பொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம் (கோர்ட் டிராமா)
தமிழ் சினிமா ஆடியன்ஸ்க்கு ஒரு சிறப்பு உண்டு , கோர்ட் காட்சிகள்
அதிகம் கொண்ட பல படங்களை வரவேற்று இருக்கிறார்கள் , அதற்கான உளவியல் காரணங்கள் 2. முதலாவது
கோர்ட்டில் என்ன நடக்கும் என்பதை பெரும்பாலும் அவர்கள் கண்டதில்லை . இரண்டாவது வாத
பிரதிவாதங்களை எப்போதும் அவர்கள் ரசிப்பார்கள். பட்டிமன்றங்கள் ஹிட் ஆவது கூட இந்த
சைக்காலஜியில் தான்
பராசக்தி , விதி , நான் சிகப்பு மனிதன் , நீதிக்கு தண்டனை
, ப்ரியங்கா , மனிதன் ( உதயநிதி), ஒரு தாயின் சபதம் ,நேர் கொண்ட பார்வை என ஏகப்பட்ட
முன்னுதாரண்க்கள் இதுக்கு இருக்கு, அந்த வரிசைல இந்தப்படமும் ஒரு வெற்றிப்படமே.
பெண் குழந்தைகளை
கொலை செய்த ஒரு வட நாட்டு சைக்கோ கொலைகாரியை பற்றிய ஒரு கேஸ் பல வருடங்களுக்குப்பிறகு தூசு தட்டப்பட்டு மீண்டும்
வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதிகாரமும், பண பலமும் உள்ளவர்கள் எப்படி எல்லாம் நீதியை
வளைக்க முடியும்? என்ற எஸ் ஏ சந்திரசேகர் ஃபார்முலா கதை தான்
படத்தோட முதுகெலும்பு
ஜோதிகா தான் . ஜோதி , வெண்பா என இரு மாறுபட்ட வேடங்களில் நடித்திருக்கிறார்.
ஜோதியா வரும் காட்சிகளில் ஒரு பெண் குழந்தையின் அம்மாவா பாசத்தை வெளிப்படுத்தும் சராசரி
பெண்ணின் அசாதாரணமான நடிப்பு குட் . வக்கீலா வெண்பா கேரக்டரில் ஆவேசமா, இயலாமையுடன் , கண்ணீருடன் இன்னொரு
பரிமாண நடிப்பு . பெண்களைக்கவரும் அம்சங்கள் பல இடங்களில்
வில்லனா வரும் தியாகராஜன் மிரட்டலான நடிப்பு . க்ளைமாக்ஸ்
காட்சியில் அவர் முகத்தில் காட்டும் துடிப்புகள் அபாரம். சாகும் வரை மரியாதையுடன் இருக்கனும்
என்ற அவர் கொள்கை கலக்கல். வக்கீலாக வரும் இரா பார்த்திபன் சில இடங்களில் ரசிக்க வைக்கிறார். பல இடங்களில்
ஜட்ஜூக்கே ஆர்டர் போட்டு திகைக்க வைக்கிறார்.
நாயகியின் அப்பாவாக ,பெட்டிஷன் பெத்துராஜ் கேரக்டரில் கே
பாக்யராஜ் தன் குணச்சித்திர நடிப்பில் மிளிர்கிறார். ஆனால் மீசை இல்லாத கெட்டப் என்னமோ
மாதிரி இருக்கு
ஜட்ஜ் ஆக வரும் பிரதாப் போத்தன் பாராட்டும்படியான நடிப்பு
ஊட்டியின் அழகை மாறுபட்ட கோணத்தில் காட்டி இருக்கு கேமரா. அபாரம்., ஆனா பின்னணி இசை பல இடங்களில் சொதப்பல்
ரகம் . வசனம் ஆங்காங்கே கை தட்ட வைக்கிறது
நல்ல கதைக்கரு ,
சமூக ஆக்கறை உள்ள கருத்து சொல்ல முற்பட்டதற்காக
புது இயக்குநரை பாராட்டலாம், ஆனா திரைக்கதை அமைப்பில் கோட்டை விட்டிருக்கிறார். பல இடங்களில்
லாஜிம் மிஸ்டேக்ஸ். அட்லீஸ்ட் திரைக்கதை மன்னன் கே பாக்ய ராஜிடம் ஆலோசனையாவது ஷூட்டிங்
கேப்பில் கேட்டிருக்கலாம். கே பாக்ய ராஜ்,
பிரதாப் போத்தன், இரா பார்த்திபன், ஆர் பாண்டியராஜன், தியாக ராஜன் என 5 இயக்குநர்கள்
நடித்த படம் என்ற முத்திரையுடன் வந்த படம்
என்பதால் அவர்கள் கூட ஸ்க்ரிப்ட்டில் உள்ள
குறைகளை சொல்லி இருக்கலாமே? என ஆதஙக,ம் எழுகிறது
நச் டயலாக்ஸ்
1 1 நாய் குலைக்குதுன்னா வீட்டுக்கு வந்தவன் திருடன்னு அர்த்தம்
இல்லை
2
3 2 சட்டத்துக்கு சாட்சி போதும், முழுமையான உண்மை தேவை இல்லை
33 நேர்மையோட மதிப்பு உங்களுக்கு எல்லாம் எப்பவாவதுதான் புரிய வரும்
4 4 எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத மனநிலை
5 5 அதிகாரத்துல இருக்கறவங்களை விட தனக்காகவே அதிகாரத்தை உருவாக்கிக்கறவங்க ஆபத்தானவங்க
