பொதுவா கிராமத்துல இருந்து நகரத்துக்கு வர்ற பெருசுங்களை மஞ்சப்பைன்னு கிண்டலா சொல்வாங்க .ஆனா அந்த மாதிரி பெரியவங்க கிட்டே நமக்குத்தெரியாத , நம்ம கிட்டே இல்லாத அனுபவ அறிவு இருக்கு அவங்களை அலட்சியப்படுத்தக்கூடாது,அவங்க அட்வைஸ் நமக்கு என்னைக்கும் தேவை என்பதை உணர்த்தும் படம் தான் 130 நிமிடங்கள் ஓடும் இந்த மஞ்சப்பை .அதனால மஞ்சள் துண்டு , மஞ்சப்பை கிட்டே நாம எப்பவும் ஜாக்கிரதையாவே இருந்துக்கனும்.
ஹீரோ ஐ டி கம்பெனில ஒரு லட்சம் ரூபா சம்பளம் மாசா மாசம் வாங்கும் ஆள் . அவர் நகரத்தில் இருக்கார் . தாத்தா கிராமத்தில் . அம்மா, அப்பா சின்ன வயசுலயே இல்லை , எல்லாம் தாத்தா தான் . சிட்டில கண் டாக்டரை எதேச்சையா சந்திச்சு ஹீரோ லவ்வறார். காதலுக்கே கண் இல்லைங்கறப்போ காதல்ல விழுந்த கண் டாக்டருக்கு மட்டும் கண் இருக்கவா போகுது ? அதும் லவ்வுது .
கிராமத்துல இருந்து தாத்தா வர்றார் . அவர் அப்பாவித்தனமா செய்யும் பல விஷயங்கள் ஹீரோவுக்கு எதிரா முடிஞ்சிடுது . ஹீரோயின் காதல் பரிசா கொடுத்த சட்டையை வேற யாருக்கோ தந்துடறார் தாத்தா . இது ஹீரோயினுக்குப்பிடிக்கலை .
ஹீரோ குடி இருக்கும் அபார்மெண்ட்டில் எல்லோர் வெறுப்பையும் சம்பாதிக்கிறார் தாத்தா .அவர் எப்படி எல்லோர் மனதிலும் இடம் பிடிக்கிறார் என்பதே மிச்ச மீதிக்கதை
ஹீரோ சந்தேகமே இல்லாம ராஜ் கிரண் தான் . கலக்கலான நடிப்பு . அவர் பேரன் மீது மட்டும் இல்லாமல் அபார்ட்மெண்ட்டில் குடி இருக்கும் அனைவர் மீதும் அன்பைப்பொழிவது கிராமத்து யதார்த்தம் . தவமாய் தவமிருந்து படத்துக்குப்பின் இவருக்கு கிடைச்ச நல்ல தீனி இந்தப்படம்
செகண்ட் ஹீரோவா விமல் . குறை சொல்ல முடியாத நடிப்பு . செமயான குத்தாட்ட சாங்கில் கூட அழகிரி மாதிரி தேமே என்றிருப்பது கடுப்பை வரவழைக்கிறது
ஹீரோயினா திருப்பதி லட்டு , புட்டு வைத்த குழாப்புட்டு , தாடையில் இருக்கும் தழும்பைக்கூட அழகின் இன்னொரு லேண்ட் மார்க்காக மாத்திய மார்க்கமான பொண்ணு கண்ணுக்கு லட்சணமான லட்சுமி\மேணன் . இவரது டிரஸ்ஸிங்க் சென்ஸ் வழக்கம் போல் அருமை . நதியாவுக்கு அடுத்து ஆடை கலையாமல் பார்த்துக்கொள்ளும் அருமை நாயகி . சில காட்சிகளில் வில்லியாக தோன்ற வேண்டிய கட்டாயம் .
