Showing posts with label பெண். Show all posts
Showing posts with label பெண். Show all posts

Thursday, October 04, 2012

பெண் பாடலாசிரியர் எஸ்.எம்.முருகவேணி

பாடலாசிரியர் எஸ்.எம்.முருகவேணி
 http://www.cineulagam.com/photos/full/others/lyrist_murugaveni_001.jpg
முட்டி முட்டித் திறந்தேன் மந்திரக் கதவை!

சந்திரமௌலி
பாகன்படத்தின்பூந்தென்றலைத் தேடிச் சென்றுபாடலைக் கேட்கும்போது, மனசைத் தழுவுகிறது குளுமை. பாடலை எழுதிய பெண் பாடலாசிரியர் எஸ்.எம். முருகவேணி, தஞ்சை மண், பட்டீஸ்வரத்தைச் சேர்ந்தவர். சினிமாப் பின்னணி துளியுமில்லாதவர். ஆரம்பத்தில் திறக்க மறுத்த கோடம்பாக்க மந்திரக்கதவை முட்டிமுட்டித் திறந்த கதையைச் சொல்கிறார்.

பட்டீஸ்வரத்தில் பள்ளிப் படிப்புக்குப் பிறகு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பிசினஸ் அட்மினிஸ்டிரேஷனில் டிகிரி முடித்து, திருமணமாகி, சென்னை வந்து செட்டிலாகி விட்டேன். கணவருக்கு தனியார் நிறுவனத்தில் வேலை. எனக்கு பதினொராம் வகுப்பு படிக்கும் மகன் இருக்கிறான். படிக்கிற காலத்திலேயே நான் பேச்சு, கவிதைப் போட்டிகளில் பங்கேற்றதுண்டு. அப்போது சினிமா ஆசை இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு, மறுபடியும் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். அதை ஏதாவது ஒரு டியூனில் பாடிப்பார்ப்பேன். சினிமாப் பாட்டுப் போல இருக்கும். நாளடைவில், சினிமாப் பாட்டு எழுதினால் என்ன? என்று தோன்றியது.
சினிமாப் பாட்டு எழுத வாய்ப்புத் தேடி, இசையமைப்பாளர்களின் கதவுகளைத் தட்ட ஆரம்பித்தேன். என் முயற்சியை .ஆர்.ரஹ்மானிடமிருந்து ஆரம்பித்தேன். அவர்தான் பாடலாசிரியர் கபிலனை அறிமுகப்படுத்தியவர் அல்லவா! ரஹ்மான் இசையமைத்த படத்தின் பாடல் சி.டி.யின் கவரின் மேல் இருந்த முகவரியை வைத்துக் கொண்டு முதலில் அவருடைய ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு ஃபோன் செய்து அவர் ஊரில் இருக்கிறாரா? என்று கேட்டபோது, ‘இல்லைஎன்று பதில் வந்தது. விடாமல் அடிக்கடி ஃபோன் செய்து அவர் இருக்கிறாரா என விசாரிக்க ஆரம்பித்ததும், ஒரு நாள் மறுமுனையில் இருந்து, ‘எதற்காகக் கேட்கிறீர்கள்?’ என்றார். சினிமாப் பாடல் எழுதும் ஆர்வத்தைச் சொன்னேன். அங்கே என் ஆறு மாத கால முயற்சி வெற்றி பெற வில்லை என்றாலும், அங்கிருந்த ஒருவரது உதவியோடு மற்ற இசையமைப்பாளர்களின் முகவரிகள், டெலிஃபோன் நம்பர்களும் கிடைத்தன.
அடுத்து நான் சந்தித்தவர் ரஹ்மானின் சகோதரி ரெஹைனா. அவர், தற்போது பாடல் எழுத வாய்ப்பு ஏதுமில்லை என்று சொன்னாலும், விகடகவி என்ற சிறு பத்திரிகையின் ஆசிரியரை அறிமுகப்படுத்தி வைக்க, அதில் நான் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ், தரணி, சிற்பி, தினா, விஜய் ஆண்டனி, ஜேம்ஸ் வசந்தன்... என பலரிடமும் ஃபோன் செய்து அப்பாயின்ட்மென்ட் வாங்கி, நேரில் சந்தித்து வாய்ப்புக் கேட்டேன். சிலர் என் கவிதைகளை வாசித்துப் பார்த்துவிட்டு, ‘வாய்ப்பு வரும்போது தகவல் சொல்கிறோம்என்றார்கள். இன்னும் சிலர் நேரடியாகவேஅப்புறம் சொல்லி அனுப்புறோம்என்று சொல்லி விட்டார்கள். இதற்கிடையில் ரெஹைனா, அவ்வப்போது ஏதாவது விளம்பரங்களில் பாடல் எழுதும் வாய்ப்பைக் கொடுத்தார். என் முயற்சிகளுக்கு எந்தவிதமான பலனும் கிட்டாமல் மனம் சோர்வடைந்த சமயங்களில்... என் கணவர்தான் எனக்கு ஆறுதல் சொல்லி, உற்சாகமளிப்பார். பிறகு, மீண்டும் வாய்ப்புத் தேடும் முயற்சி.

