Showing posts with label மனிதன் - சினிமா விமர்சனம் . tamil film review. Show all posts
Showing posts with label மனிதன் - சினிமா விமர்சனம் . tamil film review. Show all posts

Friday, April 29, 2016

மனிதன் - சினிமா விமர்சனம்

a

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் முன்னாள் முதல் காதலன் சல்மான்கான் பிளாட் ஃபார்ம் வாசியை கார் ஏற்றி கொலை செய்து விட்டு பின் ஒரு குமாரசாமியிடம் கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் கொடுத்து தப்பிச்சார் இல்லையா> அதுதான் கதைக்களம். வக்கீலா வரும் ஹீரோ அந்த கேசை எடுத்து நடத்தி ஏழைக்கு நீதி வழங்கச்செய்தாரா> என்பதே திரைக்கதை 

ஹீரோ ஒரு  வக்கீல் . அவருக்கு ஒரு காதலி, முறைப்பெண் தான். மூணு வருசமா லவ்வறாங்க. முறைப்பெண் வயசுக்கு வந்ததில் இருந்தே ஏன் லவ்வலை?ன்னு லாஜிக் கேள்வி எல்லாம் கேட்கப்படாது


ஹீரோ பணக்காரன் கிடையாது. ஏன்னா அது ரஜினி தான். அதனால தனக்கு பேரும் புகழும் கிடைப்பது போல் ஒரு கேசில் ஜெயிக்கனும் என்ற லட்சியத்தோடு இருக்கார்.


 வில்லன்  பிளாட்ஃபார்ம்வாசிகள் 6 பேரை கார் ஏற்றிக்கொன்ற வழக்கில் ஆஜர் ஆகி எப்படி ஜெயிக்கிறார்? என்பதே  திரைக்கதை


 ஓப்பனிங் பஞ்ச் டயலாக், ஓப்பனிங்க் சாங்  ஃபைட் எதுவும் இல்லாமல்  மிக சாதாரணமாக இயல்பாக அறிமுகம் ஆகி ச்பாஷ் போட வைக்கிறார் உதய் நிதி.  லஞ்சம் வாங்கும் சராசரி ஆளாக, காதலியிடம் அவமானப்படும் ஆளாக, யாரோ  ஒருவரிடம் கன்னத்தில் அறை வாங்கும்போதும்  மிக் இயல்பான  நடிப்பு ,சபாஷ்

ஹீரோயின் ஹன்சிகா, பூரிப்பு குறைஞ்சிருச்சு. ஐ மீன் முகத்தில் மலர்ச்சி கம்மி ஆகிடுச்சு. சிம்பு பிரிவாக இருக்கலாம்


 பிரகாஷ் ராஜ் தான் வக்கீலாக கலக்குபவர். வசன டெலிவரியில்  பிஹெச்டி முடிச்சவர் சபாஷ்

திரைக்கதை  வசனம் இயக்கம் எல்லாம் கனகச்சிதம்.

ஒளிப்பதிவு நார்மல் ஆனால்  இசை  பின்னணி இசை எல்லாமே ரொம்பவே அடக்கி வாசிக்கப்பட்டது ஏனோ?  இது போல் ஒரு கோர்ட் ஸ்பெஷல் கதையில்  பிஜி எம் பின்னி பெடல் எடுத்திருக்க வேண்டாமா?

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு  ஓக்கே ஆனால்  ஒப்பனை சரி இல்லை. அய்யோ பாவம்


தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


எதிர்க்கட்சித்தலைவர் பேரன் ப்டமாக இருந்தாலும் மக்கள் மனதை ஆளும் பட்சி யாக உதயநிதியின்  மனிதன் # ப்ரமோ ஐடியா

   ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின் த ரேஸ்  ஃபார்முலாவில் நிதானமான மெதுவான நம்பகத்தன்மையுடன் கூடிய திரைக்கதை கோர்ட் பேக் ட்ராப்பில் #மனிதன்


3   மிக நேர்த்தியான திரைக்கதை. மிக மெதுவாகச்செல்லும் நதி நீர் போல் உதய நிதி @ ஹிஸ் பெஸ்ட் மூவி # மனிதன்- இடைவேளை வரை ஓக்கே குட்


பக்கா  திமுக எதிர்ப்பாளர்களான அண்ணன் இட்ஸ் பிரசாந்த் , அமஸ் மேடம்  இருவருக்கும் சத்ய சோதனை, மனிதன் பட த்துகு பாசிட்டிவ் ரிவ்யூ கொடுத்தே ஆகனும். இப்ப என்ன செய்வாக?




 நச் டயலாக்ஸ்


1  உன் வக்கீல்  யாரு?