பூவே பூச்சுடவா படத்தின் உல்டா \ரீமேக்காக அதாவது பாட்டி பேத்தி க்குப்பதிலாக தாத்தா - பேரன் கதை , அதை இயக்குநர் பாசிட்டிவ் ஸ்பெஷலிஸ்ட் விக்ரமன் இயக்கினால் எப்படி இருக்கும் ? அது போல் குடும்பப்பாங்கான கதை
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1. ராஜ் கிரண் பாத்திரப்படைப்பு , அவர் நடிப்பு கனகச்சிதம் . தாய்க்குலங்களை கண்ணீர் சிந்த வைக்கும் காட்சிகள் ஆங்காங்கே
2 லட்சுமி மேணன் - விமல் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள்
3 அபார்ட்மெண்ட் ஆட்களிடம் ராஜ் கிரண் பாசமாகப்பழகுவது , வீட்டு ஆள் போல் நடந்து கொள்வது எல்லாம் நம்ம வீட்டில் இப்படி ஒரு தாத்தா இல்லையே என ஏங்க வைக்கும் காட்சிகள்
4 பாடல் காட்சிகள் இதம் . லட்சு போடும் டப்பாங்குத்து ஆட்டம் ஃபை ஃபை ஃபை கலாய்ச்சி ஃபை டான்ஸின் உல்டா தான் , இருந்தாலும் ரசிக்கலாம் . இந்தப்பாட்டில் லட்சு தொப்புள் காட்டி நடிச்சிருக்கார் . அது கிராஃபிக்ஸ் என சர்ச்சை வரப்போகுது
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. ஐ டி டிபார்ட்மெண்ட்டில் ஒர்க் பண்ணும் ஆள் பிராஜக்ட் எனும் வார்த்தைக்குக்கூட ஸ்பெல்லிங்க் தப்பா அடிக்கும் ஆளா இருப்பாரா? காமெடிக்குன்னாலும் ஒரு லாஜிக் வேணாமா ?
2 ஓப்பனிங்க் சீனில் ஹீரோ - ஹீரோயின் டிராஃபிக் போலீசிடம் மாட்டி தாங்கள் போலீஸ் டிபார்மெண்ட் , உங்களை செக் பண்ண வந்திருக்கோம் என்பது காதில் பூ . அவர் ஐ டி கார்டு கேட்க மாட்டாரா ?
3 அப்பா போலீஸ் ஆஃபீசர் , இவர் கண் டாக்டர் . ஆனா ஸ்கூட்டில தான் வருவார் போவாரா? கார் இருக்காதா ? அப்படியே ஸ்கூட்டி ல டெய்லி போகிறவரா இருந்தாலும் லைசென்ஸைக்கூட வண்டில வெச்சிருக்க மாட்டாரா?>
4 முன் பின் பாராத போலீஸ் ஆஃபீசரை அவர் வீட்டுக்கே போய் ராஜ் கிரண் அறையும் காட்சி செயற்கைத்தனம் . அப்போ அந்த போலீஸ் ஆஃபீசரின் பாடி லேங்குவேஜ் சரி இல்லை
5 காதலன் குடி போதையில் இருந்தால் டாக்சியில் ஏத்திட்டுப்போகாமல் ஸ்கூட்டியில் உட்கார வெச்சு இப்படியா ஊருக்கே வெளிச்சம் போட்டுக்காட்டுவார் சிட்டி பொண்ணு?
6 அழுத்தமான சம்பவங்கள் மிகவும் குறைவு . ரொம்ப நாடகத்தனமான காட்சிகள் திரைக்கதையின் பலவீனம்
7 இடைவேளை ட்விஸ்ட்டாக வரும் லேப்டாப்பை மைக்ரோ வோவன் என நினைத்து ராஜ் கிர\ண் அடுப்பில் வைக்கும் காட்சி எல்லாம் ஓவர் . அவர் விமல் வீட்டில் வந்து பல நாட்கள் தங்கி இருக்கும்போது விமல் லேப்டாப்பில் ஒர்க் பண்றதை பார்த்திருக்க மாட்டாரா?
