பூவரசம்பீப்பி – சினிமா
விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்)
ஒரு படத்தோட இயக்குநர்
என்னதான் திறமையா திரைக்கதை
எழுதி அழகா இயக்கி இருந்தாலும் அவரது
வெற்றிக்கு மார்க்கெட்டிங் டெக்னிக் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நான் உணர்ந்து கொண்டது
பல இடங்களில். இந்தப்படத்தின் டைட்டில் , போஸ்டர் டிசைன், ப்ரமோ எல்லாவற்றையும் பார்த்தபோது
இது பாண்டி ராஜ் இயக்கிய
பசங்க படம் போல சிறார்களின் கலாட்டாக்கதை
அல்லது அஞ்சலி போல ஏதோ
குழந்தையை மையப்படுத்திய கதை என பலரும்
நினைத்திருக்கக்கூடும், ஆனால் இது ஒரு
க்ரைம் த்ரில்லர் என்பதை
மார்க்கெட்டிங்கில் காண்பித்திருந்தால் இந்தப்படத்தின் ரீச் இன்னும் பிரமாதமாக
இருந்திருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து
ஒரு கிராமம். அங்கே
ஸ்கூல்ல படிக்கற 4 சிறுவர்கள்
. இவங்க பண்ற சேஷ்டைகள் , இவங்களுக்குள்ளே இருக்கும்
நட்பு , இந்த வயசுலயும் காதல் வயப்படுவது
அல்லது இன்ஃபேக்சுவேஷன் எதோ
1 இப்படி அரை மணி நேரம் கதை மூவ்
ஆகுது
ஆத்துல நீச்சல்
அடிச்ட்டு வேடிக்கை பார்த்துட்டு
இருக்கும்போது 4 ஆட்கள் ஒரு பெண்ணை
பலாத்காரம் பண்ணி கொலை பண்றதை பார்த்துடறாங்க . அடுத்த
நாள் டெட் பாடி கரைல இருப்பதைக்கண்டு
ஊர் மக்கள் ஆத்து வெள்ள,ம்
அடிச்சிடுச்சு என முடிவுக்கு வர்றாங்க
பசங்க போலீஸ்க்கு
தகவல் சொல்லலை . அவங்களே யார் குற்றவாளிகள்?னு துப்பறியலாம், சரியான சாட்சியங்களும் , ஆதாரங்களும் வலுவா சிக்கிய பின் போலீஸ்
கிட்டே போவோம்னு டிடெக்டிவாக
மாறுகிறார்கள்
அவங்க குற்றவாளிகளில்
3 பேரைக்கண்டு பிடிச்சிடறாங்க . நாலாவது ஆள் இன்னும்
சிக்கலை . கண்டு பிடிச்ச வரை நாம ஒருவர் கிட்டே சொல்லிடலாம்னு
அவங்க நினைக்கும்போது அந்த நான்காவது
ஆள் தான்
நாம சொல்ல நினைச்ச ஆள்னு தெரிய வருது
இதுக்குப்பின் அந்த பசங்க
எடுத்த முடிப்வு என்ன? சட்டப்படி தண்டனை வாங்கித்தர
முடிஞ்சுதா? என்பதே மிச்ச மீதி திரைக்கதை
படத்துல என்னைக்கவர்ந்த முதல் அம்சமே ஆர்ட்டிஸ்ட்
செலக்ஷனும், அவங்க பர்ஃபார்மென்சும்தான்.
இயக்குநர் தன் ஸ்க்ரிப்ட்டை தந்து அதன்படி
பேசச்சொன்னாரா? நீங்க பாட்டுக்கு பேசிக்குங்க, நான் அதை படம் பிடிச்சுக்கறேன்னு சொன்னாரா?
