35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரிலீஸ் ஆன இப்படம் முதல் நாள் வசூலில் ரூ 6 கோடியும் , முதல் வார உலகம் முழுக்க மொத்த வசூல் ஆக 50 கோடியும் கலெக்சன் செய்து சாதனை படைத்தது ஆனந்த விக்டன் 46 மார்க் கொடுத்தது. பல விமர்சனங்கள் பாசிட்டிவ் ஆகவே அமைந்தது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகனின் அப்பா பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். ஒரு கட்சியில் சாதாரண தொண்டனாக இருக்கிறார். நாயகன் சின்னப்பையனா இருக்கும்போது சக தோழர்களுடன் கோவில் குளத்தில் குதித்து நீச்சல் அடிக்கிறான். பல முறை தடுத்தும் கேளாததால் உயர் சாதியைச்சேர்ந்த சிலர் அந்த சிறுவர்களை கல்லால் தாக்குகின்றனர்.அந்த சம்பவத்தில் நான்கு பையன்கள் இறந்து விடுகிறார்கள் , நாயகன் பலத்த காயத்துடன் உயிர் தப்புகிறான். தன் அப்பாவால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற கோபத்தில் நாயகன் அதற்குப்பின் 15 வருடங்களாக அப்பாவிடம் பேசுவதே இல்லை
வில்லன் உயர் ஜாதியைச்சேர்ந்த ஜாதி வெறி பிடித்த ஆள் இப்போது நாயகனின் அப்பா ஒரு எம் எல் ஏ. இருந்தாலும் வில்லன் முன் உட்கார அனுமதி மறுக்கப்படுகிறது. இது தெரிந்ததும் நாயகன் பொங்குகிறான். வில்லன் முன் அப்பாவை உட்காரச்சொல்கிறான். இதனால் கடுப்பான வில்லன் நாயகனை ஒழிக்க நினைக்கிறான்
அப்போது ஆளூம் கட்சித்தலைவரும், முதல்வரும் ஆனவரிடம் இருந்து வில்லனுக்கு ஃபோன் வருகிறது. இப்போது தேர்தல் வர இருப்பதால் எந்தக்கலவரமும் செய்ய வேண்டாம் என்கிறார். இதனால் கடுப்பான வில்லன் ஆளும் கட்சியை விட்டு எதிர்க்கட்சியில் சேர்கிறான். நாயகனின் அப்பாவை தேர்தலில் தோற்கடிக்க சபதம் செய்கிறான். அந்த சபதத்தில் வெற்றி பெற்றானா? இல்லையா? என்பதுதான் மீதி கதை
கதையின் நாயகனாக உதயநிதி. அடக்கி வாசித்திருக்கிறார். சிறப்பான நடிப்பு . அவரது அப்பாவாக வரும் வடிவேலு டைட்டில் ரோலில் கலக்கி இருக்கிறார். காமெடிக்கு எப்படி ஒரு பிரமாதமான உடல் மொழி வைத்திருக்கிறாரோ அதெ போல் கேரக்டர் ரோலுக்கும் ஒரு உடல் மொழி உருவாக்கி இருக்கிறார் , சிறப்பு
வில்லனாக ஃபகத் ஃபாசில் ஆர்ப்பாட்டமான நடிப்பு. காலில் விழுந்து ,மன்னிப்புக்கேட்க வேண்டும் என அவரது ஜாதிக்காரர்கள் சொன்னதும் ஒரு நிமிசம் உள்ளே போய்ட்டு வர்றேன் எனக்கூறி பின் காலில் விழுவது கலக்கலான நடிப்பு
நாயகி என பேருக்கு கீர்த்தி சுரேஷ். முகத்தில் லட்சுமிக்ரமான பொட்டு இல்லை , அழகான புடவை இல்லை, ஆண்பிள்ளை போல பேண்ட் சர்ட் போட்டு அவர் உலா வருவது மயிலின் தோகையை கட் பண்ணி ஃபேஷன் ஷோவில் நடக்க விட்டது போல இருக்கிறது
முதல்வராக லால் கச்சிதம். அனுபவம் மிக்க நடிப்பு
இசை ஏ ஆர் ரஹ்மான். பொதுவாக இவர் படங்களில் பாடல்கள் செம ஹிட் ஆகும், பிஜிஎம் மீடிய்மாகத்தான் இருக்கும், ஆனால் இதில் உல்டா, பாடல்கள் சுமார் ரகம் தான், பிஜிஎம் ஓக்கே ரகம்
