Showing posts with label மக்களவை தேர்தல். Show all posts
Showing posts with label மக்களவை தேர்தல். Show all posts

Thursday, April 24, 2014

எனக்கும் பிரியங்காவுக்கும் கருத்து வேறுபாடு தான், மோதல் இல்லை - ராகுல் காந்தி பர பரப்புப்பேட்டி @ த இந்து

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி புதன் கிழமையன்று தேர்தல் பிரச்சாரத்திலிருந்து ஒருநாள் விடுப்பு எடுத்துக்கொண்டார். ஆனால், அதற்கு ஓய்வு என்று அர்த்தமல்ல. அவருக்காகக் காத்திருக்கும் மக்களும், பிரச்சினைகளும் ஏராளம். ஆனால், ராகுலோ வெள்ளை குர்தா, கருப்பு ஜீன்ஸ் சகிதம் புதுடெல்லியில் உள்ள அவரது 12, துக்ளக் சந்து இல்லத்தில் புன்னகையோடு காட்சியளிக்கிறார். அவரது ஆளுமை, சித்தாந்தம், அவர்மீது தாக்கம் ஏற்படுத்திய ஆளுமைகள், 2014 தேர்தல், அப்புறம் முக்கியமாக அவரது பிரதான எதிராளி நரேந்திர மோடி என்று எல்லாவற்றுக்கும் பதிலளிக்கிறார். 'தி இந்து'வின் அரசியல் பிரிவு ஆசிரியர் வர்கீஸ் கே. ஜார்ஜ்க்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியிலிருந்து… 



அரசியல் அணுகுமுறை, பாணி, பின்பற்றும் விழுமியங்கள் ஆகியவற்றில் நீங்கள் யாரைப் போல இருப்பதாக நினைக்கிறீர்கள்? நேரு, இந்திரா, ராஜீவ் அல்லது சோனியா?


 
கூர்ந்து கவனித்தால், அவர்கள் எல்லோரும் ஒரே விஷயங்களைத்தான் சொல்லிவந்துள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். கருணை, நியாயம், பெருந்தன்மை, வெறுப்பை அடக்கியாளுதல், கோபத்தைக் கட்டுப்படுத்தல்... என்னைப் பொறுத்தவரை இவற்றை எல்லாம் ஒரே கருத்தின் விரிவான அம்சங்களாகவே பார்க்கிறேன். 



புத்தர்தான் உங்களை மிகவும் கவர்ந்தவர் என்று கூறியிருந்தீர்கள், எப்படி என்று சொல்ல முடியுமா?


 
மிகவும் சிக்கலான கேள்வி. மிகக் குறுகிய காலத்தில் இதற்கான பதிலைச் சொல்லிவிட முடியாது. அவருடைய போதனைகளில் முதலில் வருவது, ‘மற்றவர்களிடத்தில் வன்முறையை அல்ல; அகிம்சையைப் பிரயோகிக்க வேண்டும்’ என்பதுதான். முதலில் நீங்கள் உங்களுக்கு என்ன செய்துகொள்கிறீர்கள், பிறகு மற்றவர்களிடத்தில் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதில்தான் போதனை முக்கியத்துவம் பெறுகிறது. அது என்னுள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இதைப் பௌத்தம் மட்டும் அல்ல; எல்லா மதங்களும் அதனதன் வழிகளில் போதித்துள்ளன. 



அப்படியானால் நீங்கள் அன்பும் கருணையும் நிரம்பப் பெற்றவர், அப்படித்தானே?


 
அப்படித்தான் இருக்க விரும்புகிறேன். அப்படித்தான் இருக்க முயல்கிறேன். ஆம், அதுதான் உண்மை. கோபமும் பழிவாங்கலும் நேரத்தை வீணாக்கும்; ஆற்றலை விரயமாக்கும்; அது உங்களுக்குள் எதிர்மறையான எண்ணங்களை விதைக்கும்; அது உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் அப்படியே மாற்றும். அவர்கள் உங்களைத் தெளிவாகப் பார்க்க முடியாமல் செய்துவிடுவார்கள். 



உங்களுடைய அரசியல் எதிராளியான நரேந்திர மோடி, கூட்டங்களில் தொடர்ந்து உங்களை ‘ஷாஸாதா’ (இளவரசர்) என்று குறிப்பிடும்போது, நீங்கள் எந்த மாதிரியான உணர்ச்சிக்கு ஆளாகிறீர்கள்? கோபமடைகிறீர்களா?


 
மற்றொருவரின் கோபமூட்டும் பேச்சை நான் கேட்கவோ, உணர்ச்சிவசப்படவோ தேவையில்லை. ஒருவருக்குக் கோபம் ஏற்படுகிறது என்றால் அதற்குக் காரணம் இருக்கும். அவர் கோபத்தையும் வெறுப்பையும் சுமந்து திரிகிறார். அது என்னை ஒன்றும் செய்யாது. அது அவரைத்தான் தாக்கும். மோடி என்னை எப்படி அழைக்க விரும்புகிறார், எந்த விதமான வசைச்சொற்களை என்மீது வீச விரும்புகிறார் என்பதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. அது அவரோடு சம்பந்தப்பட்டது.



ஒரு சின்ன கதை சொல்கிறேன். ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் உட்கார்ந்திருந்தபோது, வேகமாக வந்தார் ஒருவர். புத்தரைப் பார்த்து அவர் வசைமாரி பொழிந்தார். சிறிது நேரம் கழித்து சீடர்கள் அவரைப் பார்த்துக் கேட்டனர்: “அவர் உங்களை வசைபாடினார், அவமதித்தார், நீங்கள் ஏன் எதுவும் பேசவில்லை, எதுவும் செய்யவில்லை?” என்று கேட்டனர். புத்தர் அவர்களுக்குப் பதில் சொன்னார்: “அவர் கோபத்தைப் பரிசாகக் கொண்டுவந்தார். அந்தப் பரிசுடன் அவர் சிறிது நேரம் இங்கே நின்றுகொண்டிருந்தார். அந்தப் பரிசை நான் ஏற்கவில்லை. கொஞ்ச நேரம் கழித்து அந்தப் பரிசுடன் அவர் திரும்பிவிட்டார். 



