Showing posts with label மனுஷ்ய புத்திரன். Show all posts
Showing posts with label மனுஷ்ய புத்திரன். Show all posts

Saturday, November 03, 2012

அமரர் சுஜாதாவின் அபார எழுத்து அர்ப்பணிப்பு -மனுஷ்ய புத்திரன்

சுஜாதா, மனுஷ்ய புத்திரன்
 

சுஜாதா:நம் காலத்து நாயகன் ( 1935-2008 ) – மனுஷ்ய புத்திரன்

 

பெசன்ட் நகர் மின்சார மயானத்தில் பிப்ரவரி 29ஆம் தேதி வெயில் தகித்த ஒரு மதியத்தில் சுஜாதா ஒரு பிடி சாம்பலாக மாறினார். மயானத் தின் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த என்னிடம் யாரோ ஒரு உறவினர் சுஜாதா மீது போடப்பட்ட நாணயங்களில் இருந்து ஒரு இரண்டு ரூபாய் நாண யத்தைக் கொடுத்து ‘நினைவாக வைத்துக்கொள் ளுங்கள்’ என்று கொடுத்தார்.





சுஜாதா 90களின் ஆரம்பத்தில் இருந்து இந்த 17 ஆண்டுகளில் எனக் குக் கொடுத்தவைகளை லௌகீகக் கணக்குகளால் அளவிடுவது கடினம். இப்போது அவரிடம் இருந்து கிடைத்த அந்த இரண்டு ரூபாய் நாணயம் ஒரு இரும்புக் குண்டாகிக் கனத்துக் கொண்டிருக்கிறது. ஒருபோதும் தொலைக்கவோ செலவழிக்கவோ கை மறதியாய் வைக்கவோ முடியாத நாணயம்.



புற உலகிற்கான பாதைகள் மூடப்பட்டு எனது வெளிச்சக் குறைவான அறையின் சொற்களால் ஆன ரகசிய வழிகளைக் கண்டுபிடித்து வெளியேற நான் தத்தளித்துக்கொண்டிருந்த காலம் அது. எங்கள் கிராமத்து நூலகத்தில் குமரி பதிப்பகம் வெளியிட்ட சுஜாதாவின் நூல்கள் என் அலுப்பூட் டும் பொழுதுகளில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தின. நைலான் கயிறும், 24 ரூபாய் தீவுகளும், கொலை யுதிர் காலமும் வழியே உருவாக்கிய மொழியின் சாகசங்கள் பெரும் பரவசத்தை ஏற்படுத்தின.




 ‘அவள் புன்னகை மட்டும் அணிந்திருந்தாள்’ என்பது போன்ற ஆயிரக்கணக்கான குதூகலமும் பொறியமைவும் கொண்ட நூதனமான வாக்கியங் கள் நான் அறிந்த மொழி பழக்கங்கள் அனைத்தை யும் கலைக்கத் தொடங்கின. வாசிப்பின் இன் பத்தை சுஜாதா அளவுக்கு உருவாக்கிய ஒரு எழுத் தாளன் தமிழில் இல்லை என்பதை இப்போது தர்க்க பூர்வமாக நிறுவ முடியும். ஆனால் அந்த இளம் வயதில் அவர் மொழியை ஒரு தூண்டி லைப் போலப் பயன்படுத்துகிறார் என்பதை நான் அறியவில்லை. தொடர்ந்து அந்தத் தூண்டிலை நோக்கிச் சென்றுகொண்டே இருந்தேன். பின்னர் அவரே தூண்டில் கதைகள் என்ற ஒரு தனித்த கதை வரிசையையும் எழுதினார். 



கோவை ஞானி, நிகழ் இதழில் எனது கவிதைகளை 90களின் ஆரம்பத்தில் வெளியிட்டு உற்சாகமூட்டிய சமயம் அது. ‘கால்களின் ஆல்பம்’ அப்போதுதான் நிகழில் வெளிவந்திருந்தது. கோவையில் நடந்த ஒரு சிறுகதைப் பயிலரங்கில் அந்தக் கவிதையை வாசித்த சுஜாதா, அதற்குப் பார்வையாளர்கள் ஆற்றிய உணர்ச்சிபூர்வமான எதிர்வினை குறித்து பலமுறை வெவ்வேறு இதழ்களில் எழுதினார். மேடைகளில் பேசினார். எந்த அடையாளமும் அற்ற ஒரு இளம் கவிஞனின் ஒரு கவிதை குறித்து சுஜாதா போன்ற ஒரு நட்சத்திர எழுத்தாளர் காட்டிய இந்த உற்சாகம் அவனுக்கு அந்த வயதில் அளிக்கக்கூடிய தன்னம்பிக்கையையும் சக்தியையும் விவரிப்பது கடினம். ஒரு முறை தற்செயலாக தூர் தர்ஷன் பார்த்துக்கொண்டிருந்தபோது அதில் ‘அம்மா இல்லாத முதல் ரம்ஜான்’ கவிதையை அவர் வாசித்துக்கொண்டிருப்பதைக் கேட்டு என் வீட்டில் அனைவரும் அதிர்ந்தனர். அவருக்கு நன்றி தெரிவித்து முதன்முதலாக ஒரு சிறிய கடிதம் எழுதி னேன்.


ஒரு போஸ்ட் கார்டில் பதில் எழுதினார், ‘உங்களுக்குப் பிடித்த கவிஞர்களின் கவிதைகளை எனக்கு அனுப்புங்கள். நான் அவற்றை வாசகர் களுக்கு அறிமுகம் செய்கிறேன்’ என்று. நான் ஒரு நோட்டுப் புத்தகத்தில் அப்போது என்னை ஆக்கிர மித்துக்கொண்டிருந்த நகுலன், பிரமிள், தேவதேவன், சுகுமாரன், கல்யாண்ஜி, ஆத்மாநாம், சுயம்புலிங்கம் என பலரது கவிதைகளையும் அவ ருக்கு அனுப்பினேன். அடுத்தவாரமே இந்த நோட் டுப் புத்தகம் பற்றிய குறிப்புடன் சுயம்புலிங்கத்தின் ‘தீட்டுக் கறை படிந்த பூ அழிந்த சேலைகள்’ கவிதை பற்றி குமுதத்தில் எழுதினார்.


பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ‘நீ அனுப்பிய நோட்டுப் புத்தகத்தை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்’ என்றார். அவர் வாசிப்பில் காட்டிய மூர்க்கமான, தளர்ச்சியற்ற ஈடுபாடு அபூர்வமானது. எப்போதும் ஒரு வாசகனாகவும் ரசிகனாகவும் தன்னை வைத்திருப்பதில் அவர் சளைக்கவே இல்லை. சமீப காலம்வரை அவரைச் சந்திக்கச் செல்லும்போதெல்லாம் தனக்கு அனுப்பப்பட்ட ஏதாவது ஒரு கவிதைத் தொகுப்பை எடுத்துக்கொண்டு வருவார். ‘இந்தத் தொகுப்பில் 37ஆம் பக்கத்தில் உள்ள கடைசி இரண்டு வரிகள் மட்டும்தான் கவிதை’ என்பார். அவருக்கு கவிதை வரி களைக் கண்டுபிடிப்பதில் விநோதமான ஒரு மோப்பசக்தி செயல்பட்டது. பல சமயங்களில் அவர் நினைவிலிருந்து மேற்கோள் காட்டும் வரிகள் அதன் மூலத்திலிருந்து வெகுவாக விலகியும் சுருக்கப்பட்டும் இருப்பதைக் கண்டிருக்கிறேன். வாக்கியங்களின் மிகையான, சுமையான சொற்களைக் களையாமல் அவரால் அவற்றை நினைவில் நிறுத்த முடியாது. மொழி குறித்த இந்தக் கறாரான நுட்பமான அணுகுமுறையே அவரது எழுத்துகளை நவீனத் தமிழின் நிர்ணய சக்தியாகவும் மாற்றியது. 



சுபமங்களா நாடக விழாவிற்காக சுஜாதா மதுரைக்கு வந்திருக்கிறார் என்று தெரிந்து அங்கு போனேன். முதல் நாளே அவர் உரை முடிந்து விட்டிருந்தது. அவரைச் சந்திக்க வரலாமா என்று ஒரு நண்பர் மூலம் கேட்டு அனுப்பினேன். ‘சிரமம் வேண்டியதில்லை, நானே வந்து பார்க்கிறேன்’ என்று நேராக விழா மண்டபத்திற்கு வந்துவிட்டார். அன்றைக்கு அவரைப் பொறுத்தவரை ஒரே ஒரு கவிதை மூலம் அறியப்பட்ட நபர். ஆனால் அவருக்கு அது போதுமானதாக இருந்தது. சில நிமிடங்களில் அவரைப் பலரும் சூழ்ந்துகொண்டனர். அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன் என்பதைவிட பார்த்துக்கொண்டிருந்தேன். 


சென்னைக்கு வந்தபிறகு அவரை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகரித்தன. பின்னர் கனிமொழி மற்றும் அவரது கணவர் அரவிந்தனின் நட்பு கிடைத்தபோது எங்கள் மூவருக்கும் பொதுவான ஒரு நண்பராக, மையமாக சுஜாதா மாறினார். 2002ஆம் ஆண்டு துவக்கத்தில் கடும் மன அழுத்தம் என்னை சூழ்ந்தது. அதுவரையிலான எனது உறவுகள் அவை சார்ந்த நம்பிக்கைகள் அனைத்தும் கலைந்து நான் எனது தனிமையின் மயான வெளிகளுக்கு திரும்பிவிட்டிருந்த காலம். உடைந்த மனோரதங்களுடன் வாரம் ஒரு முறை எனது மனநல மருத்துவர் டாக்டர் மோகன்ராஜை சந்திப்பேன். எனது பிரச்சினைகளுக்கான காரணத்தை முற்றாக மறைத்து தொடர்ந்து அவரிடம் பொய் களையும் குழப்பமூட்டும் தெளிவற்ற வாக்கியங்களையும் கூறிக்கொண்டிருந்தேன்.


நெஞ்சைப் பிசையும் இரும்புக் கரங்களிலிருந்து என்னை விடுவியுங்கள் என்று அவரிடம் கெஞ்சினேன். அவர் எனக்கு மருந்துகளைக் கொடுத்தார். அவை தூக்கத்தைக் கொண்டுவந்தன. நெஞ்சின் ஆழத்தில் கொந்தளிக் கும் கடல்கள் தூங்க மறுத்தன. அந்தக் காலகட்டத் தில்தான் சுஜாதா அபாயகரமான நிலையில் அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டு மரணத்தின் எல்லை வரை சென்று மீண்டிருந்தார். அவரைத் திரும்பத் திரும்ப போய்ப் பார்த்துக்கொண்டிருந்தேன். எனது பனி எங்கோ உருகத் தொடங்கியது. அவருடைய புத்தகங்கள் சிலவற்றைப் பதிப்பிக்கும் அனுமதியை வழங்கினார். அது ஒரு துவக்கம். எனது துயரத்தின் இருள் படிந்த முகம் கண்ணாடியில் வேறுவிதமாக மாறத் தொடங்கியது. எனக்குத் தேவை மருந்துகள் அல்ல செயல்பாடுகள் என்பதை சுஜாதா எனக்குப் புரிய வைத்தார்.


