பொதுவா ஒரு மனுஷன் கேவலப்படுற மேட்டரை வெளில சொல்ல மாட்டான்.(அப்போ நீ மனுஷன் இல்லையா?) அதுவும் பொண்ணால கேவலப்பட்டா அது ஆளுங்கட்சிகள் செய்யும் ஊழல் மாதிரி வெளிலயே வராது...இதையும் தாண்டி நான் ஏன் அதை வெளில சொல்றேன்னா மனிதனின் மனோவியல் சாஸ்திரம் தான்.அடுத்தவனுக்கு ஒரு கேவலம்னா அதை ஆர்வமா படிப்போம்.சரி... அந்த கேவலத்தை ஏன் கல்கியின் பொன்னியின் செல்வன் மாதிரி பாகம் 1, பாகம் 2 -னு போடறேன்னா நிறைய பேர்கிட்டே கேவலப்பட்டு இருக்கேன்.. ஹி ஹி .
நான் ரொம்ப சின்னப்பையனா இருந்தப்ப (இப்போ சின்னப்பையன்னா அப்போ ரொம்ப சின்னப்பையன்தானே? - நான் கரெக்டா பேசறேனா?)எனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்க போன அனுபவம் தான் இந்த பதிவோட KNOT.
மணல் கயிறு படம் பார்த்த எஃபக்டோ என்னவோ நான் சில கண்டிஷன்ஸ் போட்டேன்.
1. பொண்ணு சிவப்பா கலரா இருக்கனும். ( பிளாக்& ஒயிட்னா ஒத்துக்க மாட்டியா?) ஆனா நான் கறுப்புத்தான். கறுப்பும் ,சிவப்பும் சேர்ந்தா நாடாளுமாமே..?#டி எம் கே
2.பிளஸ் டூ வரை படிச்சிருந்தா போதும். ( சின்ன வயசு ஃபிகரா சிக்கும்னு ஒரு நப்பாசை)
3. சைவமா இருக்கனும்.(பின்னால சண்டை வந்தாக்கூட கடிக்கக்கூடாது.).அதுவும் சுத்த சைவமா முட்டை,கேக் கூட சாப்பிடாததா இருக்கனும் ( செலவு கம்மி)
4.வேலைக்குப்போற பொண்ணா இருக்கக்கூடாது...(ஏன்னா எனக்கு மட்டும் வேலை இல்லாதப்ப மனைவி மட்டும் வேலைக்குப்போனா நமக்குக்கேவலம் தானே..?)
மேலே சொன்ன கண்டிஷன்லாம் எதுவுமே செட் ஆகலை.(ஃபிகரும் செட் ஆகலை) அதுக்கு முக்கியக்காரணம் எனக்கு செவ்வாய் தோஷம் இருந்ததுதான்.(இப்போ வெள்ளி தோஷம் மட்டும் #சினிமா ). சரின்னு என் கண்டிஷன்சை கொஞ்சம் கொஞ்சமா தளர்த்திட்டே வந்தேன்.கலைஞர் சோனியா கிட்டே பணிஞ்சு போற மாதிரி..
ஈரோட்ல ஜெகநாத புரம் காலனில ஒரு பொண்ணு இருக்கறதா சொன்னாங்க.. ( அவ்வளவு பெரிய காலனில ஒரே ஒரு பொண்ணா?)சரின்னு பொண்ணு பார்க்கப்போனோம்.பொண்ணோட வீட்ல பொண்ணு பார்க்க விட மாட்டாங்க.அதனால பக்கத்து வீட்டுல ஏற்பாடு.அந்த வீட்ல 3 ஃபிகருங்க..28 ,22, 18 (வயசு).மூணு ஃபிகருமே எனக்கு பிடிச்சுப்போச்சு.( நாம எந்த ஃபிகரை வாழ்க்கைல பிடிக்கலைன்னு சொல்லி இருக்கோம்?)
அம்மா.. எனக்கு 3மே ஓக்கே.. அப்படின்னேன். எங்கம்மா முறைச்சாங்க..டேய்.. அவங்க பக்கத்து வீட்டுப்பொண்ணுங்க..அதும் ஒரு பொண்ணு கல்யாணம் ஆனது..நாம பார்க்க வேண்டிய பொண்ணு இப்பத்தான் வரும்.. வெயிட்.
