Showing posts with label பெருமான். Show all posts
Showing posts with label பெருமான். Show all posts

Tuesday, September 04, 2012

பெருமான் - சினிமா விமர்சனம்


நம்மூர் அரசியல்வாதி மாதிரி ஹீரோவுக்கு ஒரு எண்ணம், குறுக்கு வழில பெரிய ஆள் ஆகனும், கை நிறைய சம்பாதிக்கனும்..உழைச்சு சாப்பிட்டு ஒரு பாட்டு முடியறதுக்குள்ளே பெரிய ஆள் ஆகறது விக்ரமன் படத்துல தான் சாத்தியம்னு நினைக்கறவரு..

அவருக்கு ஒரு இல்லீகல் காண்டாக்ட் கிடைக்குது. சட்டத்துக்கு விரோதமா வெளிநாட்ல இருந்து 500 கோடி ரூபாயை  இந்தியாவுக்கு கொண்டு வந்துட்டா அவருக்கு கமிஷன் மட்டும் 21 கோடி . அடேங்கப்பா. செம ஆஃபர் ஆச்சே.. ஹீரோ அதை ஆ ராசா மாதிரி பல தில்லாலங்கடி வேலை செஞ்சு சக்சஸ் பண்ணிடறார். 



 கமிஷன் பணம் ஹாட் கேஷா கிடைக்குது. ( ஹாட் கேஷ்னா செம சூடா இருக்குமா?)பணம் குடுக்கும்போதே வில்லன் ஹீரோ கிட்டே பல கண்டிஷன்ஸ் எல்லாம் போடறாரு


1. தாம் தூம்னு செலவு பண்ணி பணம் நிறைய இருப்பதை வெளிச்சம் போட்டுக்காட்டிடக்கூடாது.


2. என் ஆளுங்க எப்பவும் உன்னை ஃபாலோ பண்ணிட்டு வேவு பார்த்துட்டே இருப்பாங்க . ( ஏன் , அவனுங்களுக்கு வேற வேலை ஏதும் இல்லையா? )


3. மீறி போலீஸ்ல மாட்டற மாதிரி தோணுச்சுன்னா உன்னை போட்டுத்தள்ளிடுவோம்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqvada6H2rH-Lghlwk9gIGmsnxWrfZjWZNFtBK4VI3ibCTxNllXZQOziiX5uDDe4960M-v2kejjg7Wdkn0afkz660T5XyiVFXj3myxkeGL0kPNef7S62AoF-Nf1G8o0juYqQ56inbd-1No/s640/peruman_movie_wallpapers_04.jpg


ஹீரோ அதுக்கு எல்லாம் ஓக்கே சொல்லிடறார்..பணத்தை பேங்க்ல போட முடியாது. செலவும் பண்ண முடியாது. அதனால அவர் ரூம்ல  படுக்கைக்கு கீழே, அங்கே இங்கேன்னு ஒளிச்சு வைக்கிறார். 


 அவரோட க்ளோஸ் ஃபிரண்ட்ஸ் கிட்டே வெளியூர் போறேன். வர ஒரு வாரம் ஆகும், மறுபடி பார்ப்போம்னு டகால்டி விட்டு தலை மறைவா இருக்கார்.


ஹீரோவோட அப்பா ஃபோன் பண்ணி அம்மா சீரியஸ்.. உடனே கிளம்பி ஊருக்கு வா அப்டினு சொல்லியும் ஹீரோ போகலை.. ஏன்னா  புதையலை பூதம் காக்கற மாதிரி  இவர் அந்த பணத்தை பாதுகத்துட்டு இருக்காரே.. இவருக்கு ஒரு காதலி..  அவருக்கு இந்த மேட்டர் தெரிஞ்சு இவரை வெறுக்கறார்.


 சொந்த அம்மாவையே பணத்துக்காக உதறுபவர் நாளை நம்மையும் அப்படி கழட்டி விட மாட்டார்னு என்ன நிச்சயம்?  ஊடல்.. ஹீரோவுக்கு செம டென்ஷன்.. இந்த பணத்தால நிம்மதி, உறவு , காதல் , திருப்தி, சந்தோஷம் நட்பு வட்டம் எல்லாம் போச்சு. 