மிக நெருக்கடியான சந்தர்ப்பங்கள் வந்தன. அவர் மிகுந்த உறுதி யுடன் என்னை ஆதரித்தார். நான் தவறு செய்த சந்தர்ப்பங்களில்கூட அவர் என்னை விட்டுக் கொடுக்கவில்லை. என் வாழ்நாளில் நான் ஒரு போதும் அந்த சந்தர்ப்பங்களை பதிவு செய்யப் போவதில்லை. அவை அந்தரங்கத்தின் வலி மிகுந்தவை. சுஜாதா என் மனதின் ஆழத்தில் இருந்த இருள் முடிச்சுகளை அவிழ்த்தார். அன்பின் வெளிப்படையான உணர்ச்சிகளை அவர் ஒருபோதும் காட்டியவரல்ல. நான் மனம் உடைந்த சந்தர்ப்பங்களில் அவர் ஒரு ஆறுதலோ மறு மொழியோ சொல்ல மாட்டார். மாறாக சில புதிய திட்டங்களைக் கொடுப்பார். அதுவரையிலான துயரத்தின் வாசனை நீங்கிச் சென்றுவிடும்.



உயிர்மை, சுஜாதாவின் புத்தகங்களின் மிகச் சிறந்த பதிப்புகளைக் கொண்டுவந்தது. நண்பர் தேசிகனின் உதவியுடன் அவரது சிறுகதைகள், குறுநாவல் கள், நாடகங்கள் அனைத்தையும் வகைப்படுத்தி தொகை நூல்களாகக் கொண்டுவந்தோம். சிதறிக் கிடந்த அவரது எழுத்துகள் இவ்வாறு தொகுக்கப் பட்டதன் வழியாக சுஜாதாவின் படைப்பின் ஆளுமை துல்லியமாக வெளிச்சம் பெற்றது. உண்மையில் ஊடகங்கள் வழியாக அறியப்படும் பொது முகம் அல்ல சுஜாதாவினுடையது. அவரது எழுத்துகள் தமிழ் எழுத்து முறையின் திசை வழியையே முற்றாக மாற்றி அமைத்தன. தமிழ்ப் புனைகதை மொழியையும் உரைநடை முறையையும் சுஜாதா ஒரு இயக்கமாக செயல்பட்டு மாற்றியதற்கு சாட்சியம் இந்தத் தொகை நூல்கள். 



கடந்த சில ஆண்டுகளில் நான் கவிதைகள் எழுதுவது குறைந்து போனது பற்றி அவர் என்னிடம் திரும்பத் திரும்ப பேசினார். ‘உனது தொழில் உன் எழுத்துகளை கொன்றுவிடக் கூடாது’ என்றார். இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் வாசகர்களுக்குக் கையெழுத்திட்டுக்கொண்டிருந்த இடைவெளியில் ‘சார் உங்கள் கடைசி பக்கத்தை உயிர்மையில் ஆரம்பிக்கிறீர்களா?’ என்று கேட்டேன். ‘எழுதுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை, நீயும் தொடர்ந்து ஏதாவது எழுதுவதாக இருந்தால் நானும் எழுதுகிறேன்’ என்றார். 


அவர் நோய்மையின் துர்க்கரங்களிலிருந்து பல முறை வெற்றிகரமாக மீண்டு வந்திருக்கிறார். இந்த முறை அது நிமோனியாவின் ரூபத்தில் வந்தது. ஒன்றரை மாதங்கள் மருத்துவமனைக்கும் வீட்டிற்குமான போராட்டம் பிப்ரவரி 27ஆம் தேதி இரவு 9.22க்கு முடிவுக்கு வந்தது. செயற்கை சுவாசத்தில் ஏறி இறங்கிக்கொண்டிருந்த அவரது உடல் ஒரு கொடுங்கனவாக மாறியது. ஒருபோதும் கடக்க முடியாத கொடுங்கனவு அது.
சுஜாதா இந்த நூற்றாண்டில் தமிழ் அடைந்த நவீனத்துவத்தின் மாபெரும் மைய நீரோட்டம். அதில் கால் வைக்காமல் படைப்பின் சவால்களை மொழியின் சவால்களை ஒருவர் கடப்பது மிகவும் கடினம்.


எமது எல்லாச் செயல்பாடுகளிலும் சுஜாதாவின் சொல்லின் வலிமையும் அன்பின் நிழலும் படிந்திருக்கிறது. உயிர்மை குடும்பத்தினர் அவரது நினைவு களை நெஞ்சில் ஏந்துகின்றனர்.


( நன்றி: உயிர்மை மார்ச் 2008 )
தமிழ் தொகுப்புகள்

Friday, October 26, 2012

மனுஷ்ய புத்திரனின் சின்மயிக்கு எதிரான நிலைப்பாடு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEic4smqbzXhbxA3xZ5pMvEq6RlmHRlKZpPVx7Fi1L2gnAR18N0M0K4RJ10q6ybCd3N5Jq_J7sYBAWk1ChB9f3_vJzzI2yn_4iGlXB0R8098efXx4060TCYHD2lb-k3DbxFjtHgOTDtqeUC9/s1600/manushya+puthiran.jpgசின்மயி விவகாரம் பற்றி இனி எழுத நேரக்கூடாது என்று நேற்றிரவு கடவுளை பிரார்த்தித்துவிட்டு தூங்கப் போனேன். ஆனால் கடவுள் சின்மயி பக்கம் இல்லாததாலும் நேற்று நான் எழுதிய குறிப்பிற்கு நண்பர்கள் ஆற்றியிருக்கும் எதிர்வினை காரணமாகவும் சில வார்த்தைகள் மீண்டும் சொல்ல வேண்டியதாகிவிட்டது. ஒரு இளம் எழுத்தாளர் என் வாழ்க்கையில் முதன் முதலாக உருப்படியாக பேசுகிறேன் என்று பாராட்டுகிறார்.


 ஒரு சர்வதேச தமிழ் எழுத்தாளர் சுஜாதாவிடம் இல்லாத ஆபாசமா சின்மயிடம் இருக்கிறது என்று கேட்கிறார். இதுபோன்ற அபத்த களஞ்சியங்களுக்கு இடையே நான் முகவும் மதிக்கும் வெங்கடேஷ் சக்கரவர்த்தி போன்ற நண்பர்களும் இந்த விவாத்தில் பங்கேற்றிருப்பதால் பதில் சொல்லவேண்டிய பொறுப்பு இருக்கிறது.



