Showing posts with label மரணம். Show all posts
Showing posts with label மரணம். Show all posts

Monday, May 13, 2013

நண்பர் பட்டாபட்டியின் மரணமும் , அவர் பற்றிய நினைவுகளும்

நெட்டுக்கு வந்த புதிதில் எனக்கு பன்னிக்குட்டி ராமசாமி மூலம் அறிமுகம் ஆனவர் தான் பட்டா பட்டி. இவரை நகைச்சுவைக்காகவும் , காங்கிரஸ் கட்சியின் தீவிர எதிர்ப்புக்காகவும் எனக்கு மிகவும் பிடிக்கும்.தனக்கு மனதில் சரி என பட்டதை எந்த ,முலாமும் இல்லாமல் அப்படியே வெளீப்படுத்துவது அவரிடம் நான் கண்டு பிரமித்த ஒன்று.

 ஏன்னா பொதுவா நாம மனசுல நினைச்சதை டக்னு வெளில சொல்லிட முடியாது . 4 பேர் என்ன நினைப்பாங்கன்னு யோசிச்சு அப்புறமாத்தான் அது பற்றி பேசுவோம். ஆனா நண்பர் பட்டாபட்டி  நேருக்கு நேர் தன் வாதங்களை , கருத்துக்களை முன் வைப்பவர் .

ட்விட்டரில் பல முறை என்னுடன் பேசி இருக்கிறார். காலையில் இருந்து மனசே சரி இல்லை ;((((((

 பிளாக் உலகில் அவரது நெருங்கிய நண்பர்கள் விளங்காதவன் , ராம்சாமி , விக்கி உலகம்  வெங்கட் , வீடு சுரேஷ் , நக்கீரன் , வால் பையன் ,  மங்குனி அமைச்சர் , சிரிப்புப்போலீஸ் ரமேஷ் என பட்டியல்கள் நீண்டு கொண்டே போகும் . 

 அவர் சிங்கப்பூரில் நேற்று இரவு மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்த தகவலை எனக்கு சுரேஷ் தான் ஃபோன் பண்ணி இன்று காலை 10 45 க்கு சொன்னார். ஆஃபீஸ் வேலையாக வெளியில் இருந்ததால் என்னால் எதுவும் எழுத முடியவில்லை . ட்விட்டரில் மட்டும் தகவல் சொன்னேன். 




 அவரது உடல் நாளை காலை கோவை வருகிறது . அவர் பிரிவால் வாடும் நண்பர்கள் அனைவருக்கும் இரங்கல்கள் 


கோவை அவரது இல்ல முகவரி தெரிந்தவர்கள் கீழே கமெண்ட்டாகப்போடவும் 

 அவரது பிளாக் முகவரி - http://pattapatti.blogspot.in/

அவரது ட்விட்டர் முகவரி -

அவரது ஃபேஸ்புக் முகவரி -https://www.facebook.com/patta.patti?fref=ts 

 அவரது மரணத்தில் நாம் கற்க வேண்டிய பாடம் 


1.குடிப்பழக்கம் உள்ளவர்கள் அறவே அதை விட்டொழிக்கவும் . குடிப்பதைப்பற்றி பெருமையாகப்பேசிக்கொண்டிருக்க வேண்டாம். அது இன்னும் குடிக்க தூண்டும் 

2. குடிப்பது சிறுமை.அதை பெருமையாக யாரும் நினைக்காதீர்கள்.உங்கள் போதைக்கு உங்கள் குடும்பத்தை ஊறுகாய் ஆக்காதீர் ;-((



3. 35 வயது ஆனவர்கள் அடிக்கடி அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறை மெடிக்கல் செக்கப் செய்து கொள்க 


4. வேலை வேலை என பிரஷருடன் வேலை செய்தல்  தவிர்க்க முயலவும் , குடும்பத்துக்காக தினமும் நேரம் ஒதுக்கவும் 


 நண்பர்களின் நினைவுகள் 


1. வீடு சுரேஷ் - நானும்...வௌங்காதவனும் காந்திபுரத்தில் உள்ள ஒரு பாரில் சரக்கடித்துக் கொண்டு பேசிக்கொண்டிருந்தோம், பேசிக் கொண்டிருக்கும் போதுதான் தமக்கு நெருங்கிய நண்பர் பட்டாபட்டி என்கின்ற விசயத்தைக் சொன்னார் நான் அவரின் ஒன்றிரண்டு பதிவுகளைப் படித்திருக்கின்றேன், ஆனால் பழக்கமில்லை அவருடைய கமண்டுகள் குபீரென்று சிரிப்பை வரவழைக்கும், கோவை மாவட்டத்திற்கே உரித்தான எள்ளல்,நக்கல் அவரிடம் விரவிக்கிடக்கும். நக்கீரனுக்குப் போனைப்போட்டு பட்டாபட்டி பேசுவதாக மிமிக்ரி செய்தாப்டி வௌங்காதவன், நக்கீரனும் நம்பி ரொம்ப நேரம் பேசினார்....! அப்பொழுது வௌங்காதவன் என்னிடம் சொன்னார் இப்ப விளையாட்டா நக்கீரனை கலாய்ச்சோம், அடுத்த லீவில் நான் வரும் போது பட்டாவும் வருவாப்டி அன்னிக்கு நான், நீ, பட்டாபட்டி, நக்ஸ் நாலு பேரும் இதே பார்ல சரக்கடிப்போம் என்றார்.....வௌங்காதவன் வருகிறான்.....பார் இருக்கு பட்டாபட்டிதான் இல்ல......!


2. விக்கி உலகம் வெங்கட் - கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் “வாய்யா...போய்யா...மாப்ளே...மாமா”ன்னு பேசிட்டு இருந்த மனுசன் இன்னிக்கி இல்ல...ச்சே என்ன உலகம்டா இது...நல்லவிங்கள எல்லாம் இம்புட்டு சீக்கிறம் கொண்டு போயிருது...- சுயம்!  