ஆர் கே செல்வாவின் எடிட்டிங்கில் 155 நிமிடங்கள் வருமாறு ட்ரிம் பண்ணி இருக்கிறார்கள் , பின் பாதியின் பின் பாதி இழுவை தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு உலகத்தரம்
சபாஷ் டைரக்டர் ( மாரி செல்வராஜ்)
1 நாயகி ஓப்பனிங் சாங்கில் நாயகிக்கு சிவப்பு தாவணி , சிவப்பு ஜாக்கெட் , நாயகனுக்கு கறுப்பு சட்டை என கலர் காம்போ கொடுத்து திமுகக்கலரை குறியீடாகக்காட்டி நம்ம கொடி பறக்கற காலம் வந்தாச்சு என பாடல் வரியைக்கொண்டு வந்தது
2 வடிவேலுவின் குணச்சித்திர நடிப்பு , நாயகன் உதயநிதியின் அண்டர் ப்ளே ஆக்டிங், ஃபகத் ஃபாசிலின் ஆர்ப்பாட்டமான வில்லத்தன்ம் மூன்றையும் பேலன்ஸ் செய்து காட்சிகளை வடிவமைத்த விதம் அருமை
3 இத்தனை வருட தமிழ் சினிமா வரலாற்றில் நாயகனை பன்றி வளர்ப்பாளராகக்காட்டிய முதல் படம் இது . நாயகனை ஒத்துக்கொள்ள வைத்ததற்கு ஒரு சபாஷ்
4 வில்லன் வீட்டில் அப்பாவை உட்காரச்சொல்லும் நாயகன் போடும் ஃபைட் சீன் மாஸ் சீன், செம இண்ட்டர்வெல் பிளாக் சீன்
சாங்க்ஸ்
1 நம்ம கொடி பறக்கற காலம் வந்தாச்சு ( நாயகி ஓப்பனிங் சாங்)
2 நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லிடும் ஆரிராரோ
3 உச்சந்தலை ஓட்டுக்குள்ளே
4 எனக்குள்ளே ஒரு ஓசை கேட்குதா புது பாஷை ?
5 ஏ ஏ வீரனே வேட்டையாடு வெற்றியால் தீரும்
ரசித்த வசனங்கள்
1 அண்ணே, நீங்க எம் எல் ஏ ஆகிட்டீங்க, இன்னும் உங்க பையன் பன்றி வளர்த்திட்டு இருக்காரே?
நீ வேணா 10 சிங்கம் வாங்கிக்கொடு, வளர்த்தட்டும், ஏய்யா , அவனுக்குப்பிடிச்சதை அவன் செய்யட்டும்
2 இங்கே யார் ஜெயிச்சாங்க என்பது முக்கியம் இல்லை, யார் பயந்தாங்க என்பதுதான் முக்கியம்
3 ஒருத்தன் திருப்பி அடிக்க முடியாத நிலைல இருக்கும்போதும் தொடர்ந்து அவனை அடிக்கறது அயோக்கியத்தனம், அதே மாதிரி ஒருத்தனை நம்மால திருப்பி அடிக்க முடியாதுனு நினைச்சுக்கிட்டு அவன் கிட்டே அடி வாங்கிக்கிட்டே இருப்பது கோழைத்தனம்
4 என்னைக்கும் , யார் கிட்டேயும் உக்காந்து பேசி பழகுங்க, நின்னு பேசி பழக வேண்டாம்
5 ஏழைப்பசங்க ஆத்திரப்படவும், கோபப்படவும் கூட ஒரு தகுதி வேண்டும்னு ஆகிடுச்சு
6 உன்னைப்பத்தி எதுவுமே தெரியாம எல்லாமே தெரிஞ்ச மாதிரி இத்தனை நாட்களா விலகி இருந்தேனே அதுக்கு சாரி
அப்போ நானும் சாரி.. உன்னைப்பத்தி எல்லாமே தெரிஞ்சிருந்தும் எதுவுமே தெரியாத மாதிரி இத்தனை நாட்களா விலகி இருந்தேனே அதுக்கு சாரி
7 யானை மேல சவாரி செய்ய திட்டம் போட்டா இந்த நாய் கழுதை மேல சவாரி செய்ய நினைக்குது
8 யுத்தம்னு வந்துட்டா பகை உணர்ச்சி இருக்கக்கூடாது
9 உனக்கு மேலே இருக்கறவன் கிட்டே தோற்றாலும் பரவாயில்லை , உன் கூடவே இருக்கறவங்க கிட்டே தோற்றாலும் பரவாயில்லை , ஆனா என்னைக்கும் உனக்குக்கீழே இருக்கறவங்க கிட்டே தோத்துடாத, அது நீ செத்ததுக்கு சமம்
10 ஒருத்தருடைய கோபம் எப்படி ஊர்க்காரங்க ஆயிரக்கணக்கானவங்களோட மானமா மாறும் ?
