Showing posts with label பெண் பதிவர்கள். Show all posts
Showing posts with label பெண் பதிவர்கள். Show all posts

Wednesday, May 11, 2011

பெண் எழுத்து - ஒரு பாஸிட்டிவ் பார்வை

http://www.behindwoods.com/tamil-movie-news-1/may-10-03/images/anu-radha-ramanan-17-05-10.jpg
அனுராதாரமணன் எழுதிய கதையை நடிகை லட்சுமி நடிக்க இயக்குநர் சக்தி எடுத்த படமான சிறை சினி ஃபீல்டில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.தன்னை சீரழித்த கயவனின் வீட்டிலேயே சென்று அடைக்கலம் தேடும் ,அவனை கணவனாக ஏற்கப்போராடும் புரட்சிப்பெண்ணின் கதை.இந்தப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி அனுராதாரமணனுக்கு பெரிய பூஸ்ட் அப்பாக அமைந்து அதற்குப்பிறகு நாவல் உலகில் பல வெற்றிகளை குவித்தார். தினமலர் வார மலர் -ல் அந்தரங்கம் கேள்வி பதில் பகுதியில். பலரது சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து கலக்கினார். அதுவரை வாரமலர் என்றால் அந்துமணி கேள்வி பதில்,பார்த்தது கேட்டது படித்தது இவை தான் முன்னணியில் இருந்தன.அந்தரங்கம் கேள்வி பதில் வந்த பிறகு அது புக்கை எடுத்ததும் வாசகர்கள் படிக்கும் முதல் பகுதி அந்தஸ்தை பெற்றது.

தேவி,ராணி,குமுதம்,விகடன் உட்பட பல பத்திரிக்கைகளில் எழுதி பல பெண் வாசகர்களை, கவர்ந்த எழுத்தாளர் லட்சுமி நீண்ட நாட்கள் ஃபீல்டில் இருந்த  பெண் எழுத்தாளர்களில் முக்கிய இடம் பிடிக்கிறார்.பெண் மனம்,அகிலா,சூரிய காந்தம் அவரது பிரபல நாவல்கள்.
http://www.ramanichandran.in/images/9.Ramanichandran..jpg
ரமணி சந்திரன் நாவல் லீடரில் இப்போதும் நாவல்கள் எழுதி இந்தியாவிலேயே அதிகம் விற்பனை ஆகும் பெண் நாவல்-ல் தொடர்ந்து எழுதும் பெண் எழுத்தாளர் என்னும்  பெருமைக்கு சொந்தக்காரர் ஆகிறார்.ஜோடிப்புறாக்கள்,தேவி ஆகிய நாவல்கள் அதிக பெண்களால் ரசிக்கப்பட்டவை.

சிவசங்கரி,இந்துமதி, வித்யா சுப்ரமணியம் போன்ற பெண் எழுத்தாளர்கள் ஆண்கள் மனதையும் தைக்கும் அளவு எழுத்தில் வல்லமை பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

மலையின் அடுத்த பக்கம்,அப்பா,ஏன்? எதற்காக? போன்றவை சிவசங்கரியின் டாப் நாவல்கள்.இந்துமதிக்கு தரையில் இறங்கும் விமானங்கள்,மணல் வீடுகள் போன்றவை செம ஹிட்.  சிவசங்கரி,இந்துமதி இருவரும் சேர்ந்து இரண்டு பேர் என்ற நாவலை எழுதியது அந்தக்காலத்தில் பர பரப்பாக பேசப்பட்டது. முதல் அத்தியாயம் ஒருவர் எழுத அடுத்த அத்தியாயம் மற்றொருவர் எழுத வித்தியாசமான நாவல் அந்தாதி உருவானது.

வித்யா சுப்ரமணியம் தென்னங்காற்று மூலம் பலரது மனம் கவர்ந்தார்.அவர் வலைப்பூவும் ஆரம்பித்துள்ளார்.


வாஸந்தி நிலாக்கால நேசங்கள்,ஆகாச வீடுகள் (இலங்கை கதை) ஆகியவை அவர் பெயர் சொல்லும் நாவல்கள்.

அநுத்தமா ஆலமரம்,கவுரி ஆகிய 2 செம ஹிட் நாவல்கள் எழுதினார்.உஷா சுப்ரமணியம் கல்யாண வேலிகள் ஹிட் கொடுத்தார்.

