக்கவர்கிறார், மாநிற திராவிட அழகி. வாய்ப்புகள் சரியாக வந்தால் நல்ல எதிர்காலம் இருக்கிறது
நாயகனாக ஷூ கோ செயிங் நடித்துள்ளார் . கண்ணியமான நடிப்பு
இசை இளையராஜா
நெஞ்சில் ஒரு மின்னல் விளையாடும் செம மெலோடி . என்றும் எந்தன் நெஞ்சில் நீ தானே பாடலும் அருமை . படத்தின் பெரிய பலமே நாயகியின் நடிப்பும் இசையும் , பாடல்களும் தான்
நாயகியின் தோழிகள் பேசும் இரட்டை அர்த்த காமெடி வசனங்கள் அத்து மீறல்
சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட்- திரைக்கதையாக போதிய அடர்த்தி இல்லாதது மைன்ஸ் என்றாலும் நாயகியின் நடிப்பும் , இசையும் ஜீவன் சேர்க்கும் படம் ரேட்டிங் 2.5 / 5