Saturday, December 22, 2012

நித்யஸ்ரீ கணவர் தற்கொலை மர்மங்கள்

http://2.bp.blogspot.com/_9vPNlqoYUtY/TSE8NlhVbDI/AAAAAAAADco/j2AIV3vn7xU/s1600/Nithyasree+Mahadevan+Carnatic+musician+playback+singer.jpg 
சென்னை:பிரபல கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன், நேற்று கோட்டூர்புரம் மேம்பாலத்தில் இருந்து அடையாற்றில் குதித்து, தற்கொலை செய்து கொண்டார்.பழம்பெரும் கர்நாடக இசை பாடகி டி.கே.பட்டம்மாளின் பேத்தி நித்யஸ்ரீ, 39. இவரும் கர்நாடக இசை உலகில் மிக பிரபலமாக விளங்குகிறார். திரைப்படங்களிலும் பின்னணி பாடியுள்ளார்.

விருப்ப ஓய்வு:


இவரது கணவர் மகாதேவன், 45. மென்பொருள் பொறியாளரான இவர், மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்றார்.தந்தை விஸ்வநாதன், மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோட்டூர்புரத்தில் மகாதேவன் வசித்து வந்தார். மகாதேவன்-நித்யஸ்ரீக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.



மகாதேவன், நேற்று காலை 8:00 மணிக்கு மகள்களை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து சென்று, கொண்டு விட்டு வீடு திரும்பினார். பின் காலை 11:00 மணிக்கு, அவரது ஓட்டுனர் தண்டபாணி, 30, என்பவரை அழைத்து காரை எடுக்கும் படி கூறினார்.



அடையாற்றில் குதித்தார்:


இருவரும் அருகில் உள்ள டென்னிஸ் அரங்கம் ஒன்றிற்கு சென்றனர். அங்கிருந்து கோட்டூர்புரம் வழியாக வீடு திரும்பும்போது, மகாதேவன் காரை ஓட்டியுள்ளார்.நண்பகல் 12:30 மணிக்கு, பாலத்தின் நடுவில் திடீரென காரை நிறுத்தி, சாவியை எடுத்து கொண்டார். திடீரென பாலத்தில் இருந்து அடையாற்றில் குதித்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் தண்டபாணி, உடனடியாக நித்யஸ்ரீயை அலைபேசியில் அழைத்து நடந்ததை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அங்கிருந்த சிலர், உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். காரில் வந்த நபர் ஆற்றில் குதித்த தகவலால் அந்த சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

உடல் மீட்பு:


தகவலறிந்து, கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து போக்குவரத்தை சீர் செய்தனர். தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்க முயன்றனர். அதற்குள் மகாதேவனில் உடல் ஆற்றில் மிதந்தது. அதை கயிறு கட்டி மேலே இழுத்தனர்.அப்போது, ஆட்டோ மூலம் அங்கு விரைந்து வந்த நித்யஸ்ரீ, கணவர் குதித்த இடத்தை பார்த்து கதறி அழுதார். அவருக்கு ஆறுதல் கூறிய போலீசார், ஆட்டோ மூலம் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

மகாதேவனின் உடலை மீட்ட போலீசார், 108 ஆம்புலன்ஸ் மூலம், தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மகாதேவன் இறந்ததை டாக்டர்கள் உறுதிப்படுத்தினர். இதையடுத்து, அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
நன்றி - தினமலர் 






பிரபல கர்நாடக இசைப் பாடகி நித்யஸ்ரீயின் கணவர் வி.மகாதேவன் (45) வியாழக்கிழமை அடையாறு ஆற்றுப் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.



இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்தது: கோட்டூர்புரம் 4-வது பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் மகாதேவன். இவரது மனைவி பிரபல கர்நாடக இசைப் பாடகியும், தமிழ் திரைப்பட பின்னணி பாடகியுமான நித்யஸ்ரீ. இத் தம்பதிக்கு தேஜாஸ்ரீ, தனுஷாஸ்ரீ என இரு மகள்கள் உள்ளனர். இதில் தேஜாஸ்ரீ (8) 3-ம் வகுப்பும், தனுஷாஸ்ரீ (7) 2-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். எம்.இ. படித்துள்ள மகாதேவன் மந்தைவெளியில் ஆர்.கே. சாலையில் உள்ள ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.



மகாதேவன் காரில் வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டார். காரை டிரைவர் சுரேஷ் ஓட்டினார். கோட்டூர்புரத்தில் உள்ள ஒரு டென்னிஸ் மைதானத்துக்குச் சென்று, அங்கு பயிற்சி பெறும் தனது மகள்களை பார்க்கச் சென்றாராம். ஆனால் இரு மகள்களும் அப்போது இல்லையாம். இதனால் ஏமாற்றம் அடைந்த மகாதேவன், அங்கிருந்து காரை தானே ஓட்டினார்.



கோட்டூர்புரம் அடையாறு பாலத்தின் அருகே நண்பகல் 12.30 மணியளவில் கார் வந்ததும். திடீரென காரை விட்டு இறங்கி செல்போனில் பேசியபடியே நடந்து சென்றாராம். பின்னர் திடீரென பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்தார். இதை பார்த்து டிரைவர் சுரேஷ் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் தீயணைப்பு நிலையத்துக்கும், போலீஸôருக்கும் தகவல் தெரிவித்தார். தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று மகாதேவனை மீட்டனர்.



பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மகாதேவன் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மகாதேவன் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து கோட்டூர்புரம் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.