ஒரு நாள் திடீரென்று ஜேம்ஸ் வசந்தனிடமிருந்து ஃபோன். ‘இயக்குனர் அமீரிடம் பணியாற்றிய அஸ்லாம் இயக்கும் ஒரு படத்துக்கு ஒரு பெண் பாடலாசிரியர் தேவை. அவரைச் சந்தித்துப் பேசுங்கள்என்று சொன்னார். அந்தப் படம்தான்பாகன்’. ‘சின்னச் சின்ன ஆசை மாதிரி கதாநாயகி அறிமுகமாகும் காட்சிக்கு ஒரு பாடல் தேவைஎன்று சொன்னார்கள். மாதிரிக்கு சில வரிகள் எழுதித் தரும் படி கேட்க, நான் உடனே எழுதிக் கொடுத்தேன். திருப்தியடைந்து, அதன்பிறகு டியூன் அடங்கிய சி.டி.யை என்னிடம் கொடுத்து, பாடலை எழுதச் சொன்னார்கள். நான் ரொம்ப இலக்கியத்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரு பாடல் எழுதிக் கொண்டுபோய்க் கொடுத்தேன். ‘இதுபோல வேண்டாம்; எளிதாக எல்லோருக்கும் புரிகிற மாதிரி இருக்க வேண்டும்என்றார். இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், டியூனுக்கு ஏற்ப பாடல் எழுதும் நுட்பத்தை எனக்கு விளக்கினார். அதன்படி புதியதாக ஒரு பாட்டு எழுதிக் கொடுத்தேன். அதுதான்பூந்தென்றலைத் தேடிச் சென்றுபாட்டு.
சில நாட்கள் கழித்து, இயக்குனர், படத்தின் நீளம் காரணமாக நான் எழுதிய பாடல் படத்திலிருந்து வெட்டப்பட இருப்பதாகத் தெரிவித்தபோது, நான் அதிர்ச்சி அடைந்தேன். வெண்ணெய் திரளும்போது தாழி உடைந்தாற்போல மனம் நொந்து போனேன். ‘எனக்கு அதிர்ஷ்டமே இல்லைஎன்று நான் சொன்னால், என் கணவர்அப்படிச் சொல்லாதே! உனக்குத் திறமை இருக்கு! உனக்கு நிச்சயம் வாய்ப்புக் கிடைக்கும்என்று சொல்லுவார். ஆனால் சீக்கிரமே என் கணவரது வாக்கு பலித்தது. என் பாடல் படத்தில் இடம்பெறுவதை இயக்குனர் உறுதிப்படுத்தினார். மீண்டும் எனக்கு மகிழ்ச்சி. தியேட்டரில் திரையில் பாடலைப் பார்த்தபோது, ரசிகர் உற்சாகத்தில் குரலெழுப்பி ரசித்தார்கள். அதை எனக்குக் கிடைத்த பாராட்டாக நான் எடுத்துக் கொண்டேன். அடுத்த பாடல் அழைப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்," என்கிறார் முருகவேணி.

நன்றி - கல்கி புலவர் தருமி  


பூந்தென்றலைத் தேடி எனத் தொடங்கும் அந்தப் பாடலில்


மினுமினுக்கும் வானத்தில்
மழை ரசித்திடப் போவோமா...
முதல் துளி எதுவென
தேடிப் பார்ப்போமா"

 பலரைக்கவர்ந்த வரிகள்

Thursday, February 23, 2012

”நாம” நாதா !!! அந்தப்புரம்.. ஒரு முக்கேனக்கள்ளக்காதல் கதை - ஜிகிடி-காமெடி கும்மி கலாட்டா


ராமநாதபுரம்:முதல் திருமணத்தை மறைத்து ராமநாதபுரத்தை சேர்ந்த இருவரை காதலித்து திருமணம் செய்த பெண், யாருக்கு சொந்தம் என கடைசி இரண்டு கணவர்களிடையே தகராறு ஏற்பட்டது.