தென்றலே என்னைத்தொடு ஜெயஸ்ரீ கணக்கா ( ஏன் பிசிக்ஸா,கெமிஸ்ட்ரியா இல்லை?) ஒரு ஃபிகர் வந்தது.. சினிமால பார்க்கற மாதிரி அலங்காரம் எல்லாம் பண்ணலை. பவுடர் கூட அடிக்கலை.ஆனா செம கலர். ( அதென்ன செம கலர் ? செம்மையான கலர் தான் மருவி செம கலர் ஆகி இருக்கும்னு நினைக்கிறேன்)
5 நிமிஷம் எங்க முன்னால உக்காந்திருந்தது. என்னை தைரியமா பார்த்துது.(பொண்ணுங்க எல்லாம் தைரியமா பார்த்துடறாங்கப்பா) அப்புறம் உள்ளே போயிடுச்சு.போய் பக்கத்து வீட்டு ஃபிகர் 28 வயசுன்னு சொன்னேனே அந்த அக்கா கிட்டே (இப்ப திடீர்னு ஏன் அக்கா?#கல்யாணம் ஆனாலே அந்த லிஸ்ட்டுக்கு கொண்டு வந்துடுவோம் இல்ல?) மாப்பிள்ளை என்னை விட கலர் கம்மி.. எனக்கு பிடிக்கலை. இதை அவங்க மனம் கோணாம சொல்லிடுங்கக்கா.. அப்படின்னு சொல்லுச்சாம்...
இதை அப்படியே ஒப்பனா, பப்ளிக்கா சொன்னாங்க..எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா போச்சு..அப்பத்தான் நான் டார்லிங்க் டார்லிங்க் டார்லிங்க் படத்துல வர்ற பாட்டு ஓ நெஞ்சே.. நீ தான் பாடும் கீதங்கள் பாட்டோட சரணத்துல வர்ற வரிகளான உள்ளக்கதவை நீ மெல்லத்திறந்தாய்..பாடிட்டு இருந்தேன். பணால் ஆச்சு.. எல்லாரும் கிளம்பிட்டோம்.பொண்ணு பேரு அபிராமி.நான் முதன் முதலா பார்த்த பொண்ணோட ஞாபகமாத்தான் இப்போ என் குழந்தைக்கு அபிராமின்னு பெயர் வெச்சதா நினைக்காதீங்க.. அது எதேச்சையா நடந்தது.
அடுத்து ஈரோடு லோட்டஸ் அப்போலோ ஹாஸ்பிடல்ல ரிசப்ஷனிஷ்ட்டா ஒர்க் பண்ற மோஹனா அப்படின்னு ஒரு பொண்ணு. அதைப்பார்க்க போனோம்.வீட்ல பார்த்தா செண்ட்டிமெண்ட்டா ராசி இல்லைன்னு அவங்க ஒர்க் பண்ற ஹாஸ்பிடலுக்கே போனோம். பொண்ணோட அப்பா பேரு சிவக்குமார்.அவர் ஹாஸ்பிடலை சுத்தி காண்பிச்சார். (அந்த பொண்ணு வேலை செய்யுதா?ஓனரா?)
மொத்தம் 36 நர்சுங்க..எல்லாம் கேரளா ஃபிகருங்க.. நீங்க 1000 தான் சொல்லுங்க.. அல்லது 1001 கூட சொல்லுங்க கேரளா ஃபிகர்னா கேரளா ஃபிகர் தான் பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கும்.(இது பற்றி தனி பதிவு மறுக்கா போடறேன் ,டைட்டில்-பாலக்காட்டுப்பொண்ணுங்க - தேங்காய் பன்னுங்க )
சினிமால டூயட் சீன் காட்டறப்ப தோழிகளைக்காட்டி பிறகு கடைசியா ஹீரோயினை காட்டுன மாதிரி மோஹனாவை கடைசியா காட்னாங்க.. அடாடா.. லைலா மாதிரி தில் படத்துல வருமே உன் சமையல் அறையில் நான் உப்பா? சர்க்கரையா? பாட்டுக்கு . அதே மாதிரி சாயல்...வயசு 19 3/4 தான் இருக்கும்.( பர்த் சர்ட்டிஃபிகேட் பார்த்த மாதிரியே சொல்றானே)
நல்லா பேசுச்சு... நானும் பேசுனேன். செம கடலை...அப்புறம் ஒரு ஆச்சரியம் நடந்தது.. பொண்ணுக்கு என்னை பிடிச்சிடுச்சு... ஒரே கொண்டாட்டம் தான்.
கிட்டத்தட்ட நிச்சயம் வரை போயிட்டோம். அப்புறம் தான் விதி விளையாடுச்சு.( விதி என்ன ஸ்போர்ட்ஸ்மேனா?) எனக்கு கொஞ்சம் வாய் ஜாஸ்தி (வாய் மட்டுமா?)பொண்ணோட அப்பா கிட்டே பேச்சு வாக்குல சார்... நீங்க புக்ஸ் எல்லாம் படிச்சிருக்கீங்களா? ஆனந்த விகடன்,குமுதம் இதுல எல்லாம் என் ஜோக்ஸ் வரும்...
அவர் உடனே..ஆமா.. பார்த்திருக்கேன்.. பாக்யால கூட ஏ ஜோக்ஸ் எழுதுவீங்களே.. அது நீங்க தானா?
