ஹீரோ தன் 3 ஃபிரண்ட்சோட ஊர் சுத்திட்டு இருக்கார்.ஹீரோவுக்கு ஆல்ரெடி லவ் மேரேஜ் ஆகிடுச்சு. ஃபிரண்ட்ஸ் 4 பேரும் சேர்ந்து ஒரு டைம் லேப்டாப்ல கில்மாப்படம் பார்க்கறாங்க. அப்போ ஒரு ட்விஸ்ட்.த்ரில்லர் படத்தில் ட்விஸ்ட் வரும் , கில்மா படத்துல என்ன ட்விஸ்ட்? அதாவது ஹீரோவோட காதல் மனைவி வேற ஒரு ஆளோட கச முச வீடியோ ஓடுது.அப்டியே எல்லாரும் ஷாக் ஆகிடறாங்க. அதுக்குப்பின் என்ன ஆகுது? என்பதே கதை .
தெரிந்த முகம் கருணா தான் . அதிக வாய்ப்பில்லை . மத்த 3 பேரும் சொல்லிக்கற மாதிரி இல்லை
நாயகியா வருபவர் சுமார் அழகு வெகு சுமார் நடிப்பு
திரைக்கதை எப்டி எழுதறதுன்னு தெரியாம 4 ஃபிரண்ட்சையும் கிரிக்கெட் விளையாடற மாதிரி , கேரம் ஆடற மாதிரி , மொக்கை ஜோக் சொல்ற மாதிரி பல ஷாட்ஸ் எடுத்து வெச்சு எல்லாத்தையும் கோர்த்து வெச்சு முக்கால் மணி நேரம் இடைவேளை வரை சிரமப்பட்டு ஓட்டிடறாங்க
மனதைக் கவர்ந்த வசனங்கள்
1 உங்களுக்கு எப்ப மேரேஜ்?
நான் தயாராத்ஐதான் இருக்கேன்.எவனும் பொண்ணு தரத்தயார் இல்ல. # ம
2 ஒரு பையன் ஒரு பொண்ணை லவ்வினா அந்தப்பொண்ணு மட்டும் அழகாத்தெரியும்.பொண்ணு ஓக்கே சொல்லிட்டா உலகமே அழகாத்தெரியும் # ம
3 டாக்டர்.கிரிக்கெட் விளையாடும்போது அடிபட்டுடுச்
லேடிDR=ம்்
எதுக்கு ஸ்டெதஸ்கோப்பை நெஞ்சில் வெச்சுப்பார்க்கறீங்க? அடிபட்டது.நெஞ்சுல இல்ல # ம
4 திமிரா இருக்கும் அழகான பசங்களை விட உயிரையே தரத்தயாரா இருக்கும் மொக்கைப்பசங்களைத்தான் பொண்ணுங்களுக்குப்பிடிக்குது #ம
5 மாப்பி.இந்த மெசேஜ்க்கு என்னடா அர்த்தம்?
சாரிடா.இங்க்லீஷ் மெசேஜ் படிக்க மாட்டேன் # ம
படம் பார்க்கும்போது அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 மகாபலிபுரம் @ நெய்வேலி ஜெயப்ரியா .நாமதான் பலியா?8 பேர் தான் ஆடியன்ஸ்
2 ஹீரோயினுக்கு மிளகா பஜ்ஜி பிடிக்கும்கறதால ஹீரோ பஜ்ஜிக்கடை ஓப்பன் பண்றாரு.வாவ்! வாட் எ பஜ்ஜிகல் மிராக்கிள்
3 ஹீரோ & குரூப் கிரிக்கெட் ,கேரம் ,செஸ் ஆடிட்டு இருக்காங்க.ஒவ்வொரு சீன்லயும்.ஸ்போர்ட்ஸ் கோட்டால எடுத்த படமோ? #ம
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1 போஸ்டர் டிசைன் , அழகு . கருணா போஸ்டர் நல்ல மார்க்கெட்டிங் டெக்னிக்
2 டைட்டில்லயே தியேட்டருக்கு வர்றவங்க எல்லாம் பலி தான் அப்டினு க்ளூ குடுத்தது
இயக்குநரிடம் சில கேள்விகள்
1 எங்கேயோ நடந்த உண்மைக்கதைனு பில்டப் கொடுத்து புரொடியூசரை ஏமாத்திட்டீங்க. சரி சொந்தமா நல்லதா 4 சீன் கூட யோசிக்கத்தெரியலையே?
2 கஞ்சா வாங்கும் ஃபாரீனர்கள் பாலித்தீன் பாக்கெட்டைப்பிரிக்காமயே ஸ்மெல் பண்ணிப்பார்க்கற மாதிரி சீன் இருக்கு . வழக்கமா கஞ்சாவை கைல எடுத்துப்பார்த்துத்தானே செக் பண்ணுவாங்க?
3 ஹீரோயின் ஒரு சீன்ல “இதுக்குத்தான் கூட்டமே இல்லாத படத்துக்கு கூட்டிட்டு வந்தியா?ன்னு கோவிச்சுக்குது ஹீரோ கிட்டே. அந்த சீன்ல தியேட்டர்ல 347 பேர் இருக்காங்க .. இதுக்குப்பேரு கூட்டம் இல்லையா?
4 ஃபிகரை தியேட்டருக்கு கூட்டிட்டு வரும் ஹீரோ கார்னர் சீட்டில் அமராமல் எல்லோரையும் போல் அமர்வது அதிர்ச்சி அளிக்கிறது
5 ஃபாரீனர்ஸ் வில்லனிடம் “ ஹீரோயினை காட்டி இதே மாதிரி ஃபிகர் நடிச்ச பிட்டைய்ம் வேணும்னு தான் கேட்கறாங்க. அவரே தான் நடிக்கனும்னு சொல்லலை. வில்லன் ஏன் மெனக்கெட்டு ஹீரோயின் பிட் படத்துக்கு ரெடி பண்றாரு?
6 ஹீரோ சாக்கு மூட்டையில் இருப்பது ஹீரோயின் என தெரியாமல் தூக்கிட்டுப்போவது எப்படி? ஒரு ஆண் வெயிட் சராசரி 75 டூ 85 , பெண் வெயிட் 40 டூ 50 தானே இருக்கும் ? லைட் வெயிட்டா இருக்கே?னு ஏன் சந்தேகப்படலை ?
7 சாக்குப்பைக்குள் இருக்கும் ஹீரோயின் வாயில் துணி வைத்துக்கட்டியதால் பேச முடியாது சரி ஆனால் முனகல் சத்தம் , அபயக்குரல் ஒலி எழுப்பி இருக்கலாமே? ஏன் செய்யலை?
8 வில்லன் ஹீரோவை நம்பி எப்படி அந்த சாக்கு மூட்டையை தர்றான்?கூட தன் அடியாளை அனுப்ப மாட்டானா?
சி பி கமெண்ட் - மகா”பலி”புரம் = மொக்கைப்படம், டைட்டிலில் பலி இருப்பது குறியிடு போல -முடியல - விகடன் மார்க் = 39 , ரேட்டிங் = 2.25 / 5
ஆனந்த விகடன் மார்க் ( கணிப்பு) - 39
குமுதம் ரேங்க் ( கணிப்பு) - ம்ஹூம்
ரேட்டிங் = 2.25 / 5