என நம்மையே குழப்பும்படி அற்புதமான உரையாடல்கள் , இயல்பான நடிப்பு
பசங்க 4 பேரும் பின்னிப்பெடல் எடுத்துட்டாங்க .ஒளிப்பதிவு , இசை , எடிட்டிங்
எல்லாமே உயர் தரம் . இயக்குநர் ஒரு
பெண் என்பதால் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய தரத்தில்
க்ரைம் த்ரில்லரை இயக்கி இருக்கார்
சபாஷ் டைரக்டர்
1
பாலியல் பலாத்கார காட்சி
படத்தில்; இருக்கு , ஆனா காட்சி
இல்லை என எஸ் ஜே சூர்யா அ ஆ வில்
சொன்னது போல இருக்கு ஆனா இல்லை என சொல்லும் வகையில் அந்த காட்சியை
படமாக்கிய விதம் பிரமாதம் , இதெல்லாம்
ஆண் இயக்குநர்களுக்கு ஒரு பாடம்
2 ஒரு காட்சியில்
ஒரு சிறுவன் பருவம் எய்து விடும்
காட்சியில் அவனே பொறுப்பாக டிரசை துவைப்பது
, தலைக்கு குளிப்பது பின்னணியில்
பெண்ணின் பூப்பு நன்னீராட்டு விழா போஸ்டர்
என கவிதையான குறியீட்டுக்காட்சிகள் அருமை
3 வில்லன்கள் 3 பேரையும் சிறுவர்கள்
4 பேரும் அலைக்கழிப்பது பின் பேய் பயம் காட்டுவது , ட்ரோன் மூலம் அவங்க பேசுவதை
பதிவு செய்வது எல்லாமே
நம்பத்தகுந்த ஆச்சரியங்கள்
4 பின் பாதியில் வரும் எஃப் எம் ரேடியோ ஐடியா அபாரம்
, ஊர் மக்களை ஒவ்வொருவரக பேர் சொல்லி அழைப்பது , கிசு கிசு உண்டாக்குவ்து , ஸ்டெப் பை ஸ்டெப்பாக
அவங்க நோக்கமான கொலையாளிகளை
அடையாளப்படுத்தல் சேப்டருக்கு வருவது
எல்லாம் குட்
5 மெயின் வில்லனை
அவனது மனைவி முன் அவமானப்படுத்த போடும் திட்டம் , காதலியை வீட்டுக்கு வர
வைப்பது பிரமாதம்
6 அந்த மரம், கிளைகளில் இலைகளுக்குப்பதிலாக ஆன்சர்
பேப்பர் ஆர் ட் டைரக்சன்
பிரமாதம்
நச் டயலாக்ஸ்
1
ஃபாரன்சிக்னா என்னடா?
ஃபாரீன் ல இருந்து சிங் வருவாங்களாம்
2 ஏரில வெள்ளம் வந்தா
எருமை மாட்டைப்[பிடிச்ட்டே போய்டறதில்லையா?
எல்லாம் சர்வைவல் தான்
3டியர் , உனக்காக அந்த வானவில்லையே
கூட வளைப்பேன்
டேய். வானவில் ஏற்கனவே
வளைஞ்சுதானே இருக்கு ?
சரி நேராக்குவேன்
4 ஏம்மா, எத்தனை நாளைக்குதான்
அரை டிக்கெட்டாவே இருப்பே?>பூஸ்ட்
ஹார்லிக்ஸ் எதுனா குடிச்சு முழு டிக்கெட் ஆகிடு
5 எந்த கப்பல் கவுந்திடுச்சுனு
இப்படி கன்னத்துல கை வெச்சு உக்காந்திருக்கே?
ஏன் தாத்தா அப்டேட்
ஆகவே மாட்டீங்களா? இன்னும் பழசையே சொல்லிக்கிட்டு?
6 நீயே உன் மனசை ஓப்பன் பண்ணலைன்னா மத்தவங்க அதைக்கிழிச்சு ஓப்பன் பண்ற மாதிரி
ப்வெச்சுக்காதே
7 சமூகம் எப்படி
இருக்கு ? கெட்டவங்க எல்லாம் கிங்கு நல்லவங்களுக்கெல்;லாம் சங்கு
லாஜிக் மிஸ்டேக்ஸ்
, திரைக்கதையில் சில நெருடல்கள்
1
கிராமத்தில் ரேப்
பண்ணற வில்லன்கள் அப்டி ஓப்பன் பிளேஸ்ல அதுவும்
நதியின் நடுவிலா அரங்கேற்றுவாங்க ? மறைவான
இடம் தானே சேஃப்டி?
2 என்னதான் கிராமம்னாலும்
ஒரு பெண் மர்மமா இறந்து
கிடக்கும்போது போலீஸ் எல்லாம் வராதா?
2
சுவராஸ்யமாகப்போகும்
கொலை இன்வெஸ்டிகேஷனில் திடீர் என
சிறுவர்கள் சண்டை , காதல் என திசை
,மாறுவது தேவை இல்லாத இழுவை
சி.பி ஃபைனல்
கமெண்ட் – அழகியல் ஒளிப்பதிவு விரும்புவர்கள் , க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள்
பார்க்க வேண்டிய படம் . ஹாட் ஸ்டார் ல கிடைக்குது . சில்லுக்கருப்பட்டி எடுத்த
இயக்குநரின் முதல் படம் இது ரேட்டிங் 3.25 / 5