டைட்டில் அல்லது போஸ்டர் டிசைனைப்பார்த்ததும் பலரும் இது குழந்தைகளை மையப்படுத்தி எடுத்த சில்ட்ரன் ஸ்டோரி என ஸ்கிப் பண்ண வாய்ப்பு உண்டு , ஆனா முதல் பாதி பொயட்டிக் லவ் ஸ்டோரி பின் பாதிதான் மழலைகள் குறும்புக்கொண்டாட்டக் காமெடி என்பதால் அனைவரும் பார்க்கத்தக்க படமே . டைட்டிலில் கதை = விஜி ,திரைக்கதை வசனம் - விசு , இயக்கம் =நடிகை லட்சுமி என வந்தாலும் இது ஒரு அட்லீ டைப் பட்டி டிங்கரிங் படமே . ரிலீஸ் ஆன டைமில் செம ஹிட் ஆனது. குறைந்த முதலீடு அதிக லாபம்.
1968;ல ஹாலிவுட்ல ரிலீஸ் ஆன YOURS MINE AND OURS என்ற் ஹாலிவுட் படத்தை பட்டி டிங்கரிங் பண்ணி KHATTA MEETHA என ஹிந்தில 1978ல எடுத்தாங்க. அந்த 2 படங்களையும் பட்டி டிங்கரிங் பண்ணி இவங்களே எழுதுன சொந்தக்கதை மாதிரி எடுத்திருக்காங்க. எம் அசோக் ராஜா அரவக்குறிச்சிப்பட்டி , கே இந்து குமரப்பன், விழுப்புரம் மாதிரி ஈ ஐடிச்சான் காப்பி இல்லைன்னாலும் ஈரோடு மகேஷ் , மதுரை முத்து பண்ற மாதிரி இன்ஸ்பயர்டு ஆகி ரெடி பண்ணினதுதான்
ஸ்பாய்லர் அலெர்ட்
ஹீரோ ஒரு ரைட்டர். இவருக்கு ஆல்ரெடி மேரேஜ் ஆகி 5 குழந்தைங்க இருக்கு . ஆனா இப்போ சம்சாரம் இல்லை , இவர் ஒரு விதவன் அல்லது கைஆண் ( கைம்பெண் க்கு எதிர் பதம் )
ஹீரோயின் ஒரு கம்பெனில ரிசப்ஷனிஸ்ட் கம் டெலிஃபோன் ஆபரேட்டர் ஆக இருக்கார் இவருக்கு 6 குழந்தகள் இருக்கு . கணவர் இல்லை . இவரு ரைட்டரோட பரம விசிறி . ஆனா நேரில் அவரைப்பார்த்ததில்லை . அடிக்கடி கம்பெனி டைம்ல கம்பெனி லேண்ட் லைன் ஃபோன்ல இருந்து பத்திரிக்கை ஆஃபீஸ்க்கு ஃபோன் பண்ணி ரைட்டரைப்பற்றி விசாரிப்பாரு. அந்தப்பத்திரிக்கையோட எடிட்டர் ரைட்டர் பற்றிய விபரங்கள் தர்றதில்லை. தன் படைப்பு பற்றியும் மேதாவிலாசம் பற்றியும் தம்பட்டம் அடிச்ட்டு இருக்காரு
ஹீரோயினை ஒரு இன்சூரன்ஸ் ஏஜெண்ட் அடிக்கடி பாலிசி போடுங்கனு நச்சரிச்ட்டே இருக்காரு/ ஹீரோயினுக்கு அந்த ஆளைக்கண்டாலே பிடிக்கலை அவாய்டு பண்ணிட்டு இருக்கா . ஆனா அந்த இன்சூரன்ஸ் ஏஜெண்ட்க்கு ஹீரோயின் மேல ஒரு கண் சாரி ரெண்டு கண்
ஒரு சமயம் குறிப்பிட்ட இடத்தில் மீட் ப்ண்ணலாம்னு ரைட்டர் அப்பாய்ண்ட்மெண்ட் தர்றாரு. இருவரும் சந்திக்கும்போது ஹீரோயினுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கு
2 பேரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் லவ் பண்ணாலும் தங்களுக்கு குழந்தைகள் இருக்கு என்பதை மட்டும் ஓப்பனா சொல்ல தயக்கம்
இதுவரை ஆல் செண்ட்டர் ஆடியன்சுக்கும் பிடிச்ச ரொமாண்டிக் லவ் ஸ்டோர்யா போகுது . இடைவேளை
இதுக்குப்பின் இவங்க மேரேஜ் பண்ணிக்கிட்டாங்களா? இவங்க குழந்தைகள் 11 பேர் நிலை என்ன? அவங்க பண்ற காமெடி கலாட்டாக்கள் என்ன ? என்பதுதான் பின் பாதிக் கதை