அப்படித்தான். மோடி கொண்டுவரும் இதுபோன்ற பரிசுகளை நான் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. அதை அவரே அவருடன் வைத்துக்கொள்ளட்டும். மோடி கொண்டுவரும் பரிசான இந்தக் கோபமே அவரை வீழ்த்திவிடும். 



காங்கிரஸ் வாஜ்பாய், அத்வானி தலைமையிலான பா.ஜ.க-வைத் தேர்தலில் எதிர்கொண்டதற்கும் இப்போது எதிர்கொள்வதற்கும் ஏதாவது வேறுபாட்டை உணர்கிறீர்களா?


 
முன்பு தேசியக் கட்சிகளிடையே இருந்த ஆரோக்கியமான போட்டி, இணக்கமான சூழல் இந்தத் தேர்தலில் இல்லை. எப்போதுமே பா.ஜ.க-வின் அடிப்படைக் கொள்கை நோக்கங்களே வலுவான வகுப்புவாதமும் அதிகாரக்குவிப்பும்தான். அவர்களுடைய சித்தாந்தம் சமூகப் படிநிலையை அப்படியே வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு. ஏழைகளும் நலிவுற்ற பிரிவினரும் தங்களுடைய கடினமான உழைப்பினால் முன்னேறிவிடக் கூடாது என்ற எண்ணப்போக்கின் வெளிப்பாடு. இப்போதைய பா.ஜ.க. தலைமையின் கீழ் இந்தச் சித்தாந்தம் மேலும் வேகம் பெற்றிருக்கிறது



. நம் நாட்டைப் பிணைத்து வைத்திருக்கும் ஜனநாயக, மதச்சார்பற்ற, அனைவரையும் அரவணைத்துச் செல்கிற கொள்கைகளுக்குத் துளியும் மதிப்பு தந்துவிடக் கூடாது என்பதே அவர்களுடைய கொள்கையாக இருக்கிறது. பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையும் சில சங்கப் பரிவாரத் தலைவர்களின் சமீபத்திய பேச்சும் எந்தத் திசையில் அவர்கள் போகிறார்கள் என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றன. சகிப்புத்தன்மை என்பதற்கு அவர்களிடத்தில் இடமே கிடையாது. இந்த விஷயத்தில் என்னுடைய கொள்கை உறுதியானது. “நீ எவ்வளவு மோசமாக வேண்டுமானாலும் போ, நான் அந்த அளவுக்கு நன்மையைச் செய்துவிடுகிறேன்” என்பதுதான். 



இந்தத் தேர்தலின் முக்கியத்துவம் எது என்று நினைக்கிறீர்கள்?


 
நம் நாட்டு வரலாற்றின் முக்கியமான கட்டத்தில் நாம் இருப்பதால் இந்தத் தேர்தல் முக்கியமானது என்று கருதுகிறேன். பத்தாண்டுகள் தொடர்ந்த பொருளாதார வளர்ச்சி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மக்கள் நலக் கொள்கைகளால் செல்வம் பெருக்கப்பட்டதோடு நாட்டின் 15 கோடி மக்களை, இதுவரை இருந்திராத வகையில் வறுமைக்கோட்டுக்கும் மேலே கொண்டுவந்திருக்கிறோம். இதற்கு முன்னால் இப்படி நடந்ததே இல்லை. நாம் இப்போது இரு வெவ்வேறு சித்தாந்தங்களிடையேயான போட்டியைப் பார்க்கிறோம். காங்கிரஸின் கொள்கை அனைவரையும் அரவணைப்பது, அதிகாரத்தைப் பரவலாக்குவது, மக்களுக்கு அதிகாரம் அளிப்பது, பொருளாதார வளர்ச்சிக்காக ஒற்றுமையை வளர்ப்பது. எதிர்க்கட்சியின் எண்ணம் மத அடிப்படையில் மக்களைப் பிரிப்பது, ஒரு சிலருக்காக மட்டும் இயற்கை வளங்களைக் கைப்பற்றுவது, முடிவெடுக்கும் அதிகாரத்தை மையப்படுத்துவது, எல்லா அதிகாரங்களையும் ஒரே ஒருவரிடம் கொடுத்துவிடுவது. எங்களை எதிர்ப்போர் இந்தியாவில் ஏழைகளுக்கும், மாற்று மதத்தவருக்கும் மாற்றுச் சித்தாந்தத்தைக் கொண்டிருப்பவர்களுக்கும் இடமே இருக்கக் கூடாது என்று கருதுகிறார்கள். இது மிகவும் ஆபத்தான போக்கு. நம் நாடு சுதந்திரம் பெற்றதுமுதல் இத்தகைய எண்ணம் கொண்டோரை எதிர்த்து வெற்றிபெறுவதே காங்கிரஸின் பாரம்பரியமாக இருந்துவருகிறது. இந்தப் போராட்டத்தைத் தொடருவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். 



வரலாற்றின் மிகவும் சிக்கலான கட்டத்தில் காங்கிரஸுக்குத் தலைமை தாங்குகிறோம் என்று நினைக்கிறீர்களா? 


 
இல்லை. கட்சிக்குத் தலைமை தாங்குவதைக் கௌரவமாகவே கருதுகிறேன். நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இந்தக் கட்சி எந்தப் பெருமைகளுக்கெல்லாம் காரணமாக இருந்திருக்கிறது, என்னென்ன சாதனைகளைப் புரிந்திருக்கிறது என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும். பத்தாண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் – அது எந்த ஆட்சியாக இருந்தாலும் – மக்களுக்குக் கொஞ்சம் சலிப்பு ஏற்படத்தான் செய்யும். ஆனால் நாங்கள் செய்த நல்ல காரியங்களுக்காக மக்கள் எங்களை மீண்டும் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம். 



