Showing posts with label மர்சனம். Show all posts
Showing posts with label மர்சனம். Show all posts

Tuesday, January 24, 2023

செத்தும் ஆயிரம் பொன் (2020) தமிழ் --சினிமா வி,மர்சனம் ( மெலோ டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்


 1985ல்  நதியா-பத்மினி  நடிப்பில் , ஃபாசில் இயக்கத்தில்  வெளியான  பூவே  பூச்சூடவா பாட்டி - பேத்தி  பாசப்பிணைப்பை  மையமாக்கொண்டு  திரைக்கதை  அமைக்கப்பட்டு  மாபெரும்  வெற்றிப்படமாக  அமைந்தது  ஏ  செண்ட்டர்  ரசிகர்கள்  கொண்டாடிய  கிளாசிக்கல்  மூவியான  பூவே  பூச்சூடவா  போலவே  பாட்டி - பேத்தி  பாசத்தை  வெறொரு  பரிமாணத்தில்  கிராமியக்கதைக்களத்தில்  பி , சி   செண்ட்டர்  ரசிகர்கள்  கூட  ரசிக்கும்  விதத்தில்  வந்த  படம்தான் இது. 2019ம் ஆண்டில்  தியேட்டரிலும் 2020ல்  நேட்  ஃபிளிக்சிலும்  ரிலீஸ்  ஆகியுள்ளது 

நாயகி  23  வயது  நிரம்பிய  ஒப்பனைக்கலைஞர். சினிமாவில்  மேக்கப் விமனாக  இருக்கிறார். ஐந்து  வயதாக  இருக்கும்போதே  தனக்கு  பால்ய  விவாகம்  செய்ய  முற்பட்ட  பாட்டியிடம்  கோபித்துக்கொண்டு  நகரத்துக்கு  வந்தவர்  18  வருட  இடைவெளிக்குபின்  தன்  சொந்த  கிராமத்துக்கு  வேண்டா  வெறுப்பாக  ஒரு  நிர்ப்பந்தம் காரணமாக  வருகிறார்


நாயகியின்  பாட்டி ஒப்பாரிப்பாட்டு  பாடுபவதைத்தொழிலாகக்கொண்டுள்ளார். ஊரில்  எந்த  வீட்டில்  சாவு  வந்தாலும்  இவர்  போய்  ஒப்பாரிப்பாட்டு  பாடுவார். அந்த  கிராமத்து வழக்கப்படி ஒருவருக்கு  மரணம் நேர்ந்தால்  அவருக்கு  நல்ல  ஒப்பனை  செய்து  அடக்கம்  செய்வதே  அவருக்குத்தரும்  மரியாதை  என  நினைக்கிறது , நாயகியின்  முறைப்பையன்  பிணத்துக்கு  ஒப்பனை  செய்யும்  தொழிலில்  இருக்கிறார்


கிராமத்துக்கு  வந்தபின்  நாயகி  தன்  பாட்டியையும் , மாமன்  மகனையும்  எப்படி  எதிர்  கொள்கிறார்? அவர்களுக்குள்  இருந்த  பிணக்குகள்  தீர்ந்தனவா?  என்பதை  வெறும்  மூன்று  நாட்களில்  நடக்கும்  சம்பவங்கள்  மூலம்  சொல்லி  இருக்கிறார்  அறிமுக  இயக்குநர்  ஆனந்த  ரவிச்சந்திரன்


 கதைக்களத்தைப்பார்த்து  இது  ஏதோ  சோகபடமோ? அழுகை  ஓவர்  டோசாக  இருக்குமோ? என  பயப்படத்தேவை  இல்லை . இழவு  விழுந்த  வீட்டில்  நிகழும்  சம்பவங்களை  நகைச்சுவை  கலந்து  சொல்லிய  விதத்தில்  கவனிக்க  வைக்கிறார். நாட்டுப்புறப்பாடல்கள் , கிராமிய  வட்டார  வழக்கு பேச்சுகள் என  மாறுபட  பதிவாக  இது  அமைகிறது 


நாயகியாக நிவேதிதா  சதீஷ்.இவரது  முகத்தில்  ஆரம்பத்தில்  எள்ளும்  கொள்ளும்  வெடிக்கிறது.பாத்திரத்தை  உள்வாங்கி  நடித்திருக்கிறார். பாட்டியுடன்  பிணக்கு  தீர்ந்து  பாசத்தை  உள்ளே  வைத்து  அழும்  காட்சியில்  கலங்க  வைக்கும்  நடிப்பு 