கீதா பென்னட் பல சூப்பர் ஹிட் நாவல்கள் கொடுத்தார். அவர் சைக்காலஜி படித்தவரோ என்ற எண்ணம் மனதில் தோன்றும் வண்ணம் எழுத்துக்கள் பளிச்சிடும்.

அம்பை,கோதை நாயகி,விமலா ரமணி,காஞ்சனா ஜெய திலகர்,ஜோதிர்லதா கிரிஜா,ராஜம் கிருஷ்ணன்,கோமகள் போன்ற பல பெண் எழுத்தாளர்கள் தங்கள் முத்திரை பதித்தவர்கள்.( இவர்கள் எழுதிய நாவல்கள் நான் படித்ததில்லை. எனவே ஹிட் நாவல்கள் குறிப்பிட முடியவில்லை)
http://www.tneow.gov.in/Eow/Picture_010.jpg
திலகவதி ஐ பி எஸ் கல் மரம் என்ற சூப்பர் ஹிட் நாவல் எழுதி சாகித்ய அகாடமி பரிசு பெற்றார்.

அ. வெண்ணிலா சிறந்த கவிதாயினியாக இருந்தாலும் பெண்களின் மாதாந்திர அவஸ்தை பற்றி மிகப்பிரமாதமான ஒரு வலி ஏற்படுத்தும் கவிதை எழுதி இலக்கிய உலகை அதிர வைத்தார்.அந்தக்கவிதை படிக்கும் ஆண்கள் அதற்குப்பின் எந்தப்பெண்ணையும் கண்ணியமாகத்தான் பார்க்க முடியும். அந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தியது.இவரது காதல் கணவர் மு முருகேஷ் ஹைக்கூ மன்னன்.

பாடல் ஆசிரியர் தாமரை வசீகரா என் நெஞ்சினிக்க (மின்னலே) பாடல் மூலம் ஒரு பெண்ணின் காதல் வலிகளை  பதிவு செய்த முதல் பெண் கவிஞர் என்ற பெருமையை பெறுகிறார்.சினி ஃபீல்டில் அட்ஜஸ்மெண்ட் என சொல்லப்படும் எந்த வித காம்ப்ரமைஸ்க்கும் இடம் கொடுக்காமல் கண்ணியமாக கவிதை மட்டும் எழுதி வருகிறார்.

நடிகை ரேவதி மித்ர மை ஃபிரண்ட் என்ற படத்தின் இயக்குநர் ஆனார்.

வி. பிரியா கண்ட நால் முதல்,கண்ணா மூச்சி ஏனடா போன்ற காமெடி சப்ஜெக்ட் படம் எடுத்தார்.

மதுமிதா வல்லமை தாராயோ,கொலை கொலையா முந்திரிக்கா  என 2 சுமார் படங்களை எடுத்தார்..(சுமார் என்பது வசூல் நிலவரத்தை குறிக்கும்).

ஜே எஸ் நந்தினி திரு திரு துறு துறு  படம் எடுத்தார்.

ரேவதி வர்மா ஜூன் ஆர் எடுத்தார்.அனிதா உதீப் குளிர் 100 எடுத்தார்.

கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கண்ணீர் என்ற படத்தை எடுத்து வருகிறார் சற்குணம்.

நடிகை சுஹாசினி இந்திரா என்ற படம் எடுத்தார். ராவணன் பட வசனமும் இவர் தான். ( இரண்டும் எடுபடவில்லை)

லீனா மணி மேகலை பல குறும்படங்களை எடுத்து வருகிறார்.குட்டி ரேவதி கவிதைகளில் தனக்கு என ஒரு ஸ்டைல் வைத்து எழுதுகிறார்.

இனி பதிவுலகில் எழுதும் பெண் பதிவர்கள் பற்றி ஒரு பார்வை.


பெண் பதிவர்களிலேயே 1015 ஃபாலோயர்ஸ் பெற்ற ஒரே பதிவர்.

எந்த திரட்டிகளிலும் இணைக்காமல் மொய்க்கு மொய் சிஸ்டம் ஃபாலோ பண்ணாமல் பதிவுகள் மட்டுமே போட்டு ஃபேமஸ் ஆனவர்.

சித்தர்கள் ராஜ்ஜியம் எனும் வலைப்பூ.தோழி என்பவர் இதன் சொந்தக்காரர்.இவர் ஒரு இலங்கைப்பதிவர்.டாக்டர்.