8 க்ளைமாக்சில் தாத்தா மன நலன் குன்றியவராக மாறுவது வலிய திணிக்கப்பட்ட செண்ட்டிமெண்ட் காட்சி . அனுதாப ஓட்டு வாங்க அரசியல் வாதிகள் ஆள் விட்டு தன்னைத்தானே அறையச்சொல்வது போல் இயக்குநர்கள் இப்படி நெகடிவ் க்ளைமாக்ஸ் வைப்பது பெருகி விட்டது
9 திரைக்கதையில் பெரிய திருப்பம் , சின்ன திருப்பம் , மீடியம் திருப்பம் எதுவுமே இல்லை . சின்னக்குழந்தை கூட கணித்து விடக்கூடிய மிகச்சாதாரண திரைக்கதை மைனஸ்
மனம் கவர்ந்த வசனங்கள்
1 அம்மா ,அப்பா தான் என் கிட்டே சொல்லாமயே செத்துப்போய்ட்டாங்களே.இனி எல்லாமே எனக்கு தாத்தா தான் # மஞ்சப்பை
2 காபி வாங்கவே காசில்லை.காப்பீட்டுத்திட்டத்துக்கு காசுக்கு எங்கே போவேன்? # மஞ்சப்பை
3 லட்சு - உனக்கு நான் முக்கியமா? தாத்தா முக்கியமா? இப்பவே தெரிஞ்சாகனும்
விமல் - என்னடி ரொம்பக்குதிக்கறே?எனக்கு என் தாத்தா தான் முக்கியம்
4 லட்சு = நாளை என் பர்த் டே
விமல்=அடடா ,மறந்துட்டேனே?
லட்சு=ம்க்கும்.நினைவிருந்தாத்தானே மறக்க?போடா!
5 வீட்ல ஒரு நல்லது கெட்டது எடுத்துச்சொல்ல பெரியவங்க ஒவ்வொரு விட்டிலும் இருக்கனும் # ம பை
6 டியர்.இந்த உலகத்துலயே அழகான பரிசு உனக்கு வாங்கிட்டு வந்திருக்கேன்
லட்சு= என்னடா?இது?கண்ணாடி?
ம்.உன் முகம் இது ல தெரியும் #ம பை
7 நேர்த்திக்கடனுக்கு வெச்சிருந்ததை ஏன் அநாதை இல்லத்துக்கு தந்துட்டீங்க?
ராஜ்கிரண் = சாமிக்கு செய்வதும் ,ஆசாமிக்கு செய்வதும் 1 தானே? #,ம பை
8 உன் ஆளு எப்போ பாரு அவன் பிரண்ட் கூடவே சுத்திட்டு இருப்பான் போல
லட்சு = சும்மா இருடி.அது பிரன்ட் இல்லை.அவன் தாத்தா
9 லட்சு = பீர் சாப்ட்டு ஹேங்க் ஓவர் ஆகிட்டே .இந்தா மோர் சாப்பிடு.சரி ஆகிடும் # மோர் ல இப்டி 1 இருக்கோ?
10 பணம் காசு சம்பாதிக்கறதை விட முக்கியம் மனுசங்களை சம்பாதிப்பது # ம பை
படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S
1. தென்னங்கீற்றில் கண்ணாடி ,வாட்ச் செய்து குழந்தைக்கு மாட்டிவிடும் ஆர்ட் டைரக்டரின் அழகியல் நேர்த்தியுடன் மங்களகரமான ஓப்பனிங்# மஞ்சப்பை
2 பியூட்டி குயின் லட்சுமிமேனன் ஸ்கூட்டியில் # ஓப்பணிங்
3 லட்சுமிமேனன் ஒரு சாயல்ல ஆசை சுவலட்சுமி மாதிரியும் , ஒரு கோணத்தில் சரிதா மாதிரியும் இருக்கு.
