Showing posts with label மகாபாரதம். Show all posts
Showing posts with label மகாபாரதம். Show all posts

Wednesday, March 28, 2012

கர்ணன் - நன்றி உணர்ச்சியின் நாயகன் - சினிமா விமர்சனம்

http://cinegilma.com/wp-content/gallery/karnan-movie-stills/karnan-movie-stills-2.jpg 

புராணக்கதைகள் உண்மையில் நடந்த சம்பவமா? அல்லது கற்பனைக்கதையா? என்ற ஆராய்ச்சியில் இறங்காமல் அதில் மனிதன் கற்றுக்கொள்ள  என்ன இருக்கிறது என்பதை உணர்ந்து வாழ்க்கைப்பாடத்துக்கு தேவையானவற்றை எடுத்துக்கொள்வதே நல்லது.. அதைத்தான் நம் முன்னோர்களும் விரும்பினார்கள்..

கொடை வள்ளல் என்றே அறியப்பட்ட கர்ணனின் நன்றி உணர்ச்சி, செஞ்சோற்றுக்கடனுக்காக அவனது தியாகங்கள் பற்றிய உணர்ச்சிப்பூர்வமான கதையே கர்ணன் என்னும் இந்த பிரம்மாண்டமான படம்.. 

குந்தி தேவிக்கு ஒரு வரம். அவர் மனதில் யார் நினைக்கிறாரோ? அல்லது யார் மேல் ஆசைப்படுகிறாரோ அவரே அவரது கணவராக வாய்க்கப்பெறுவார்.. விளையாட்டாக சூர்ய பகவானை கணவனாக அடைந்தால் எப்படி இருக்கும்? என்று மனதில் நினைக்க சாட்சாத் சூரிய பகவானே நேரில் வந்து தரிசனம் தந்து ஒரு குழந்தையையும் இன்சிடெண்ட்டாக தந்து செல்கிறார் .. 

 இப்போ குந்தி கன்னித்தாய்.. குழந்தையை பேழையில் வைத்து ஆற்றில் விடு விடுகிறார்.. அதை ஒரு தேரோட்டி எடுத்து வளர்க்கிறார். 

25 வருடங்கள் கழித்து.. வாலிபன் ஆனதும் தனது வளர்ப்புப்பெற்றோர்கள் பேசிக்கொண்டிருக்கையில் எதேச்சையாக அவர்கள் பேச்சை கேட்டு கர்ணன் உண்மை அறிகிறான்.. 

ஒரு வில் வித்தைக்கான போட்டியில் அர்ஜூனை விட கர்ணன் சிறந்த வில்வித்தை வீரன் என்று நிரூபணம் ஆகிறது.. ஆனால் அர்ஜீணன் சத்திரியன்.. கர்ணன் தேரோட்டியின் மகன்.. இந்த ஒரே ஒரு வாதத்தை முன் வைத்து கர்ணனை பலர்  பல சந்தர்ப்பங்களில் அவமானப்படுத்துகின்றனர். 

தக்க சமயத்தில் துரியோதணன் ராஜ்ஜியம் கொடுத்து அவனை மன்னன் ஆக்கி கவுரவம் காப்பாற்றுகிறான்.. அந்த நன்றிக்கடனுக்காக தன் வாழ்நாள் முழுவதும் துரியோதனனுக்கு தன் வாழ்வை அர்ப்பணிப்பதாக சபதம் செய்கிறான் கர்ணன்.

தேவேந்திரன் மாறு வேடத்தில் கர்ணனிடம் வந்து அவனது கவச குண்டலத்தை  தானமாக பெறுகிறான்.. யார் வந்து என்ன கேட்டாலும் மறுக்காமல் தானம் செய்யும் தயாள குணம் படைத்தவன் அவன்.. 

