Showing posts with label மகாராஜா (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் (க்ரைம் த்ரில்லர் ). Show all posts
Showing posts with label மகாராஜா (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் (க்ரைம் த்ரில்லர் ). Show all posts

Monday, June 17, 2024

மகாராஜா (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் (க்ரைம் த்ரில்லர் )

 


    விஜய் சேதுபதியின் 50 வது படம்  ,  குரங்கு பொம்மை (2017)  இயக்குனர்   நித்திலன் சுவாமிநாதன் உடைய இரண்டாவது படம் , 15/6/2024 அன்று திரை அரங்குகளில் வெளியாகி   மெகா ஹிட்  ஆகி  உள்ளது , சாதாரண பழி வாங்கல் கதையை அடடகாசமான  திரைக்கதை உத்தி  மூலம்  மிரட்டி  இருக்கிறார்கள்             


ஸ்பாய்லர்  அலெர்ட்


  வில்லனுக்கு அன்பான மனைவியும் அழகான  ஒரு  பெண்  குழந்தையும் உண்டு. மகள் மீது  அளவற்ற  பாசம் வைத்திருக்கிறான். வில்லன் ஊரார்  பார்வைக்கும் , மனைவி   பார்வைக்கும் சாதாரண எலக்ட்ரிக்கல் கடை  ஓனர் . ஆனால்  நிஜத்தில் அவன் ஒரு கொடூரமான கொள்ளைக்காரன்  கம்  கொலைகாரன் . அவனுக்கு இரு  கூட்டாளிகள்  உண்டு .மூவரும் சேர்ந்து இரவு நேரங்களில்  வீட்டில் புகுந்து நகைகளைக்கொள்ளை அடிப்பது , வீட்டில் பெண்கள் இருந்தால் ரேப் செய்து கொலை செய்வது இவைதான் பார்ட்  டைம்  ஜாப் 

நாயகன்  சலூன் கடை வைத்திருக்கிறான் .அவன் கடையில் தாடி ட்ரிம் பண்ண வந்த வில்லன் தன மகளுக்காக  வாங்கி வைத்திருக்கும் பிறந்த நாள் பரிசான தங்கச்செயினை  மறந்து வைத்து விட்டு  வந்துவிடுகிறான் .நாயகனின் கடையில் இருக்குபோது  வில்லனின்  கூட்டாளியுடன்  கொள்ளை சம்பவம்  பற்றி போனில் பேசுவதை நாயகன் கேட்டு  விட்டதாக  வில்லன்  நினைக்கிறான் .

வில்லன் தன கடையில் மறந்து வைத்து விட்டு சென்ற தங்கசெயினை  வில்லனிடம் ஒப்படைக்க நாயகன் வில்லனின் வீட்டுக்கு  வரும்போது  கச்சிதமாக போலீஸ்  வில்லனைக்கைது செய்ய அங்கே வருகிறது . நாயகன்  தான்  தகவல் கொடுத்து  போலிஸில்  தன்னை மாட்டி விட்டதாக வில்லன் தவறாக நினைக்கிறான் 

13 வருட சிறை தண்டனைக்குப்பின் வில்லன் வெளியில் வருகிறான் . இதற்குப்பின்  நிகழும்  அதிரி புதிரி சம்பவங்கள் தான்  மீதி  திரைக்கதை  

நாயகன்  ஆக  விஜய் சேதுபதி  கலக்கி இருக்கிறார் . முதல் பாதியில்  மனநலன் பாதிக்கப்பட்டவர்  போல  நடப்பது  பின் பாதியில்  ஆக்ரோஷம்  என மாறுபட் ட நடிப்பை வழங்கி இருக்கிறார் 

வில்லன் ஆக அனுராக் காஷ்யாப் நாயகனுக்கு இணையான வேடம் .சிறப்பான நடிப்பு 

போலீஸ்  ஆபிஸர்  ஆக   நட்டி கச்சிதம் முனீஸ்காந்த்தும் ஓகே  ரகம் .சிங்கம் புலி மிரட்டி இருக்கிறார்   

திரைக்கதை எழுதி  இயக்கி     இருப்பவர்  நித்திலன் சுவாமிநாதன்  குரங்கு பொம்மை (2017)  இயக்குனர் 

பிலோமின் ராஜ்   எடிட்டிங்  அட்டகாசம் .நான் லீனியர்  காட்டில் திரைக்கதை ஜாலவித்தை புரிகிறது தினேஷ் புருஷோத் தமன்  ஒளிப்பதிவு  அருமை 