காங்கிரஸ் தொண்டர்கள் பிரச்சாரத்தில் உற்சாகமாக இல்லை என்கிறார்களே, உற்சாகம் குறைந்த தொண்டர்களுக்கா தலைமை தாங்குகிறீர்கள்?


 
இதுவும் எதிர்க்கட்சிகளின் விஷமப் பிரசாரம்தான். 2004, 2009 தேர்தல்களில்கூட இதையேதான் சொன்னார்கள். உண்மை வேறாக இருந்தது. பா.ஜ.க. தொண்டர்களைப் போல அல்லாமல் காங்கிரஸ் தொண்டர்கள் தொலைக்காட்சி நிலையங்களில் கட்சி பேனர்களை ஆட்டிக்கொண்டிருக்கவில்லை, ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் வட்டங்களிலும் மதவாத, பிளவுச் சக்திகளுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய லட்சியங்களுக்காகப் போராடும் வரலாறு காங்கிரஸுக்கு உண்டு. அதில் ஒவ்வொரு தொண்டரும் உறுதியாகவே இருக்கிறார். 



இந்தத் தேர்தலில் பெருநிறுவனங்கள் காங்கிரஸுக்கு எதிராக இருப்பதாக நினைக்கிறீர்களா?


 
கடந்த பத்தாண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதிக செல்வத்தை உருவாக்கியது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தொழில், வர்த்தகச் சமூகத்தையும் ஏழைகளையும் கூட்டாளிகளாகவே காங்கிரஸ் கருதிவந்திருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் ஓரிரு தொழிலதிபர்களுக்கு மட்டும் சலுகை காட்டுவது ‘குரோனி கேபிடலிஸ’த்தின் வெளிப்பாடு. இதை எதிர்த்தே தீர வேண்டும். இது நம் நாட்டுத் தொழில் சூழலைக் கெடுக்கும். முற்போக்குச் சிந்தனை, தொழில்துறை நலன் ஆகியவை எங்களிடம் வலுவாகவே இருக்கின்றன. இந்தியப் பெருந்தொழில்களின் சின்னமான நந்தன் நிலகேணி காங்கிரஸ் சார்பில் பெங்களூரில் தேர்தலில் போட்டியிடுகிறார். 



பிரதமர் ஆவது உங்களுடைய முன்னுரிமை அல்ல என்று கூறுகிறீர்கள், உங்களுடைய அரசியல் லட்சியம்தான் என்ன?


 
அரசியலில் என்னுடைய ஆர்வம் என்பது ஒரு பதவியை வகிப்பது என்பதைத் தாண்டியது. நம்முடைய அரசியலின் மிகப் பெரிய சாபக்கேடு என்னவென்றால் சாமானியர்களின் குரலுக்கு அது மதிப்பு தருவதில்லை. தன்னுடைய வாழ்க்கையை மாற்றியமைக்கக்கூடிய அரசியல் முடிவுகளில் தனக்கென்று பங்கு எதுவுமில்லை என்றே சாமானியன் நினைக்கிறான். இதற்குத் தீர்வு, முடிவெடுக்கும் அதிகாரத்தைச் சிலரிடம் மட்டுமே விட்டுவிடுவது என்று நினைக்கிறார்கள். அதிகாரத்தைப் பரவலாக்குவதும் கொள்கைகளை வகுப்பதையும் முடிவுகளை எடுப்பதையும் ஒரு சிலரிடமிருந்து எடுத்துப் பலரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று நாங்கள் நினைக்கிறோம். நம்முடைய தேசத்தின் நெடிய பயணத்தில் இது ஒரு திருப்புமுனை என்றே நான் கருதுகிறேன். காங்கிரஸ் கட்சியிலேயே மாணவர் அமைப்பு, இளைஞர் அமைப்புகளில் இதை நான் செய்துவிட்டேன்.



 கட்சிக்கான வேட்பாளர்களைத் தொண்டர்களை விட்டே தேர்ந்தெடுக்கச் செய்வதும் அந்த முயற்சியின் ஒரு பங்கே. இதையெல்லாம் செய்வதற்கு நான் ஒரு பதவியில் இருக்க வேண்டியிருக்கிறது. நான் ஏற்கெனவே கூறியதைப் போல, இதிலிருந்து நான் பின்வாங்க மாட்டேன். அதிகாரப் பரவலாக்கல் என்பது இறுதிவடிவம் அல்ல, அது ஒரு வழிமுறை. அது புதிதான ஒரு சட்டமோ, ஒரு தேர்தலோ அல்ல. அதிகாரத்தை மையத்திலிருந்து மக்களுக்குக் கொண்டுசெல்லும் நடவடிக்கைதான் அது. 



மோடியும் சமீபத்தில் இதேபோலச் சொல்கிறார். “ஒரு தலைவர் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கிறார்”, “125 கோடி மக்களும் சேர்ந்து உழைக்க வேண்டும்”, “இயற்கை வளங்களில் ஏழைகளுக்கு முதல் உரிமை இருக்கிறது”, “அதிகாரப் பரவல்தான் என்னுடைய மந்திரம்” என்றெல்லாம் அவரும் கூறுகிறார்?


 
மோடிக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கிறது, இவற்றை இப்போது கூறுகிறார் என்றால் எங்களுடைய பிரச்சாரத்தின் பலன் என்றுதான் நான் கூறியாக வேண்டும். சித்தாந்தத்தின் எதிர்முனையிலிருந்த ஒருவர் எங்களுடைய கருத்தை ஏற்கிறார் என்றால், அது எங்களுக்குக் கிடைத்த வெற்றிதான். ஆனால், எல்லோருமே தாங்கள் கூறுவதை நம்புவதில்லை.