4 லட்சுமி கண் டாக்டராம்.அய்யகோ.அதுதான் பத்தாங்கிளாஸே இன்னும் முடிக்கலைனு சொல்லுச்சே?
5 சுடிதார் போட்ட சுங்குவார் சத்திரமே! #,லட்சுமிமேனன் ஆடை வடிவமைப்பு அசத்தல்கள்
6 முழு உடலையும் கவனமாகப்போர்த்தி எந்த உடையிலும் கண்ணியமாக கவர் செய்வதால் இனி இவர் கவரிங் ஸ்டார் லட்சு
7 லட்சுக்கு தங்கச்சியா ஒரு ரவா லட்டு .யாரு? டைட்டில்ல பேரே போடலை
8 விமல் விஜய் மாதிரி (,சக்கரை நிலவே ஸ்டெப்) டான்ஸ்.முடியல
9 ராஜ்கிரண் ,விமல் 2 பேரும் 4 சீன் ல அழும்போது கூட தாங்கிட்டேன்.லட்சு ஒரு சீன் ல கண்ணீர் விடுதே.அடடா
10 அய்யய்யோ விஷால் சார்.யுவர் அட்டென்சன் ப்ளீச்.விமல் லிப் கிஸ் டூ லட்சு. என்னய்யா ஆளாளுக்கு கிஸ் அடிக்கறாங்க.இது தப்பில்லையா?
11. ஏகோபித்த ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க லட்சுமி மேனன் ன் மஞ்சப்பை (,சிங்குலர்) @iyyanars: @senthilcp pic.twitter.com/Lp7YoJdbAu"
சி பி கமெண்ட் -மஞ்சப்பை - தாத்தா பேரன் பாசம் சொல்லும் பேமிலி மெலோ டிராமா,ராஜ்கிரண் நடிப்பு டாப் = விகடன் மார்க் =42 ,ரேட்டிங் = 2.75 / 5
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =42
குமுதம் ரேட்டிங்க் = ok
ரேட்டிங் =2.75 / 5
லட்சுமிகரமான லட்சுமிமேனன் படம் நெய்வேலி மகா லட்சுமில்.மஞ்சள் பெயின்ட் மஞ்சப்பை மேட்சுக்கு மேட்ச் பை மஞ்ச மாக்கான்
டிஸ்கி-
http://www.adrasaka.com/2014/
டிஸ்கி-
உன் சமையல் அறையில் -சினிமா விமர்சனம்
http://www.adrasaka.com/2014/ 06/blog-post_7504.html
- Vimal as Tamil
- Lakshmi Menon as Karthika Menon
- Rajkiran as Venkatasamy
- Prathap Pothen as Arokyaraj
- Vaiyapuri
- Devipriya
Production poster
|
||||
Directed by | Naveen Raghavan | |||
---|---|---|---|---|
Produced by | N. Subash Chandrabose A. Sargunam Nandha Kumar |
|||
Starring | Vimal Lakshmi Menon Rajkiran |
|||
Music by | N. R. Raghunanthan | |||
Cinematography | Masani | |||
Editing by | Deva | |||
Studio | Thirupathi Brothers A Sargunam Cinemaz | |||
Distributed by | Thirupathi Brothers[1] | |||
Country | India | |||
Language | Tamil |
No | Title | Singer | Length |
---|---|---|---|
1 | Aagaasa Nilavu | S.P. Balasubrahmanyam | 04.24 |
2 | Anbu Dhaan | Krishnaraj | 03.39 |
3 | Ayyo Ayyo | Laxman, Rishi, Sailaxmi, Harish, Ayshwarya, Asvitha & Vaishali | 03.37 |
4 | Paathu Paathu | Hariharasudhan & Vandana Srinivasan | 03.56 |
5 | Sattena | Karthik | 04.21 |