கேபிள்சங்கர்,ஜாக்கி சேகர் போன்ற பதிவர்களுக்கு இல்லாத ஒரு பெருமை இவருக்கு உண்டு.அதாவது எந்தப்பதிவராக இருந்தாலும் அவர்கள் பிளாக்கின் விசிட்டர்ஸ் டுடே எவ்வளவு வர்றாங்களோ அதை விட அதிக பட்சம் 2 மடங்கு மட்டுமே பேஜ் வியூஸ் வரும்.

உதாரணமாக கேபிள் சங்கரின் சராசரி விசிட்டர்ஸ் வருகை ஒரு நாள்க்கு 4000 என வைத்துக்கொண்டால் அவரது பேஜ் வியூஸ் 7000 டூ 8000.அதாவது ஒண்ணே முக்கால் மடங்கு அல்லது 2 மடங்கு.இது பதிவுலகில் இருக்கும் அனைத்து பதிவர்களுக்கும் பொருந்தும்.ஆனால் தோழி அவர்களின் பிளாக்கில் விசிட்டர்ஸ் வருகைக்கும் பேஜ் வியூஸ்க்கும் உள்ள வித்தியாசம் 5 மடங்கு.

அதாவது அவரது பிளாக்கின் சராசரி விசிட்டர்ஸ் 1500 பேர் என்றால் அவரது பேஜ் வியூஸ் 6800 டூ 7500.அவர் பதிவு போட்டாலும், போடாவிட்டாலும் இந்த ரேஷியோ ஹிட் மாறுவதில்லை.இது ஒரு பிரம்மிக்கத்தக்க உயர்வு.

2010 பிப்ரவரி மாதத்தில் பிளாக் ஆரம்பித்தார். சினிமா,அரசியல் போன்ற கமர்ஷியல் அயிட்டங்கள் எதுவும் சேர்க்காமல் சித்தர்கள் வாழ்வு எனும் ஒரே சப்ஜெக்ட்டில் பதிவு போடுபவர் இவர் ஒருவர் தான்.ஆனந்த விகடனில் பிளாக் ஆரம்பித்த 2 வாரங்களில் அறிமுக அங்கீகாரம் பெற்றவர்,.

இவரது பிளாக்கின் லே அவுட் நாடி ஜோதிட ஓலைச்சுவடி டிசைனில் வித்தியாசமாக இருக்கிறது.வாரம் 5 நாட்கள்  மட்டுமே பதிவு போடுகிறார். சனி ,ஞாயிறு லீவ். ஆனால் லீவ் நாட்களில் கூட சராசரி ஹிட்ஸ் 400 டூ 900.

2,07,264 விசிட்டர்ஸ் இதுவரை வந்திருக்கிறார்கள்.பேஜ் வியூஸ் ஹிட்ஸ் 8,87,762.

மேலும் 2010 ஏப்ரல் மாதத்தில்  61 பதிவுகள் போட்டு 30 நாட்களில் 61 பதிவு போட்ட முதல் பெண் பதிவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.

மற்ற பதிவர்களின் விசிட்டர்ஸ் வருகை சராசரியாக இண்ட்லி மூலம் 60%, மற்றும் தமிழ்மணம் மூலம் 30 % , மேலும் மற்ற உலவு , தமிழ் 10 மூலம் 5 % , தனிப்பட்ட செல்வாக்கில் 5 % விசிட்டர்ஸ் வருகையில் இவருக்கு மட்டும் முழுக்க முழுக்க தனிப்பட்ட செல்வாக்கு மட்டுமே விசிட்டர்ஸ் வர காரணியாக இருக்கிறது ஒரு அதிசயமே..

விசிட்டர்ஸ் டுடே, பேஜ் வியூஸ் வித்தியாசம் பற்றி நான் பிரம்மிக்க காரணம் இஅவரது பிளாக்கிற்கு விசிட் செய்யும் வாசகர் குறைந்த பட்சம் 4 பதிவுகள் படிக்கிறார் என்ற விபரம் தான்.

மற்ற அனைத்துப்பதிவர்களுக்கும் அதிக பட்சம் 2 பதிவுகளே படிக்கப்படுகிறது.
பதிவின் லிங்க்..

http://siththarkal.blogspot.com/2010/02/blog-post.html

உங்கள் வாழ்த்துக்களை சொல்ல விரும்புவர்கள் சொல்லலாம்.

அடுத்து பதிவுலகின் டாப் 10 பெண் பதிவர்கள் யார்? அதை அடுத்த வாரம் பார்ப்போம்.


- தொடரும்