1. தப்பு பண்ற எல்லாருக்குமே ஒரு டர்னிங்க் பாயிண்ட் தேவைப்படுது,என் லைஃப்ல வந்த டர்னிங்க் பாயிண்ட் நீ தான்
2. மாப்பி.. சரக்கு அடிக்கறப்ப ஏன் ஸ்ட்ரா போட்டு குடிக்கறே?
என் சம்சாரத்துகிட்டே இனிமே சரக்கை கையால கூட தொடமாட்டேன்னு சத்தியம் பண்ணி இருக்கேன் ( நல்ல வேளை கிளவுஸ் போட்டுக்கலை)
3. கெட்டவன் எப்பவும் கெட்டவனாவே இருந்துடறதும் இல்ல, நல்லவங்க என்னைக்கும் நல்லவங்களாவே தொடர்ந்துடறதும் இல்ல..
4. எல்லா மனுஷங்களுக்கு உள்ளேயும் ஒரு மிருகம் இருக்கு, சந்தர்ப்பம் கிடைக்கறப்ப அது வெளில வருது
5. பார்வை இல்லாதவனுக்கு பார்வை குடுத்து அவனை தாஜ்மகால் முன்னே நிக்க வெச்சு , அதை பார்க்காதே, எதையும் ரசிக்காதேன்னு சொல்ற மாதிரி இருக்கு நீ இப்போ என் கிட்டே சொல்றது..
6. கடவு:ள் 100 பேர்ல ஒருத்தருக்குத்தான் வசதி வாய்ப்புகளை கொடுக்கறார், அந்த ஒரு ஆள் மீதி இருக்கற 99 பேருக்கு தன்னாலான உதவி செஞ்சா லைஃப் ஹேப்பியா அமையும் எல்லாருக்கும்..
7. வாவ், நீங்க ரவுடிகளை அடிச்சீங்களாமே? கலக்கிட்டீங்க...
ம்க்கும், அவனுங்க ரிவர்ஸ் எடுத்து இவனை அடிச்சிருந்தா இவன் கலங்கி இருப்பான், எஸ் ஆகிட்டான்.. அடங்கோ
8. சிலநேரம் சின்னப்புள்ளத்தனமா நடந்துக்கறே, பல நேரம் சில்லறைத்தனமா நடந்துக்கறே, அது ஏன்?
9. காசிக்குப்போக வேண்டிய வயசுல பெரிசு கலிஃபோர்னியா போக ஆசப்படுது..
10. மிஸ்.. வந்து .. அது வந்து நாம 2 பேரும் கடைக்கு போய் ஒரு காஃபி சாப்பிடலாமா?
இந்தா ரூ 100, நீ போய் குடிச்சுக்கோ, நான் வர்லை.. ( அடங்கோ, ஏம்மா பாப்பா டெயிலி இப்படி கண்டவனுக்கும் தானம் பண்ணவா அப்பா உங்களுக்கு ஜாக்கெட் மணி தர்றாரு? )
11. காளீ கோயில் பூசாரி மாதிரி அந்த பெரிசு ஏன் கையை காலை ஆட்டிக்கிட்டே இருக்கு?
யோவ், அவர் யூத்தாம், ஜிகிடிகளோட டான்ஸ் ஆடுதுய்யா
12. பொடி வாங்கிட்டு வான்னு கூட இந்தக்காலத்துப்பசங்க கிட்டே வேலை வாங்க முடியறது இல்லை, கீழே வெடி வெச்சிடரானுங்க..
13. அல்வா கொடுக்கறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க, அது திருநெல் வேலி அல்வாவா இருந்தா என்ன? திருவல்லிக்கேணி அல்வாவா இருந்தா என்ன?
14. ஏம்மா முறைக்கறே, என் கை தானே உன் தோள்ல இருக்கு, நோ பிராப்ளம்
டேய் கையை எடு, இல்லை கட் பண்ணி கைல குடுத்துடுவேன்
15. ஐயையோ, அரிவாள் எதுக்கு கேக் வெட்டற இடத்துல?
ஆளை வெட்டற அரிவாளை வெச்சுத்தான் நாங்க கேக்கே வெட்டுவோம், தெரியுமில்ல..
16. நீங்க இதுவரை பேசிட்டு இருந்ததை நானும் கேட்டேன் அண்ணா..
பாப்பா, தமிழ்ல எத்தனை வார்த்தை இருக்கு, ஆசையா கூப்பிட? அத்தான்னு கூப்பிடு, ஏன் அண்ணா?னு கூப்பிடறே?