 பாட்டியாக   ஸ்ரீ  லேகா  ராஜேந்திரன்.  அவரது  தெனாவெட்டான  உடல்  மொழி  அபாரம். கச்சிதமான  நடிப்பு 


 ,முறைமாமனாக  அவினாஷ்  ரகுதேவன்  ஆரம்பத்தில்  முரட்டுத்தனமானவாரகவும் , பிறகு  நல்லவாரகவும் இரு  முகம்  காட்டுகிறார்


நாயகியின்  தோழியாக   கேப்ரியலா  அட்டகாசமான  பங்களிப்பை  செய்திருக்கிறார். மொத்தக்கதையுமே  பாட்டி - பேத்தி -  முறை  மாமன்  என  பயணித்தாலும்  இவர்  தனித்துத்தெரிகிறார். பிரமாதமான  நடிப்பு


 ஏடாகூடமான  சமயத்தில்  ஹார்ட்  அட்டாக்  வந்து  இறந்து  போகும்  நபரின்  இறுதிச்சடங்கு  கலாட்டாவில்  காமெடி  கலக்கலாக  அமைந்திருக்கிறது . தமிழ்  சினிமா  வரலாற்றிலேயே  முழுக்க  முழுக்க  இறுதிச்சடங்கு  ஒப்பனை  பற்றி  பதிவு  செய்து  நாம் இதுவரை  அறியாத  பல  சுவராஸ்யங்களை  தந்த  விதத்தில்  இயக்குநர்  கவனிக்க  வைக்கிறார். சர்வதேச  அரங்கில்  பல  விருதுகளைக்குவித்த  இந்தப்படம் நெட்  ஃபிளிக்சில்  காணக்கிடைக்கிறது 


102  நிமிடங்கள்  மட்டும்  ஓடும்  விதத்தில்  கச்சிதமாக  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்  எடிட்டர்  பிரகாஷ்.சமந்த்நாக்  இசையும், மணிகண்டன்  ஒளிப்பதிவும்  கனகச்சிதம் 


எச்சரிக்கை 1  -  இதில் அடல்ட்  கண்ட்டென்ட்  எதுவும்  இல்லை , ஆனால்  கிராமிய  வட்டார  வழக்கில்  பேசும்  சில  கொச்சையான  பச்சையான  வசனங்கள்  உண்டு , குடும்பத்துடன்  பார்க்கும்போது  சில  சங்கடங்கள்  வரலாம்


 எச்சரிக்கை 2  - இதில்  கமர்ஷியல்  விஷய்ங்களான  காமெடி  டிராக் , டூயட் , ஃபைட்  எதுவும்  இல்லை . எனவே  மசாலாப்பட  பிரியர்கள்    பார்ப்பதைத்தவிர்க்கவும் 



ரசித்த  வசனங்கள் 


1   விட்ட  உறவு  எட்டு  நாளைக்காம் , நக்கின  உறவு  நாலு  நாளைக்காம் 


2 அப்புறம்  பண்ணுன சப்பரம்மாதிரி  மினுமினுனு  இருக்கியே?


3  பனை  மரத்துக்கு  துணை  மரமா  உன்  கூடவே  இருக்கேனே? 


4  காது  குடையற  குச்சி  மாதிரி  இருக்கியே ? உனக்கு  மாப்ளை  கிடைக்குமா?


5   ராணி  பக்கத்துல  இருந்தாதான்  ராஜாவுக்கு  மதிப்பு   செஸ்லயும்  சரி , வாழ்க்கைலயும்  சரி 


6  அக்கால ( தொலைவில் )  இருந்தா  நிக்கல  உறவு , கிட்டக்க  ( அருகில் )  இருந்தா  முட்டிக்கும்  உறவு 


7  ஒரு  கலைஞன்  இன்னொரு  கலைஞனுக்கு  ம்ரியாதை  செய்யனும்


8 பொய்  என்னைக்கும்  பள பளனுதான்  இருக்கும் 


9 ஊருக்கே  ஒப்பாரி  வைக்கும்  ஆத்தா  பெத்த  புள்ள  சாவுக்கு  வர  முடியல ., யாரும்  சொல்லியும்  விடல  தகவல்  கிடைக்கலை 


10 நினைச்ச  உடனே  கோழி  முட்டை  போட  முடியுமா?


