Showing posts with label மாயன் காலண்டர். Show all posts
Showing posts with label மாயன் காலண்டர். Show all posts

Wednesday, December 19, 2012

மாயன் காலண்டர் டுபாக்கூர் - விஞ்ஞானிகள் விளக்கம்



மாயன் காலண்டர் அறிவியல் பூர்வமானது அல்ல: டிச.21-ந்தேதி ஆபத்து வருமா? - விஞ்ஞானி விளக்கம்
சேலம், டிச. 18-

மாயன் காலண்டர் 2012 டிசம்பர் 21-ந்தேதியுடன் முடிந்து விட்டதால் இனி உலகம் அவ்வளவு தானா? என்று பொதுமக்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை இதே பேச்சாக இருக்கிறது. இது தொடர்பாக விஞ்ஞானி கணபதி பொன்முடியை கேட்டபோது, அவர் கூறியதாவது:-

தென் அமெரிக்க பழங்குடியான மாயன்களின் நாட்காட்டியில் 21.12.2012 உடன் முடிந்து விடுகிறது என்று கூறி அதற்கு காரணம் மாயன்களின் உலகத்தின் அழிவு பற்றி தெரிந்து இருக்கிறது என்று விளக்கம் கூறப்படுகிறது.

மனிதன் விவசாயத்தில் ஈடுபட்ட பொழுதுதான் காலம் பருவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது. முழு நிலவு தேய்ந்து 30 நாளில் புது நிலவு தோன்றுவது அறியப்பட்டது. இது ஒரு மாதம் என்று காலக்கட்டமாக கணிக்கப்பட்டது. இதுபோன்று 12 முறை ஏற்பட்ட பொழுது ஒரு கால சுழற்சி இருப்பது தெரிய வந்தது. அதாவது கோடை காலம், குளிர்காலம் போன்று பருவங்கள் 12 மாத இடைவெளியில் தோன்றுவது அறியப்பட்டது. அதன் அடிப்படையில் 30x12=360 என்று கணக்கிட்டு ஒரு ஆண்டு என்று கணக்கிடப்பட்டது. இது ஒரு குத்து மதிப்பான காலக்கணிப்பு தான்.

இந்த முறையில் தான் கடந்த கால மனிதன் காலத்தை கணக்கிட்டான். மாயன்களின் நாள்காட்டி படி ஒரு ஆண்டுக்கு 360 நாட்கள். ஆனால் அறிவியல் வளர்ச்சியில் பூமியானது ஒரு முறை சூரியனை சுற்றி வருவதற்கு 365.24 நாட்கள் ஆகிறது என்பது தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையிலேயே நாம் தற்பொழுது பயன்படுத்தும் நாள்காட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே மாயன்களின் நாள்காட்டி அறிவியல் பூர்வமானது அல்ல.

முன்பு மனிதன் விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்தபோது காலத்தை கணிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. நாம் தற்போது கிரிகோரியன் காலண்டர் முறையை பின்பற்றி வருகிறோம். 13-ம் போப் கிரிதர் இந்த காலண்டரை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். சுனாமி, எரிமலை வெடித்தல், நிலநடுக்கம், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் இன்று நேற்றல்ல, பூமி தோன்றிய காலத்தில் இருந்தே நடந்து வருகிறது. நாம் இப்போது வாழ்வதால் இந்த காலகட்டத்தில் நடக்கும் இயற்கை சீற்றங்கள் குறித்து நமக்கு தெரிகிறது.

நிலநடுக்கம் மற்றும் இயற்கை குறிப்பிட்ட நாளில் அதாவது 21.12.2012ல் நடக்கும் என்பது உண்மையல்ல. உலகத்தின் ஒரு மூளையில் நாட்டில் இயற்கை சீற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பிட்ட நாளில் நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. பூமிக்கு அடியில் எரிமலை வெடிப்பதால் தான் நிலநடுக்கம் ஏற்படுகிறது. 21-ந்தேதி உலகம் அழியும் என்பது உண்மையல்ல. மாயன் காலண்டரை பொருட்படுத்த தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

 மக்கள் கருத்து




1. பிரபல ஜோதிடரான கே.பி.வித்தியாதரனைச் சந்தித்துக் கேட்டோம். சனி, ராகு இரண்டும் மக்களுக்குத் தொல்லையை உண்டாக்கக்கூடிய கிரகங்கள். இந்த இரண்டு கிரகங்களும் ஒன்று சேர்வது அபூர்வம். ஆனால் இப்போது சேர்ந்து இருக்கின்றன. இதனால் பேரழிவுகள் நிச்சயம் இருக்கும். விபத்துகள் அதிக எண்ணிக்கையில் நிகழும். மனசாட்​சிக்கு விரோதமான செயல்கள் நடக்கும். 


2. உலகம் அழியப் போகிறது என்பதை வெளிநாட்டு மக்கள் ஆணித்தரமாக நம்புகிறார்கள். அதனால்​தான் தாய்லாந்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், 'என்னிடம் கடன் வாங்கியவர்கள் யாரும் பணத்தைத் திருப்பித்தர வேண்டாம். இருக்கும் வரை எல்லோரும் சந்தோஷமாக இருக்க​லாம்’ என்று அறிவித்திருக்கிறார். 



3. கிறிஸ்து பிறப்பதற்கு 2,000 ஆண்டுகளுக்கு முன், மாயா என்றோர் இனம் தென்னமெரிக்காவில் இருந்ததாம். மாயா இனத்தைச் சேர்ந்த​வர்கள் வானவியல் சாஸ்திரங்களிலும், கட்டடக் கலையிலும், கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்தவர்களாக இருந்தனர் என்று ஆராய்ச்சி​யாளர்கள் சொல்கிறார்கள். அதற்கு ஒரே சாட்சிதான் மாயன் கலண்டர்.


4. கிறிஸ்து பிறப்பதற்கு 2,000 ஆண்டுகளுக்கு முன், மாயா என்றோர் இனம் தென்னமெரிக்காவில் இருந்ததாம். மாயா இனத்தைச் சேர்ந்த​வர்கள் வானவியல் சாஸ்திரங்களிலும், கட்டடக் கலையிலும், கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்தவர்களாக இருந்தனர் என்று ஆராய்ச்சி​யாளர்கள் சொல்கிறார்கள். அதற்கு ஒரே சாட்சிதான் மாயன் கலண்டர்.