Showing posts with label மசாலா. Show all posts
Showing posts with label மசாலா. Show all posts

Monday, May 14, 2012

DAMMU - ஜூனியர் என் டி ஆர்,த்ரிஷா,கார்த்திகா - தெலுங்கு சினிமா விமர்சனம்


http://www.teluguwave.in/wp-content/uploads/2012/04/Dammu-Latest-New-Wallpapers-1.jpgஎத்தனை ஜென்மம் எடுத்தாலும் தெலுங்கு ரசிகர்கள் திருந்தவே மாட்டாங்க என்பதற்கு இந்தப்படம் ஒரு உதாரணம்.. 1990 களில் நம்ம தமிழ் நாட்ல துவைச்சு காயப்போட்டு சலிச்சுப்போன மசாலா குப்பை தான்.. ஹீரோயிஸம் ஓவரோ ஓவர்.. ஆனா இந்தப்படம் தெலுங்குல ஹிட் ஆகிடும்னு தோணுது.. 

 ரஜினி நடிச்ச உழைப்பாளி, வேலைக்காரன், தர்மதுரை எல்லாத்தையும் ஒரு குடுவைல போட்டு அங்கங்கே சில சீன்கள் சுட்டு 2 ஹீரோயின்களையும் உள்ளே நுழைச்சுட்டா கதை ரெடி.. 

ஊர்ல எங்கே அக்கிரமம் நடந்தாலும் அங்கே சம்மனே இல்லாம ஆஜர் ஆகி நீதியையும், நேர்மையையும், நியாயத்தையும் நிலை நாட்டி வெட்டாஃபீசரா இருக்கறவர் தான் ஹீரோ.. ஹைதராபாத் தான் கதைக்களம்.. அங்கே வாழும் மக்கள் நிம்மதியா வாழனும்னு நினைக்கறார்.. 35 வயசான ஹீரோ 41 வயசான த்ரிஷாவை கார்ல இருந்து இறங்கறப்ப பார்க்கறார்.. பார்த்ததும் லவ்வு.. 

பார்ட் டைம் ஜாப்பா அந்த பாப்பா பின்னால சுத்திட்டு அப்பப்ப எவனாவது இளிச்சவாயன் வில்லன் சிக்குனா ஃபைட் போட்டுக்கிட்டு பொழுதை ஓட்டிக்கிட்டு இருக்காரு..




http://www.cineindya.com/wp-content/uploads/2012/04/Telugu-Movie-Dammu-online-picture-Moments.jpg

 ஒரு நாள் வீரதுர்க்கம் ஊர் ராஜா கோட்டா சீனிவாசராவ் அவரை சந்திச்சு அந்த ஊர்க்கு தத்துப்பிள்ளையா சின்ன ராஜாவா வாங்கன்னு கூட்டிட்டு போறார்.. அங்கே தான் மெயின் வில்லன் நாசர்.. 2 குடும்பத்துக்கும் பகை.. நாசர் செம காமெடி பார்ட்டி.. அவங்க ஃபேமிலியைத்தவிர வேற எந்த ஃபேமிலில ஆண் குழந்தை பிறந்தாலும்  அதை விட மாட்டார், கொன்னுடுவார்.. 

 அந்த வில்லன்களை எப்படி ஜெயிக்கறார்ங்கறதுதான் மிச்ச மீதி கேவலமான கதை. இதுல செம காமெடி மேட்டர் என்னான்னா ஹீரோதான் நிஜமான வாரிசுங்கற உண்மையை சஸ்பென்ஸ்னு நினச்சுக்கிட்டு டைரக்டர் க்ளைமாக்ஸ்ல சொல்றார்.. ஆனா ஆடியன்ஸ்க்கு 2 வது ரீல்லயே தெரிஞ்சுடுது.. ஹய்யோ அய்யோ.. 