வில்லனின் மனைவியாக அபிராமி  கச்சிதம் . மம்தா மோகன் தாஸ் , திவ்ய பாரதி ,பாரதி  ராஜா என  எல்லாருமே அருமையான  நடிப்பு

சபாஷ்  டைரக்டர்


1குப்பைத்தொட்டிக்கு  லட்சுமி  என  பெயர்  வைத்த  தைர்யம் . மூதேவியைக்குறிக்கும்  சொல் அது 

2  என் பொண்ணு தப்பு  பண்ணி  இருக்க மாடடான்னுசொன்னனே? திட்டிட்டீங்க, மன்னிப்புக்கேளுங்க  என நாயகன்  அ டம்  பிடிக்கும் காடசி 

3  இடைவேளை பிளாக்குக்கு  முன்  வரும்  அந்த சண்டைக்காடசி  ஓவர்  வயலன்ஸ்  என்றாலும் அந்த  ஆக்சன் ஸீக்வன்ஸ் வடிவமைத்த சண்டைப்பயிற்சி இயக்குனர்  உழைப்பு  அபாரம் 

4  OLD BOY  (2013) ரெட்ட (2024) ஆகிய இரு படங்களின் க்ளைமாக்ஸை நினைவு படுத்தினாலும் சாமார்த்தியமாக  அதை  திரைக்கதைக்குள்  நுழைத்த  நுட்பம் பிரமாதம் 

 5   சிங்கம் புலி  திருடியதாக நடித்துக்காட் டும் காடசி  மிரட் டல் ரகம் 


  ரசித்த  வசனங்கள் 


1  உனக்கு மகாராஜான்னு பேரு வெச்சதுக்குப்பதிலா உம்மணாம்மூஞ்சி  ராஜான்னு  பேரு வெச்சிருக்கலாம் , இப்படி  முகததை  வெச்சிருந்தா  எந்த  நாய்  கடைக்கு வரும்?  ஐயோ  சார் , நான் உங்களைச் சொல்லலை 


2   யாருய்யா அவன் ? 


போலீ ஸ்  சார் 


 போலீ சா?


பேரு போலீ ஸ்  சார் , ஆனா ஆக்சுவலா  அவன்  ஒரு திருடன் சார் 


3  ஒருத்தன்  லட்சத்துல  லஞ்சம்  தர்றான்னா கோடில  ஏதோ பதுக்கறான்னு  அர்த்தம் 


4  பழனி இஞ்சி நீர் ஒர்க்ஸ் அப்படினு  எழுதி வெச்சிருக்கான். இஞ்சினியர்னு கூட எழுதத்தெரியல 



இப்பவெல்லாம் எழுதப்படிக்கத்தெரியாதவன்  தான்  பெரிய  ஆள் ஆகிறான் 


5  இந்த வலி  எல்லாம்  எனக்கு சாதாரணம் , ஆனா நா ன்   உனக்குக்கொடுத்த வலி இருக்கே  அது காலத்துக்கும்  இருக்கும் 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  82 பவுன் நகையை  அசால்ட்  ஆக ஆட்டையைப்போடும் போலீஸ் ஆபிஸர் வெறும் 5   லட்ச ரூபாய்க்கு ஆசைப்படுவது நம்ப முடியவில்லை 


2 வீடு புகுந்து திருடும் கொள்ளையர்கள்  முதலில் வீட்டு  ஆட்கள்  சத்தம் போடாமல் வாயை அடைக்க  வேண்டாமா? அக்கம் , பக்கம் வீடுகள் இருக்கே?

3  சலூனில்  ட்ரிம்மர் எக்ஸ்ட்ரா  வெச்சிருக்க மாட்டாங்களா?  அல்லது அட்லீ ஸ்ட்  பேட்டரி  எக்ஸ்ட்ரா  வெச்சிருக்க மாட்டாங்களா?

4  பல கொள்ளை ,கொலை, ,ரேப்  செய்த கொடுரனைக்கைது  செய்ய வரும் போலிஸ்  கை விலங்கு எடுத்து வர  மாட்டார்களா? 

  அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-18+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - மகாராஜா(2024)- அட்டகாசமான திரைக்கதை. அனைவரது உயிரோட்டமான நடிப்பு +. விஜய் சேதுபதி க்கு செம ஹிட் படம்.விகடன் மார்க் 45.குமுதம் ரேங்க்கிங் நன்று.ரேட்டிங் 3.5 /5.க்ளைமாக்ஸ் மட்டும் கொரியன் மூவி OLD BOY(2017)+ரெட்ட(2024)மலையாளம். சாயல்