சி.பி - அடங்கொய்யால.. ஆத்துல போற தண்ணியை அவன் குடிச்சா என்ன? இவன் குடிச்சா என்ன? ஷேர் ஆட்டோல ஒத்துமையா போற மாதிரி அட்ஜஸ் பண்ணி ஷிஃப்ட் வெச்சுக்குங்கப்பா.. 



பட்டுக்கோட்டை சுப்பிரமணி மகள் ரேணுகா, 27. இவரது 14 வயதில் அதே பகுதியை சேர்ந்த தென்னரசுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். தென்னரசு, வேலை தேடி வெளிநாட்டிற்கு சென்றார்.


சி.பி - அண்ணன் குடும்பத்தை காப்பாத்த கஷ்டப்பட்டு ஃபாரீன் போய் வேலை செய்யறாரு/.. அண்ணி இஷ்டப்பட்டு லோக்கல்லயே நல்ல வேலை செஞ்சிருக்காங்க.. 

பட்டுக்கோட்டையில் ராமநாதபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் செந்தில்குமார் என்பவரை ரேணுகா சந்தித்தார். அப்போது முதல் திருமணத்தை மறைத்த ரேணுகா, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் செந்தில்குமாரை திருமணம் செய்து கொண்டார். (செந்தில்குமார் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தவர்).


சி.பி - கார் டிரைவர்ங்கறதால  நல்லா ஓட்டிட்டு போய்ட்டாரு செகண்ட் ஹேண்ட் வண்டியை..

இருவரும் ராமநாதபுரம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்தநிலையில், அரண்மனை அருகே ஒரு கடையில் ரேணுகா வேலைக்கு சென்றார். அங்கு வந்து சென்ற வாடிக்கையாளரான மதுரை திருப்பரங்குன்றம் செந்தில்மனோகரன் என்பவரிடம் ரேணுகா, முதல் இரண்டு திருமணம் மற்றும் குழந்தைகள் விபரத்தை மறைத்தார். இவர்கள், கடந்த ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் செய்தனர். பின்னர் இவர்கள் ராமநாதபுரம் சக்கரக்கோட்டையில் வசித்து வந்தனர்.


சி.பி - சும்மா மறைச்சார் மறைச்சார்னு நியூஸ் போடறாங்களே, நம்ம ஆளுங்க சும்மா ஜிகிடியைப்பார்த்தாலே  இது ஃபிரெஷா? செகண்ட்ஸா?ன்னு கண்டு பிடிச்சுடுவாங்க.. குழந்தை பெற்ற பொண்ணை அடையாளம் காட்ட சில அறி குறிகள் எல்லாம் இருக்கே.. தெரியாம இருக்குமா? அணில் கடிச்ச பழம் ருசிக்கும்னு நினைச்சிருப்பாங்க.. இல்லைன்னா கிடைச்ச வரை லாபம்னு நினைச்சிருப்பாங்க ( இந்த கமெண்ட்க்கு விஜய் ரசிகர்கள் சண்டைக்கு வர வேணாம்.. இது ஒரிஜினல் அணில்.. )

மனைவியை காணவில்லை என செந்தில்குமார் தேடி வந்தபோது, சக்கரக்கோட்டையில் வசித்து வருவது தெரிந்தது. அங்கு சென்று ரேணுகாவை தன்னுடன் அனுப்பி வைக்க செந்தில் மனோகரனை வற்புறுத்தினார். இருவருக்கும் இடையே, ரேணுகா, யாருக்கு சொந்தம் என்பதில் தகராறு ஏற்பட்டது. இருவரும் ராமநாதபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தனர்.