11  வயித்தை  பசியில்  காயப்போட்டா  கோபம்  அதிகமாத்தான்  ஆகும் 


12 உன்னைத்தான்  கேட்டுட்டு  இருக்கேன் , வாய்ல  என்னத்தை  சமைச்சுட்டு  இருக்கே? 


13  அடி  நாக்குல  நஞ்சும்  நுனி  நாக்குல   அமுதமும்  இருக்கனும் 


14  திறமை  இருக்கும்  மீன்வனுக்கு  தூண்டில்  தேவை  இல்லை . வெறும்  குச்சி  போதும் 


15  சாவு  மட்டும்  இல்லைன்னா  , மனுசன்  சோம்பேறி  ஆகிடுவான் , இருக்கற  இடத்தை  விட்டு  நகர  மாட்டான் 


சபாஷ்  டைரக்டர் 


1  இழவு  விழுந்த   வீட்டில்  இறந்தவனுக்கு  கடைசி  மரியாதை  செய்வது  யார்? மனைவியா? கீப்பா? என  ந்டக்கும்  சுவராஸ்ய  சண்டையை  படமாக்கிய  விதம் 


2  மெயின்  க்தைக்கு  சம்பந்தம்  இல்லாமல்  போனாலும்  படத்தில்  வரும்  அனைத்து  இழவுக்காட்சிகளையும்  காமெடி  ட்ரீட்மெண்ட்டில்  காட்டியது 


3  தன்  அப்பாவின்  சாவுக்கு  வராத  பாட்டியின்  வில்லி  இமேஜை  காலி  பண்ணும்  அந்த  முன்  கதையை  பேத்தி  தெரிந்து  கொள்ளும்  இடம் 


4   நாயகிக்கும், தோழிக்கும்  இடையிலான  எமோசனல்  பாண்டிங் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1   பாட்டி  மீது  கோபம்  காட்டும்  நாயகியின்  ந்டிப்பு  சில  இடங்களில்  ஓவர்  ஆக்டிங்  போல  தோன்றுவது  பலவீனம் 


2  தன்  அழைப்பின்  பேரில்  வந்த  பேத்தியை  வரவேற்காமல்  ஒரு  வார்த்தை  கூடபேசாமல்  பின்  அதற்கான  காரணமாக  இழவு  வீட்டுக்குப்போய்ட்டு  குளிக்காம  எப்படிப்பேச? என  பாட்டி  சமாளிப்பதும்  பொருந்தவில்லை 


3   சொத்து  விஷயமாக  உயில்  விஷ்யமாக  கிராமத்துக்கு  வரும்  நாயகி  அந்த  ஒப்பனைப்பெட்டியை  எதற்குக்கொண்டு  வருகிறார் ? 


4  பெண்  சுதந்திரம் , முற்போக்கான  பெண்  என்பதைக்காட்ட  நாயகி  தம்  அடிப்பது , தண்ணி  அடிப்பது  என  காட்டனுமா? 

 

5  நாயகியிடம்  முறைப்பையன்  ப்ரப்போஸ்  செய்யும்  காட்சியில்  அந்த  ஆள்  கண்களில்  காதல்  இல்லை . முரட்டுத்தனம்  தான்  தெரிந்தது 


சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  மாறுபட்ட  படங்களைக்காணும்  ஆர்வலர்கள்  மட்டும்  பார்க்கலாம். ரேட்டிங்  3/ 5 


செத்தும் ஆயிரம் பொன்
படிமம்:Sethum Aayiram Pon poster.jpg
Release poster
இயக்கம்ஆனந்த் ரவிச்சந்திரன்
தயாரிப்பு
  • அனுசிலிக்கா துபே
  • பிரியங்கா அகர்வால்
  • சஸ்வத் சிங்
கதைஆனந்த் ரவிச்சந்திரன்
இசைசமந்த் நாக்
நடிப்பு
ஒளிப்பதிவுமணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி
படத்தொகுப்புபிரகாஷ் கருணாநிதி
கலையகம்விஸ்பரி பிலிம்ஸ்
வெளியீடுமே 8, 2019 (நியூயார்க்கு இந்தியத் திரைப்பட விழா)
1 ஏப்ரல் 2020 (Worldwide)
ஓட்டம்102 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்