கருத்து வேறுபாடு: போலீஸôர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்னையே அவரின் இந்த முடிவுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. நித்யஸ்ரீ திரைப்படங்களில் பின்னணி பாடுவதில் மகாதேவனுக்கு விருப்பம் இல்லையாம். இது தொடர்பாக இருவருக்கும் ஏற்கெனவே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாம். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர் சரிவர வேலைக்குச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.




மேலும் நித்யஸ்ரீயின் கர்நாடக இசை கச்சேரிகளின் தேதிகளை மகாதேவன் கவனித்து வந்தாராம். மார்கழி மாத கச்சேரியில் தேதி கொடுத்தது தொடர்பாக நித்யஸ்ரீக்கும், மகாதேவனுக்கும் இடையே வியாழக்கிழமை காலை வாக்குவாதம் ஏற்பட்டதாம். எனவே குடும்பப் பிரச்னை காரணமாகவே மகாதேவன் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீஸôர் கருதுகின்றனர்.


நன்றி - தினமணி


http://newindianexpress.com/incoming/article1346039.ece/ALTERNATES/w460/Nithyasree-Mahadevan.jpg



எனது கேள்விகள்



1. நித்யஸ்ரீயின் கணவர் ஆற்றில் குதித்ததை நேரில் பார்த்த டிரைவர் அவரைக்காப்பாற்ற ஏன் முயற்சிக்க வில்லை? அவருக்கும் நீச்சல் தெரியாதா? அக்கம் பக்கம்  கூச்சல் போட்டு உதவி கேட்டாரா?


2.  தற்கொலை செய்பவர்கள் தனிமையில் இருக்கும்போதுதானே செய்வார்கள்? டிரைவர் பார்க்க பார்க்க ஆற்றில் குதித்தால் காப்பாற்றி விடுவார்கள் என்ற எண்ணம் அவருக்கு வந்திருக்காதா?



3. தற்கொலை செய்ய நினைத்தவர் எதுக்கு கார் சாவியை கையில் எடுத்துட்டு போகனும்?



4. மன உளைச்சலில் இருந்த நித்யஸ்ரீயின் கணவர் ஏன் காரை ஓட்ட வேண்டும்? கார் டிரைவர் தானே ஓட்டனும்? பொதுவாக டென்ஷனில் இருக்கும்போது யாரும் டிரைவிங்க் பண்ண மாட்டாங்க, அதுவும் டிரைவரை பக்கத்தில் வைத்துக்கொண்டு ..



5. ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி இறந்து போன தன் அம்மாவின் பிரிவின் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறதே , 8 மாதங்கள் கேப் ஏன்? பொதுவா தற்கொலை எண்ணம் என்பது ஒரு நிமிட சோகத்தில் வருவது , அம்மா இறந்த துக்கத்தில் இருந்து மீள  ஒரு மாதம் அல்லது 3 மாதங்கள் போதும் அப்போதெல்லாம் நிகழாத சம்பவம் ஏன் 8 மாதங்கள் கழித்து இப்போது?



6. கார் டிரைவரைத்தவிர அவர் தற்கொலையை நேரில் பார்த்த சாட்சிகள் யாராவது இருக்காங்களா? அது பற்றித்தகவலே இல்லையே? 


Tuesday, June 05, 2012

காலச்சுவடு ஆசிரியரின் நண்பர் மரணம் - சில புரிதல்கள்



எல்லா மனிதரின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத  துக்க பக்கம் மரணம்.. அது நமக்கான விடுதலைப்பத்திரமும் கூட ..இயற்கையை பல வழிகளில் வஞ்சித்த, வென்ற மனிதன் மரணத்தை மட்டும் வெல்லவே முடியவில்லை.. ஒரு வேளை மரணத்தை மனிதன் வென்று விட்டால் அது இயற்கைக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கக்கூடும்.. வந்தவர்கள் எல்லாம் இங்கேயே தங்கி விட்டால், தேங்கி விட்டால் பூமியில் ஏது இடம்?

இருந்தாலும் நமக்கு நெருக்கமானவர்கள் மரணம் நம்மை அதிகம் பாதிக்கிறது.. தினசரி நாளிதழ்களில் யாரோ ஒருவரின் மரணச்செய்தியை நாம் படிக்க நேரிடும்போது, டி வியில் பார்க்க நேரும்போது நம்மை அது அதிகம் பாதிப்பதில்லை.. அடிக்கடி சந்தித்தோ, அல்லது நெருக்கமான பழக்கத்திலோ இருப்பவர்கள் இறக்கும்போதுதான் நம்மை மரணம் பாதிக்கிறது.. மரண பயமும் வருகிறது ..

சென்னிமலையில் தி முக  ஒன்றியச்செயலாளர் திரு மெய்யப்பன்.. அவரது தம்பிகள் அங்குராஜ், கே எஸ் சண்முக சுந்தரம் இருவரும் என் பால்ய கால நண்பர்கள்.. அவர்களது சித்தப்பா பையன் அய்யப்பன்.. இவரை பற்றி நான் எனது பத்திரிக்கை உலக அனுபவங்களில் சொல்லி இருக்கிறேன்.. ஆனந்த விகடனில் சொல்வனம் பகுதியில் இவரது 3 கவிதைகள் வந்துள்ளன.. அது போக பால்ய காலத்தில் தென்றல் எனும் கையெழுத்துப்பத்திரிக்கை நடத்தி வந்த போது எனக்கு உறுதுணையாக இருந்தார்..

இவரது அண்ணன் சென்னிமலை ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள அங்காள பரமேஸ்வரி டெக்ஸ்டைல்ஸ் இல் மேனேஜர்..இவரது அடுத்த அண்ணன் பெயர் சம்பத்.. இவர் தான் நாம் இப்போ பார்க்கப்போற சம்பவ நாயகன்..