11 மதம் அடிக்குதா? ஜாதி அடிக்குதா? பணம் அடிக்குதா?nனு பார்த்தா மூணுமே சேர்ந்து அடிக்குது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 கோவில் குளத்தில் யாரும் குளிக்கக்கூடாது என்பது நீண்ட நாட்களாக இருக்கும் விதி. ஆனால் இயக்குநர் அதை சரி என்பதாக காட்டுவது எதற்கு?பகுத்தறிவுவாதிகள் கோவில் பக்கமே வருவதில்லை எனில் கோவில் குளத்துக்கு மட்டும் வரலாமா?
2 நாயகன் தன் அப்பாவிடம் 15 வருடங்களாகப்பேசாமல் இருப்பதற்கு சொல்லப்படும் காரணம் வலுவானதாக இல்லை
3 நாயகன் சின்னவயசில் இருந்தே பன்றிப்பண்ணை வைத்திருக்கிறார், ஓக்கே, ஆனால் நாயகி பன்றிக்குட்டியைக்கொஞ்சுவது எல்லாம் ஓவர்
4 வில்லனின் ஆட்கள் நாயகியின் ட்யூஷன் செண்ட்டரை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள், அறை முழுக்க பாடப்புத்தக காகிதங்கள் சிதறிக்கிடக்கின்றன., காலேஜ் வரை படித்த நாயகன் செருப்புக்காலோடு அந்த பாட புத்தக காகிதங்களை மிதிக்கிறாரே? பாடப்புத்தகம் சரஸ்வதிக்கு சமம் ஆச்சே?
5 நியாயப்படி தான் எல்லாம் நடக்கனும் என ரூல்ஸ் பேசும் நாயகன் பைக்கில் போகும்போது ஹெல்மெட் போடாமல் போவது ஏன் ?
6 அவ்வளவு பெரிய கல்வி நிறுவன்ம் நடத்தும் வில்லன் அங்கே ஒரு செக்யூரிட்டி , வாட்ச் மேன், நாய் எதுவுமே இல்லாமலா வைத்திருப்பார்?
7 இவ்வளவு பெரிய பிரச்சனை ந்டந்திருக்கு , கலவரம் வரப்போகுதுனு தெரிஞ்சும் ஒரு எம் எல் ஏ வீட்டில் செக்யூரிட்டி டைட் ப்ண்ண மாட்டாங்களா? ஒரு வாட்ச்மேன் கூட அங்கே காணோம்
8 வில்லனுக்கும் நாயகனுக்கும் பெரிய தகறாரு வரபோகுது என ஆர்வமாக அமர்ந்தால் வில்லன் வளர்க்கும் நாய்களை ஏவி நாயகன் வளர்க்கும் பன்றிகளைத்தாக்குவது மடத்தனமான கற்பனை, செண்ட்டிமெண்ட் சீன் வைக்க வேண்டியதுதான் அதுக்காக இப்படியா?
9 வில்லன் ஜாதி வெறி பிடித்தவர் வடிவேலு வை தன் எதிரே உட்கார அனுமதிக்காதவர், ஆனால் அவர் முதல் முறை எம் எல் ஏ ஆக மட்டும் எப்படி விட்டு வைத்தார்? அதே போல வடிவேலுவின் மகனும் அதே ஜாதி தானே? அவரை மட்டும் எப்படி உட்காரச்சொல்கிறார்?
10 பிரச்சனை எதுவும் செய்ய வேண்டாம் என வில்லனுக்கு ஃபோன் பண்ணும் சி எம் தன் கட்சி எம் எல் ஏ வான வடிவேலுவுக்கு ஃபோன் பண்ணாதது ஏன் ? \
11 முதல் பாதி திரைக்கதையில் டிஸ்டிங்க்ஷனில் பாஸ் ஆன இயக்குநர் பின் பாதியில் மாமூல் மசாலா கதைக்களத்துக்குப்போனது ஏனோ ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பிரமாதமான மேக்கிங் ஸ்டைலில் முதல் பாதி , மாமூல் மசாலாவாக பின் பாதி என கலந்து கட்டி இருக்கும் படம், பார்க்கலாம். ரேட்டிங் 2.75 / 5
Maamannan | |
---|---|
Directed by | Mari Selvaraj |
Written by | Mari Selvaraj |
Produced by | Udhayanidhi Stalin |
Starring | |
Cinematography | Theni Eswar |
Edited by | Selva R. K. |
Music by | A. R. Rahman |
Production company | |
Release date |
|
Running time | 155 minutes[1][2] |
Country | India |
Language | Tamil |
Budget | ₹35 crore[3] |
Box office | ₹73.3 crore[4] |