 என்ன ஆகுது? என்பதே மிச்ச மீதிக்கதை..


ஹீரோவாக  அர்ஜூன்.. ம்ஹூம் அந்த தேசபக்தர் கம் ஜெய் ஹிந்த் அர்ஜூன் அல்ல. இது புதுசு..  நிர்மலா பெரிய சாமி மாதிரி இவருக்கு கணீர்க்குரல். நல்ல பிளஸ் பாயிண்ட்.. படம் கிட்டத்தட்ட ஹீரோவையே 80% நம்பி இருப்பதால் பெரும்பாலான காட்சிகள் இவரைச்சுற்றியே நகருது.. முதல்  படம் என்ற அளவில் ஓக்கே.. இவர் ஏன் எப்பவும் தாடியோட இருக்கார்?

ஹீரோயின் ஸ்ருதி .. சித்தார்த் நெத்தில நாமம் போட்டுட்டு ஐஸ்வர்யா தனுஷ் காதுல கம்மல் மாட்டி விட்டாரே அந்த ஸ்ருதி இல்லை.. இது வேற.. 50 மார்க் தான் தேறும்..  க்ளோசப் காட்சிகளில் அவர் அழகு குறைச்சாலாத்தான் தெரியுது.. 


 வில்லன் செம காமெடி.. இயக்குநருக்கு  ஹாரீஸ் ஜெயராஜ் மேல என்ன கோபமோ அதே மாதிரி உருவத்தோற்றம் உள்ளவரை நடிக்க வெச்சிருக்கார். ஹேர் ஸ்டைல் கூட அதே போல். 


http://www.cinemobita.com/uploads/images/a13b407f6b3057dea6790db4f027c418.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1.கதைக்களன், களம் எல்லாம் புதுசு.. வழக்கமா ஒரே மாதிரி யோசிக்காம  புதுசா திங்க் பண்ணி இருப்பது குட்.. 



2. சி.ஜே.ராஜ்குமார் தான் படத்துக்கு ஒளிப்பதிவு. லைட்டிங்க் எல்லாம் ஓக்கே.. பெரும்பாலான காட்சிகள் ஒரு ரூமுக்குள்ளேயே வருவதால் இண்ட்டீரியர் டெக்ரேஷன் , லைட்டிங்க் படத்துக்கு ரொம்ப முக்கியம்,. உணர்ந்து செஞ்சுருக்காரு இயக்குநர். கேனான் 5டியில் எடுக்கப்பட்டதாம் இந்தப்படம். பாராட்டுக்கள்



3.  டைட்டில் டிசைன் அழகு.. அதுக்கான பேக் கிரவுண்ட் மியூசிக்கும் ஓக்கே  ( லேசான சுடல் இருந்தாலும் ) .



 மனம் கவர்ந்த ஒரே வசனம் 



1. சாமி கண்ணைக்குத்தி கேள்விப்படிருக்கேன், ஆனா இவன் சாமி கண்ணையே குத்தி ஏமாத்தும் ஆள்


 இவன் இன்னும் சாகலை? போன தீபாவளிக்கே செத்திருப்பான்னு நினைச்சேன்


http://www.kodambakkamtoday.com/wp-content/uploads/2011/05/peruman-movie-still.jpg.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள் 



1.  படத்தோட முதுகெலும்பான ஒரு சீன்ல படு பயங்கர லாஜிக் சொதப்பல்..  ஹீரோ 21 கோடி ரூபாயை ஒரு டூரிஸ்ட் பேக்ல என்னமோ 3 செட் டிரஸ் வெச்சு எடுத்துட்டு வர்ற மாதிரி பைக்ல அசால்ட்டா வர்றார்.. 1000 ரூபாய் நோட்டாவே இருந்தாலும் ஒரு கோடி ரூபாய்க்கு  100 கட்டு அப்போ 21 கோடிக்கு 2100 கட்டு வைக்க குறைஞ்ச பட்சம் 4 பேக் வேணும்.. அதே போல் அதன் எடையும் ஜாஸ்தியா இருக்கும். அப்படி அசால்ட்டா எல்லாம் கொண்டு போக முடியாது. புதிய 1000 ரூபாய் நோட்டு கட்டு 10 லட்சம் ரூபா  12 கிலோ வரும் என சொல்றாங்க.அப்போ ஒரு கோடி 120 கிலோ.. 21 கோடி  = 2520 கிலோ வருது. ஒரு மினிடோர் வேன்ல தான் கொண்டு போக முடியும். ஆனா ஹீரோ என்னமோ  காலி கேஸ் சிலிண்டர் கொண்டு போற மாதிரி அசால்ட்டா கொண்டு போறாரே? இதுல சேசிங்க்ல சாகசம் வேற.


