திங்களாய்ச்சே நிச்சயம் ( 2021) 1744 ஒயிட் ஆல்ட்டோ(2022) ஆகிய மலையாளப்படங்களை இயக்கிய சென்னா ஹெக்டே இயக்கிய படம் இது . த பிரையஸ்ட் (2021) என்ற மலையாளப்படத்துக்கு திரைக்கதை எழுதிய தீபு பிரதீப் திரைக்கதை எழுதிய படம் இது .
ஸ்பாய்லர் அலெர்ட்
நடிகர் சந்திரபாபு வாழ்வில் நிகழ்ந்தது போல நாயகன் வாழ்க்கையில் அவரது திருமணம் முடிந்து முதல் இரவு நடக்கும் முன் அவர் மனைவி காதலனுடன் எஸ் ஆகி விடுகிறார். காதலனுடன் சென்றது பத்மினி காரில் . இதனால் அந்த ஊர் மக்கள் எல்லாம் அவரை பத்மினி என கிண்டலாக அழைக்கிறார்கள் .
இந்த சம்பவம் நட்ந்து 2 வருடங்கள் கழிந்தது .நாயகன் ஒரு காலேஜில் லெக்சரர் ஆக பணி புரிகிறார். அவரது காலேஜூக்கு புதிதாக பத்மினி என்ற பெயரில் ஒரு பெண் லெக்சரர் வருகிறார். நாயகனுக்கு அவருடன் நல்ல நட்பு ஏற்படுகிறது. இருவரும் காதலிக்கிறார்கள் , திருமணம் செய்யும்போதுதான் ஒரு சிக்கல் , முதல் மனைவியுடன் ஆன திருமணத்துக்கு பதிவு இருப்பதால் டைவர்ஸ் வாங்க வேண்டும் என பெண் வீட்டில் சொல்கிறார்கள்
நாயகி ஒரு வக்கீல் . இவ்ர் எடுத்துக்கொண்ட ஒரு கேசில் கூட இவர் ஜெயித்ததிலை . நாயகன் நாயகியிடம் இந்த கேசு விஷய்மாக சந்திக்கிறார். நாயகனின் காதலியும் , நாயகியும் தோழிகள்
எப்படியோ முதல் மனைவியைக்கண்டு பிடித்து அவரை அழைத்து வரச்செல்லும்போது ஒரு சிக்கல் . முதல் மனைவி அவரது கணவருடன் சண்டை போட்டு விட்டு நாயகனுடன் வந்து விடுகிறார்
இதற்குப்பின் நாயகன் யாருடன் ஜோடி சேர்ந்தார் ? முதல் மனைவியுடனா? காதலியுடனா? அநத வக்கீல் உடனா? என்பது க்ளைமாக்ஸ்
நாயகன் ஆக குஞ்சாக்க போபன் காமெடி கலந்த நடிப்பில் கலக்குகிறார்.