 பா.ஜ.க-வின் பிரச்சாரம் முழுவதுமே ஒரு தனிநபரைப் பற்றித்தான். ஒவ்வோர் அறிக்கையிலும் அவர் அதிகாரங்கள் முழுவதையும் தன்னிடம் தந்தால் இந்த நாட்டின் காவல்காரனாகச் சேவை செய்வதாகச் சொல்கிறார். கடந்த எட்டு மாதங்களில் அவர் திட்டமிட்டு பா.ஜ.க-வின் எல்லா மூத்தத் தலைவர்களையும் - அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், முரளி மனோகர் ஜோஷி போன்ற எல்லோரையும் - ஓரம்கட்டிவிட்டார். குஜராத்தில் எல்லா முடிவுகளும் முதல்வர் மோடியால்தான் எடுக்கப்படுகின்றன. நிலம், வனவளம், கடற்கரை, கனிமம் போன்ற எல்லா வளங்களும் சில தொழிலதிபர்களுக்கு மிகக் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன.



மத்தியதர மக்களுக்குக் கீழே, வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ள 70 கோடி மக்களைப் பற்றி பேசுகிறீர்கள். அவர்கள் பணக்காரர்களும் அல்ல, நடுத்தர வர்க்கமும் அல்ல, வறுமைக்கோட்டுக்குக் கீழே வசிப்பவர்களும் அல்ல. அவர்களுடைய அரசியல் வர்க்கம் எப்படிப்பட்டது என்று கருதுகிறீர்கள். விரைந்து முடிவெடுப்பவரே தேவை என்ற மோடியின் பிரச்சாரம் அவர்களைக் கவர்ந்துவிடும் என்று கருதுகிறீர்களா?


 
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பத்தாண்டுகால ஆட்சியால் 15 கோடிப் பேர் வறுமைக் கோட்டிலிருந்து மீண்டிருக்கிறார்கள். இதுவரை இதற்கு முன்னர் எந்த ஆட்சியிலும் இந்தச் சாதனை நடந்ததில்லை. இவர்கள்தான் நம் நாட்டின் ரத்தநாளங்கள். இவர்களுக்கென்று தனி அரசியல் அடையாளம் ஏதுமில்லை. இன்னும் அவர்கள் தனியொரு வர்க்கமாக உருவாகவில்லை.



 அரசியல்ரீதியாகவும் சமூகரீதியாகவும் நூற்றுக் கணக்கான சாதிகளாகவும் துணை சாதிகளாகவும் அவர்கள் தொழில்ரீதியாகப் பிரிந்திருக்கிறார்கள். மோடி அவர்களைக் குறித்துப் பேசவில்லை. ஆனால், அவர்களை மதரீதியில் பிளவுபடுத்தத் திட்டமிடுகிறார். இவர்களை அரசியல்ரீதியாகத் திரட்ட பா.ஜ.க-வால் முடியவில்லை. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களான இடைத்தரகர்களால் இவர்கள் சுரண்டப்படுகிறார்கள். இவர்களுடைய நிலைமை மேம்பட அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். 



மோடியின் பொருளாதாரத் திட்டத்திலிருந்து உங்களுடைய திட்டம் எந்த வகையில் மாறுபட்டது? வளர்ச்சி குறித்து அக்கறை குறைவாகவும் வளங்களை விநியோகிப்பதில் மட்டும் அக்கறையாகவும் செயல்பட நினைக்கிறீர்களா?


 
பொருளாதார வளர்ச்சி அனைவருக்கும் பலன் தர வேண்டும் என்று நினைக்கிறேன். தொழிலதிபர்களின் நலனும் ஏழைகளின் நலனும் பங்கேற்பின் மூலம் காக்கப்பட்டால்தான் இந்தியாவை முன்னேற்ற முடியும். இதில் யாராவது ஒருவரின் முன்னேற்றத்தில் மட்டும் அக்கறை செலுத்தினால் இந்தியா முன்னேறாது. இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷம் நமக்கு உணர்த்திய பாடம் அது. இதுதான் காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம். வளர்ச்சி இல்லாமல் வறுமையை ஒழிக்க முடியாது. 


கடந்த பத்தாண்டுகளில் சராசரியாக 7.5% பொருளாதார வளர்ச்சி வீதத்தை அளித்தோம். சாலைகள் அமைப்பதில் பா.ஜ.க. கூட்டணியை விட மூன்று மடங்கு சாதித்தோம். உற்பத்தித் துறையில் இந்தியாவை முதலிடத்துக்குக் கொண்டுவருவதே எங்களுடைய லட்சியம். இந்ததிசையில்தான் தொழிற்கூடங்களை நாடெங்கும் அமைக்கும் திட்டத்தைக் கொண்டுவந்தோம். இது லட்சக் கணக்கான வேலைவாய்ப்புகளை நம்முடைய இளைஞர்களுக்கு அளிக்கும். 



கட்சித் தலைவர் சோனியா காந்தியுடனும் பிரதமர் மன்மோகன் சிங்குடனும் உங்களுடைய உறவு எப்படி இருந்தது? அதில் மோதல்கள் ஏற்பட்டனவா? அவை எப்படித் தீர்க்கப்பட்டன?


 
பரஸ்பர மரியாதையுடன் சுமுகமான, ஒற்றுமையான உறவே நிலவியது. நாங்கள் எங்களுடைய கருத்துகளை நேர்மையாகப் பகிர்ந்துகொண்டோம். கருத்து வேறுபாடுகள் இருந்தன; ஆனால், முரண்பாடுகள் இல்லை. அவர்கள் இருவருமே என்னுடைய வழிகாட்டிகள், அரசியல் குருக்கள். அவர்கள் மீது நான் அன்பும் பெருமதிப்பும் வைத்திருக்கிறேன். அவர்களிடமிருந்து ஏராளமாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன், மேலும் கற்றுக்கொள்வேன். 



உங்களுடைய அம்மா, தங்கையுடனான உறவு எப்படியிருக்கிறது? நீங்கள் அவர்களை ரொம்பவும் சார்ந்திருக்கிறீர்களா?


