திருச்சி: இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய வழக்கில் வங்கி அதிகாரிக்கு 10 வருட சிறை தண்டனையும், ரூ.1.15லட்சம் அபராதமும் விதித்து திருச்சி மகளிர் கோர்ட் உத்தரவிட்டது.
திருச்சி திருவெறும்பூர் வடக்கு காட்டூரை சேர்ந்தவர் அருண் பிரசாத் (30). தில்லைநகரில் உள்ள தனியார் வங்கியின் அதிகாரி. இவருடன் அதே வங்கியில் உறையூரை சேர்ந்த பாத்திமா (29) பணியாற்றினார். இருவரும் 2006 முதல் காதலித்தனர். இதில் பாத்திமா கர்ப்பமடைந்தார். சில வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் எனக்கூறி, 2007 ஜூலை 2ம் தேதி தில்லை நகரில் உள்ள மருத்துவமனையில் பாத்திமாவுக்கு, கருகலைப்பு செய்தார்.
இந்நிலையில் சில மாதங்களில் அருண்பிரசாத் ஈரோட்டுக்கும், பாத்திமா தேனிக்கும் மாற்றப்பட்டனர். இந்நிலையில் அருண்பிரசாத், அங்கு வேலை பார்க்கும் தனலட்சுமி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதையறிந்த பாத்திமா அருண்பிரசாத்திடம் கேட்டபோது, உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியுள்ளார்.
இதுபற்றிய புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் மகளிர் போலீசார் அருண்பிரசாத் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை மகிளா நீதிமன்ற நீதிபதி ரகுமான் நேற்று கூறினார். தீர்ப்பில், பாத்திமாவை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 10 வருடம் சிறைதண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும், திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதற்கு 1 வருடம் சிறை தண்டனை ரூ.5 ஆயிரம் அபராதம் இவற்றை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என கூறினார்

. மேலும் அபராத தொகையில் ரூ.1 லட்சத்தை பாத்திமா பெயரில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் எனவும், ரூ.15 ஆயிரத்தை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து அருண் பிரசாத் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நன்றி - தினகரன்