ஹீரோ ஜூனியர் என் டி ஆர் ஆள் ஷோக்காத்தான் இருக்கார்..  ஃபைட் சீன்ஸ்ல நல்ல சுறுசுறுப்பு.. டூயட் சீன்ஸ்ல கிளுகிளுப்பு... டபுள் மீனிங்க் டயலாக்ஸ் எல்லாம் அள்ளி விடறார்.. அப்பப்ப ரஜினி மாதிரி கேமராவைப்பார்த்து அரசியல் பன்ச் எல்லாம் அள்ளி விடறார்.. ஆந்திராவுல இந்தப்படத்தை அந்த ஆடியன்ஸ் உடன் பார்க்கனும்.. மஜாவா இருக்கும்.. இங்கே ஒரு பய கண்டுக்கலை.. 

 41 வயசு த்ரிஷா தான் முத ஜோடி.. இன்னும் பாப்பா செமயாத்தான் இருக்கு.. போரே அடிக்கலை.. ஆல்ரெடி  சி டி ல அவர் கிளாமரை முழுசா பார்த்தவங்க கூட  படத்துல  காட்ட்ற கிளாமருக்கு ஆன்னு வாயை ஓப்பன் பண்ணிட்டு ரசிக்கத்தான் செய்யறாங்க ..2 டூயட்.. 12 லைன்ஸ் வசனம்  சம்பளம் 40 லட்சம் அடேங்கப்பா

 23 வயசு  கார்த்திகா 2 வது ஹீரோயின்.. ஆள் வாட்டசாட்டமா ஜை ஜாண்டிக்கா இருக்கு ஆனா பெண்மையின் மென்மை இல்லை.. அவரது புருவம் எல்லாரும்  பெரிய பிளஸ்னு சொல்றாங்க.. ஆனா எனக்கென்ன தோணுதுன்னா  அந்த புருவம் தான் அவரோட மைனஸ்னு தோணுது.. கோபக்கார பெண்ணா காட்டுது..

காமெடி ஆக்டர் பிரம்மானந்தம், கோட்டா சீனிவாசராவ் எல்லாருக்கும் வாய்ப்பு ரொம்ப கம்மி தான்




http://www.tupaki.com//twdata/2012/0312/news/Dammu-Movie-Working-Stills---Photos-191.jpg

  இயக்குநர் அவரே எழுதி அவர் மட்டுமே ரசித்த வசனங்கள் + சில கேவலமான பன்ச் டயலாக்ஸ்


1. ஆண்டவன் எனக்கு ஒரு உயிரை கொடுத்திருக்கான்.. 10 உயிரை காப்பாற்ற தம்மு குடுத்திருக்கான் ( ஆண்டவன் என்ன பொட்டிக்கடைக்காரரா? தம் எல்லாம் தர? )


2. அரசியலுக்கு நானா வர மாட்டேன்.. ஆனா மக்கள் நான் தான் வரனும்னு நினச்சா அடங்க மாட்டேன் ( நீ என்ன அடங்கா மாரியா? )


3.  ஏய்.. சிரிக்காதடி... அப்புறம் ஓக்கேனு அர்த்தம் ஆகிடும்.. மனசுக்குள்ளேயே வெச்சுக்கோ.. அப்போதான் அவன் உன்னையே சுத்தி சுத்தி வருவான்.. ( சனீஸ்வர பகவானைக்கூடத்தான் சுத்தி சுத்தி வர்றோம்)


4. நீ கூடத்தான் பொறம்போக்கு.. நான் ஏதாவது சொன்னேனா?

ஐ லைக் யுவர் நேர்மை.. ஆனா இந்த மேட்டர் உன்னோட இருக்கட்டும் , யார் கிட்டேயும் சொல்லிடாத.


5. குடுகுடுப்பைக்காரர் பிரமாதமா வாசிக்கறார் இல்ல?

 ஃபினிஷிங்க் டச் கொடுப்பார்.. பாரு அப்போ தெரியும்.. உனக்குஏழரை எப்போ ஸ்டார்ட்னு..


6.  நாளான்னைக்கு ( நாளை மறு நாள் ) உன் பிறந்த நாள்..