 
எல்லோருக்கும் எப்படியோ அப்படியே எனக்கும் என் அம்மாவும் தங்கையும் ஆதரவாக இருக்கிறார்கள். எதுவாக இருந்தாலும் நான் அதை அவர்களிடம் விவாதிக்க முடியும். அதிலும் என் தங்கை என்னுடைய வாழ்க்கையின் பல கட்டங்களில் என்னுடன் கூடவே இருக்கிறார். எனவே, எந்தச் சூழ்நிலையில் நாங்கள் எப்படி நடந்துகொள்வோம் என்ற பரஸ்பரப் புரிதல் எங்கள் இருவரிடமுமே உண்டு. சில விஷயங்களில், நான் ஏதாவது சொல்லத் தொடங்கும்போதே என்னுடைய தங்கை நான் என்ன சொல்லவருகிறேன் என்று புரிந்துகொண்டுவிடுவார். அதேபோல அவர் சொல்லவருவதையும் நான் ஊகித்துவிடுவேன். அந்த அளவுக்கு ஆழமான உறவு எங்களுக்கு இடையேயானது. 


அண்ணன், தங்கைகளுக்குள் அடிக்கடி சண்டை வருமே? கடைசியாக நீங்கள் இருவரும் எதற்காகச் சண்டை போட்டீர்கள்?


 
சின்னப் பிள்ளைகளாக இருந்தபோது நிறைய சண்டை போட்டிருக்கிறோம். வளர்ந்த பிறகு அந்தச் சண்டையெல்லாம் போயேபோய்விட்டது. இப்போது எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது உண்டு. ஆனால், நாங்கள் சண்டை போடுவதில்லை. 