ஆள் ஒல்லியா, உயரமா இருப்பார்.. சின்ன வயசுல இருந்தே வாழ்க்கையில் எந்தப்பிடிப்பும் இல்லாதவராக சித்தன் போக்கு சிவன் போக்கு என  ஏனோ தானோ வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்.. குடிப்பழக்கத்துக்கு அடிமை ஆனார்..

தினமும் சரக்கு இல்லாமல் தூங்கவே மாட்டார்.. அய்யப்பன் குடும்பத்தில் அனைவரும் எனக்கு அறிமுகம், பழக்கம்.. ஆனால் இவர் மட்டும் அதிக டச் இல்லாமல் இருந்தார்..காரணம் இவர் அதிகம் வீட்டில் இருக்க மாட்டார்..

தினமும் மாலை  வேளைகளில், குறிப்பாக சனி, ஞாயிறுகளில் இவர் சென்னிமலை காமாட்சி அம்மன் கோவில் திண்ணையில் அல்லது ஈஸ்வரன் கோவில் அருகே அமர்ந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருப்பார்..  காலச்சுவடு ஆசிரியர் கதிர்வேலு அவர்களின்  நெருங்கிய நண்பர்..

சமீபத்தில் தான் அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார்.. 2 மாசம் இருக்கும்..

சம்பவம் நடந்த அன்னைக்கு 4 நாட்கள் முன்.....

சம்பத் சாலையில் நடந்து போய்ட்டு இருந்திருக்கார்... திடீர்னு வலது கால் மரத்துப்போன மாதிரி ஒரு உணர்வு.. சாலை அருகே உள்ள விளக்கு கம்பத்தில் கை வைத்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திருக்கார்.. திடீர்னு அந்த மரத்துப்போன உணர்வு காலில் இருந்து இடுப்பு கை வரை பரவி வலது பாகம் முழுக்கவே மரத்து விட்டது..

அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அருகாமையில் உள்ள ஹாஸ்பிடல் சென்றிருக்கிறார்.செல் ஃபோன் கையில் இருந்தது ரொம்ப உபயோகமாக இருப்பது இது போன்ற ஆபத்துத்தருணங்களில் தான்.. வீட்டுக்கு ஃபோன் பண்ணி தகவல் சொல்லி விட்டார்..

டெஸ்ட் செய்த டாக்டர் மூளைக்கு செல்லும் சில நரம்புகள் ஜாம் ஆகி விட்டதாகவும்,இனி நாம் செய்ய ஏதும் இல்லையென்றும் கூறி விட்டார்.. எஸ்.. ஹி ஈஸ் ஹவுண்ட்டிங்க் ஹிஸ் டேஸ்..
இவருக்கு வயது 45.. ஆனால் ஆள் பார்க்க 32 வயசு போல் தான் இருப்பார்.. திருமணம் ஆகாதவர்.. பொறுப்பில்லாத மனிதராக இருந்தபோதும் தான் திருமணம் செய்தால் தன்னை நம்பி வந்த பெண்ணை கண் கலங்காமல் வைத்து காப்பாற்ற முடியாது என்ற உண்மை அவரது மனசில் இருந்திருக்க வேண்டும்.. எனவே தான் திருமணம் வேண்டாம் என்று சொல்லி விட்டார் போல.. காதல் தோல்வி ஏதும் இல்லை..

குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு என்ன ஒரு நிம்மதி என்றால் மேரேஜ் ஆகி ஒரு குழந்தை இருந்திருந்தா இன்னும் சிரமம்.. அந்த குடும்பமும் நிர்க்கதி ஆகி இருக்கும் என்ற எண்ணமே..

2 நாள் சுய நினைவில்..  அப்போதும் அவரால் பேச முடியவில்லை.. கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வந்திருக்கிறது.. அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி, தம்பி அனைவரையும் கடைசி பார்வை பார்த்திருக்கிறார்.. அவருக்கு தன் இறுதி நாட்களில் இருக்கிறோம் என்பது தெரிந்து விட்டது..

இந்த இறப்பில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

1. குடிப்பழக்கம், புகைப்பழக்கம் அதிகம் உள்ளவர்கள் மாதம் ஒரு முறை ஹாஸ்பிடல் சென்று கம்ப்ளீட் பாடி செக்கப் செய்து கொள்வது அவசியம்..

2.  மன நிலை பாதிக்கப்பட்டவர்கள்,சராசரி வாழ்க்கை வாழாமல் வித்தியாசமாக நடவடிக்கை தென் பட்டால் அவரை தனிமையில் விடாமல் இருத்தல்..

3. பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் 18 வயசோடு முடிந்து விடக்கூடாது.. காலம் உள்ள காலம் வரை வாரிசுகளுடனான  அருகாமை, அக்கறை இருக்க வேண்டும்..

4. தன்  மகன் இப்படி ஆகிட்டான், இவன் இப்படிதான்.. என தண்ணி தெளிச்சு விட்டுட்டு மத்த வேலையைப்பார்ப்போம் என்ற மனப்பான்மை வரக்கூடாது..

5.ஒரு கலயாணம் காட்சி என்றால் யார் யாரை கூப்பிடனும் என்று ஆற அமர்ந்து லிஸ்ட் போடற மாதிரி 40 வயது கடந்தவர்கள் தங்கள் பால்ய கால நண்பர்கள், பள்ளி, கல்லூரி ,அலுவலக நண்பர்கள் இவர்கள் முகவரி அல்லது அட்லீஸ்ட் தொலை பேசி எண்ணையாவது ஒரு டைரியில் அல்லது ஒரு நோட்டில் எழுதி வைக்க வேண்டும்.. மேலோட்டமான பார்வையில் இது குரூரமாக தோன்றினாலும் என் அனுபவத்தில் நான் கண்ட பல மரணங்களில் கடைசி சமயங்களில் பலருக்கு தகவல்கள் சொல்லப்படாமலேயே இருந்திருக்கின்றன.. சொல்லாத காதல் எவ்வளவு துயரமோ அதை விட இரு மடங்கு துயரமனானது சம்பந்தப்பட்டவர்களுக்கு சொல்லப்படாத மரண தகவல்.