 அர்ஜூணனை ஒழிக்க பிரம்மாஸ்திரம் பற்றி கற்றுக்கொள்ள வேண்டும். அது பற்றி தெரிந்த முனிவர்  அந்தணர்களுக்கு மட்டுமே அதை கற்றுக்கொடுப்பார்.. சத்தியர்களுக்கு கற்றுத்தர மாட்டார்... எனவே தான் ஒரு அந்தணர் என  பொய் சொல்லி கர்ணன் அந்த வித்தையை கற்றுக்கொள்கிறான்.ஒரு சமயம் அந்த முனிவர் கர்ணனின் மடியில் அமர்ந்து உறங்கும்போது  ஒரு வண்டு வந்து கர்ணனின் தொடையில் குத்திக்கிழிக்கிறது.. அவன் அசைந்தால் குருவின் தூக்கம் கெட்டு விடும் என்பதால் கர்ணன் அமைதியாக வலியைப்பொறுத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறான்.. 


 கொட்டிய ரத்தம் பட்டு விழித்து உண்மை உணர்ந்த முனிவர் கர்ணனுக்கு சாபம் விடுகிறார்..

சுபாங்கி எனும் இளவரசியை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் கர்ணன் அவள் மேல் காதல் கொள்கிறான்.. துரியோதணன் மூலம் திருமணம் நடக்கிறது.. திருமணம் முடிந்த பின் கர்ணன் ஒரு தேரோட்டி என்ற உண்மை தெரிய வந்து மாப்பிள்ளையை அவமானப்படுத்துகிறார் மாமனார்.. 

 மகாபாரதப்போர் மூளும் நேரம்.. கிருஷ்ணர் கர்ணனை டம்மி ஆக்கினால் தான் பாண்டவர்கள் வெற்றி பெற முடியும் என்பதை கண்ணன் உணர்ந்து குந்தி தேவியை தூண்டி விட்டு கர்ணனிடம் தூது அனுப்புகிறார்..

குந்தி தேவி தான் தன் அம்மா, பாண்டவர்கள் தன் சகோதரர்கள் என்பதை அறிந்தும் நன்றி உணர்வின் காரணமாக கர்ணன் அவர்கள் பக்கம் வரவில்லை.. துரியோதணன் உடன் இருந்து போரிட்டு  மடிகிறான்

 நடிப்பு பற்றி சொல்லனும்னா சிவாஜி ஆக்டிங்க் கிளாஸ்.. கர்ணன் இப்படித்தான் இருந்திருப்பானோ என்று நினைக்கும் அளவுக்கு கம்பீரம் காட்டி கலக்கலான நடிப்பை வழங்கி இருக்கிறார். அவரது நடை ஆஹா... ( உத்தம புத்திரன், ராமன் எத்தனை ராமனடி,வீரபாண்டிய கட்ட பொம்மன் போன்ற படங்கள் அவர் நடை அழகுக்கு பெயர் போனவை)


சிவாஜிக்குப்பின் பேர் சொல்லும் நடிப்பு என் டி ஆர்.. கிருஷ்ணர்னா அப்படியே தெய்வத்தை நேரில் பார்ப்பது போலவே.. அப்படி ஒரு சாந்தமான, எதற்கும் அசைந்து கொடுக்காத முகம்.. தெய்வீக தோற்றம் அவருக்கு இயற்கை கொடுத்த வரம்.. ஆந்திராவின் எம் ஜி ஆர் என போற்றப்பட்டவர்.. அவர் வரும் காட்சிகள் எல்லாம் மற்ற நடிகர்கள் எல்லாரும் டம்மியாக தெரிவது அவரது ஆளுமைக்குச்சான்று..


துரியோதணனாக வரும் அசோகன் காமெடி கலந்த நடிப்பு தந்திருக்கிறார்,.. இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்.. வில்லத்தனம் கொஞ்சம் கம்மி தான்.. 

அர்ச்சுணனாக வரும் முத்து ராமன் ரொம்ப மென்மையான  முகச்சாயல் உள்ளவர்,.. அவர் சரத் பாபு மாதிரி ஜெண்டில் மேன் கேரக்டருக்கு ஓக்கே. அர்ச்சுனன் மாதிரி போர் வீரன் கேரக்டருக்கு..?? 

