a
அ
அ
விஸ்வரூபம் ரிலீஸ் எப்போன்னு மட்டும் கேட்டுடாதீங்க! - கமல்
விஸ்வரூபம் படத்தின் வெளியீட்டு தேதி குறித்து மட்டும் எதுவும் கேட்டுவிடாதீர்கள் என்றார் கமல்ஹாஸன்.
இன்று
கமல் பிறந்த நாள். இன்றுதான் கோவை, சென்னை, மதுரை என மூன்று மாநகரங்களில்
விஸ்வரூபம் இசையை வெளியிட திட்டமிட்டிருந்தார் கமல். ஆனால் வானிலை
சரியில்லாத காரணத்தினால் அதை தள்ளி வைத்து விட்டதாக அறிவித்தார் (இன்னிக்கு
வெயில் பொளந்து கட்டுது!)
அதற்குப் பதிலாக இன்று காலை 10: 30
மணியளவில் சென்னை சத்யம் தியேட்டரில் "ஆரோ 3டி" டெக்னாலஜியில் தயாரான
"விஸ்வரூபம்" படத்தின் ட்ரெய்லரை பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக
போட்டுக் காண்பித்தார்.
அதுமட்டுமில்லாமல் இன்று நடைபெறுவதாக இருந்த
ஆடியோ பங்ஷனும் கேன்சலாகி விட்டதால் அதனால் தன் ரசிகர்கள் ஏமாந்து
விடக்கூடாது என்பதற்காக 30 ஊர்களில் உள்ள 30,000 ரசிகர்கள் "விஸ்வரூபம்"
படத்தின் ட்ரெய்லர் மற்றும் கமல் அவர்களுடன் நேரடியாக தோன்றி பேசும்
நிகழ்ச்சியை நடத்தினார்.
விழாவில் 5.1 மற்றும் ஆரோ 3டி சவுண்ட்
டெக்னாலஜியில் ரெடி செய்யப்பட்டிருந்த 'விஸ்வரூபம்' படத்தின் ட்ரெய்லர்கள்
போட்டு காண்பிக்கப்பட்டன.
விழாவில் பேசிய கமல், "இந்தியாவிலேயே முதல்
முறையாக இந்தப் படத்தில்தான் "ஆரோ 3டி" என்ற புதிய சவுண்ட் டெக்னாலஜி
பயன்படுத்தப்பட்டுள்ளது," என்றார்.
அப்போது கமலிடம் 5.1 ட்ரெய்லர்
காண்பிக்கப்பட்ட போது பி.வி.பி நிறுவனத்தின் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது,
ஆனால் ஆரோ 3டி டெக்னாலஜியில் போடப்பட்ட ட்ரெய்லரில் அந்த நிறுவனத்தின்
பெயர் இல்லையே..? என்று கேட்டனர்.
அதற்கு பதிலளித்த கமல், அது வியாபார சம்பந்தமான விஷயம். மற்றபடி நானும், அவர்களும் நட்பாகத்தான் இருக்கிறோம் என்றார்.
"விஸ்வரூபம்"
படம் எப்போ ரிலீஸாகும் என்ற கேள்விக்கு, "இந்தக் கேள்வி உங்களிடமிருந்து
வரும் என்று நான் எதிர்பார்த்தேன். இப்போதைக்கு அந்தக் கேள்வியைக்
கேட்காதீர்கள். வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன," என்றார்.
வெதர் சரியில்ல... அதான்...! - விஸ்வரூபம் விழா தள்ளிப் போன காரணம்!!
பருவ நிலை சரியில்லாத காரணத்தால்தான் விஸ்வரூபம் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்துவிட்டதாக கமல் தரப்பில் விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது (நக்கலா.. நிஜ காரணமா?)
மதுரை, கோவை, சென்னையில் நவம்பர் 7-ம் தேதி ஒரே நாளில் இசை குறுந்தகட்டை வெளியிடத் திட்டமிட்டிருந்தார் கமல்ஹாஸன். இதற்காக தனி ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்திருந்தாராம்.
ஆனால் திடீரென நேற்று விழாவை ரத்து செய்துவிட்டதாக அறிவித்தார். காரணத்தை மட்டும் அவர் குறிப்பிடவில்லை. இது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது.
இந்த நிலையில், விழா தள்ளிப் போனது ஏன் என்று கமல் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விழா நடக்கும் நாளன்று இடி மின்னல் மழை என வானிலை மோசமாக இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து தகவல் வெளியாகியிருப்பதால் விழாவை வேறு தேதிக்கு வைத்ததாக கமல் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் உண்மையான காரணம்?
படத்தின் ஆடியோ உரிமை இன்னும் விலை போகவில்லையாம். படத்தின் பல ஏரியா உரிமையை கமல் சொல்லும் விலைக்கு வாங்க யாரும் தயாராக இல்லையாம்.
இருந்தாலும், ரமணனை நம்பி ஒரு விழாவை தள்ளிப் போடுகிறார்கள் என்றால்... அடடா!

நன்றி - தட்ஸ் தமிழ்
இன்று கமலின் பிறந்த நாள் , நான் போட்ட ட்வீட்ஸ்
1. சாணக்யன் படம் கமல் ரசிகர்களே பலர் மிஸ் செய்த நல்ல படம்
2. வித்தியாசமான காமெடியை அறிமுகப்படுத்திய மும்பை எக்ஸ்பிரஸ் தோல்வி
3. நடனம் தெரிந்தும் தெரியாத மாதிரி ஸ்டெப் போட்ட சிப்பிக்குள் முத்து கமலின் நடிப்பில் ஒரு மைல் கல்
4. உடன் நடிக்கும் ஹீரோயின் தோள்களை உடும்புப்பிடியாக பிடிப்பவர்கள் 2 பேர்தான் 1,புரட்சித்தலைவர் 2 உல்க நாயகன்
5.மகாநதி படத்தில்தான் கமலின் திரைக்கதை அறிவு பிரமாதமாக பேசப்பட்டது.
6. சிகப்புரோஜாக்கள் பட " நத்திங் நத்திங் " சைக்கோ டயலாக்கைத்தான் புரியாத புதிர் இல் ரகுவரன் ஐ நோ ஐ நோ ஆக்கினார் (36 டைம்)
7. விக்ரம் படம் தான் அதிக சேசிங் சீன் உள்ள கமல் படம்.காக்கிச்சட்டைதான் அதிக ரொமான்ஸ் சீன்ஸ் உள்ள் கமல் படம்
8. சட்டம் என் கையில் படத்தில்தான் லிப் கிஸ் கொடுத்து தன் புனிதப்பயணத்தை கமல் துவக்கினார் # முத்தநாயகன்
9. கமல் (திரையில்) கொடுத்த அதி அழுத்த முத்தம் புன்னகை மன்னன் ரேகாவுக்கு.மித
மென்மை முத்தம் சத்யா அமலாவுக்கு ,ஆக்ரோஷமுத்தமஹேராம் ராணிமுகர்ஜி்
10. நதியா கிஸ் சீனில் நடிக்க மறுத்ததால் கடைசி வரை அவருடன் ஜோடியாக நடிக்க மறுத்த லட்சிய வீரர்தான் எங்கள் அண்ணன் கமல்
11. தன் உடன் நடிக்கும் ஜோடி நடிகைகள் அனைவருக்கும் லிப் டூ லிப் கிஸ் கொடுக்கும் முனைப்பில் திரைக்கதை அமைக்கும் கமல் பி நா வாழ்த்து
12.பிறவி நடிகன் கமல் பிறந்தநாள் ் வாழ்த்து