 என்னது?


 ஏன் இப்படி ஜெர்க் ஆகறே..? உனக்கே தெரியாம நீ பொறந்துட்டியா?


7. காமெடி சீன்ல காஸ்ட்லி செலவு வைக்கறவன்  நீ , ஜாக்கிரதையா இருக்கனும்..


8. பணம் இருந்தா எது வேணாலும் வாங்கிடலாம்னு நினைக்காத.. கவுரவத்தை வாங்க முடியாது # கவுரம் சி டி 20 ரூபா தான் மாமு


9.  என்னை வெட்கப்படக்கத்துக்கோன்னு எங்கம்மா சொன்னாங்க.. நான் நல்லா வெட்கப்படறேனா?


10. இந்த ரிங்க் எதுக்கு என் விரல்ல போடறே?

 ரிசர்வேஷன்.. ஹி ஹி

 ஓஹோ அப்போ பாதி மேரேஜ் முடிஞ்ச மாதிரி.. பாதி சொந்தம் ஆகுது..?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFDEKYpiC96o5CnT9_a1kzi37uFak08wlYj2A1HHtqVd4MlL65hC5bsRWvDJtn3N805kwaBumX-bbF1Lh-ji2eQzq2olxOKR03SixQGui-g8oY5bn6_J-j1-N1pl11Fn781_ZFruKxYx0/s640/Trisha-Actress-hot-Stills-1.jpg


11. நீங்க போங்க.. நாங்க 2 பேரும் சேர்ந்தே பண்ணிக்கறோம் பூஜையை..

12.  புக்கிங்க் முடிஞ்சுது.. பாதி கோ ஆபரேஷனை உங்க கிட்டே எதிர் பார்க்கிறேன் மாமோய். ஹி ஹி


13. மாமா. என்னை யூஸ் பண்ணிக்குங்க.. ஹி ஹி

14. சரித்திரத்தை உருவாக்கறவன் சொல்லிட்டு வர மாட்டான்.. ( ஏன் அவன் மேனர்ஸே இல்லதவனா?)


15. அரிசியை ஒரு ரூபாய்க்கு தர்றீங்க.. ஆனா பருப்பு விலை ரூ 60 ஆகுது. மக்களை ஏமாத்தற வேலை தானே?



16. சின்ன வயசுல இருந்தே நான் எதை கத்துக்கிட்டாலும் ஸ்பீடா கத்துக்குவேன்.

17. சாவை என் கண்ல காட்டாதே.. அதன் பின் விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்/..


18. என்னது? உனக்கு பலம் ஜாஸ்தியா? பன்னி பெருத்தா யானை ஆகுமா?


19. சவு்ண்டை குறை.   நான் 2 வது அடி அடிச்சா உன் தொண்டைல இருந்து சத்தம் வர 5 வருஷம் ஆகும்..


20. அத்தான்.. என் கிட்டே அழகு எப்பவும் எடுப்பா இருக்கும், பார்க்கறீங்களா? ( என்னமோ  வாசல்ல போட்ட கோலம் பார்க்கறீங்களா?ன்னு கூப்பிடற மாதிரி, என்னாதிது? ராஸ்கல்ஸ்..


21. மாமா.. உங்களைத்தான் பண்ணனும் மேரேஜ்.. ஹி ஹி

22. அல்ங்கா நல்லூர் காளை மாதிரி மாமன்.. கொம்பு சீவி வெச்சிருக்காங்க  பண்ணுனா உன்னைத்தான் பண்ணனும் மாமா மேரேஜ்

23.. டேய் டேய்.. உனக்கு அட்டர் டைம்ல 4 ஃபிகரா? ஜெனரேட்டர் சூடு தாங்காதுடா..

24.  என்னை கொலை செய்யனும்னு நீ 25 வருஷம் முன்னால முடிவு செஞ்சே.. உன்னால முடியலை.. ஆனா நான் உன்னைக்கொல்லனும்னு ஜஸ்ட் ஒரு மணி நேரம் முன்னால தான் நினைச்சேன்.. இப்போ பார்த்தியா?