ஆடை வடிவமைப்பு, ஆர்ட் டைரக்‌ஷன் . ஒளிப்பதிவு எல்லாமே செம பிரம்மாண்டம்.. அப்படியே சம்பவங்களை கண் முன் நிறுத்துகிறது.. 3 மணீ நேர படத்தில் போர் அடிக்கும் காட்சிகள், அல்லது தேவை இல்லாத காட்சி என்று எதுவுமே இல்லை.. சபாஷ் எடிட்டிங்க்.. 

 பாடல்கள் 11.. அதில் சூப்பர் ஹிட் பாடல்கள் 4.. 

http://cinegilma.com/wp-content/gallery/karnan-movie-stills/karnan-movie-stills-3.jpg

மகா பாரதம் இயற்றிய வியாசரிடம் சில கேள்விகள்


1. குந்தி தேவி அரண்மனையில் மக்களுடன் மக்கள் பார்வையில் தான் இருக்கார்.. 9 மாசம் காணாம போய் குழந்தையோட வர்லை.. ஒரே நிமிஷத்துல குழந்தை பிறந்துடுது.. அவர் ஏன் அதை ஆத்துல விடனும்.. கண்டெடுத்ததுன்னு சொல்லி அரண்மனையில் வளர்த்தலாமே?மக்கள் ஏன் பழிக்கப்போறாங்க?

2. உலகையே ரட்சிக்கும் கண்ணன் போர் நடக்காமல் காத்து இருக்கலாமே.. தனிப்பட்ட 6 பேரின் பகைக்காக ஏன் நாட்டு மக்களை போரில் இறக்கி பலிஆடுகளாய் மக்களை ஆக்கனும்? பல சித்து வேலைகள் தெரிந்த கண்ணன் துரியோதனன் மனதை மாற்றி இருக்கலாம்.. அல்லது ராஜ்யம் தானே பிரச்சனை? இந்தா ராஜ்யம் என புது ராஜ்யமே உருவாக்கி தந்திருக்கலாமே?

3. கர்ணனிடம் பிரம்மாஸ்திரத்தை ஒரு முறைக்கு மேல் பிரயோகிக்க வேணாம் என வரம் வாங்கி வரச்சொல்லி குந்தியை அனுப்புவது ஏன்?அவருக்குத்தான் சக்தி இருக்கே? முதல் முறை கர்ணன் அதை பிரயோகிக்கும்போது எப்படி அர்ச்சுனரை காப்பாற்றினாரோ அதே போல் ஒவ்வொரு முறையும் காப்பாற்றலாமே?

4. முக்காலும் உணர்ந்த முனிவர்க்கு வந்திருக்கும் கர்ணன் அந்தணன் அல்ல என்பது ஏன் தெரியாமல் போச்சு.. அவரும் சராசரி மனிதர் தானா?

5. கர்ணன் உயிரோடு இருக்கும்போதே ஏன் அவனது 10 வயசு பாலகன் போருக்கு வர்றான்?அப்படி என்ன அவசியம்?

6. போர் நடந்து கொண்டிருக்கும்போது கண்ணன் அர்ச்சுணருக்கு கிட்டத்தட்ட 2 மணி நேரம் உபதேசம் செய்கிறார்.. அது வரை அனைவரும் வேடிக்கை பார்த்துட்டு இருப்பாங்களா?


http://static.moviecrow.com/movie/karnan/658.jpg
 கர்ணன் பட இயக்குநரிடம் சில கேள்விகள்

1. பீமன் கேரக்டர்க்கு நல்ல ஆஜானுபாவமாக ஒரு ஆளை போட்டிருக்க வேண்டாமா? பீமன் பஞ்ச பாண்டவர்களில் மிக பலம் பொருந்தியவர்.. ஆனா படத்துல அவர் பரிதாபமா இருக்கார்.. 

2. காந்தாரி கறுப்பு நிறத்துணியால் தான் தன் கண்களை கட்டி வாழ்நாள் முழுவதும் தன் கணவன் காணாத உலகத்தை தானும் காணப்போவதில்லை என்றாள்..என மகாபாரதம் கூறுகிறது..  ஆனால் படத்தில்  பச்சை ரிப்பனை கட்டி இருக்கார்..