புதிய தலைமுறை, சத்யம் இரண்டிலும் நடந்த விவாதத்தில் பெண்கள் உடல் சார்ந்து ஆபாசமாக விமர்சிக்கப்படுவதை கடுமையாக கண்டித்து பேசியிருக்கிறேன். சின்மயிக்கு செய்யப்பட்ட எதிர்வினையை நான் எந்த இடத்திலும் ஆதரிக்கவோ நியாயப்படுத்தவோ இல்லை. இதில் சம்பந்தபட்ட இரண்டு தரப்புமே ஒரு விவாதத்தை நடத்துவதற்கான தகுதியற்றவர்கள் என்பதையும் பதிவு செய்திருக்கிறேன்.



ஆனால் இந்த பிரச்சினை வெறும் பாலியல் விவகாரம் மட்டும் அல்ல. ஒரு இனப்படுகொலையை புலால் உண்ணும் பழகத்திற்கு இணையாக பேசுகிறார் சின்மயி. இது தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்துகிறது என்றும் புலால் உண்ணும் பழக்கமுள்ள என்னை புண்படுத்துகிறது என்றும் நான் காவல்துறையிடம் சென்றால் என்ன நடவடிக்கை எடுத்திருப்பார்கள்? இணையத்தில் மீனா கந்த கந்தசாமிமீது தொடுக்கப்பட்ட ஆபாசத் தாக்குதல்கள் தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கபட்டு எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள்?



இங்கு அரசியல் அதிகாரம், ஊடக அதிகாரம், காவல்துறை அதிகாரம், நீதிதுறை அதிகாரம் அனைத்திலும் சாதிய ரீதியான – சமூக பொருளாதார அந்தஸ்து ரீதியான பாரபட்சங்கள் மண்டிக்கிடக்கின்றன. இதைத்தான் நான் இந்தப் பிரச்சினையில் மைய்யபடுத்த விரும்புகிறேன்.



மீனவர் படுகொலை, இட ஒதுக்கீடு போன்றவை தமிழ் சமூகத்தின் அரசியல் சரித்திரத்திரம் சார்ந்த ஆதாரமான பிரச்சினைகள். கோடிக்கணகான மக்களின் உணர்வுகள் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன. இது சம்பந்தமாக ஒருவர் எந்த ஒரு வரலாற்றுப் பார்வையும் சமூகப் பார்வையும் இல்லாமல் பேசுவது என்பது கருத்துச் சுதந்திரம் என்று மட்டும்தான் புரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?



ஆபாசம் என்பது பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் மட்டும்தான் என்று உங்களுக்கு யார் சொல்லித் தந்தது? கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவது, அவர்களின் வரலாற்றுத் துயரங்களை அவமதிப்பது எல்லாம் ஆபாசமாகாதா?



குஷ்புவின் மீது தமிழகம் முழுக்க தாக்குதல் தொடுக்கப்பட்டபோது அவருக்கு ஆதரவாக தீவிரமாக குரல் கொடுத்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் சின்மயி விவகாரத்தில் வெளிப்படும் இனவாதத்தையும் சாதிதிமிரையும் அதிகார வர்க்க தொடர்புகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளமல் அவர் மீதான பாலியல் விமர்சங்களை மட்டும் தனியாக எடுத்து விவாதிக்க முடியாது.



நீங்கள் தெருவில் சென்றுகொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் உங்கள் தலையில் தன் வீட்டு மாடியிலிருந்து குப்பையைக் கொட்டுகிறார். நீங்கள் அண்ணந்து பார்த்து கெட்ட வார்த்தை சொல்லி திட்டுகிறீர்கள். ஆனால் குப்பையைக் கொட்டுகிறவருக்கு அது அவருடைய உரிமை என்றும் கெட்ட வார்த்தை சொல்லி திட்டியவர் மட்டும் சமூக விரோதி என்றும் விவாதிப்பது என்ன நியாயம்?



கூடங்குளத்தில் பெண்களை ஆபாசமாக பேசிய காவல்துறையினர் மேல் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?



எல்லாவற்றிலும் நுண் அரசியல் பேசும் நண்பர்கள் எல்லாம் இந்தப் பிரச்சினையில் சின்மயியின் மனோபாவம், காவல்துறையின் அதீத அக்கறை, இணையத்தின் மீது கண்காணிப்பையும் ஒடுக்குமுறையையும் கொண்டுவர விரும்பும் அரசு… இது போன்ற பிரச்சினைகளை எப்படிக் கையாள்கிறது என்பதையெல்லாம் இணைத்து பேச மறுப்பது ஏன்?



நான் சின்மயிக்கு ஆதரவாக தெருவில் நின்று போராட தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கு முன்பு அவர் தமிழர்களிடமும் தலித்துகளிடமும் தனக்கு மாறான வாழ்க்கைமுறையும் உணவுப் பழக்கமும் கொண்டவர்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்

வாசகர்கள் கருத்து


1.