இந்த பின் பாதி திரைக்கதை லேடீஸ்க்கு பிடிக்கும், எல்லா ஆண்களுக்கும் பிடிக்கும்னு சொல்லிட முடியாது
ஹீரோவா க்ன்னட நடிகர் விஷ்ணுவர்தன் ( ரஜினி நடித்த விடுதலை படத்தில் கூட நடிச்சாரே? நாட்டுக்குள்ள நம்மைப்பாற்றிக்கேட்டுப்பாருங்க அம்மம்மா இவர்தான் சூபர் ஸ்டாருங்க ) கண்ணாடி போட்டு மிடில் கிளாஸ் இளைஞனா வர்றார். குட் ஆக்டிங்
ஹிரோயினா மல்கோவா கன்ன அழகி சுமித்ரா . வெட்கப்படும்போதும் பதட்டப்படும்போதும் இவர் ந்டிப்பு கிளாசிக்
குழந்தைகள் 11 பேரைப்பற்றியும் சொல்லிட்டு இருந்தா விடிஞ்சிடும். ஆனா அவங்க பண்ற குறும்புகள் எல்லாம் ரசிக்க வைப்பவை . பேபி இந்திரா குறிப்பிடத்தக்க நடிப்பு
இசை எம் எஸ் விஸ்வநாதன் . பாடல்கள் 3 செம ஹிட்
கவுரி மனோகரியைக்கண்டேன் ஒரு ஆடவன் வடிவத்திலே பட்டி தொட்டி எல்லாம் ஹிட் ஆன பாட்டு
போற இடம் எங்கேப்பா? போனப்ப்றம் சொல்றேன்பா ரேடியோவில் அடிக்கடி ஒலித்த பாட்டு
சபாஷ் டைரக்டர்
1 ஒரிஜினல் கதைல ஹீரோக்கு 11 குழந்தைகள் ஹீரோய்னுக்கு 10 குழந்தைக்ள் இதுல தமிழுக்குத்தக்கபடி 50% ரிடக்சன் செய்து அமைத்த விதம்
2 தமிழ் சினிமா இலக்கணப்படி ஹீரோ எத்தனை பொண்ணுங்க கூட கூத்தடிச்சாலும் பிரச்சனை இல்லை ஹீரோயின் கன்னிப்பெண் என காட்டனும் அதுக்காக ஹீரோய்னுக்கு ஒரு ஃபிளாஸ்பேக் போட்டு அந்தக்குழந்தைகள் எல்லாம் ஹீரோயினோட அக்காவுது ரெண்டு பேரும் ட்வின்ஸ், அக்கா ஒரு விபத்தில் இறந்துட்டாங்க அக்கா கணவரும் விபத்த்ல் அவுட் என பல்டி அடிச்சது
3 ரைட்டரைகண்டுபிடிக்க ஹீரோயின் எடுக்கும் நடவடிக்கைகள் குட்
லாஜிக் மிஸ்டேக்ஸ் திரைக்கதையில் சில நெருடல்கள்
1 பல வருட மண வாழ்க்கையில் மனைவி கூட குடும்பம் நடத்திய ஹீரோ ஹீரோயின் ஒரு கன்னிப்பெண் என்பதை திருமணம் ஆகி அவள் கர்ப்பம் ஆகும் வரை கண்டு பிடிக்க முடியாதது ஏன்??
2 ஹீரோயினுக்கு ரொற்ப சம்பளம் ஹீரோ ஒரு தண்டக்கடன் . 11 குழந்தைகள் + இவங்க 2 பேர் செலவுக்கு துட்டு ஏது ?
3 இடைவேளைக்குப்பின் 11 பேரில் ஒரு பெண் ஒரு ப்ணக்காரப்பையனை லவ் பண்ணுவது அவங்க வீட்டில் மறுப்பது இவங்க 10 பேரும் போய் கலாட்டா பண்ணி மேரேஜ் நடத்துவது சரியான காதில் பூ சுற்றும் டிராமா
4 ஹீரோ காதல் போதைல இருக்கும்போதே எனக்கு இன்னும் மேரேஜ் ஆகலை என் அக்கா குழந்தைங்க இவங்க இஷ்டம்னா என்னை மேரேஜ் பண்ணிக்குங்க குழந்தைங்க நம்ம கூடத்தான் இருக்கும் என கண்டிஷன் போட என்ன தயக்கம் >? ஏன் மென்னு முழுங்கனும் ?
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - முதல் பாதி கவித்துவமான காதல் கதை பின் பாதி மழலைகள் கொண்டாட்டக்குறும்புக்காமெடி மெலோ டிராமா பார்க்கலாம் ரேட்டிங் 2.5 / 5