3.  கர்ணனுக்கு மன்னன் பதவி அளிக்கபட்டதும் கர்ணனிடம் ஒரு தாழ்வு மனப்பான்மை, கூனிக்குறுகி இருக்கும் உணர்வு, தகுதிக்கு மீறிய மரியாதை  கிடைத்த குற்ற உணர்வு வர வேண்டாமா? ஆணவம் தெரியுதே அவர் நடை உடை பாவனையில்... 

4. பிரம்மாஸ்திரம் மறந்து போகும் என சாபம் கிடைத்ததும் ஏன் அந்த மந்திரத்தை ஒரு ஓலையில் எழுதி வைத்துக்கொள்ளக்கூடாது?

5. பிரம்மாஸ்திரம் கற்றுக்கொள்ளும் நாட்களில் தாடியுடன் இருக்கும் சிவாஜி கானகத்தில் அங்கேயே தங்கி பணி புரிகிறார்.. ஆனா அப்பப்ப அரண்மனைக்கு வர்றாரே.. அது எப்படி?

6. துரியோதணன் கேரக்டர் ஆட்காட்டி விரலில் மோதிரம் அணிந்து வருகிறார்.. ஆனால் மகா பாரதத்தில் மோதிர விரலில் தான் அணிவதாக வருது.. 

7. கண்ணனை பாண்டவர்கள், கவுரவர்கள் போய் பார்த்து கால் மாட்டில் தருமர், தலை மாட்டில் துரியோதணன் நின்று ஆதரவு கேட்கும் மிக முக்கியமான சீன் படத்தில் இல்லையே?

8. அமாவாசை அன்று பலி இட்டு போரை ஆரம்பித்தால் அவருக்கு வெற்றி நிச்சயம் என்று ஆனதும் கண்ணன் சூரிய சந்திரனை ஏமாற்றி ஒரு நாள் முன்னதாக அமாவாசை வரும்படி செய்கிறார்.. ஓக்கே.. ஆனால் துரியோதணன் அவன் கணக்குப்படி அமாவாசை அன்று தானே பலி தர்றான்.?

9. கர்ணன் - துரியோதணன்  மனைவி சொக்காட்டான் ஆடும் காட்சி.. எடுக்கவோ கோர்க்கவோ என வசனம் பேசும் முக்கியமான சீன் - அதில் கர்ணன் துரியோதனன் மனைவியுடன் இன்னும் நெருக்கம் காட்டி இருக்க வேண்டும்..அப்போதான் துரியோதணன் எந்த சூழ்நிலையிலும் கர்ணன் மேலோ, தன் மனைவி மேலோ சந்தேகம் கொள்ள வில்லை என்பது நிரூபணம் ஆகும்.. மகாபாரதத்தில் மிக பிரமாதமாக வர்ணிக்கப்படும் இந்த காட்சி படத்தில் மிக சாதாரணமாகவே எடுக்கப்பட்டிருகிறது

http://i.ytimg.com/vi/LwMNIpHWs_o/0.jpg

 படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

.  1. வாரி அணைக்க வா என்றேன்... வறியவன் ஏதோ வரம் கேட்பதாய் எண்ணி அந்த மழலை எனக்கு வாரிக்கொடுத்தான்.


2. வில்லுக்கு ஒரு விஜயன் என்ற சொல்லுக்கு பிறந்தவன் அர்ச்சுணன்

3.  அம்மா, அப்பா இருவரும் இறந்து விட்டார்களா? குழந்தாய்?

 இல்லை, என்னை மறந்து விட்டார்கள்

4.  என் இனமடா நீ!! மேக நாதா!!

5. இந்த சமூகம் அடித்த இடத்தை துடைத்து விட்டு மீண்டும் அதே இடத்தில் அடிக்கிறது

6. கொடுப்பது என்று உறுதி ஆன பின் உயிரும் ஒரு பொருட்டா?