Kraja Raja இது அவசர உலகம். முன்பெல்லாம் சாலையில் செல்லும் போதெல்லாம் யார் மீதும் தவறாக இடித்து விட்டால் "சாரி" கேட்போம்.
இப்போது அப்படி இல்லை நம் மீது தவறு இருந்தாலும் கண்ணு தெரியலையாஃபார்த்து போ என்கிறோம்.
வேணாம் வலிக்குது இத்தோடு விட்டுறுங்க
2.
Anbarasan Vijay இந்த வெளிப்படையான பகிரங்கமான கருத்தைதான் உங்களது முந்தைய தொலைகாட்சி நேர்காணலில் எதிர்பார்த்தேன், எந்த ஒரு கருத்தையும் எதற்காகவும் தயங்காமல் முன் வைக்கும் உங்களிடம் ஏதோ பின்வாங்குதல் இருப்பதாக நினைத்தேன், இந்த பதிவை படித்த பிறகு அந்த குறை தீர்ந்தது, சின்மயியினுடைய சாதிய ரீதியிலான கருத்துக்களால் பாதிக்கப் பட்ட ஆயிரமாயிரம் பேர்களில் நானும் ஒருவன், 
சின்மயி முற்போக்கு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதாலேயே அவரது புகாரின் மீது காவல்துறை அதீத அக்கறையும், அவசரமும் காட்டியுள்ளது, இந்த அக்கறை ஏன் மீனாகந்தசாமி விவகாரத்தில் காட்டப் படவில்லை?,சாதீயம் எல்லா மட்டங்களிலும் தலை தூக்கி நிற்கிறது என்பதற்கு இதுவே ஒரு உதாரணம், உங்களது நிலைப்பாட்டை வழிமொழிகிறேன் உங்களோடு நானும் கைகோர்க்கத் தயார்
3.
Arul Ezhil நன்றி சார். ராஜன்லீக்ஸ், சரவணகுமார் அகியோரை யாரென்றே எனக்குத் தெரியாது. கிட்டத்தட்ட அவர்கள் கைதாகி இரண்டாம் நாள் வரை நான் அமைதியாகவே இருந்தேன். ஆனால் அதன் பின்னர் வந்த செய்திகள் எல்லாம் இவர்கள் சிக்க வைக்கப்பட்டிருக்கிறாள் என்பதை உறுதி செய்த பிறகுதான் நான் எழுதினேன். உங்களைப் பொன்றோர் ஒரு தரப்பை ஆதரிக்காலம் எழுதுவது மன ஆறுதல் அளிக்கிறது.
4.
Mani Kandan ஒரு தனிப்பட்ட பகை, காழ்புணர்ச்சி, உயர் சாதி/மேட்டு குடி வளர்ப்பு முறை, சக நண்பர்கள் உசுப்பு - மொத்த உருவகம் சண்டை இட்ட இரு தரப்பினரும்.

இதில் சின்மை கை ஓங்கி இருபது அவரின் அதிகரவர்க்கத்துடன் இருக்கும் நெருக்கத்தை பட்டவர்தமாக வெளிபடுதிவிட்டார். இது சமூ
கத்துக்கு பெரிய சவால்.
இவருக்கு முன் உள்ள 19 வழக்குகள் பற்றி முச்சி விடாத ஜர்ஜ் - இவருக்கு மட்டும் வரிந்து கட்டுவதில் அப்பட்டமாக தெறிகிறது.

சின்மை அகம்பாவத்தில் பெரும் பங்கு - ஆஹா ஓகோ என்று பொய்யான தோற்றத்தை ஏற்படுத்திய காலன் போல் தோன்றி இருக்கும் வண்ணமிகு தொலைகாட்சி நிறுவனங்களை சேரும்.

பாடினால் / ஆடினால் எதோ உலகத்தில் பெரிய சாதனை புரிந்த போன்று ஒரு மாயை உருவாக்கும் தொழில்சாலையாக தொலைகாட்சி நிறுவனங்களை செயல்படுகின்றன. இவற்றின் இயங்கு தளம் சென்னை அதை சார்ந்த இடம் மட்டுமே, அதனால் தமிழகத்தின் மற்ற பகுதிகள் பற்றி புரிந்து கொள்ளும் தன்மை இவற்றில் உள்ள என்னோயோருக்கு தெரிவது இல்லை - சின்மை உட்பட.

அவர்கள் இதுதான் உலகம் என்று நம்புகிறார்கள், ஆனால் சமுகம் இதைவிட பெரியது, அதை அவ்வளவு எளிதாக நேர்கொள்ள முடியாது.இதை புரியாமல் இதற்கு முதல் பலி - சின்மை.

அதிகம் பாதிப்பு அடைவது சின்மை - அவரின் / அவரை போல் உள்ள சென்னை வாழ் மேட்டு குடி மக்களின் மறு முகம் கிழிந்து விட்டது.

இதனால் சின்மை - இனிமேல் தமிழகத்தின் செல்ல பிள்ளை இல்லை.

பெண்ணிடம் கிழ்த்தரமாக நடந்துகொண்டவன் தமிழன் இல்லை.

இதை தவிர, இந்த விசயத்தில் இரு தரப்பினர் பற்றி விவாதிக்கும் அளவுக்கு தகுதி இல்லை. இருவரும் வேவ்வேறு குட்டையில் ஊறின ஒரே மாதிரி மட்டைகள்.

ஒருவேளை நீங்கள் அய்யா ராகவா ஐயங்கார் வழிமுறை இருந்தால், அவர் பெயருக்கு களங்கத்தை செய்யதிர்கள், தயவுசெய்து.

அய்யா ராகவா ஐயங்கார் அவர்களின் தமிழ் தொண்டு, பற்று கருதி - சின்மை மன்னிப்போம், மறப்போம் - அவர் பாடலை புறக்கணித்து.

நன்றி.
5. Mansoor Ali Khan சின்மாயி செய்தது தவறு என்று கூறுபவர்கள் - ராஜன் செய்ததும் தவறு என்று ஒத்துக்கொள்ளதான் செய்கிறார்கள், மேலும் இது திசை திருப்பபட்ட வழக்கு என்பது தான் அவர்களின் வாதம், ஆனால் சிம்னயின் ஆதரவாளர்கள் - அந்த பெண் கூறியது தவறு என்று ஒத்துக்கொண்டதாக தெரியவில்லை - இது ஆணவத்தின் வெளிபாடாக தான் பார்க்கமுடிகிறது
6. Prasanna Kumar ஆபாசம் என்பது பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் மட்டும்தான் என்று உங்களுக்கு யார் சொல்லித் தந்தது? கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவது, அவர்களின் வரலாற்றுத் துயரங்களை அவமதிப்பது எல்லாம் ஆபாசமாகாதா? - உங்களின் இந்த கட்டுரை சின்மயி விவகாரம் என்பதையும் மீறி நீங்கள் சொன்ன எந்த வாக்கியம் பொதுவானதாக எடுத்துக்கொள்ள வேண்டும்
நன்றி - மனுஷ்ய புத்திரன் ஃபேஸ் புக்  