25. மனுஷன் கிட்டே இருக்கற உண்மையான  உணர்ச்சி பயம் தான்.. கத்தி எடுக்கறவன் பயப்படக்கூடாது, பயப்படறவன்  கத்தி எடுக்கக்கூடாது..

26. யுத்தம்கறது  ஜெயிப்பா? தோப்பா?ன்னு இருக்கனும்.. சாகறமா? சாகடிக்கறமா?ன்னு இருக்கக்கூடாது


http://www.teluguone.com/tmdbuserfiles/karthika-nair-hot-stills.jpg



 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. கதைக்கு சம்பந்தமே இல்லாம 2 ஹீரோயின்ஸ் எதுக்குன்னு யாரும் கேள்வி  கேட்க முடியாதபடி 2 ஜிகிடிகளையும் கதையில் இணைச்சது..


2.  ஆர்ப்பாட்டமான சண்டைக்காட்சிகள்.. ஒரு சாம்பிள் 46 மாடிக்கட்டிட மொட்டை மாடில இருந்து ஹீரோ டொம்முன்னு கீழே ஒரு கார் மேலே விழறார்.. கார் அப்பளம் போல் நொறுங்குது.. ஆனா அண்ணனுக்கு எதும் ஆகலை ஹி ஹி

3. த்ரிஷா பேஸ்கட் பால் விளையாடும்பொது காமிரா டாப் ஆங்கிள்ல வெச்சு ஹி ஹி ஹி

4. சொல்றேனேன்னு யாரும் தப்பா நினைக்க வேண்டாம்.. ஹீரோவுக்கு அக்காவா வர்ற 3 பேரும் செம கட்டைங்க

5. இருக்கற 2 ஜோடிங்க பத்தாதுன்னு க்ளைமாக்ஸ் குத்தாட்டப்பாட்டுல 4 ஜோடி குடுத்து ஹீரோவை ஆட விட்டது ஆஹா..




http://i.ytimg.com/vi/CdBz4atrHG0/0.jpg



 இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் சொதப்பல்கள்


1. ஓப்பனிங்க் ஷாட்ல அந்த கேவலமான ஃபைட் சீன் முடிஞ்சதும் அந்த கோடீஸ்வரர் தன் உயிரை காப்பாத்துனதுக்கு  பரிசா ரூ 25 லட்சம் மதிப்புள்ள செக் லீஃப் தர்றார்.. அதை வாங்காமயே பெரிய இவரு மாதிரி கூலிங்க் கிளாஸ் போட்டுட்டு ரிட்டர்ன் ஆகற ஹீரோ அப்புறம் அந்த பணத்தை பேங்க்ல இருந்து எடுத்துடறாரு.. எப்படி?


2. ஹீரோ ஷூ கால்லயே அரண்மனைக்குள் எல்லா ரூமுக்கும் போறாரு, ஓக்கே , ஆனா பூஜை ரூமுக்கு கூட அப்படியே போறாரே? சாமி கும்பிடும்போதும் ஷூ போட்ட படியே கும்பிடறாரே? ( குஷ்பூ ரசிகரோ)


3. ஹீரோவுக்கு முதல் 3 ரீல் வரை மீசை சாதாவா இருக்கு.. திடீர்னு ஒரு சீன்ல இந்தப்பக்கமா நின்னு பேசறப்ப சாதாவா இருந்த மீசை அப்படி அந்த பக்கமா திரும்பறதுக்குள்ள முறுக்கு மீசை ஆகுதே எப்படி?


4. ஜமீன் பரம்பரைன்னு கூட்டிட்டு வந்த ஹீரோ ஏன் ஒவ்வொரு டைமும் கைக்காசை செலவு பண்றார்? என் கிட்டே ஏது பனம்னு கேட்க வேண்டியதுதானே? அவரா போகலையே? ராஜா தானே கூட்டிட்டு வந்தது?