நாயகி ஆக லாயர் ஆக அபர்ணா பாலமுரளி கச்சிதமாக நடித்திருக்கிறார். உடம்புதான் கொஞ்சம் பூசினபடி ஆகி விட்டது . முகமும் கொஞ்சம் முதிர்ச்சி அடைந்து விட்டது ., ஆனால் நடிப்பில் குறை வைக்கவில்லை
காதலி ஆக மடோனா செபாஸ்டின் அருமையாக நடித்திருக்கிறார். நாயகன் - காதலி இருவருக்குமான கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது
நாயகனின் முதல் மனைவியாக வின்சி அலோசியஸ் நடிப்பும் சிறப்பு
மூன்று பாடல்கள் செம மெலொடி . மானு ஆண்ட்டனியின் எடிட்டிங்கில் க்ரிஸ்ப் ஆக ரெண்டு. மணி நேரத்தில் கட் பண்ணி இருக்கிறார். ஸ்ரீ ராஜ் ஒளிப்பதிவு கண்ணுக்கு இதம்
சபாஷ் டைரக்டர் (சென்னா ஹெக்டே)
1 டைட்டில் செலக்சன் , அதற்கான காரணம், படம் முழுக்க நாயகனுக்கு பட்டப்பெயராய் அது அமைந்தது எப்படி என காமெடியாகச்சொன்ன விதம்
2 அவனுக்கு இப்போ மேரேஜ்லயோ , பெண் பார்ப்பதிலோ விருப்பமே இல்லை என அம்மா சொல்லும்போது கட் பண்ணி ஹீரோவைக்காட்டுனா அவரு ஜாகிங் போற பெண்ணை சைட் அடிச்சுட்டு இருக்காரு
3 நாயகனின் ஓடிப்போன முதல் மனைவியை தேடச்சொன்னதும் ஃபேஸ்புக்கில் ஸ்ருதி என்ற பெயரில் உள்ள பெண்களுக்கெல்லாம் நண்பன் லைக் போட்டு ஃபிரண்ட் ரிக்வஸ்ட் கொடுக்கும் காட்சி கல கல
4 வில்லன் தன் அக்கவுண்ட்டண்ட்டிடம் ஒரு நாளாவது என்னை தம்பியா நினைச்சு பேசி இருக்கீங்களா? என கேட்டதும் இது தான் சான்ஸ் என தோள் மேல கை போட்டு டேய் என அவர் ஆரம்பிக்கும் சீன் அமர்க்களம்
செம ஹிட் சாங்க்ஸ்
1 தேன்மொழி பூங்கொடி விட்டுப்போகாதே
2 மனசே , என்னை விட்டுப்போகாதே
3 தீயால் நெஞ்சை எரித்து
ரசித்த வசனங்கள்
1 முதன் முதலாக என் வீட்டில் முத ராத்திரி அன்னைக்கு கரண்ட் போயிடுச்சு
என்னது?
சாரி ..முத ராத்திரி முதன் முதலாக என் வீட்டில் கொண்டாட இருக்கும்போது முதன் முதலா கரண்ட் போயிடுச்சு
2 அக்கா, என் கழுத்துல தோளில் ஏதோ பூச்சிக்கடி மாதிரி இருக்கு, எரிச்சலா இருக்கு
ஒரு வேளை...
அய்யய்யோ அதெல்லாமில்ல, அவரு ராத்திரி ல பல் செட்டைக்கழட்டிவெச்சுடுவாரு
3 பொண்ணு பார்க்கப்போன இடத்துல பொண்ணோட ஃபோனை வாங்கி வாட்சப்பை செக் பண்ணினா இப்படி அடிக்கத்தா செய்வாங்க
பதிலுக்கு அவளும் என் ஃபோனை வாங்கி வாட்சப்பை செக் செய்திருக்கலாம்
4 மழை வந்து எத்தனை நாட்கள் ஆச்சு?
பொண்ணு யாரு?
ஏன்?
மழையைப்பற்றி ரெண்டு பேருதான் கவலைப்படுவாங்க 1 விவசாயி 2 புதுசா லவ் பண்றவங்க
5 பத்மினியை வெச்சே பத்மினியை மடக்கிட்டியா?
6 இன்னைக்கு கோர்ட்க்கு வர மாட்டே-னு நினைச்சேன்
அது எப்படி? இன்னைக்கு தீர்ப்பு இருக்கே?
நீ தான் தீர்ப்பு சொல்லும்போது வர மாட்டியே?
என்னை விட அஞ்சு கேஸ் அதிகமா கைல வெச்சிருக்கேனு ஆடாத
7 ஸ்ரீ தேவினு ஒரு வக்கீல் இருக்காங்களே? பார்க்கனும்
அந்தப்பேர்ல 3 பேரு இருக்காங்க , லேடீஸ் விஷயத்துல நான் கரெக்டா இருப்பேன், 3 பேருதான் , அதுல எந்த ஸ்ரீதேவி வேணும்?
3 பேருல எந்த ஸ்ரீதேவி நல்ல ஸ்ரீதேவியோ அவங்க
8 நாம பெண் பார்க்கப்போன பெண்ணை வெச்சே டைவர்ஸ் வாங்கறோம்னா அது எவ்வளவு பெரிய ஹீரோயிசம்?