சி.பி - அடப்பாவமே, இதுக்கு ஏன் போலீஸ் ஸ்டேஷன் போகனும்? அவங்க பங்குக்கு வருவாங்க.. சும்மா டாஸ் போட்டு பார்த்து சரி பண்ண வேண்டியதுதானே? ராஜா விழுந்தா முத புருஷன், பட்டு விழுந்தா 2 வது புருஷன் இப்படி..? இல்லைன்னா திங்கள், செவ்வாய், புதன் ஒருத்தன், வியாழன், வெள்ளி, சனி ஒருத்தன்னு ஒத்துமையா  வெச்சுப்பிழைக்காம அட போங்கப்பா.. ( சண்டேன்னா ரெண்டு)

ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் மீனாம்பாள், ரேணுகாவிடம் நடத்திய விசாரணையில், ""ஆடம்பரமாகவும், வசதியாகவும் வாழவே, முதல் மற்றும் இரண்டாவது திருமணத்தை மறைத்து மூன்றாவது திருமணமும் செய்து கொண்டேன்,'' என தெரிவித்தார்.


சி.பி - அதானே பார்த்தேன் , விசாரிச்ச நாட்டாமை நல்ல வேளை ஒரு லேடி.. இல்லைன்னா அவங்களும் பங்குக்கு வந்திருப்பாங்க..

"இனி ராமநாதபுரம் பக்கமே தலைகாட்டக்கூடாது' என எச்சரித்து, பட்டுக்கோட்டையில் உள்ள பெற்றோரிடம் ரேணுகாவை, போலீசார் ஒப்படைத்தனர். இதில் ஏமாற்றமடைந்த செந்தில் மனோகரன், செந்தில்குமாருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

சி.பி - அடடா! வட போச்சே! 2 பேருக்குமே இல்லையே? இப்போ அந்த கற்புக்கரசி என்ன செய்யப்போறாங்க? சொந்த ஊர்லயே புது புருஷனை தேடுவாங்களா? தெரியலையே? ஒரே சஸ்பென்ஸா இருக்கே? 

  அவங்க 2 லவ்வர் பேரை எப்படி கூப்பிடிவாங்க? நாய்க்கு டோக்கன் போட்டிருக்கற மாதிரி செந்தில் நெம்பர் ஒன், நெம்பர் 2ன்னா? அவ்வ்வ்

Tuesday, May 17, 2011

பஸ்ஸாலஜி,சைட்டாலஜி,லவ்வாலஜி - 3 ஜி எழில்கள் ஒரு அலசல்

 http://yofashion.in/wp-content/uploads/2011/01/Nandita-Das-in-Saree.jpg

1.பஸ்ஸில் ஏறியதும் சீட்டில் அமர்பவன் பத்தோடு 11 ஆகிறான்.நின்று கொண்டே வருபவன் தனித்து தெரிகிறான்#பஸ்ஸாலஜி

-----------------------

2. சினி ஃபீல்டில் மேக்கப்மேனுக்கு கிடைக்கும் சான்ஸ் போல பெண்களை மிக நெருக்கமாக பார்க்கும் வாய்ப்பு பஸ் கூட்ட நெரிசலில் பயணிப்பவனுக்கு மட்டும்#பஸ்ஸாலஜி

---------------------

3. ஹாஸ்பிடல் நர்ஸூகள் ,ஈரோடு திருப்பூர் கார்மெண்ட்ஸ் லேடி டெயிலர்கள் பார்க்கும்போதுதான் கேரளாவின் மகத்துவம் தெரிகிறது#சைட்டாலஜி

-----------------

4. லேடீஸ் ஸ்டாஃப்கள் எல்லோரும் காலை முதல் மாலை வரை ஃபிரெஸ்ஸாக இருப்பது போலவே தெரிவது கண் கோளாறா? வயசுக்கோளாறா?# ஆஃபீஸாலஜி

----------------

5. பிரணாப் முகர்ஜி-தமிழகத்தில் அடுத்த மூன்றாண்டுகளுக்கு இதே கூட்டணி தொடரும் .#இவ்வளவு அடி வாங்குன பிறகுமா?ஐ லைக் யுவர் நேர்மை

----------------

http://www.thedipaar.com/pictures/resize_20110203121313.jpg

6. உங்க பிரச்சனை எதானாலும் என் கிட்டே சொல்லுங்க யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன் என்று ஆண் வஞ்சக வலை விரிக்கிறான் பெண்ணிடம்# வார்னிங்காலஜி

--------------------

7. தான் ஒரு அக்மார்க் யோக்கியன் என்றும் , தன்னைத்தவிர அனைவரும் அயோக்கியன் என்றும் காட்டிக்கொள்ள ஆண் ரொம்பவே சிரமப்படுகிறான்,# ஜெண்ட்ஸாலஜி