- தமிழில்: சாரி



  • கேள்விகளை முன்னரே கொடுத்து தயார் செய்து கொண்டு பேசியது போல தெரிகிறது. ராகுலின் பேட்டி சில மாதங்களுக்கு முன் வந்தபோது அவரது அறிவு வெளிப்பட்டது. கேள்வி ஒன்று பதில் வேறு சொல்லிக்கொண்டு இருந்தார். கடினமான கேள்விகள் இல்லை.
    2 months ago ·   (2) ·   (0) ·  reply (0)
    Ponraj A  Up Voted
  • anpu  
    பத்து வருஷமா உன் குடும்பத்தையும் குடும்பம் கொள்ளை அடித்த சொத்துக்களையும் காப்பாத்தவே போராடிக்கிட்டு இருக்கிற உங்களைபோன்றவர்கள் மோடியை மாற்றி பேச அருகதை இல்லை.ராஜிவ் ஒரு உசிருக்காக பல லட்சம் பேரை கொன்ற காங்கிரஸ் கூட்டம் என்ன தியாக செம்மலா,இலங்கை தமிழனுக்கு குரல் கொடுத்த காரணத்துக்காகவே தமிழ் நாட்டையே புறக்கணித்த நீ உன் அம்மா உங்களை எல்லாம் ஒரு போதும் மனிதநேயம் உள்ள எவனுமே மதிக்க மாட்டான்.வேணும்னா மதம் பிடித்தவன்களை சீண்டி விட்டு வேடிக்கை பார்க்கலாம் வேற ஒன்னும் பண்ண முடியாது.......
    2 months ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • [email protected] veerachamy  from Kumar
    ராகுல் கு நாட்டு பற்று இல்லை,இந்திய வை வியாபார தலமாக பார்கிறார்கள்,,,,,,,,,,,
    2 months ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Saravanan  
    ராகுல் எல்லா இந்தியன் கோபம் உங்களை போன்ற நாட்டை கொள்ளை கும்பல்லை கண்டால் யார்ற்கு தன கோபம் வராது தயவு செய்து நாட்டுக்கு என்ன தேவை என்பதை தெரிந்து கொண்டு நாட்டை பிரத்து அழும் கொள்கை விடவும்
    2 months ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • K.NAVUKKARASAN  from Suri
    அரசியலில் ராகுல் காந்தி நுழைந்ததற்கும் மோடி நுழைந்ததற்கும் இருக்கிற வேறுபாட்டை நாடு நன்கறியும். வீடு சிதிலமடைந்து விட்டபிறகு, அது அழகாகத்தான் இருக்கிறது, நாங்கள் நன்றாகத்தான் பராமரித்தோம் என்பதைப் போல ராகுல் பேசுகிறார். மக்களின் பெரிய தவிப்புக்குப் பிறகு, எதிர்ப்பார்ப்புகளின் சங்கமமாக மோடி பார்க்கப்படுகிறார். தேசிய நதிகளை இணைக்கும் கனவு திட்டத்தை ‘வாய்ப்பில்லை’ என்ற ஒரே சொல்லில் சிதைத்தவர் ராகுல். தமிழர்களையும் தமிழ் நாட்டையும் நேசிக்காதவர்கள் பேச்சுகளை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. – கி. நாவுக்கரசன்.
    2 months ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • nagarasan  from Chennai
    குழந்திதனமான பேட்டி//காரணம் கேள்விகள் சரியானமுரைஎல் கேட்கப்படவில்லை
    2 months ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • உகதி  from Chennai
    "நாட்டுக்காக உயிரைக் கொடுத்தார் என் டாடி! குஜராத்தில் அப்பாவி மக்களின் உயிரை எடுத்தார் மோடி! பிரதமர் பதவியை வேண்டாம் என்று உதறியவர் என் மம்மி! மொத்தத்தில் பாஜகவுக்கு ஆதரவு கம்மி!" என்று ஒரு ரைமிங்காக பேட்டி அளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இவர் காங்கிரஸ், பதவிகளை எல்லா உறுப்பினர்களுக்கும் பரவலாகிவிட்டது என்று காமெடி பேட்டி அளித்திருக்கிறார். ராகுல் அவர்களைத் தமிழ் நாட்டிற்கு அரசியல் செய்ய கற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்!
    2 months ago ·   (1) ·   (0) ·  reply (0)
    உகதி   Up Voted
  • JMB Batcha Mechanical Engineer at GC Eng Consultant 
    சூப்பர் பேட்டி, முதிர்ச்சியான சொற்கள். ராகுலுக்கும் காலம் வரும்.
    2 months ago ·   (7) ·   (2) ·  reply (0)
    raaja  · Khan Sahib  Up Voted
  • Tamil AMB,  from Dubai
    விரலில் உள்ள காயத்தின் வழியை போக்க தலையை வெட்டிக்கொள்ளாதீர்கள். மோடி வந்தால் முஸ்லிம்கள்தானே கஷ்டப்படுவார்கள் என்று ஒதுங்கிவிடாதீர்கள். அதையும் தாண்டி இந்தியா என்ற சிறப்பான ஒரு பன்முகத்தன்மைக்கொண்ட நாட்டின் ஒற்றுமையும் சிதைந்துப்போகும். அதற்கு சாட்சி ஆட்சியில்லாதபோதே RSS அரங்கேற்றிய பல்வேறு குண்டுவெடிப்புகளும், தற்போது RSS தலைவர்கள் வீசி வரும் துவேஷ கருத்துகளும். அமைதியான வாழ்க்கையா வன்முறையான வாழ்க்கையா கொஞ்சம் மனிதாபிமாத்தோடு சிந்தியுங்கள்.
    2 months ago ·   (6) ·   (5) ·  reply (0)
    Anthonymuthu  · raaja  · Khan Sahib  Up Voted
  • Tamil AMB,  from Dubai
    பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை ஆள்வதற்கு துவேஷத்தையே மூலதனமாகக்கொண்ட மோடியைவிட பக்குவத்தோடும் வெறுப்பு வார்த்தைகளை என்றுமே உதிக்காத ராகுல் எவ்வளவோ மேல். இந்திய மக்களே உங்கள் முன் இருப்பது இரண்டு வழிகள். ஒன்று வன்முறை, துவேஷம், பிரித்தாளும் சூழ்ச்சி, அமைதியின்மை போன்றவற்றின் உருவமான மோடியா அல்லது அமைதியான வாழ்க்கையும், சூமூகமாக சகோதரத்துவத்தோடு வாழ ராகுல் தலைமையிலான ஆட்சியா? நிதானமாக சிந்தியுங்கள்.
    2 months ago ·   (3) ·   (1) ·  reply (1)
    raaja   Up Voted
    • A.SESHAGIRI  
      நீங்கள் தான் மோதி அவர்கள் மீது தேவையே இல்லாத துவேசத்தை வளர்த்துக்கொண்டு திரிகிறீர்கள்.ஊழல் பேர்வழிகளுக்கும்,வாரிசு அரசியலுக்கும் வால் பிடிக்கும் வரை இந்தியா உருப்படபோவதில்லை.
      2 months ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • விமலாவித்யா  from Salem
    அரசியலில் காங்கிரஸ் மக்கள் விரோதமாக நடந்து கொண்டது- அதன் கொள்கைகள் மக்களுக்கு விரோதமானது--சந்தேகமே இல்லை- அது ஒரு புறம்- இந்த பேட்டியில் கேட்க பட்ட கேள்விகளுக்கு ராகுல் பதில்கள் மிதமாக கௌரவமாக இருந்தது என்பதே உண்மை- கடுமையான பதில்கள் இல்லை --விமலா வித்யா
    2 months ago ·   (2) ·   (1) ·  reply (0)
    raaja  · Khan Sahib  Up Voted
  • Sabari Sabari  
    என்னாச்சு? 'தி ஹிந்து' கடையில் ராகுல் 'பஜ்ஜி' விக்கமாட்டேங்குது போல தெரியுது! சுட சுட மோடி பஜ்ஜி..'சமஸ்' கார சட்னியுடன் போட்டால், நல்லா சாப்பிட்டு கண்டபடி பதிவிட்டுகொண்டே இருப்பார்கள்..
    2 months ago ·   (2) ·   (2) ·  reply (1)
    • Kutty  
      மோடி அலையென்றால் சும்மாவா!
      2 months ago ·   (0) ·   (1) ·  reply (0)
  • N krishnamoorthy  
    சுரண்டின்னார்கள். லட்சாதிபதி 300 கோடிகளுக்கு அதிபதியானார்.
    2 months ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • annamalai  from New Delhi
    கட்சி தலைவி முதற்கொண்டு ஒரு அமைச்சரவை எடுத்து முடிவை "நான்சென்ஸ் , இதை குப்பையில் கிழித்து போடு" என்று ஆக்ரோஷமாக பேசியவர் கபத்தை பற்றி உபதேசம் செய்கிறார்.நம்ம தலயெழுத்து நாம் அதை கேட்கவேண்டியிருக்கு. ///வளர்ச்சி இல்லாமல் வறுமை ஒழியாது// கரிபி ஹாட்டோ என்று உங்க பாட்டி 1971 ல் முழக்கமிட்டாரே. இப்போது 2 ரூபாய்க்கு அரசியை பிடி என்று FSA கொண்டு வந்திருக்கும்போது உங்களால் இதுவரை வறுமையை ஒழிக்க முடியவில்லை என்றுதானே பொருள்?//அத்வானி, சுஷ்மா, ஜோஷி ஆகியோர்களை ஓரம் கட்டிவிட்டார்கள்//// நீங்க பிறப்பதற்கு முன்னாலே காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி கொண்டிருந்த சீனியர்களை எல்லாம் ஓரங் கட்டிவிட்டு உம்மை உயர்த்தி வைத்து இருப்பதேன்? நீங்க அனுபவசாலியா? அறிவாளியா? "இளவரசர்" என்று சொன்னால் அது வாச சொல். ஆனால் அவரது மனைவியை பற்றி நீங்க பேசினால் அது நற்சொல்லா?
    2 months ago ·   (3) ·   (1) ·  reply (0)
    A.SESHAGIRI   Up Voted
  • SHAN  from Noida
    மோடிக்கு கோபம்.ராகுலுக்கு வீழ்ச்சி ராகுல்,காங்கிரஸ் திமுக ஊழல்
    2 months ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Mohan Ramachandran at I am doing my own business from Chennai
    பேட்டியை படித்தால் தூக்கம் வராதவர்களுக்கு தூக்கம் வரும் .நன்றி .
    2 months ago ·   (2) ·   (3) ·  reply (0)
    Kutty   Up Voted
    raaja   Down Voted
  • Muthusamy Krishnan at Government 
    ராகுல் சார்,உங்களிபோல்,தமக்கையை,தாயாரை போல் எவ்வலு இழிவு வந்தாலும் 'பணமே 'குரிகயாக யார் இருப்பார்கள்?ஒரு லட்சம் முதலீடு உள்ள உங்கள் மாமனின் சொத்து 300கொடியக மரியா உலக அதிசியம் உங்களுக்குத்தான் வெளிச்சம்.வழியெல்லாம் குடிசைக்குள் புகுந்து 'yelaigalin'kanjiyai kuduththu avargalai pattini poda yaaral mudiyum? 2004-2014 வரை ஊழல் ஒன்றே அரசின் கொள்ளையாக இருந்ததே அபொழுது 'ஆப்ரிக்க,அமெரிக்க,அல்லது இமய மலையில் 'இருந்தீர்கள ராகுல் ஜி?
    2 months ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • DSenthil Kumaran at Assistant Manager - Human Resources 
    அறிவார்ந்த பேட்டி. இது பக்குவமான அரசியல் செய்யும் ஒருவரின் பதில்கள். நன்றி
    2 months ago ·   (10) ·   (9) ·  reply (1)
    Khan Sahib  Up Voted
    N krishnamoorthy · Krishna  · dhanasekar   Down Voted
    • Kutty  
      சார் என்னாச்சு? சார்..சார்..சார்...
      2 months ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • N krishnamoorthy  from Thiruvarur
    "அனைவரும்" என்று இவர் குறிப்பிடுவது, குடும்பத்ஹையௌ கக்கா கூட்டத்தையும் தான்.
    2 months ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • N krishnamoorthy  from Thiruvarur
    உருப்படியாக ஒன்றும் இல்லை.
    2 months ago ·   (1) ·   (1) ·  reply (0)
  • N krishnamoorthy  from Thiruvarur
    60 ஆண்டுகளாக என்ன்ச் செய்தார்கள்? ஐவரும் 2004 முதல் ராதுள மன்ற உறுப்பினர். ஏமாற்றுகிறார் கையாலாகாதவர்.
    2 months ago ·   (4) ·   (0) ·  reply (1)
    • Shah Jahan at ceo from Dehiwala
      60 ஆண்டுகளாக என்ன்ச் செய்தார்கள்?
      2 months ago ·   (1) ·   (1) ·  reply (1)
      raaja   Down Voted
      • leo  from Bangalore
        60 ஆண்டுகளில் என்ன செய்யவில்லை!!! இன்றைய இளைனருக்கு வரலாறு சொல்லி கௌக வேண்டிய நீங்கள் இப்படி பேசலாமா.. யோசியுங்கள் நல்லவட்ட்ரை பாருங்கள் பகிருங்கள்..
        2 months ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Shanti elangovan  from Suri
    I expected The Hindu(always balanced,neutral)-Pithamagar of indian media to publish this interview on the D-Day.thank you for communicating thoughtlines and mindset of a person(and his party)who displayed great virtues of tolerance for worst ever criticism and dignity in times of animosity...He stands for Character...rarity in present times ...future India has a leader .
    2 months ago ·   (7) ·   (5) ·  reply (1)
    Anthonymuthu   Up Voted
    • Ramaseshan  from Mumbai
      ராகுலின் பேட்டியும் உங்களின் கருத்தும் ஒன்றை தெரிய வைக்கின்றன - அவர் இந்த முறை பிரதமர் இல்லை எதிர்காலத்தில் ஆகலாம்! ஹிந்துவின் ஆதார ஸ்ருதிக்கேற்ற ஒரு பேட்டி