9 நான் இந்தக்கேசை ஒத்துக்க இன்னொரு காரணமும் இருக்கு
எது?
என்னைப்பொண்ணு பார்க்க வந்தவருக்கே டைவர்ஸ் வாங்கித்தர்ற ஹீரோயினிசம்
10 டீக்க்டை , சலூன் கடை இந்த இரண்டு இடங்களிலும் எல்லாரைப்பற்றியும் ஈசியா விசாரிச்சிடலாம்
11 அண்ணே, ரெண்டு டீ
அண்ணே ரெண்டு காஃபி
சாரி ஒரு டீ ஒரு காஃபி
12 செல் ஃபோன்ல இருக்க்ற வால் பேப்பர் என்பது மனசைக்காட்டும் கண்ணாடி மாதிரி
13 என்னை விட உயரமான ஃபிரிட்ஜை நீ வாங்கி வைக்கும்போதே எனக்கு உன் மேல டவுட்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகனுக்கு மேட்ரிமோனியல் ல் பெண் பார்க்க ஃபார்ம் ஃபில்லப் பண்ணும்போது பேச்சிலர் என்றே குறிப்பிடலாமே? சும்மா காமெடி சீனுக்காக இவங்களா தவளை மாதிரி பெண்டாட்டி ஓடிப்போயிட்டா என தண்டோரா போடுவது ஏன் ?
2 முதல் மனைவி பத்மினி கார் வைத்திருந்த காதலனுடன் ஓடிப்போய் விட்டாள் என்பதற்காக புதிதாகப்பெண் பார்க்கப்போகும் இடத்தில் பத்மினி கார் வைத்திருப்பதால் பெண்ணே வேண்டாம் என்பதெல்லாம் ஓவர்
3 புதிதாக பணிக்கு வந்த டீச்சரை டீச்சர் என அழைக்கும் ஆசிரியர் பின் மீண்டும் பத்மினி டீச்சர் என்று தானே அழைக்கனும்? அறிமுகம், பழக்கம் இல்லாத டீச்சரை எப்படி பத்மினி என அழைப்பார்?
4 இந்து குடும்பங்களில் சுப நிகழ்ச்சிக்குப்போகும்போது , குறிப்பாக பெண் பார்க்கப்போகும்போது 3 பேர் செல்வார்களா? அது அமங்கலம் ஆயிற்றே? அதே போல் ஏதோ ஒரு பெண் ( அம்மா, சித்தி) உடன் தானே செல்வார்கள் ?
5 நாயகன் மிக வசதியனவர், ஏகப்பட்ட சொத்து பத்து நிலம் உண்டு காலேஜில் லெக்சரராக பணி புரிகிறார், ஆனால் பெண் கிடைக்கவில்லை என்பது நம்ப முடியவில்லை. . வசதியான மாப்பிள்ளை எனில் பெண் வீட்டார் விட மாட்டார்களே?
6 முதல் பாதி திரைக்கதையில் ஒவ்வொரு சீனிலும் முடிந்தவரை காமெடியைப்புகுத்திய இயக்குநர் பின் பாதி திரைக்கதையில் அழுத்தம் காட்டத்தவறி விட்டார்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஃபீல் குட் காமெடி மெலோ டிராமா ரசிகர்கள் பார்க்கலாம், படம் ஸ்லொவாகத்தான் போகும். பிரமாதமான முதல் பாதி திரைக்கதைக்கு 3.5 / 5 . சராசரி ஆன பின் பாதி திரைக்கதைக்கு 2.5 /5 . அப்போ அவரேஜா 3 / 5
Padmini | |
---|---|
Directed by | Senna Hegde |
Written by | Deepu Pradeep |
Produced by | Suvin K Varkey Prasobh Krishna |
Starring | |
Cinematography | Sreeraj Raveendran |
Edited by | Manu Antony |
Music by | Jakes Bejoy |
Production company | Little Big Films |
Distributed by | Central Pictures |
Release date |
|
Running time | 120 minutes |
Country | India |
Language | Malayalam |