இயக்குநர் ராதா மோகன் இயக்குநர் விக்ரமன் டைப். அவரது படத்தில் எல்லாரும் நல்லவங்களா இருப்பாங்க , ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் ஓடிட்டே இருக்கும். 2004ல் அவரது முதல் படமான அழகிய தீயே கவனிக்க வைத்த படம். 2005ல் வந்த பொன்னியின் செல்வன் சுமார் ரகம் தான். 2007ல் வந்த அவரது “மொழி’ படம் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது . ஆனந்த விகடனில் 50 மார்க் அள்ளியது ..2008 ல் வந்த அபியும் நானும் குடும்பங்களால் கொண்டாடப்பட்டு தமிழக அரசின் சிறந்த இயக்குநருக்கான விருதைப்பெற்றது. 2011 ல் வந்த பயணம் சிறந்த கதாசிரியருக்கான தமிழக அரசின் விருதைப்பெற்றது.
தொடர்ந்து அவர் கவுரவம் (2013) , உப்புக்கருவாடு (2016) , பிருந்தாவனம் ( 2017) , 60 வயது மாநிறம் ( 2018) காற்றின் மொழி ( 2018) படங்களை இயக்கி மக்கள் மத்தியில் மிக நல்ல பெயரை சம்பாதித்தார்.. காட்சிகள் , வசனங்கள் மிக கண்ணியமாக இருக்கும்.ஆண்களின் கண்களையும் ஈரமாக்கும் திரைக்கதை அமைப்பு இவரது பலம் . யதார்த்தமான வசனங்கள் இவரது சிறப்புத்தகுதி. இவர் இயக்கிய பொம்மை என்ற படம் முடிஞ்சு இன்னும் ரிலீஸ் ஆகாம பெண்டிங்ல இருக்கு
அப்பேர்ப்பட்ட இவர் முதல் முறையாக காமெடி மெலோ டிராமா எடுத்திருக்கார் . படம் எப்படினு பார்ப்போம்
ஹீரோ ,ஹீரோயின் இருவரும் தம்பதிகள் , ஒரு பெண் குழந்தை ( இவரது கதைகளில் பெரும்பாலும் ஹீரோவுக்கு பெண் குழந்தையாகத்தான் இருக்கும் ) ரொம்ப ஜாலியா லைஃப் போய்க்கிட்டு இருக்கு
ஒரு நாள் மலேசியா போறேன்னு பொய் சொல்லிட்டு ஹீரோ பெங்களூர் போய் அவரது காதலியை சந்திக்கிறார்.மலேசியா போன ஃபிளைட் ஹைஜாக் செய்யப்படுது. ஹீரோவின் குடும்பமே பதறுது .ஹீரோவுக்கு என்ன ஆச்சோ ? ஏது ஆச்சோ?னு மனைவியும் , நண்பனும் துடிக்க ஹீரோ கூலா நண்பன் வீட்டுக்கு வந்து நடந்ததை சொல்றார்
ஹீரோவும் , நண்பனும் ஒரு பிளான் போட்டு ஹீரோயினை ஏமாத்தறாங்க . பழசெல்லாம் மறந்துடுச்சு என்ன நடந்ததுன்னே தெரியலைனு ரீல் விட்டு சமாளிக்கறாங்க
ஹீரோயினோட தாய் மாமாவுக்கு இவங்க மேல டவுட்,அவர் என்னென்ன வேலை எல்லாம் பண்ணார் ? ஹீரோ எப்படி சமாளிச்சார்? என்பதே மிச்ச மீதி திரைக்கதை
பஞ்ச தந்திரம், ரெட்டை வால் குருவி மாதிரி முழுக்க முழுக்க காமெடியா பண்ணாம முதல் பாதி காமெடி பின் பாதி இயக்குநரின் ஃபேவரைட்டான செண்ட்டிமெண்ட் என பிரிச்சு பண்ணி இருக்கார்
ஹீரோவா வைபவ்.அவருக்குன்னே தெச்சு வெச்ச சட்டை மாதிரி ஒரு ரெடிமேட் கேரக்டர். நல்லா உள் வாங்கி நடிச்சிருக்கார் .ஹீரோவின் நண்பனா கருணகரன். கேரக்டர் ரோல் கம் காமெடியன் ரோல். ஹீரோயினாக வாணி போஜன் சீரியலில் வருவது போலவே...இவங்க 3 பேரை விட எம் எஸ் பாஸ்கர் ரோல் கேரக்டர் ஸ்கெட்ச் நல்லாருக்கு , அதிக வாய்ப்பு . இன்னுமே அவரது கேரக்டரை டெவலப் பண்ணி இருக்கலாம். காதலியா ரியா சுமன். கிளாமர் ரோல். மயில்சாமி , சச்சு சின்ன கேரக்டர்கள்.