ஹி ஹி ஆமா சார்...
அவர் டக்குன்னு ஆள் சைலண்ட் ஆகிட்டார். எதுவும் பேசல. அடுத்த நாள் மோஹனா ஃபோன் போட்டுச்சு (கீழே போடலை)
”நீங்க புக்குக்கு எழுதறது அப்பாவுக்கு பிடிக்கலை’
ஏன்?
ஏ ஜோக் நிறைய வருதாம்... அப்போ உங்க கேரக்டரும் அதே மாதிரி தானே இருக்கும், இந்த இடம் வேணாம்னு சொல்றார்”
அட.. ராஜேஷ் குமார் கூட க்ரைம் கதை எழுதறார்,, அப்போ அவர் கொலை பண்ற ஆளா?
அப்படி இல்லைங்க... எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல.. எங்கப்பா அப்படி ஃபீல் பண்றாரு...
சரி இப்போ என்ன பண்ணனும்னு சொல்றே,..?
நீங்க பாக்யா புக்குக்கு ஜோக் எழுதறதை நிறுத்தனும்.. அதை எங்கப்பா கிட்டே சொல்லனும்.இனிமே அந்த புக்குக்கு ஏ ஜோக் எழுத மாட்டேன்ன்னு....
அது நடக்காது.. கே பாக்யராஜ் சார் புக்கிற்கு தொடர்ந்து எழுத காரணமே அவர் எப்பவாவது என் எழுத்துல இன்ஸ்பிரேஷன் ஆகி ஏதாவது வசன சான்ஸோ, காமெடி ஸ்கிரிப்டோ தருவார்னு தான்.சாரி....
அவ்வளவுதான்....அந்த மோஹனா சேப்டர் க்ளோஸ்......
இந்த 2 பெண் பார்க்கும் படலங்கள்ல இருந்து நமக்கு தெரியற நீதி என்னன்னா..
1. பொண்ணு பார்க்கப்போறப்ப இயற்கையா என்ன அழகு இருக்கோ அது போதும்னு அசால்ட்டா இருக்கக்கூடாது.. பியூட்டி பார்லர் போய் நம்மை அழகு படுத்திட்டு டீசண்ட்டா போகனும்...(அப்போ நான் இண்டீசண்ட்டா..?)
2. ஓப்பனா எதையும் நாம பேசிடக்கூடாது.. மனசுக்குள்ளே என்ன எண்ணம் இருந்தாலும் வெளில நல்லவன் மாதிரியே காட்டிக்கனும். உண்மையான மனிதனுக்கு மதிப்பில்லை.. பொய்யா நல்லவனா வேஷம் போடனும்.
நல்ல வேளை அந்த மோஹனாவோட அப்பா பாக்யா மட்டும் படிச்சாரு.. விருந்து,திரைச்சித்ரா,ஹெர்குலிஸ் எல்லாம் படிக்கலை... ஒரு வேளை அதையும் படிச்சிருப்பாரோ#டவுட்டு.
டிஸ்கி -1 : மகளிர் தினத்துக்கும், இந்த பெண் பார்க்கும் படலத்துக்கும் என்ன சம்பந்தம்.?என்னை கட்டிக்காம போனதே அந்த பொண்ணுங்களுக்கு நல்லது தானே.. அது பெண் குலத்துக்கு நல்லது நடந்த மாதிரிதானே...#சமாளிஃபிகேஷன்
டிஸ்கி -2 : பதிவுக்கும், லைலா ஃபோட்டோவுக்கும் என்ன சம்பந்தம்னா முத பொண்ணு ஃபோட்டொ, 2வது பொண்ணு ஃபோட்டோ 2ம் வெச்சிருக்கேன். ஆனா இந்த பதிவு போட அனுமதி கொடுத்த அந்த 2 ஃபிகருங்களும் ,ஃபோட்டோ போட அனுமதிக்கலை..அதனால நடிகை ஃபோட்டோ...
டிஸ்கி 3 - முதலாவதா பார்த்த ஃபிகர் அபிராமி த்ரிஷா மாதிரின்னு சொல்ல முடியாது.. ஆனா அந்த ஃபிகரோட டிரஸ்ஸிங்க் சென்ஸ் த்ரிஷா மாதிரி இருக்கும். வழக்கமா பொண்ணுங்க வளையல் போடும்போது புடவை கலர்ல போடுவாங்க.. ஆனா த்ரிஷாவோட இந்த ஸ்டில்லுல பாருங்க பார்டர் கலர்+ புடவை கலர் 2 காம்பினேஷனும் மேட்ச் ஆகற மாதிரி வளையல் கலர் மேட்ச் ஆகறதை....அந்த ஃபிகரும் அப்படித்தான் போட்டிருந்தது..#நல்லா நோட் பண்ணு ஆனா கோட்டை விட்டுடு@மனசாட்சி