6 6 எய்ட்ஸ் பேஷண்ட் தனக்கிருக்கற நோயை டாக்டர்ட்ட சொல்ல கூச்சப்பட்டு பைல்ஸ்னு பொய் சொன்னா டாக்டர் பைல்ஸ்க்கான சிகிச்சை தான் தருவார்
7 தப்பானவங்க தான் வாழமுடியும்னா இந்த உலகத்துல யாருமே வாழ முடியாது
8 சத்தியத்தைத்தவிர வேற எதுக்கும் பயப்படக்கூடாது
9 வாழ்க்கைல யாரும் எதுக்கும் பயப்படக்கூடாது
10 வில்லன் பஞ்ச் = நான் பேசறப்ப என் சத்தம் மட்டும் தான் கேட்கனும்
11 சாகறவரைக்கும் எனக்கான மரியாதையோடயே வாழ்ந்துட்டுப்போய்டனும்
12 வெளில தெரிஞ்சா அவமானம்னு நாம மறைக்கிற ஒவ்வொரு உண்மையும் உதவறதால கெட்டவங்க நல்லவங்க ஆகிட முடியாது
13 உண்மையையும் , கண்ணீரையும் தவிர வேற எதுவும் என் கிட்டே இல்லை
14 யூகத்தின் பேர்ல எதையும் முடிவு பண்ணிட முடியாது
15 ஒருத்தரோட அடையாளத்தை சிதைக்கறது மிகப்பெரிய அநீதி
16 தப்பு செய்யறவங்களால நீதியை விலைக்கு வாங்க முடியாதுங்கற நம்பிக்கை ஜனங்களுக்கு வரனும்
சபாஷ் இயக்குநர்
1 படத்தோட சப்ஜெக்ட் சைல்டு அப்யூஸ் என்றாலும் காட்சிகளில் வன்முறை தவிர்த்தது
2 வில்லன் தியாகராஜன் உணர்ச்சி பொங்கும் நடிப்பு , ஜோதிகாவுன் பங்களிப்பு
3 பிரபல இயக்குநர்கள் 5 பேரை ஒருங்கிணைக்கும் ஐடியா
4 இடைவேளை ட்விஸ்ட் ஓரளவு எதிர்பார்த்தது தான் என்றாலும் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் நல்லாருந்தது
5 கோர்ட் டிராமா என்றாலும் 2 மணி நேரத்துல படத்தை முடிச்சது
இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்
1 ஓப்பனிங் சீன்ல கொலைகாரியின் தலை முடியை சீப்பில் கொத்தா கைப்பற்றுவது நம்ப முடியல. பொதுவா சீப்பை க்ளீன் பண்ணி தான் பெண்கள் வைப்பாங்க, ஆண்கள் வேணா அப்படியே விட்டுடலாம்
2 ஒரு சீனில் போலீஸ் ஒரு ஆளிடம் வாக்குவாதம் செய்வதை பாக்யராஜ் செல் ஃபோனில் வீடியோ எடுக்கிறார் , ஒரு அடி தூரத்தில் க்ளோசப்பில், இதுக்கு அந்த போலீஸ் ஒத்துக்கனுமே?
3 ஜோதிகா இன்னொரு வக்கீலிடம் பேசும்போது மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி நடந்துக்கறார். ஆங்கிலத்தில் சொல்லிட்டு அதை தமிழில் மொழி பெயர்க்கிறார், ஏன் பி ஏ பி எல் படிச்சவருக்கு கண்டெம்ட் ஆஃப் கோர்ட்னா அர்த்தம் தெரியாதா?
4 ஒரு சீனில் ஊட்டி டூ திருப்பூர் மூன்றரை மணி நேரத்தில் வரவே முடியாதுனு ஜோதிகா வாதம் செய்யறாரு. 108 கிமீ தூரம் தாராளமா வரலாம் 2 3/4 மணி நேரம் போதும்
5 முக்கியமான சாட்சியான எஸ் ஐ சுரேஷ் ஒப்புதல் வாக்குமூலம் தருவதை வீடியோ பதிவா எடுத்திருக்கலாம், அல்லது ஜட்ஜ் வீட்டுக்கே கூட்டிட்டுப்போய் பதிவு பண்ணி இருக்கலாம், அதை ஏன் செய்யலை ? சப்போஸ் சாட்சியை கடத்திட்டா/கொலை செஞ்சுட்டா என்ன பண்ண? என யோசிக்க மாட்டாங்களா?
6 ஒரு முக்கியமான பிரபலமான கேஸ் ல தீர்ப்பு சொல்லும் 2 நாட்கள் முன் ஜட்ஜ் ஒரு ஃபங்க்ஷனில் கலந்து வில்லன்ட்ட சூட்கேஸ் வாங்கறார், இவ்ளோ பப்ளிக்காவா ஒரு ஜட்ஜ் தப்பு பண்ணுவார்?
7 வில்லன் பயங்கரமான ஆள். ஓப்பனிங் சீன்ல அந்த பெண் குழந்தையை உயிரோட விட்டுப்போவது ஏன் ? சாட்சியை கொலை பண்றவரு மெயின் பிரச்சனையான ஜோதிகாவை கொலை செஞ்சா ஈசியா மேட்டர் முடிஞ்சது, அதுக்கு முயற்சி கூட செய்யலை
8 8 கோர்ட் காட்சிகளில் பார்த்திபன் மரியாதையே இல்லாம ஜோதிகாட்ட பேசுவது அவரோட வார்த்தை ஜாலத்தை வெச்சு விளையாடறது , ஜட்ஜூக்கே ஆர்டர் போடுவது எல்லாமே கேலிக்கூத்து