6. இன்சூரன்ஸ் பாலிஸி.. பெரும்பாலோர் இது பற்றி அக்கறை கொள்வதே இல்லை.. நாமே போயிடறோம்.. இனி என்ன ஆகப்போகுது? நமக்குப்பின்னால வரப்போற தொகைக்காக நாம ஏன் கஷ்டப்பட்டு , மெனக்கெட்டு பிரீமியம் கட்டனும் என்ற எண்ணம் மறையனும்.. சம்பத் பாலிஸி ஏதும் கட்டவில்லை.. சப்போஸ் கட்டி இருந்தால் வயசான காலத்தில் அவர் பெற்றோருக்கு உதவியாக இருந்திருக்கும்..

7. திருமணங்களில் மொய் வைப்பது தமிழனின்  பாரம்பரிய பழக்கமாக இருந்து வந்தாலும் நான் வியப்பது மரணம் நடந்த வீடுகளில் ஏன் அந்தப்பழக்கம் வரவில்லை என்பதே.. வசதியான, நடுத்தரக்குடும்பங்களில் பிரச்சனை இல்லை, சம்பத் குடும்பத்திலும் பணப்பிரச்சனை இல்லை, ஆனால் பொதுவாக நான் யோசிப்பது ஒரு ஏழையின் வீட்டில் குடும்பத்தலைவர், அல்லது முக்கியமான நபர் இறந்து விட்டால் அந்தக்குடும்பத்துக்கு மாபெரும் இழப்புத்தானே.. நாம என்ன பண்றோம்.. துக்க வீட்டுக்குப்போறோம்.. கையை கொடுக்கிறோம், துக்கம் விசாரிக்கறோம்.. வந்துடறோம்.. அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யனும் என்று நினைப்பதே இல்லை.. ஏழை வீட்டில் மரணம் நிகழ்ந்தால் நம்மாலான பண உதவி செய்ய வேண்டும்..

8. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை டீன் ஏஜ் வரை கவனமாக கண்காணித்து வர வேண்டும்.. 18 வயசுக்குள் தான் பெரும்பாலான கெட்ட பழக்கங்களை மனிதன் கற்றுக்கொள்கிறான்.. 19 வயசில் அவனுக்கு ஒரு பக்குவம் வந்து விடும்..  பலரை விசாரித்ததில் தெரிய வரும் தகவல் அவர்கள் ஏதாவது ஒரு கெட்ட பழக்கத்தை கற்றுக்கொண்டது அவர்கள் 15 டூ 18 வயசில் தான்.. அது மாற்ற முடியாத பழக்கமாக மாறி அவனை சிதைக்கிறது..

9. இருக்கும் வரை ஜாலியாக இருப்போம், எல்லாத்தையும் அனுபவிப்போம் என்ற எண்ணம் தான் பெரும்பாலான தவறுகளுக்குக்காரணம்.. இருக்கும் வரை ஆரோக்யமாக இருப்போம் என எண்ணுவதில்லை... யோகா, மூச்சுப்பயிற்சி என தினமும் 30 நிமிடங்களாவது ஒதுக்க வேண்டும்..

10 , கடைசியாக நான் சொல்லப்போவது பைத்தியகாரத்தனமாகவோ , அல்லது தேவையற்றதாக தோணும்.. இருந்தாலும் சொல்லிடறேன்... நாம வாரம் ஒரு முறை ரிலாக்ஸ்ஸாக இருக்க, டைம் பாஸ் பண்ண  சினிமா, கோயில், பீச், பார்க் எங்காவது சென்று மனதை ரிலாக்ஸ் பண்ணிக்கறோம்.. பொழுது போக்கு - எண்ட்டர்டெயின்மென்ட்.. அந்த மாதிரி மாதம் ஒரு முறை அரசு மருத்தவமனைக்கு ஒரு விசிட் அடிக்கனும்.. எத்தனை பேர் .. எத்தனை நோய்கள், எத்தனை அஜாக்கரதைகள், எத்தனை விபத்துகள் என்பதை கண்கூடாக கண்டால் நமக்கு வாழ்வின் அர்த்தம், மதிப்பு புரியும்.. அதே போல் தெரிந்தவர், உறவினர் மரணங்களுக்கு  செல்கையில் சுடுகாடு வரை போய் வர வேண்டும்.. அந்த குடும்பத்துக்கும் ஒரு ஆறுதல், நமக்கும் வாழ்வின் நிலையாமை தத்துவத்தை நமக்கு நாமே உணர நல்ல வாய்ப்பு

சம்பத்தின் ஆத்மா சாந்தி அடையட்டும்.. நான் மரணத்தகவல் சொன்னதும் பொள்ளாச்சியில் தன் குடும்பத்துடன் சுற்றுலாவில் இருந்தபோதும் உடண்டியாக அதை  கேன்சல் செய்து சென்னிமலை வந்து துக்க நிகழ்வில் பங்கு கொண்ட  காலச்சுவடு ஆசிரியர்க்கு என் நன்றிகள்..

 சம்பத்தின் புகைப்படம்  போட வேண்டாம் என அவர் குடும்பத்தில் கூறி விட்டனர்.. அவர் இன்னும் அவர்களோடு வாழ்வதாக  நம்புவதால்...