7. பெண்கள் தோல்வியை தாங்க மாட்டார்கள். அதனால் நான் விட்டுத்தருகிறேன்.. 

ஆண்கள் பலசாலிகள்.. ஆனால் அறிவில்லாதவர்கள்

8.  ஏய்.. தேரோட்டி.. உன் ரத்தத்தில்  தேர் ஓடுகிறது.. 

 இல்லை.. எல்லோர் ரத்தத்திலும் சிவப்பு தான் ஓடுகிறது

9. நான் தேரோட்டுவதில் என்ன குறை கண்டீர்.. நான் ஒரு தேர்ரோட்டியின் மனைவி அல்லவா?

 ஆரம்பத்தில் இருந்து எல்லோரும் என்னை என்ன சொல்லி இகழ்ந்தார்களோ அதே பழி சொல்லை உன்னையும் அறியாமல் சொல்கிறாய்.. 

10.  வாயும் வயிறுமாய் உள்ள மனைவியை உயிரும் உணர்வுமாய் காக்க வேண்டும்..

11. விட்டுக்கொடுப்பதற்கே வீரம் அதிகம் வேண்டும்..

12.  இது என்னை நோக வைக்கும் கேள்வி... கர்ணா,,,

 ஆனால் கேட்க வேண்டிய கேள்வி கண்னா./..


13. போரில் மனிதனின் மதி மாறும், வெறி ஏறும். 

14. இறக்கும்போதும் நான் சிரிப்பை விரும்புகிறேன்

15. இந்த மனிதர்களுக்கு எப்போதும் எதற்கும் கடவுளை குறை சொல்வதே வழக்கம் ஆகி விட்டது..

16.  பாவ காரியங்கள் என்றும் மறைத்து வைக்க முடியாது.. எப்படியும் என்றாவது வெளியே வந்து விடும்.. 

17. வல்லவனாக ஒருவன் பிறக்கலாம்.. ஆனால் வளர்ப்பால் மட்டுமே  அவன் நல்லவனாக ஆக முடியும்.. 

18./. அண்ணன் ஜாதகத்துலயே சமாதானம் கற பேச்சே இல்லை.. 

19.  எல்லோருடைய முட்டாள் தனத்துக்கும் ஈடு கொடுக்க இந்த உலகத்தில் இருப்பது கடவுள் மட்டுமே.. 

20. உலகத்துக்கு துரியோதனன் எப்படியோ எனக்கு அவன் தான் கடவுள்.. செய் நன்றி கொண்டவன் நான்

21. வீரத்தை வீரம் ஒதுக்கி வைக்குமா? நீ க்டைசி வரை துரியோதனனுக்கு பக்க பலமாய் இருக்க வெண்டும் என்பதற்க்காகத்தான் உனக்கு போரில் எந்த பொறுப்பும் தரவில்லை

http://uyire.com/wp-content/uploads/mvbthumbs/img_7484_karnan-dts-version-trailer.jpg

 கலக்கலான பாடல்கள்

1. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதது வல்லவன் வகுத்ததடா கர்ணா.. வருவதை எதிர் கொள்ளடா.. 

2. இரவும், நிலவும் வளரட்டுமே.. நம் இளமை நினைவுகள் மலரட்டுமே.. 

3. கண்ணுக்கு குலம் ஏது?கர்ணா... கருனைக்கு நிறம் ஏது?

4. போய் வா மகளே போய் வா.. 

5. மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை

6. என்னுயிர்த்தோழி. 

7. ஆயிரம் கரங்கள் உடையாய் போற்றி.. 

8. கண்கள் எங்கே? நெஞ்சமும் எங்கே?

9. மரணத்தை எண்ணி

 யாரெல்லாம் இந்தப்படம் பார்க்கலாம்? என்ற கேள்வியே தேவை இல்லை.. அனைவரும் இந்தப்படம் பார்க்கலாம்.. 

 ஈரோடு ஸ்ரீ சண்டிகாவில் படம் பார்த்தேன்