ஸ்கூல்ல நடக்கற வழக்கமான காதல் கதை இல்லை. இதுல வழக்கு எண் 18/9 , விசில் , சிநேகிதியே எல்லாத்தையும் மிக்சில போட்டு அரைச்சு ஒரு கதை. 1980 கள்ல ராஜேஷ் குமார் நாவல்ல ஒரு டெக்னிக் வெச்சிருப்பாரு ( ஃபாரீன் நாவல் சாயல் தான்} அதாவது ஒரு கொலை நடக்கும். கொலைசெய்யப்பட்ட நபருக்கு ஏகப்பட்ட எதிரிங்க இருப்பாங்க. கடைசில கொலையாளி நாம் யூகிக்காத நபர்.
ஸ்கூல்ல ஒரு வில்ல்ன் ஸ்டூடண்ட், இவரு சினிமா ஹீரோவோட பையன் என்பதால் ஸ்கூலுக்கு செல்லப்பிள்ளை. இவன் என்ன பண்றான்? லேடீஸ் டாய்லெட் ல கேமரா வெச்சு அதில் பதிவாகும் பிம்பங்களை ரசிப்பவன்.
அந்த ஸ்கூல் வாத்தியாரும், டீச்சரும் ஒரு டைம் பிராக்டிகல் ரிகர்சல் பண்றது எதேச்சையா வீடியோவில் பதிவாகிடுது. அதை வெச்சு டீச்சரை மிரட்டி மார்க் வாங்கறான் ( தத்திவில்லன் போல ஹிஹி )
லவ் பண்றதா சொல்லி ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணி அவங்க கில்மா ல இருக்கும் போது எடுத்த வீடியோவை காட்டி அந்த ஃபிகரை மிரட்டி பணம் சம்பாதிக்கறான்
படிப்பே வராத குமார சாமியான வில்லன் நல்லா படிக்கும் ஹீரோவை அடிக்கடி எதிர்க்கறான்.ஹீரோவோட ஆராய்ச்சிக்குறிப்பை போட்டு எரிச்சுடறான்
இதெல்லாம் பத்தாதுன்னு ஹீரோயினோட தோழியை கரெக்ட் பண்ணி மிரட்றான்
இந்த மாதிரி பலரது வெறுப்பை சம்பாதிக்கும் வில்லன் திடீர்னு ஸ்கூல் ல க்ளாஸ் ரூம்லயே கொலை செய்யப்படறான். அவனைக்கொன்னது யார்? என்பதை ஹீரோயின் துப்பறிந்து கண்டு பிடிக்குது. அப்போ ஹீரோவுக்கு என்ன வேலை? அவரு ஹீரோயின் நல்ல ஃபிகரா? நமக்கு செட் ஆகுமா?ன்னு துப்பறிஞ்சுட்டு இருப்பாரு
ஹீரோவா ஜி வி பிரகாஷ், இவரோட ஸ்கூல் பாய் கேரக்டருக்காக இவரது முக அமைப்பையே மாற்றி இருக்காரு.3 படத்துல தனுஷ் போல் யூத் தோற்றம் குட். நடிப்பு சுமாரா வந்தாலும் சமாளிக்கிறார்
ஹீரோயினா பஞ்சு மிட்டாய் உதட்டழகி பால் கோவா கன்ன அழ்கி , பாதுஷா கழுத்தழகி ஸ்ரீ திவ்யா. அழகழகான டிரஸ்கள்ல வந்து போகிறார், இவர் தான் லேடி ஜேம்ஸ்பாண்ட். போலீஸ் ஆஃபீசரொட பொண்ணுன்னு காட்டிட்டதால அவர் எது செஞ்சாலும் கேக்க ஆள் இல்லை
வில்லனா அனிரூத் முகச்சாயல்ல வேணும்னே ஒரு பையனை செலக்ட் பண்ணி ஜிவிபியை திருப்தி பண்ணி இருக்காங்க
பின் பாதியில் ஊர்வசி , டி பி கஜேந்திரன் காமெடி களை கட்டுகிறது. ஸ்கூலில் இன்ஸ்பெக்சன் நடக்கும்போது கொலை நிகழ்வதாக திரைக்கதை அமைக்கப்பட்டதால் அதை வைத்து ஒப்பேற்றப்படும் காமெடி டிராக் ஒர்க் அவுட் ஆகிறது.
முன் பாதியில் ஹீரோ ஹீரோயின் வில்லன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிக பிரமாதம் என சொல்லும்படி இல்லை என்றாலும் ஓக்கே ரகம் தான்
அந்த கிளு கிளு டீச்சர் கேரக்டர் யார்னு தெரியலை ( தெரிஞ்சா மட்டும் நீ என்ன பண்ணிடப்போறே?)
இசை , பின்னணி இசை குட் . ஒளிப்பதிவு சூப்பர்.