Thursday, April 05, 2012

குமுதம் - கிருஷ்ணா டாவின்ஸி மரணம் -பாலை இயக்குநர் பகிரும் சில நினைவுகள்

தமிழ் பத்திரிகை உலகில் நன்கு அறியப்பட்ட பிரபல தமிழ்ப் பத்திரிகையாளர் கிருஷ்ணா டாவின்ஸிகாலமாகிவிட்டதாகச் சென்னைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


லேப்டோ பைரோஸிஸ் எனப்படும் எலிக்காய்ச்சலால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணா நேற்று மாலை 5 மணி அளவில் மரணமடைந்ததாகத் தெரிய வருகிறது.


அவரது உடல் போரூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டுள்ளது. இன்று பகல் 12 மணி அளவில் அவரது இறுதி ஊர்வலம் நடைபெறவுள்ளதாக மேலும் அறியப்படுகிறது.


கிருஷ்ணா டாவின்ஸிக்கு அஞ்ச  ஆளுமையான தனிப்பட்ட சித்திரத்தை பிரத்தியேகமான நினைவுக் கட்டுரையாக நமக்குத் தருகிறார், அவருடன் குமுதம் வார இதழில் பணிபுரிந்த பாலை படத்தின் இயக்குனர் ம.செந்தமிழன்.


கிருஷ்ணா டாவின்சியை அறிவீர்களா?


கிருஷ்ணா டாவின்சி என்ற பெயரை உங்களில் பலர் அறிந்திருக்கலாம். குமுதம் எனும் வணிக இதழின் மிகச் சில அறிவுசார் பக்கங்களையும், பல்வேறு வணிக நோக்குப் பக்கங்களையும் நிரப்பிய பெயர் அது. கின்ஸி என்ற புனைப் பெயரில் வெளியான அரசியல் கேலிச் சித்திர வசனங்களின் சொந்தக்காரரும் கிருஷ்ணா டாவின்சியே.


2001 ஆம் ஆண்டு, ஈழத்தில் தலைவர் பிரபாகரன் சர்வதேசச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, குமுதம் சார்பில் சென்றவர். புலிகளுக்கு எதிரான மனநிலையில் இருந்த கிருஷ்ணா, ஆச்சர்யப்படத்தக்க விதத்தில், புலிகள் ஆதரவாளராக மாறினார். நான் குமுதம் இதழில் செய்தியாளராக இணைந்தபோது எனக்கான ஆலமரம் கிருஷ்ணா. சிநேகாவின் அழகு பற்றியும் க்யூபாவின் பொருளாதாரம் பற்றியும் ஒரே கோல்ட் பில்டர் கிங்சை இழுத்தவாறு அவரால் பேச முடியும்.


நான் பணியாற்றிய காலத்தில், குமுதம் இதழ் எடிட்டோரியலில் அவ்வப்போது ஏற்பட்ட குழுக்களில் சில நல்லவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். மீதமிருந்த நல்லவர்களில் கிருஷ்ணா ஒருவர். யாரும் எந்தக் குழுவினருடனும் அடையாளப்பட அஞ்சிய நாட்கள் அவை. தேநீர் குடிக்க யார் யாருடன் போகிறார்களோ, அவர்கள் ஒரு குழு என காங்கிரசுக்குச் சற்றும் சளைக்காமல் வம்பு பேசிய காலம்.


‘நான் கிருஷ்ணா சார் ஆள்’ என நான் மார்தட்டுவேன். இப்போதும் குமுதம் இதழில் பணியாற்றும் பலருக்கு இது தெரியும். அவருடைய ’ஆளாக’ இருப்பதில் எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி. தத்துவம், கோட்பாடு, இதழியல், நடைமுறை அரசியல், பெண்கள், பாலியல், பெண்ணியம், குடும்பம் இன்னும் எவ்வளவோ பேசும் வல்லமை அவருக்கு உண்டு. எனக்கு இதுவே போதும்

.
குமுதம்.காம் இணையத்தைக் கட்டி எழுப்பிய சிலரில் கிருஷ்ணா குழுவினராகிய நாங்களும் உண்டு. அதிகாலை 4 மணி வரை நானும் ஆனந்தும் கிருஷ்ணாவுடன் இணையதளத்துடன் முண்டிக் கிடப்போம். விஜயன் எனும் எளிய தட்டச்சுப் பணியாளனை, ‘விஜயன் நீங்க நல்ல டிசைனரா வருவீங்க’ என வளர்த்தெடுத்தார் அவர். சென்னையின் தலைசிறந்த வடிவமைப்பாளர்களில் இன்று விஜயன் ஒருவர்.


குமுதம்.காமில் ‘நிகழ்காலம்’ எனும் பத்திரிகையைத் தொடங்கியபோது, என்னுடைய அரசியல் ஆர்வத்தைக் கண்டு, என்னை அந்த இதழுக்குப் பொறுப்பாளராக்கினார் அவர். அவுட்லுக் எனும் துணிச்சல் மிகு ஆங்கில இதழை எனக்கு அவர்தான் அறிமுகப்படுத்தினார். அந்த இதழில் வெளியான நல்ல கட்டுரைகளை நான் மொழி பெயர்த்து எழுதிக் குவித்தேன்.


விரல்கள் வலிக்குமளவு எழுதுவேன். கிருஷ்ணா மெல்லிய புன்னகையுடன், ‘தம் போடப் போலாமா?’ எனக் கேட்டால் அந்த வலி மரத்துப் போகும். தேநீர்க் கடையில் என்னுடன் நின்றபடி சாலையில் கடக்கும் இளம் பெண்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு எனக்கும் அவர்களில் அழகிகளை கண்ஜாடையால் காட்டுபவர் குமுதம் இதழின் துணை ஆசிரியர் என்பதை என்னால் நம்ப முடிந்ததில்லை.