மொத்தமே 8 கேரக்டர்கள் மட்டுமே வெச்சுக்கிட்டு ஒரு டீசண்ட்டான படம் கொடுத்திருக்கார். ஆங்காங்கே சீரியல் டைப் காட்சிகள் எட்டிப்பார்க்குது. முதல் 45 நிமிடங்கள் நல்ல காமெடி ரைட்டப். பிறகு கொஞ்சம் போர் அடிக்கும் காட்சிகள். கடைசி 20 நிமிடங்கள் ரசிக்க வைக்கிறது . க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் ஓக்கே
நச் டயலாக்ஸ் -
1 எனக்கு வலிச்சா இன்னொருத்தருக்கும் வலிக்கும்னு தெரிஞ்சதும் மனசை என்னவோ பண்ணுது , ஒரு வகைல அது எனக்குப்பிடிச்சும் இருக்குது #MalaysiaToAmnesia
2 எல்லாத்தையும் மறந்துட்டதா நடிச்சுட்டு இருக்கேன், ஆனா ஞாபகங்கள் என்னை துரத்திட்டு இருக்கு
3 ஒரு குழந்தைக்கு அப்பாங்கற எண்ணம் மனசுல இருக்கா?
நீ ஓக்கேன்னு சொன்னா இன்னொரு குழந்தைக்கு ரெடி பண்ணிடலாம்
4 ஆட்டோகிராஃப் வாங்கறது பெருசில்லை , ஆட்டோகிராஃப் போடற அளவு முன்னேறனும்
5 எதுக்காக என்னைக்கேட்காம ஃபாலோ பண்றீங்க ? என் கிட்ட சொல்லி இருக்கலாமில்ல?
யாராவது சொல்லிட்டு , பர்மிஷன் வாங்கிட்டு ஃபாலோ பண்ணுவாங்களா?
உங்களை யாராவது ஃபாலோ பண்ணினா உங்களுக்கு கோபம் வராதா?
என்னை சோஷியல் மீடியாவுல என் மனைவி , குழந்தை 2 பேர்தான் ஃபாலோ பண்றாங்க
6 ஒரு நிமிசம் தலையைக்காட்டிட்டுப்போய் இருக்கலாம்
டைம் வரட்டும், தல தளபதி எல்லாரையும் காட்றேன்
7 உன் ஒயிஃப் அர்விந்த்சாமியைத்தவிர எல்லா சாமியையும் வேண்டிக்கிட்டு இருக்கா
8 ஒரு நல்ல ஐடியா. எல்லாத்தையும் மறைக்கனும்னா எல்லாத்தையும் நீ மறக்கனும்
9 நாந்தான் உங்க ஒயிஃப் , ஞாபகம் இருக்கா?
ஆதார் கார்டு இருக்கா?
10 மெடுல்லா ஆப்ள கேட்டா ல அடிபட்டா மறந்துடுமா
என்னப்பா ஆம்பள கேட்டா பொம்ப்ள கேட்டான்னுட்டு...
11 நான் சொல்றதை நல்லா ஞாபகம் வெச்சுக்கோ , உனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை
12 நான் சும்மா இல்லை டெய்லி வீட்ல இருந்து விசிஆர் வரை ஜாகிங் போவென்
ஓஹோ வீடு எங்கே இருக்கு?
விசிஆர் ல
13 சார் , ஒரு என்கொயரி , அவங்க ரெண்டு பேரும் எந்தப்பக்கம் இருந்து வந்தாங்க ?
வெளிப்பக்கத்துல இருந்துதான் வந்தாங்க
14 கார் வாங்கறது , இ எம் ஐ கட்றதை விட காரை துடைக்கறது, கழுவறதுதான் ரொம்ப கஷ்டம்
15 சார், காரைக்கழுவுபதுக்கு 100 ரூபாயா?
சாரை கழுவி ஊத்துனதுக்காக...
16 வேலைக்காரினு நினைச்சு ஒயிஃபை கட்டிப்பிடிச்ட்டேன்
17 இந்த ரூம்ல தான் சம்பவம் நடந்ததா சம்பந்தப்பட்ட நபர் சம்பந்தமே இல்லாம சொன்னாரெ?
18 சும்மா இர்றா சுடுகாட்ல பிறந்தவனே
அது எப்டி உங்களுக்கு தெரியும் ?
நீ என்ன மைசூர் மகாராஜா பேலஸ்லயா பிறந்திருப்பே?
19 நீங்க பேசுனது கால் ரெக்கார்டர்ல இருக்கு , போடவா?
வேணாம், மத்தவங்க பேசுனதைக்கேட்கற பழக்கம் எனக்கில்லை
20 என்னது ? ஒய்ஃப் 2 வா? கில்லாடி மாமா நீங்க
யோவ் என் ஒய்ஃபோட 2 வது செல் ஃபோன் நெம்பர்
சி.பி ஃபைனல் கமெண்ட் - மலேசியா டூ அம்னீசியா 2021 தமிழ் @Zee5 - முதல் பாதி காமெடி மெலோ டிராமா ,பின் பாதி சுமார்தான்.ராதா மோகன் எழுத்து இயக்கம் ok. பஞ்ச தந்திரம் டைப் கதை .
எதிர்பார்க்கப்படும் விகடன் மார்க் 40.
அட்ராசக்க ரேட்டிங் 2.75 / 5.
வைபவ்,வாணிபோஜன்,எம்எஸ் பாஸ்கர்,கருணாகரன் நடிப்பு குட்