நச் டயலாக்ஸ்
1 நம்ம மனசுக்குப்பிடிச்சவங்க நம்மைத்திட்டினாக்கூட நமக்குப்பிடிக்குது #பென்சில்
2 சரஸ்வதியை விக்க நினைச்சா நம்மை விட்டு அவ போய்டுவா #பென்சில்
3 சிவா.ஒரு உதவி.நீ ரெகுலரா லைப்ரரி எப்போ வருவே னு சொல்லு
சரி மாயா
நான் வர்ற டைமை மாத்திக்கறேன் #பென்சில்
5 டேய்.உங்க 2 பேருக்கும் இன்னும் லவ்வே வர்ல.அதுக்குள்ளே டவுட் வருதா?#பென்சில்
6 அவளுக்கு என்னை சுத்தமாப்பிடிக்கலை.ஆனா எனக்கு அவளை மட்டும்தான் பிடிச்சிருக்கு #பென்சில்
7 எதிர்பாராத விதமா ஆக்சிடென்ட் நடந்திடுச்சு.
எதிர்பாராத விதமா நடந்தா அது தான் ஆக்சிடென்ட்.திட்டம் போட்டு நடந்தா அது 20-20 #பென்சில்
8 டீச்சர்ஸ் ஒவ்வொரு காலகட்டத்துலயும் மாறிட்டே இருப்பாங்க.ஆனா பேரன்ட்ஸ் மாறவே மாட்டாங்க #பென்சில்
தியேட்டரிக்கல் ட்விட்டர் அப்டேட்ஸ்
1 ஜிவிபி க்கு அனிரூத் மேல என்ன காண்டோ?வில்லன் அனிரூத் சாயல் #பென்சில்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 எல்லார் முன்னாடியும் என்னை அவமானப்படுத்திட்டே என ஹீரோயின் ஹீரோ முன் சொல்லும்போது 1 ஏக்கரா ரேடியசில் “ எல்லாரையும்” தேடி ஏமாந்தேன். யாருமே இல்லை
2 பள்ளி கொல்லைப்பக்கத்தில் பன்றிகள் நடமாட்டம் இருப்பதும் அவைகள் கூட ஏ செண்ட்டர் ஸ்டூடன்ட்ஸ் ஓடிப்பிடித்து விளையாடுவதும் ஓவர் , உவ்வே
3 டீச்சரும் , ஆசிரியரும் கில்மா பண்ணும் வீடியோ லட்டு போல் வில்லன் கைல இருக்கும்போது அவன் அதை வெச்சு என்ன என்னமோ சாதிக்கலாம். அவன் லூசா? இல்லை வில்லன் வேலைக்கு லாயக்கு இல்லாதவனா?
4 ஸ்கூலில் பல வருசம் சர்வீஸ் உள்ள ஆசிரியர் டீச்சரைக்கரெக்ட் பண்ண ஏகப்பட்ட க்ளாஸ் ரூம் காலியாக / பூட்டப்பட்டவை/ சும்மா இருப்பவை எல்லாம் இருக்கும்போது பாத்ரூமில் கரெக்ட் பண்ணுவது ஏனோ?
5 ஊர்வசியிடம் டி பி கஜேந்திரன் “ எங்க ஸ்கூல்ல மொத்தம் 10,000 மாணவர்கள் இருக்காங்க என வசனம் பேசறார். அடுத்த சீனில் ஹீரோ 4000 பேர் படிக்கும் ஸ்கூல் அப்டிங்கறார் . படத்துக்கு டயலாக் குமார சாமியா?
6 ஒரு சூப்பர் ஸ்டாரின் மகனாக காட்டப்படும் வில்லன் ஸ்டூடண்ட் பிச்சைக்காசு 10,000 ரூபாய்க்காக ஒரு பொண்ணை மிரட்டுவது நம்பும்படி இல்லை
7 ஸ்கூல் பூரா வாட்சிங்க் கேமரா இருக்குனு டயலாக் வருது, ஆனா பப்ளிக்கா வில்லன் நீச்சல் குளத்தில் கொலை செய்த பேபியின் டெட் பாடியை காட்டி ஒரு பொண்ணை மிரட்றான், எப்படி?
8 செல் ஃபோன் வீடியோவில் லேடீசை கில்மா போசில் பார்த்து மகிழும் வில்லன் வாய்ப்பிருந்தும் எந்த லேடீசிடமும் தவறாக அதிகம் நடந்து கொள்ள வில்லை, அட்லீஸ்ட் ஹீரோயினைக்கூட கையைப்பிடிச்சு இழுக்கலை
9 விசாரணைக்கு வரும் போலீஸ் ஆஃபீசர் அரை மணி நேரமா ஸ்கூலுக்குள்ளே சுத்திட்டு இருக்கேன் ஆனா பார்க்க வந்த ஆளை பார்க்க முடியலைங்கறார். பொதுவா அவர் கூட பியூனை அனுப்பி விடுவாங்க, ஏன் அனுப்பலை?
10 ஹீரோ ஹீரோயின் காதல் காட்சிகள் ஏனோ தானோ என நகருது. அதில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகலை ( நல்ல வேளை ஆகலை )
சி.பி கமெண்ட் - பென்சில் = முன் பாதி ஸ்கூல் லவ் பின் பாதி க்ரைம் த்ரில்லர் - காமெடி மிக்சிங் ஒர்க் அவுட்.பிஜிஎம் குட் ,விகடன் =43,ரேட்டிங் =3 / 5