குமுதம் இதழின் தர்க்கங்களுக்கு உட்படாத செய்திகளையெல்லாம் நான் எழுதக் கேட்டபோது, பொறுப்பில் இருந்த பலர் கேலியாக என்னை ஓரங்கட்டுவதுண்டு. கிருஷ்ணா தலைமை நிர்வாகியிடமே என்னை அழைத்துச் செல்வார். ’சத்தியமங்கலம் காட்டுக்குள்ள மலைவாழ் மக்கள் காட்டை விட்டு வெளியேறிக்கிட்டு இருக்காங்களாம் சார்…சென்சேஷனல் ஸ்டோரி…செந்தமிழன் போறேங்கறார்’ என்பார். அனுமதி கிடைக்கும்.


’கல்பாக்கம் அணு உலையைப் பத்தி நம்ம பத்திரிகை உலகம் நெகடிவா எழுத மாட்டேங்குது செந்தமிழன்…நாம் எழுதணும்…’ என்றார்.


‘நான் எழுதறேன் சார்…


’ஓகே ஆனால்…உங்களுக்கு சில க்ரைசிஸ் வரும்…சமாளிக்கணும்’


‘பரவால்ல சார்…’


ஏறத்தாழ உயிரைப் பணயம் வைத்து அலைந்து நான் எழுதிய கட்டுரையை, ’எதுக்கும் அட்டாமிக் அதாரிடில வெர்சன் வாங்கிடுங்க’ என வழக்கம்போல் கூறி, சிலர் அந்தக் கட்டுரையைப் புதைக்க முற்பட்டபோது, மெல்லிய புன்னகை மாறாமல்,


’செந்தமிழன்…இன்னும் ரெண்டு வாரத்துக்கு இதைப் பத்திப் பேசாதீங்க…என்னோட இஷ்யூ வரட்டும்….நான் பார்த்துக்கறேன்’ என்றார்.


அவர் பொறுப்பில் வந்த அந்த இதழில் ’கொல்பாக்கம்’ என்ற தலைப்பில், என் கட்டுரை கவர் ஸ்டோரி. எட்டுப் பக்கங்கள், நான் எடுத்த புகைப்படங்களுடன் வந்தது.


‘சிக்கன் எமன்’ என்னும் கவர் ஸ்டோரி நான் எழுதியது. ப்ராய்லர் கோழிக் கறியை உண்ண வேண்டாம் என்பது கருத்து. கறி விலை கிலோ 18 ரூபாயாகச் சரிந்தது. எனக்குக் கொலை மிரட்டல். எனது வீட்டுத் தொலைபேசி எண்ணை குமுதம் அலுவலகத்திலேயே யாரோ கோழிப் பண்ணை உரிமையாளர்களிடம் கொடுத்து விட்டனர். நள்ளிரவு மணி அடிக்கும். சகல கெட்ட வார்த்தைகளையும் கேட்டுக் கொண்டு தூக்கமின்றிக் கிடப்பேன்.


கிருஷ்ணா அதே மெல்லிய புன்னகையுடன், ‘செந்தமிழன் பேசாம ஒரு வாரத்துக்கு என் வீட்ல தங்கிக்கங்க’ என்றார். அதன் பிறகு, என் அறைக்குப் போவதே அரிது என்றாகிவிட்டது.


மேற்கு தாம்பரம் அருகே, ஒரு தி.மு.க பிரமுகர் தன் ஊருக்குள் தாழ்த்தபட்ட மக்கள் வாழும் பகுதிக்கு ரேசன் கடை வர விடாமல் தடுத்தார். நான் புகைப்படத்துடன் எழுதிவிட்டேன். வாக்குமூலங்களை திருட்டுத்தனமாக பதிவும் செய்துவிட்டேன். கட்டுரை வந்ததும், அந்தத் தேர்தலில் மேற்படிப் பிரமுகருக்கு சட்டமன்ற உறுப்பினர் போட்டி வாய்ப்பு பறி போனது.


அடியாட்களுடன் அலுவலகம் வந்துவிட்டார். கீழே உட்கார்ந்து கொண்டு, ’எழுதினவனை வரச் சொல்லு’’ என்று கத்துகிறார். அப்போது பொறுப்பில் இருந்த ஒருவர் என்னிடம், ‘நீதானய்யா எழுதின…? நீயே போய் பேசி அனுப்பு’ என்றார். என் நிலையை நீங்கள் உணரலாம். முகத்தைப் பார்த்துவிட்டால், தனியே செல்லும்போது வண்டியை மோதினால் போதும்.


கிருஷ்ணாவிடம் ’சார் என்னைப் போகச் சொல்றார் சார்…கொஞ்சம் பேசிப் பாருங்க’ எனக் கெஞ்சினேன்.


கிருஷ்ணா என் தோளில் கைபோட்டபடி, ‘செந்தமிழன்…இவன் கிட்ட சொன்னா கேக்க மாட்டான்…நீங்க கீழே போங்க…செந்தமிழன் வேலையா இருக்காரு… என்ன விஷயம்னு கேளுங்க…’நீங்க யாருன்னு கேட்டா நான் தான் கிருஷ்ணா டாவின்சின்னு சொல்லுங்க’ என்றார் அதே புன்னகையுடன்.


நான் அவ்வாறு செய்துதான் தப்பினேன்.


அவர் ரயில்வே அதிகாரியாகப் பணியாற்றியவர். சினிமா இயக்குனர் ஆவதுதான் அவர் லட்சியம். அதற்காகத்தான் குமுதம் இதழில் சேர்ந்ததாகச் சொல்வார். ‘செந்தமிழன் சினிமாவுல சேர, பத்திரிகை ஒரு நல்ல எண்ட்ரி’ என்பார்.


என்னிடம் அடிக்கடி, ‘உங்க ஆம்பிஷன் என்ன?’ எனக் கேட்பார்

. ‘அப்படி எதுவும் இல்ல சார்…இப்ப இந்த வேலை பிடிக்குது…செய்றேன்…’ என்பேன்.