      நன்றி - த  இந்து

       
 

Tuesday, April 08, 2014

சுயமரியாதையை இழந்து எந்தக் கட்சியிலும் இருக்க மாட் டேன். - எஸ் வி சேகர் அதிரடி பேட்டி @ த ஹிந்து

சினிமாத் துறையினரை அரசியலில் வளர விடுவதில்லை என்று, பிரபல நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.


கடந்த வாரம் அழகிரியை சந்தித்த எஸ்.வி.சேகர், ’கட்ட’ ஜாதகம் எல்லாம் சொல்லி, ’ஏப்ரல் 14-க்கு பிறகு அழகிரியின் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துவிடும்’ என்று ஆருடம் சொன்னார். ‘தி இந்து-வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:


இப்போது நீங்கள் எந்தக் கட்சியில் இருக்கிறீர்கள்? ஏதாவது பதவியில் இருக்கிறீர்களா?



இதிலென்ன சந்தேகம்? பாஜக-வில்தான். மோடி எனக்கு நண்பர். அவரது ஆசியுடன் பாஜக-வில் சேர்ந்தேன். பாஜக பிரச்சார அணிக் குழுத் தலைவர் பதவி தருவதாக, மாநிலத் தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் உறுதியளித்தார். இது இல.கணேசனுக்கும் தெரியும். இதுவரை பதவி தரவில்லை. சிறு குழந்தை போல் தினமும் சென்று, பதவி கொடுங்கள் என்று கேட்க முடியாது.



ஒவ்வொரு கட்சியாக மாறு கிறீர்கள்? எந்தக் கட்சியில் இருக் கிறீர்கள் என்று கேட்கும் நிலை உள்ளதே?


ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் பின்பும் கட்சிகளும் அரசியல்வாதி களும் கூட்டணி மாறுவதும், கட்சி மாறுவதும் இல்லையா. போலி வாக்குறுதிகள், ஏமாற்று வேலை கள் தெரியாது, அப்படிப்பட்ட அரசி யல் எனக்குத் தேவையில்லை. நான் எம்.எல்.ஏ-வாக இருந்தபோது எந்த அமைச்சரிடமோ, அதிகாரி களிடமோ, அதை செய்து கொடு, இதை செய்து கொடு என்று போய் நின்றது இல்லை.


உங்களை எம்.எல்.ஏ-வாக்கிய அதிமுக-வில் நீடிக்காமல், திமுக-வுக்கு ஆதரவான நிலையை எடுத்தீர்களே?


ஜெயலலிதாவை நான் சீட் கேட்டு விண்ணப்பிக்காத நிலை யில், என்னை அழைத்து மயிலாப் பூர் எம்.எல்.ஏ. ஆக்கினார். அவரிடம் நல்ல பெயர் எடுத்ததால், அவருக்கு அடுத்த கட்டத்தில் இருந்தவர்கள் எனக்கு கட்சியிலிருந்து வெளி யேறும் நிலையை உருவாக்கினர். நான் தொகுதி வளர்ச்சி சம்பந்த மாகவே அப்போதைய முதல்வ ரான கருணாநிதியைச் சந்தித்தேன்.


பிரபல சினிமா நடிகராக, பேச்சாள ராக இருந்தும் கூட அரசியலில் உங் களால் சாதிக்க முடியவில்லையே?


தமிழகத்தில் சினிமா நடிகர் களை அரசியலில் வளரவிடா மல் தடுக்கின்றனர். நடிகர்களின் பிரபலத் தன்மையை தங்கள் அரசி யல் வளர்ச்சிக்கு பயன்படுத் துவதை மட்டுமே அரசியல் வாதிகள் விரும்புகின்றனர்.


நடிப்புத் துறையிலிருந்த எம்.ஜி. ஆரும், ஜெயலலிதாவும் அரசியல் தலைவர்களாகி முதல்வராகியுள்ள னர். தற்போது விஜயகாந்த் பெரிய அரசியல்வாதியாக உருவெடுத் துள்ளாரே?


உண்மைதான். எம்.ஜி.ஆர்., வளர்ந்து வந்ததால்தான் அவரை திமுக-விலிருந்து வெளியேற்றினர். ஜெயலலிதாவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் சிக்கல் ஏற்படுத்தினர். அனைத்து எதிர்ப்புகளிலிருந்தும் அவர்கள் தலைமைப் பொறுப்புக்கு வந்தார் கள். விஜயகாந்த், சொந்தக் கட்சி தொடங்கியதால் அவருக்கு இந்தப் பிரச்சினை இல்லை. பிரபலமான நடிகரும், அரசியல்வாதியும் தெரு வில் நடந்து சென்றால் நடிகரைச் சுற்றித்தான் கூட்டம் வரும்.


பாஜகவில் உங்களுக்கு முக்கியத் துவம் இருப்பதாகத் தெரிய வில்லையே?


சுயமரியாதையை இழந்து எந்தக் கட்சியிலும் இருக்க மாட் டேன். டெல்லி சட்டசபைத் தேர்தலில் தமிழர்கள் பகுதியில் பிரச்சாரம் செய்ய பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர்ராவ் அழைத்தார். அமெரிக்காவில் நாடக நிகழ்ச்சியை விட்டுவிட்டு இந்தியா வந்தேன். வந்த பிறகு பிரச்சாரத்துக்கு அழைக்க வில்லை. மோடி போட்டியிடும் வாரணாசியில் 10 சதவீதம் தமிழர் கள் வசிக்கின்றனர். வாரணா சிக்கும், காந்தி நகருக்கும் சென்று பிரச்சாரம் செய்யவுள்ளேன். தமிழ கத்தில் கட்சித் தலைமை அழைத் தால் பிரச்சாரம் செய்வேன்.



உங்கள் நாடகப் பெயர் போல், இந்தத் தேர்தலில் ஆயிரம் உதை வாங்கும் அபூர்வ சிகாமணி எந்தக் கட்சியாக இருக்கும்?


பாஜக-வைத் தவிர தோல்வி யுறும் கட்சிகள்தான் உதை வாங்கும் சிகாமணிகள்.


மோடி மீது கோத்ரா கலவரக் குற்றச்சாட்டு உள்ளதே?


அது ஒரு எதிர்வினை சம்பவம். குஜராத் அருகிலுள்ள காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் வேண்டு மென்றே உதவி செய்யாமல், வன் முறையை வேடிக்கை பார்த்த சம்ப வம். முஸ்லிம் கட்சிகளை வைத்துக் கொண்டு மதச்சார்பற்ற கூட்டணி என திமுக பேசுவது அபத்தம். இந்து, முஸ்லிம் பிரிவினையைப் போக்கத்தான், பாஜக ஆட்சிக்கு வந்ததும் பொது சிவில் சட்டம் கொண்டுவர உள்ளது.


உண்மையில் அழகிரியை எதற் காகத்தான் சந்தித்தீர்கள்?


அவர் என் நண்பர். மதுரை அருகே நாடகம் நடத்தச் சென்றேன். டென்ஷனை விட்டுவிட்டு, சிறிது நேரம் சிரிக்க வாங்க என்று அழைத் தேன். அரசியல் பேசவில்லை.


மோடி போட்டியிடும் வாரணாசியில் 10 சதவீதம் தமிழர்கள் வசிக்கின்றனர். வாரணாசிக்கும், காந்தி நகருக்கும் சென்று பிரச்சாரம் செய்யவுள்ளேன். தமிழகத்தில் கட்சித் தலைமை அழைத்தால் பிரச்சாரம் செய்வேன்.


Keywords: எஸ்.வி.சேகர் பேட்டி, மக்களவை தேர்தல்

நன்றி - த ஹிந்து