17. சில பேர் கிஃப்ட் குடுக்கறப்ப கிவ் & டேக் பாலிஸியோட உள் நோக்கத்தோட இருப்பாங்க ( ஹி ஹி நாம எப்பவுமே டேக் ஒன்லி பாலிஸி )
18. பெரிசை பெரிசுன்னு கூப்பிடாம வேற எப்படி கூப்பிடறது? தமிழ்ல உங்களுக்குப்பிடிக்காத ஒரே விஷயம் பெரிசுதான்னு நினைக்கறேன்..
19. என்னடா? இப்படி பல்டி அடிச்சுட்டுப்போறா? இந்த விக்கெட்டும் அவுட்டா?
அதுல என்ன உனக்கு டவுட்டு? அடுத்த ஃபிகரை பார்க்க போலாம் நடையை கட்டு
20. சினிமா தியேட்டரில் ஜிகிடியுடன் வந்திருக்கும் ஒரு ரவுடி
சார், படம் மறைக்குது...கொஞ்சம் குனிங்க..
அப்போ நீ என் சீட்டுக்கு வந்துடு, நான் உன் சீட்க்கு வந்துடறேன்..
அய்யய்யோ, இது என் ஆளூ
அப்போ மூடிக்கிட்டு படத்தை பாரு.. ஒழுங்கா அங்கேயே இரு,. என்னமோ படம் பார்க்கறதுக்காகவே தியேட்டர் வந்த மாதிரி ராஸ்கல்ஸ்..
21. எனக்கு காலம் காலமா இருக்கற டவுட் என்னான்னா பல்லி மாதிரி இருக்கற பசங்களூக்கு எல்லாம் கில்லி மாதிரி ஜிகிடிங்க செட் ஆகுதே? அது எப்படி?
22. வெளிச்சத்துல வீராப்பா பேசற ஜிகிடிங்க எல்லாம் நைட்ல இருட்டுல எப்படி இருப்பாங்கனு எனக்கு தெரியும்.. ( அய்யய்யோ, எனக்கு தெரியாதே , இருட்டுன்னா எனக்கு பயம் கண்னை மூடிக்குவேன் ஹி ஹி )
23. உன் மனசாட்சியை தொட்டு சொல்லு, என்னைக்காவது நீ போட்ட டீயை நீயே குடிச்சிருக்கியா?
டீக்கடை திருமலை - அந்த தப்பை மட்டும் நான் ஜென்மத்துக்கும் செய்யவே மாட்டேங்க.. ( அடங்கோ)
24. மிஸ்.. அவங்க 2 பேரும் அங்கே பிட் போடட்டும், நாம் 2 பேரும் இங்கே ஓரமா ஒரு இடத்துல ஒதுங்கலாமா?
டேய், நாயே பேங்க் பேலன்ஸ் வெறும் 108 ரூபா வெச்சுக்கிட்டு பேச்சை பாரு
25. நாள் பூரா சிஸ்டம் முன்னால ஒர்க் பண்றவங்களுக்குத்தான் அதனோட கஷ்டம் தெரியும்..ரிலாக்ஸ் பண்ணிக்க அப்படி இப்படி இருந்தா தப்பா?
26. வயசான பிறகு வர்ற வசதி வாழ்க்கை எல்லாம் சக்கரை வியாதிக்காரன் கைல கிடைக்கற ஸ்வீட்ஸ் மாதிரி .. எதுக்கும் பிரயோஜனம் இல்ல..
27. வெட்டி செலவு பண்ணி மத்தவங்களை கவுக்கவும் மாட்டா, யார் கிட்டயும் கவுரவும் மாட்டா..
ஓ, பார்ட்டி சாஃப்ட்வேர் இல்ல, ஹார்டுவேர்னு சொல்லுங்க ( ஓஹோ சாஃப்ட்வேர்னா திருப்பூர் உள்ளாடை பார்ட்டி, ஹார்டுவேர்னா இரும்பாலான கவச உள்ளாடை?)
28. இவ என்ன மாடர்ன் டிரஸ் போட்ட மங்காத்தாவா இருக்காளே?
29. உன்னை அவருக்கு எப்படிடி பிடிச்சுது?
ஒரு புத்திசாலியை இன்னொரு புத்திசாலிக்கு பிடிச்சுப்போறதுல என்ன ஆச்சரியம் இருக்கு?