5.  ராஜா கிட்டே த்ரிஷாவோட அப்பா உங்க மருமகளை உங்க கிட்டே விட்டுட்டு போறேன்னு சொல்ரப்போ ஆக்சுவலா பாப்பா அடக்க ஒடுக்கமா சேலைல தானே இருக்கன்னும்? ஜமீன்ல இருக்கற 11 லேடீஸும் பட்டுப்புடவைல இருக்கறப்ப த்ரிஷா மாடும் லோ கட், லோ ஹிப்  சுடில வருதே? ( இந்தியாவுலயே சுடிதார்ல கூட லோ ஹிப்ல வந்தது இவருதான்)

6. பாடல் காட்சிகளில் 2 ஹீரோயின்சை அரைகுறையா  ஒரே டைம்ல ஆட விட்டா என்னய்யா அர்த்தம்? நாங்க எதை சாரி யாரை பார்க்க? ஹி ஹி

7.  ஒரு சீன்ல வில்லனோட எதிரி ஹாஸ்பிடல்ல அட்மிட்டட். அவர் முகத்துல ஆக்சிஜன் டியூப்.. அவனை கொலை பண்ண ஜஸ்ட் அதை இழுத்தா போதும்.. எதுக்கு அவ்ளவ் பெரிய கத்தி எல்லாம் எடுத்து அந்த டியூப்பை  வெட்டனும்?


8. கலெக்டரா வர்றவர் குமாஸ்தா மாதிரி இருக்கார்.. நோ கம்பீரம்..


9. ஆம்பளை குழந்தைதான் பிறந்திருக்குன்னு சும்மா டயலாக்ல அந்த லேடி சொன்னா போதாதா> குழந்தையை தூக்கி காட்டனுமா? ஹய்யோ அய்யோ .. நல்ல வேளை அந்த லேடி குழந்தையை தூக்கி காட்டுச்சு ஹி ஹி

10. க்ளை மாக்ஸ்ல 120 கிமீ ஸ்பீடுல  5 ஜீப் ஒரு ஆளை கயிற்றுல கட்டி இழுத்துட்டுப்போக நம்ம ஹீரோ கிட்டத்தட்ட 24 கிமீ ஓடியே சேஸ் பண்றார்.. அந்த கயிற்றில் கட்டி இழுக்கப்படும் நபர் சட்னி ஆகி இருக்கனும்.. ஆனா ஆள் அப்படியே இருக்கார்

11. தென்னை மரத்தை ஆனானப்பட்ட தொழில் முறை தொழிலாளி வெட்னாலே  50 வெட்டு வெட்டனும்.. ஆனா ஹீரோ ஒரே சீவுல தென்னை மரத்தையே சீவுவது ஓவர்..

12. ஃபைட் சீன்ல ஹீரோ 2 கையையும்  பின்னால கட்டிக்கிட்டே ஃபைட் போடறது செம காமெடி.. படு கேவலமா இருக்கு .. ஏன் டூயட்ல அப்படி செய்யறது?






https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxqirxqXVI6mTjTxJ5LJuPgz0vNXSPG7MTRp8ua4xNH6NHDl4DNKSSVBCGINdcAWsF5vMA5CVU8vcQiUYh5MPeH26OaL46eKKlw0mL5-dW-HE0HuixabzbIJEpJRdmEtFe0apGA77pRFoq/s640/hot-trisha-cleavage-stills-1.jpg
 டப்ப்பிங்க் படத்துக்கு ஆனந்த விகடன் நோ விமர்சனம்..

 இருந்தாலும்  ஒரு ஒப்பீட்டுக்காக மார்க் - 36

 குமுதம் ரேங்க் - சுமார்


 சி.பி கமெண்ட் - சும்மா ஃபிரண்ட்சோட போய் ஹீரோவை கலாய்க்க நினைக்கறவங்க மட்டும் போலாம். மற்ற படி படம் படு டப்பா

 ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்