--------------------

8. திருமணத்துக்கு முன் பெரும்பாலான பெண்ணுக்கு ஒரு காதல் தோல்வி இருக்கும், ஆணுக்கு 4 காதல் தோல்வி இருக்கும்#ஜெண்ட்ஸாலஜி

-------------------

9. தனது முதல் காதல் தோல்விக்குப்பிறகு செண்ட்டிமெண்ட்டல் இடியட் ஆகி விடக்கூடாது என்று பெண் பிரயத்தனப்படுகிறாள்#லேடீஸாலஜி

---------------

10. ஃபிகர்கள் 2 பேர் அமர்ந்த சீட் அருகே போய் நிற்பவனை விட அவர்கள் பார்வை படும்படி எதிரே நிற்பவன் புத்திசாலி# பஸ்ஸாலஜி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioS6ax_J2ghLwMdrvNDtm9KrtlBq0WTcfogPC8cx5cYFZp7Vf4Z2U_Dy6QJZSKPiKe0qPuG1OpIIXBxDmkFNQA4WgnNfqtuRGSh0H5qUBuyK4dw_9VG9hPnY3cgEvLZJVHrmVu614wUMyH/s400/actress-nayanthara-kerala-saree-stills-actress-nayanthara-kerala-saree-imagesactress-nayanthara-kerala-saree-photo-gallery-5.jpg

Thursday, September 23, 2010

மாதர்தம்மை இழிவு செய்யும் மடமைதனை......

1. தான் அழகுக்காக விலை போகிறோம் என்பதை அறியாதவரை பெண் சுதந்திரம் என்பது எட்டாக்கனிதான். - இங்க்ஸ்

2.விளம்பரங்களில் பெண்கள் நடிக்கவில்லை,மாடல்கள் என்ற பெயரில் விலை போகிறார்கள்.இது ஒரு நவநாகரீக அநாகரீகமே . - அருந்ததிராய்

3.பெண்ணை பார்த்தவுடன் சிரிப்பவன் முட்டாள்,பழகிய பின்னும் சிரிக்காதவன் ஏமாளி.- ஆஸ்திரேலியப்பழமொழி

4.ஒரு பெண்ணுக்கு எல்லாவிதமான நற்குணங்களையும் எதிர்பார்க்கும் சமூகம் ஆணிடம் மட்டும் எவ்வித நற்குணங்களையும் எதிர்பார்க்காதது எவ்விதத்தில் நியாயம் என்றே தெரியவில்லை. - நா.பார்த்தசாரதி

5.பெண்கள் தேவதைகள்தான்,ஆனால் திருமணம் அவர்களை குட்டிச்சாத்தானாய் ஆக்கி விடுகிறது.- லார்டு பைரன்

6.உலகத்தில் பெரிய பூ எது? பெண்.உலகத்தில் மிக மிருதுவான விஷயம் எது? பெண்.கடவுள் படைப்பில் மிக அற்புதம் எது? பெண். கடவுள் எது? பெண்.- பாலகுமாரன்

7.கற்புள்ள ஒரு பெண்ணைப்பற்றி மோசமாகப்பேசுவதை விட ஒரு கோயிலை இடிப்பது பெரிய பாவம். - ரஷ்யப்பழமொழி
(நம்மாளுங்க ஒரு பெண்ணுக்கு ட்ரை பண்ணி கிடைக்கலைன்னா உடனே அந்தப்பொண்ணோட கேரக்டர் சரி இல்லைனு சொல்லிடுவாங்க.இவங்களுக்கு படிஞ்சுட்டா நல்ல கேரக்டராம்.என்ன கொடுமை சரவணன் இது?)

8.தன் மனதை வெளிப்படுத்த ஆண்கள் கையாளும் முறைகளைக்காட்டிலும் பெண்கள் கையாளும் முறைகள் மிக மிக நுட்பமானவை.மலரின் மணத்தை விட மென்மையானவை. - ஜான் எஃப் கென்னடி

9.பணத்தைவிட பண்புதான் முக்கியம் என்ற உறுதி பெண்களிடம் இருந்தால் எந்த ஆணும் நெருங்கவே முடியாது என்பதை உணர வேண்டும் பெண். - எழுத்தாளர் லட்சுமி

10.பெண்களின் கண்ணீர் உலகிலேயே ஆற்றல் மிக்க நீர்வீழ்ச்சி.- மில்னர்