2. பேங்க்ல 21 கோடியையும் போட முடியாது என்பது உண்மைதான். 50,000 ரூபாய் போட்டா பேன் கார்டு பேப்பாங்க, இன்கம் டாக்ஸ் காரங்க நோட் பண்ணுவாங்க ஓக்கே.. 49,000  ரூபாயாக பிரிச்சு பிரிச்சு போடலாமே? ஒரு கோடிக்கு  200 பேங்க்ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ண மலைப்பு தான், 21 கோடிக்கு 4200 அக்கவுண்ட் ஒப்பன் பண்ணனும், ரிஸ்க் தான், ஆனா சேஃப்டி. போஸ்ட் ஆஃபீஸ்  பிராஞ்ச்சே போதுமே? வேலை, அலைச்சல் அதிகம்.. ஆனா ஹீரோ படற அவஸ்தைக்கு இது பெரிய விஷயம் இல்லை.



3. ஹீரோ தான் குடி இருக்கும் வீட்டில் பணத்தை ஒளித்து வைக்காமல் தன் சொந்த ஊரில் கொண்டு போய் பணத்தை அப்பாவிடமோ ,  அம்மாவிடமோ கொடுத்து வைத்திருக்கலாம்.. பாதுகாப்புக்கு பாதுகாப்பு.  உடல் நிலை சரி இல்லாத அம்மாவையும் பார்த்த மாதிரி ஆச்சு.. 


4. வில்லன் எதுக்கு வேலைப்பொழப்பத்து ஹீரோவை கண்காணிக்க 3 பேரை நியமிக்கறான்? அவன் என்ன எம்ப்ளாய்மெண்ட் எக்சேஞ்ச் ஆஃபீசா நடத்தறார்? அத்தனை பேரை வெச்சு வேலை தர.. தண்டம் வேற முட்டுக்கோல் வேற என்பது போல் பணத்தையும் கொடுத்துட்டு அவன் அதை எப்படி ஹேண்டில் பண்றான்னு பார்க்க ஆளும் போடனுமா? அதுக்கு அவனை போட்டுதள்ளிடலாமே? 


5. கைல 21 கோடி வந்ததும் எந்த லூஸாவது பைக்ல அதை கொண்டு வருவானா? அது பாதுகாப்பா?  ஒரு டாக்சி கூடவா வெச்சுக்க மாட்டான்? சப்போஸ் டிராஃபிக் போலீஸ் பார்த்து டவுட் வந்து விசாரிச்சு செக் பண்ணுனா மாட்டிக்க மாட்டானா? ( டாக்ஸின்னா பேக் பார்க்க வழி இல்லை, ஆனா பைக்ல அவளவ் பெரிய பேக் வெச்சுட்டு போவது டேஞ்சர்.. 



6. ஹீரோ குடி இருக்கும் அபார்ட்மெண்ட்ல ஒரு ஃபிகர் லவ்வரோட ஓடிப்போகுது.. அது பற்றி விசாரிக்க வரும் போலீஸ் என்னமோ ஹீரோவை கிரிமினல் குற்றவாளி மாதிரி விசாரிப்பது ஏன்? மூடு மந்திரமாவே இருக்காரே அந்த போலீஸ்.. எதுக்கு? சஸ்பென்ஸுக்காகவா? சகிக்கலை..