டிஸ்கி - 1 - சின்மயி போலீசில் புகார் - http://www.adrasaka.com/2012/10/blog-post_3736.html



டிஸ்கி 2 - சமாதான முயற்சிகள் , சின்மயி தரப்பு விளக்கங்கள் | அட்ரா சக்க


http://www.adrasaka.com/2012/10/blog-post_24.html

டிஸ்கி 3 -  ஆனந்த விகடனில் சின்மயி சர்ச்சை | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_25.html


டிஸ்கி 4  -சின்மயி - புதிய தலைமுறை - நேர்படப்பேசு - விவாதங்கள் | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_7117.html


டிஸ்கி 5 -  சாருநிவேதிதா சின்மயி புகார் பற்றி சொன்ன கருத்து |

http://www.adrasaka.com/2012/10/blog-post_26.html


டிஸ்கி 6. - ஜெயமோகன் கருத்து - சின்மயி புகார் பற்றி | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_27.html


டிஸ்கி 7 -ட்விட்டர் ராஜன் கைது ! சின்மயி விளக்கக்கடிதம்
http://www.adrasaka.com/2012/10/blog-post_5516.html


டிஸ்கி 8- லீனா மணிமேகலையின் ஃபேஸ்புக்கில் நிகழ்ந்த சின்மயி சர்ச்சை விவாதங்கள் http://www.adrasaka.com/2012/10/blog-post_4186.html


டிஸ்கி 9 - கோர்ட்டில் சின்மயி எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் | அட்ரா சக்க-http://www.adrasaka.com/2012/10/blog-post_6680.html



Friday, April 13, 2012

டாஸ்மாக் வருமானத்தில் வாழும் அரசு -மனுஷ்யபுத்திரன் பேட்டி இன் விகடன்




மனித மனத்தின் நுட்பமான உணர்வுகளைத் துல்லியமாகப் பிரதிபலிப்பவை மனுஷ்யபுத்திரன் கவிதைகள். சமூக, அரசியல் யதார்த்தங்களை உரக்கப் பேசும் இவர், சமகாலத்தின் குரல்.


1.  ''தமிழர்களின் இலக்கிய ரசனை எந்த அளவுக்குச் செறிவாகி இருக்கிறது?''


சி.பி - தமிழன் கிட்டே இலக்கிய அறிவு எப்பவும் கம்மிதான்.. சாப்பாடு பற்றிய அறிவு தான் ஜாஸ்தி..
''முதலில் தமிழர்களுக்கு இலக்கிய ரசனை என்று ஒன்று இருக்கிறதா? ஒரு துறையில் அதன் தாக்கத்தை அளவிட, ஒரு குறிப்பிட்ட சதவிகித மக்கள் அதில் ஈடுபட வேண்டும். எட்டுக் கோடித் தமிழர்கள் வாழும் தமிழ்ச் சமூகத்தில் எவ்வளவு பேர் இலக்கியம் அறிந்து உள்ளனர்? எவ்வளவு பேர் புத்தகங்கள் படிக்கின்றனர்?


 இன்னும் பலருக்குப் பத்திரிகைக்கும் புத்தகங்களுக்குமான வேறுபாடே தெரியவில்லை.


சி.பி - டீக்கடைல போய் ஓ சி ல படிச்சா அது பத்திரிக்கை.. லைப்ரரில போய் ஓ சி ல படிச்சா அது புத்தகம். இதுதான் தமிழனோட பார்வை 


 மக்களுக்கு அன்றாட வாழ்க்கை யில் ஏராளமான கஷ்டங்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றுக்கு இடையில்தான் சினிமா பார்க்கின்றனர், டி.வி. பார்க்கின்றனர், மற்ற கேளிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் இலக்கியம் என்பதும் ஒரு கேளிக்கைதான். அது ஓர் உயர்தரமான, மனிதனைச் செம்மைப் படுத்தக்கூடிய கேளிக்கை. சக மனிதனைப் புரிந்துகொள்ளவும் வாழ்வை இன்னும் இலகுவாக்கவும் இலக்கியம் சொல்லித்தருகிறது.

திருக்குறளை எடுத்துக்கொள்ளுங்கள்... அதுபோன்ற படைப்பை ஒரு தனி மனிதன் உருவாக்கிவிட முடியாது. ஒட்டுமொத்த சமூகத்தின் அறிவுநிலை அப்படி ஓர் உயர்மட்டத்தில் இருந்தால்தான் அது சாத்தியம். அதேபோல, திருவள்ளுவர் ஒருவர் மட்டும் இருந்திருக்க முடியாது. அவருக்கு முன்னும் பின்னும் பல்லாயிரம் படைப் பாளிகள் இருந்துள்ளனர்



 அப்படியானால், திருவள்ளுவர் எதனுடைய கண்ணி? எதனுடைய தொடர்ச்சி? இதை எல்லாம் நாம் என்றைக்கேனும் யோசித்தோமா? இரண்டாயிரம் வருடத் தமிழ் அறிவின் சாரமான திருக்குறளை, அதன் கவித்துவத் தைக் கெடுத்து, அதன் அறவியல் நோக்கத்தை உதறிவிட்டு, வெறுமனே மனப்பாடப் பொருளாக நம் பிள்ளைகளுக்குக் கற்றுத்தருகிறோம். தமிழ் இலக்கிய ரசனை இந்த அளவில்தான் இருக்கிறது!''


2. ''-மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் என இன்றைய இளைய சமூகம் ஒரு மெய்நிகர் உலகத்தில் (virtual world) வாழ ஆரம்பித்துவிட்டதா?''