 சக்தி சாரு

 சாரா? இனி எந்த சக்தியாலும் உன்னை காப்பாத்த முடியாது # மனிதன்


தோசைக்கல் உள்ளே இருந்தா பெரிய ஹோட்டல், வெளியே இருந்தா சின்ன ஹோட்டல், ஆனா மாவு 1 தான் # மனிதன் ( ட்விட்டரிலிருந்து எடுத்தாளப்பட்ட டயலாக்)


3  தப்பு பண்றவனுக்கு பெயில் வாங்கித்தர்றதுதானே ஒரு  வக்கீலோட வேலை? #மனிதன்


4   கோபித்த காதலியை சமாளிக்க அழகிய வழி 

டியர் முதல்ல இருந்து காதலிப்போமா? என கேட்பதே # மனிதன்


5  லாயர் வேலையோ புரோக்கர் வேலையோ காசு என்னைக்கும் காசுதானே? #மனிதன்


 காசால எல்லாத்தையும் விலை கொடுத்து வாங்கிடலாம்னு நினைப்பது தப்பு. மரியாதையையும், சந்தோஷத்தையும் காசு கொடுத்து வாங்க முடியாது#மனிதன்

நான் செஞ்சது சரிதானா?

 நீ அடிச்ச சிக்சர்ல BALL லையே காணோம்னா பார்த்துக்கோ #மனிதன்

8  எனக்கு கான்ஸ்டபிளை  தெரியும்’

 எனக்கு கமிசனரையே தெரியும் ஆனா இந்தக்கேசில் 1ம் பண்ன முடியாது #மனிதன்

 உண்மைக்காகப்போராடும்போது எப்படி உணர்ச்சிவசப்படாம இருக்க? #மனிதன்


10  நீதிதேவதைக்கும் , சட்டத்துக்கும் வேணா எதுவும் தெரியாம இருக்கலாம், ஆனா நீதிபதியின் கண்ணுக்கு  எல்லாம் தெரியும் $மனிதன்

11  நான் ஜெயிப்பேனா? தோற்பேனா தெரியலை, ஆனா கடைசி வரை உண்மைக்காகப்போராடுவேன் #மனிதன்











சபாஷ் இயக்குநர்


1 கோடிக்கணக்கான சொத்து இருந்தும் மிக அடக்கமான ஹீரோவாக யதார்த்தமாக வரும் தயாரிப்பாளர் கம் ஃபைனான்சியர் உதயநிதி சபாஷ் போட வைக்கிறார் #மனிதன்

2    பிர்காஷ்ராஜ்  விளையாடும்போது  டேபிள் மேல் இருந்த எல்லா பந்துகளும் மறைந்து  எலிகளாக தெரிவதும் அவர் மிரள்வதும்

3  வசனங்கள்  செம கெத்து.


4 லாயர்  பிரகாஷ்ராஜை கொலைகாரனின் அப்பா, தாத்தா  மிரட்டும் காட்சி


5   கார் டிரைவரின் சாட்சியை  ஹீரோ மடக்கும் இடம். அப்ளாஸ்  சீன் கீரே இல்லாத  ஃபாரீன் காரில் 3 வது  கீரில்  போனதாக சொல்வது, மாட்டுவது


லாஜிக் மிஸ்டேக்ஸ்


1   கோர்ட்,லயே  பப்ளிக்கா ஒரு குமாரசாமி ஒரு வக்கீல் கிட்டே லஞ்சம் கேட்கறாரு, கூறு கெட்ட குப்பன் கூட அப்டி கேட்க மாட்டான் #மனிதன்



2  தனக்கு லஞ்சமாக தரப்பட்ட காரை  பிடிச்சிருந்தா வெச்சுக்கனும், பிடிக்கலைன்னா வேணாம் சொல்லனும். எதுக்கு காரை சுக்கு நூறா உடைச்சு சீன் போடறார்  ஹீரோ?


3   இப்பதான் முதல் முறையா கேஸ் வாதாடறான் என ஒரு டயலாக் விவேக் டூ மயில்சாமி  அபவுட் உதயநிதி, வருது.ஆனா ஆல்ரெடி அவர் 3   கேஸ்  வாதாடினவர்


4   ஹீரோவை  வில்லனின் ஆட்கள்  குடிசைவாசிகள்  முன்னால் அடிப்பதும்  அனுதாபம் வர வைப்பதும்  செயற்கை, அடிக்கறவங்க ஆள் நடமாட்டம்  இல்லாத  இடத்துக்கு  கூட்டிட்டு போய் அடிக்கலாமில்ல?

5  ஹெல்மேட்  ஏன் போடலை?

 ஹேர்ஸ்டைல் கலைஞ்சிடும்

 இந்த டயலாக்கை சென்சார்ல எப்படி விட்டாங்க? அட்லீஸ்ட்  சைடில் ஒரு விழிப்புணர்வு  வாசகமாவது  போடலாமில்ல?

 சி பி கமெண்ட்  -மனிதன் -  உதயநிதி ஸ்டாலினுக்கு அமைந்த  நீட் ஹிட்  ஃபிலிம்., ஏ பி செண்ட்டர்  ஹிட் , விகடன் மார்க் = 43 , ரேட்டிங் = 3 / 5


Perundurai Murugan theatre 🎦 erode district