7. அந்நியன் விக்ரம் 3 விதமா மாத்தி மாத்தி நடிச்சது ஷங்கர் டைரக்‌ஷன்ல பார்க்க நல்லாருந்தது, ஆனா இந்தப்பட ஹீரோ ஒரு புதுமுகம். நடிகர் திலகம் ரேஞ்ச்க்கு அவர் அடிக்கடி கண்ணாடி முன்னால நின்னு பண்ணும் மோனோ ஆக்டிங்க் செம கடுப்ஸ்.. ஒரு சீன் வைக்கலாம் . 6 டைம் ஓவரோ ஓவர்..



8. ஹீரோ விலை உயர்ந்த காரை வாங்கி அதை பார்க் பண்ண மாசம் ரூ 3500 வாடகை ல ஒரு கார் ஷெட் பிடிக்கறார். இது தேவை இல்லாத சீன். படத்துக்கு எதுக்கு இந்த சீன்? வில்லனோட கண்டிஷனே பணம் இருப்பதை காட்டிக்கக்கூடாதுன்னு தானே? எதுக்கு ரிஸ்க் எடுக்கறார்? காதலியிடம் பந்தா காட்ட என்றாலாவது பரவாயில்லை. அதுவும் இல்லை.. எதுக்கு பின்னே?


9. இந்தப்படத்தின் கதைக்கும் ரஜினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, பின்னே எதுக்கு டைட்டிலை பெருமான் என்கிற ரஜினிகாந்த் -னு டைட்டில் வெச்சீங்க? அப்புறம் ரஜினி கூப்பிட்டு கண்டிச்ச பின் மாத்துனீங்க? பேருக்கு நான் ரஜினி மாதிரி ஆக ஆசைப்படறேன்னு ஒரு டயலாக் ஹீரோ பேசறார். அதுக்காக இப்பவும் டைட்டில்க்கு கீழே சம்பந்தம் இல்லாம ரஜினி பேரு வேற..



10. ஹீரோவை ரொம்ப நேரம் காட்றது செம போர். ஹீரோயின் திருப்பதி லட்டு மாதிரி இருக்கா.. அவளை சேர்த்து காட்டி இருந்தா போர் அடிக்காம படம் போகும், ஆனா அவரை சரியா யூஸ் பண்ணலை.. ( ஐ மீன் படத்துல )


11. டைட்டில் இப்படி கேரக்டர் பேர் வைக்கனும்னா ஹீரோ பெரிய ஆளா இருக்கனும். புதுமுகத்தை வெச்சு ப்டம் எடுக்கற யாருமே டைட்டில் அப்டி வைக்கக்கூடாது.. அவர் என்ன அவ்ளவ் பெரிய அப்பாடேக்கரா?ன்னு  ஆடியன்ஸ் நினைப்பாங்க..  நான் தேர்வு செய்திருக்கும் டைட்டில் - கையில் 21 கோடி ஆர் யூ ரெடி?  அல்லது ”21 வயசு, 21 கோடி  ”

https://lh3.googleusercontent.com/-tAfbx56HmGc/UDUyZU2pMGI/AAAAAAAAab0/k6uR4rZyWio/Peruman.jpg

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 39

 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - எல்லாரும் இந்தப்படத்தை ரசிச்சுட முடியாது. 30 வயசுக்கு
உட்பட்டவர்கள் மட்டும் பார்க்கலாம்.. பெண்களும் பார்க்கும் தரத்தில் தான்
படம் இருக்கு. சென்னை ஃபோர் ஃப்ரேம் தியேட்டரில் படம் பார்த்தேன்.


தேநீர் விடுதி உதவி இயக்குநரும், பாடல் ஆசிரியருமான முருகன் மந்திரன் அவர்களுடன், ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களுடன் சேர்ந்து படம் பார்த்தது மகிழ்ச்சி . இடைவேளையின் போது படத்தின் ஹீரோயின் , இயக்குநர் இருவரையும் பார்க்க முடிந்தது


 பலராலும் பாராட்டு பெற்ற டைட்டில்  இசை சுடப்பட்ட லெமன் ட்ரீ ஒரிஜினல் 


a
டிஸ்கி- இணை உலகில் புரட்சி -
http://puradsifm.com/ -