சி.பி - நம்மாளு காலைல பல்லு விலக்குறதையே  செல் ஃபோன்ல படம் பிடிச்சு ஸ்டேட்டஸா போடறான். சென்னைல நில நடுக்கம் வந்தப்பக்கூட மாடிப்படில இறங்கி ஓடிட்டே ட்விட்டர்ல ஸ்டேட்டஸ் அப்டேட் பண்றான்.. . 
''இணையத்தின் வழியாக நமக்குத் திறந்துவிடப்பட்டு இருக்கும் உலகம் ஆச்சர்யங்களும் அதிசயங்களும் நிறைந்தது. மனிதகுல வரலாற்றில் இத்தனை கட்டற்ற சுதந்திரம் முன்னொருபோதும் இருந்தது இல்லை. தன் அடையாளத்தை முழுவதும் மறைத்துக்கொண்டு, அடையாளமே இல்லாத இன்னொருவருடன் உரையாடலாம். இது மனிதனுக்குப் பெரிய மன விடுதலையைக் கொடுத்திருக்கிறது

சி.பி - முன்னே எல்லாம் கில்மா படம் பார்க்கனும்னா அதுக்குன்னு இருக்கற தியேடர்க்குப்போய் இண்டர்வெல் பெல் அடிக்கற வரை காத்திருக்கனும்.. இப்போ எல்லாம் நடிகைங்க ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல ரூம் எடுத்து குளிக்கறப்பக்கூட அதை செல் ஃபோன்ல படம் பிடிச்சு  நெட்ல ரிலீஸ் பண்ணிடறாங்க.. டெக்னாலஜி ஈஸ் வெரி வெரி டெவலப்டு.. 




 ஏனெனில், நமது சமூகம் எப்போதும் நமது ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டே இருக்கிறது, இடைவிடாமல் கண்காணிக்கிறது. நவீன தொழில்நுட்பம் மனிதர்களை மேலும் மேலும் தனிமைப்படுத்துகிறது. இணைய உலகில் இந்த தனிமைப்படுத்தலும் கண்காணிப்பும் இல்லை என்பது மனித மனதுக்குப் பெரிய ஆசுவாசம். ஆகவே, நான் இதை எதிர் மறையாகப் பார்க்கவில்லை. யதார்த்த வாழ்க்கையில் வாழ முடியாத வாழ்க்கையைக் கற்பனையில் வாழ்வதற்கான வாசலை விஞ்ஞானம் திறந்துவிட்டுள்ளது.

 சி.பி - இந்த சேட்டிங்க் மேட்டர்ல பெண்கள் ஜாக்கிரதையா இருக்கனும்.. சாரு மாதிரி பாவாத்மாக்கள் கிட்டே மாட்டிக்கிட க்கூடாது



 இதை அனுபவிப்பதற்கான உரிமை எல்லோருக்கும் உள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு இந்த சைபர் ஸ்பேஸ் மிக முக்கியமானது. இதுவரை நம்மைக் கண்காணித்து, கட்டுப்படுத்தி அதன் மூலம் அதிகாரத்தைச் சுவைத்தவர்கள்தான் இப்போது பதற்றத்துடன் எதிர்க்கின்றனர்!''



சி.பி - வீட்டில் நெட் வைத்திருப்பவர்கள் குழந்தைகளை தங்கள் மேற்பார்வையில் வைத்திருப்பது நல்லது. நெட் செண்ட்டர் அனுப்ப வேண்டிய சூழல் வந்தால் குழந்தைகளுடன் பெற்றோரில் ஒருவர் உடன் செல்வது நலம்..  

3. ''காதல் இப்போதும் புனிதமானதுதானா?''

சி.பி - காதல் எப்போதும் புனிதமானதுதான்.. ஆனால் காதலர்கள் தான் பாவம் பண்ணி பேரை கெடுக்கறாங்க. 
''காதல் எப்போதும் காதலாக மட்டும்தான் இருந்திருக்கிறது. அது புனிதமானதாகவோ, புனிதமற்றதாகவோ ஒருபோதும் இருந்தது இல்லை. எல்லா அடிப்படைத் தேவைகளையும்போல காதலும் ஓர் ஆதாரமான தேவை. குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களில்கூடக் கலப்படம் வந்துவிட்ட உலகில், காதல் மட்டும் எப்படித் தூய்மையானதாக இருக்க முடியும்

 சி.பி - இந்த உலகில் கலப்படம் இல்லாதது தாய்ப்பாலும் ,இளநீரும் தான்



 ஆனால், நடைமுறையில் சாத்தியப்படாத அப்படி ஒரு தூய்மைவாதக் காதலுக்கு மனித மனம் ஏங்குகிறது. கற்பனையின் வழியே காதலின் முழுமையை அடையத் துடிக்கிறது. நமது இலக்கியங்கள் அதற்குத் துணை செய்கின்றன. யதார்த்தம் அப்படி இருக்க முடியாது என்பதால், காதல் புனிதமானதாக இருப்பது இல்லை!''  

4. ''இலக்கு நிர்ணயித்து விற்பனையைப் பெருக்கும் அளவுக்கு அரசு டாஸ்மாக் மீது கரிசனத்துடன் இருப்பதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?''


சி.பி - கவர்மெண்ட்டோட முக்கிய வருமானமே சரக்குல தானே?