’தப்பு…நீங்க சினிமாவுக்குப் போனா நல்லா வருவீங்க..’என்பார். அவர்தான் முதன் முதலாக என்னைச் சினிமாவுக்குத் தகுதியானவனாகப் பார்த்தார். அவருடைய கதை ஒன்றை நானும் அவரும் சீன் சீனாகப் பேசி எழுதினோம்.


’செந்தமிழன் முதல்ல நான் படம் பண்றேன்…அடுத்து நீங்க’ என்பார்.


அவர் குடியிருந்த வீட்டுக்கு நள்ளிரவில் நான் போய் கதவைத் தட்டி, என்னை எதிர்த்துக் கேள்வி கேட்ட பெண் உரிமையாளரைக் கண்டபடித் திட்டிவிட்டேன். மறுநாள் காலை, அந்த வீட்டைக் காலி செய்யும்படி உத்தரவு வந்தது.


‘சாரி சார்…’ என்றேன். ‘அட நீங்க வேற செந்தமிழன்…இந்த ஹவுஸ் ஓனர் பெரிய இவளா…? நீங்க என்ன அவ கையப் பிடிச்சா இழுத்தீங்க…? வீ ஆர் ஜர்னலிஸ்ட்ஸ்… லேட் நைட் வருவோம்.. தே ஹவ் டூ அண்டர்ஸ்டேண்ட்’ என்றார் அதே புன்னகையுடன்.


இதுபோல் அவர் மூன்று வீடுகளை மாற்ற வேண்டி இருந்தது.


என்னை அவரே, சுபா வெங்கட்டிடம் அறிமுகம் செய்து வைத்தார். மின் பிம்பங்கள் நிறுவனத்தில் நான் நுழைவதற்கு முழுக் காரணமாகவும் கிருஷ்ணா இருந்தார்.


என் திருமணத்தை நடத்தியதில் கிருஷ்ணா – ரேவதி தம்பதியினரின் பங்குதான் மிக அதிகம்.


2001 ஜூன் மாத்தில் ஒரு நாள் தேநீர்க் கடையில் நின்று கொண்டிருந்தோம். என்னை கிருஷ்ணாவின் பொறுப்பில் இருந்து வேறு ஒரு நபரின் பொறுப்புக்கு மாற்றும்படி உத்தரவு வந்திருந்தது. மழை தூவிக் கொண்டிருந்தது. ’சார் அந்தாள்கிட்ட என்னால வேலை பாக்க முடியாது சார்…அவன் ஒரு இடியட்…’ என்றேன்.


’கொஞ்சம் பொறுத்துக்கங்க’ என்றார்.


‘வேணாம் சார்…நான் ரிசைன் பண்றேன்’ என்றேன்.


அதே புன்னகையுடன், ’இங்கேருந்து யாராவது ரிசைன் பண்ணினா எனக்கு சந்தோஷம்தான் செந்தமிழன்…’ என்றார். நான் அடுத்த பத்தாவது நிமிடம் விலகல் கடிதம் கொடுத்துவிட்டேன்.


’கிருஷ்ணா சார் இருக்கார்ல…பாத்துக்குவார்’ என்று, அடுத்த மாசம் வாடகைக்கு என்னப்பா பண்றது என ஊரிலிருந்து கேட்ட என் அம்மாவிடம் தொலைபேசியில் சொன்னேன்.


’கிருஷ்ணா சார்’ அதேபோல் பார்த்துக் கொண்டார். மின்பிம்பங்களில் சுபாவெங்கட் வழியே குமுதம் இதழில் வாங்கியது போல் மூன்று மடங்கு சம்பளம் பெற்றேன்.


சென்னையின் மத்தியதர வர்க்கத்து உறுப்பினராக நான் மாறியது அந்த தேநீர்க் கடையில் எடுத்த முடிவினால்தான். கிருஷ்ணா எனும் மனிதனின் நம்பிக்கையே செந்தமிழன் எனும் எளியவனின் வளர்ச்சி.


அந்த கிருஷ்ணா டாவின்சி இன்று இல்லை.


பத்திரிகையாளர், என் நண்பர் நா.கதிர்வேலன் ‘krishna davinci expired’ எனக் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். கதிர்வேலனும் குமுதம் இதழில் எங்களுடன் பணியாற்றியவர்.


எப்படி இறந்தார்? ஏன் இறந்தார்? என எதையும் விசாரிக்கவில்லை இன்னும்.

எனக்கும் கிருஷ்ணாவுக்கும் இடையில் இருந்த ஒருவரால், எங்கள் உறவில் விரிசல் விழுந்தது. அவர் என்னோடு பேசுவதைக் குறைத்துக் கொண்டார். எனக்குக் குழந்தை பிறந்தது, நான் கார் வாங்கியது, நான் ஊரோடு போய் விவசாயம் பார்க்கத் தொடங்கியது, திரைப்படம் தொடங்கியது, படம் முடித்தது என என் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் அவருக்குத் தொலைபேசியில் சொல்லிக் கொண்டுதான் இருந்தேன்.


ஆனாலும், எனக்கும் அவருக்குமான விரிசலில் நியாயமே இல்லை என்பதைத்தான் தாங்கிக் கொள்ள இயலவில்லை.


ஒரு வேண்டுகோள் நண்பர்களே, ஆழமான உறவுகளை ஒதுக்குவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஒதுக்கக் கூடாது என்பதற்கு ஒரே ஒரு காரணம் இருந்தாலும், ஆயிரத்தை விட ஒன்று பெரிது எனக் கருதுங்கள்.


நான் இப்போது அனுபவிக்கும் வலி உங்களுக்கு ஒருபோதும் ஏற்பட வேண்டாம்!


கிருஷ்ணாவுக்கு அஞ்சலி! அவரை இழந்து நிற்கும் குடும்பத்தினரினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ! THANX TO THAMIZMEDIA