''ஓர் அரசுக்குக் குறைந்தபட்சப் பொறுப்பு உணர்வு வேண் டாமா? டாஸ்மாக் மூலம் வரும் பணத்தை அரசு வருமானமாகப் பார்க்கிறது.அது எங்கே இருந்து வருகிறது? கோடிக்கணக்கான ஏழை மக்கள் தங்கள் உழைப்பை விற்றுச் சம்பா திக்கும் பணம்


 பிள்ளை களுக்குப் பால் டின் வாங்க வும் அடுத்த வேளை உண வுக்கு அரிசி வாங்கவும் வைத்திருந்த பணம். சாரா யத்தை ஊற்றிக்கொடுத்து, அவன் போதையில் இருக் கும்போது அந்தப் பணத்தை வழிப்பறி செய்வது அயோக்கியத்தனம் இல்லையா? ஆனால், இது குறித்து அரசாங்கத்துக்கு வெட்கமே இல்லை.
லாட்டரிச் சீட்டை ஏன் தடை செய்தார் கள்? ஏழைக் குடும்பங்களைப் பாதிக்கிறது என்றுதானே? அதே காரணம் குடிக்கும் பொருந்தாதா? அதைவிடவும் பன்மடங்கு பாதிப்பு ஏற்படுத்தும் குடியை ஊக்குவிப் பதும் பரவலாக்குவதும் மக்கள் நல அரசு செய்யும் வேலையா?
உலகின் பல சமூகங்களில் குடி என்பது ஓய்வு நேரப் பொழுதுபோக்கு. இங்குதான் வாழ்க்கைமுறையின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் எத்தனை லட்சம் குடும்பங்கள் நிர்கதி ஆக்கப்பட்டு உள்ளன? எத்தனைகுழந் தைகள் அநாதைகளாக அலைகின் றனர்? எத்தனை லட்சம் தொழிலாளர் கள் உழைக்கும் திறனை இழந்து, நோய் களால் பாதிக்கப்பட்டு உள்ளனர்? 



ஏன் அரசு இது குறித்த சிறு அக்கறையும் இல்லாமல் இருக்கிறது? குடியைத்தடை கூடச் செய்ய வேண்டாம்... குறைந்த பட்சக் கட்டுப்பாடு கொண்டுவரலாம் அல்லவா? ஏன் நாள் முழுக்க டாஸ் மாக் கடை திறந்திருக்க வேண்டும்? அரிசி இத்தனை கிலோதான் என்று கட்டுப்பாடு இருக்கும்போது சாராயத் துக்குக் கட்டுப்பாடு இருந்தால் என்ன தப்பு?''
5. ''இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் சவால்களாக நீங்கள் எவற்றைக் கருதுவீர்கள்?''



சி.பி - இளைஞர்கள் இப்போது சந்திக்கும் மிகப்பெரிய சவாலே வேலைதான்.. அதுவும் ஐ டி டிபார்ட்மெண்ட்டில் வேலை செய்யனும்னு துடிக்கிறான்.. அதுல தான் அதிக வருமானம் வருது. இப்போ பெண் வீட்டாரும் அதுதான் விரும்பறாங்க.. டாக்டர், எஞ்சினியர் காலம் எல்லாம் மலை ஏறிடுச்சு
''முந்தைய தலைமுறை மீது இல்லாத அழுத்தமும் சுமையும் இன்றைய இளைஞன் மீது படிந்திருக்கிறது. அவன் எதிர்கொள்ளும் மன நெருக்கடிகளும் சவால்களும் மிக அதிகம். குடும்பத்தின் தேவைகள், அலுவலக நெருக்கடிகள், வேலை கிடைக்காத சூழல் என அவன் எப்போதும் அவநம்பிக்கை யோடு வாழ்கிறான்.



 35, 40 வயதுகளில்கூட திருமணம் குறித்தோ, எதிர்கால வாழ்க்கை குறித்தோ சிந்திக்கக்கூடத் திராணியற்ற இளைஞர்களை நகரங்கள் உற்பத்தி செய்கின்றன. இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தை நாம் பேசுவோம். வட மாநிலத் தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் இங்கு பணிபுரிகின்றனர். அவர்களை எந்தக்குற்ற உணர்வும் இல்லாமல் குறைந்த கூலிக்குச் சுரண்டுகிறோம். முறையான வாழ்விடம் தரப்படுவது இல்லை.



 வட மாநிலக் குழந் தைகள் படிப்பதற்கான வாய்ப்பு இல்லை. பிழைப்பு தேடி இங்கு வந்துள்ள அவர்களை முதலில் பரிவுடன் அணுக வேண்டும்.அவர்களின் குற்றச் செயல்கள் தொடர் பான விசாரணைகள் தனி. ஒரு குறிப்பிட்ட சமூகம் பெரும் அளவில் இடம்பெயர்ந்து வரும்போது, அதில் ஒரு பகுதியினர்குற்றச் செயல்களில் ஈடுபடுவது இயல்பானதுதான். அதற்காக ஒட்டுமொத்தக் குற்றங்களுக்கும் வட மாநிலத்தவர்களைக் காரணமாக்குவது தவறு.


தமிழ்நாட்டில் நடைபெறும் அத்த னைக் குற்றங்களையும் வட மாநிலத் தவர்கள்தான் செய்கிறார்களா என்ன?''

6. ''தனி நபர்களை மையமாகக்கொண்ட அரசியல் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எந்த விதத்தில் பாதிக்கும்?''



சி.பி - மன்னராட்சி போய் மக்கள் ஆட்சி வந்தாலும் தமிழன் இன்னும் அதுல இருந்து மீண்டு வர முடியலை.. நேரு பரம்பரை மத்தியிலும், கலைஞர் பரம்பரை மாநிலத்திலும் தொடரும் அபாயம் இருக்கு. 
''ஓர் இயக்கம்தான் கோட்பாட்டு முடிவு களை எடுக்க முடியும். ஆனால், தமிழ்நாட்டில் கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த் எனத் தனி நபர்களை முன்னிலைப்படுத்தும் அரசியல்தான் நடக்கிறது. இந்தத் தனி நபர்களின் விருப்பு, வெறுப்புகள்தான் ஒட்டுமொத்தத் தமிழக அரசியலின் திசையை, தன்மையைத் தீர்மானிக்கின்றன


 இது ஓர் அரசியல் சூனியத்தை தமிழ்நாட்டில் உருவாக்கி இருக்கிறது. இது நீடிக்கும் வரை தமிழர்களின் எந்தப் பிரச்னைக்கும் ஒரு நியாயமான தீர்வை நம்மால் எதிர்பார்க்க முடியாது!''