Showing posts with label பூஜை - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label பூஜை - சினிமா விமர்சனம். Show all posts

Tuesday, October 21, 2014

பூஜை - சினிமா விமர்சனம்


 ஹீரோவோட அம்மா  ரொம்ப வருசமா  ஹீரோவை ஒதுக்கி வைக்கறாரு.அது ஏன்?இதுக்கு பயங்கரமா சிந்திச்சிருக்காங்க.ஹீரோவோட மாமா பொண்ணு ஹீரோவை  விரும்புது.ஆனா  யார் கிட்டயும்  சொல்லலை. வீட்ல மாப்ளை பார்த்ததும்  டக்னு ஹீரோக்கு  செல்  போன் ல  ஒரு மெசேஜ் 143 -னு அனுப்பி  இருக்கலாம். செய்யலை. ரேட் கட்டர் போடலை போல . வாசல்ல அப்பா  இருக்கும்போதே கேனம் மாதிரி அந்தப்பொண்ணு  ஹீரோவைக்கட்டிப்பிடிச்சு அழுது,அதைப்பார்த்து அப்பன்காரன் செம காண்ட் ஆகி  திட்றாரு. ஹீரோவோட அம்மாவுக்கு இதனால அவமானம். பளார் பளார் பளார்னு 3 அறை .

 வருசம் 16 படத்துல  குஷ்பூ , பாத்ரூம் , கார்த்திக்   சீன் ல  இருந்து  உருவிட்டாங்க போல,ஹீரோ வாயைத்திறந்து “ அம்மா என் மேல  தப்பில்லை, அவ தான் வந்து கட்டிப்பிடிச்சா”ன்னா  மேட்டர்  ஓவர் . ஆனா  சொல்லலையே. ஓபிஎஸ்க்கே அண்ணன் போல , அம்மாவுக்கு  முன்னால பவ்யமா  இருக்காரு.

இப்போ  அம்மா  ஒரு ஊர்ல ,  மகன் இன்னொரு ஊர்ல .வில்லன்  ஹீரோ  குடும்பத்துல  ஒருத்தரை  செருப்பாலயே அடிக்கறாரு.உடனே அம்மா  ஹீரோவை வரச்சொல்லி அவன்  கையை வெட்டிட்டு வாடாங்கறாங்க. வாவ். வாட்டே அம்மா ? 

ஹீரோ - வில்லன்  க்ரூப்க்கு இடையே நடக்கும்  துரத்தல்கள்  , சண்டைகள் , வெட்டுகள்  குத்துகள்  தான்  படம். காது வலி இல்லாதவர்கள் நிச்சயம்  வலியோடு தான்  திரும்பனும்னு கங்கணம் கட்டிட்டு  சவுண்ட்  மிக்சிங் பண்ணி  இருக்காங்க.

ஹீரோவா  புரட்சித்தளபதி  விஷால். ஆள்  வாட்டசாட்டமா  இருக்கார் தான். எக்சசைஸ் பாடி தான் . எல்லாம் ஓக்கே  ஆனா  ஃபுட் பால் விளையாடற மாதிரி அவர்  வில்லன் ஆட்களை உதைப்பது , அவங்க 25 கிமீ போய் விழுவது எல்லாம்  ரொம்பவே  ஓவர்.ஹீரோயினுடன் அவர் பம்முவது ஓக்கே . காதல் காட்சிகளில்  ஸ்ருதியுடன் சரியா  ஒட்டலை . லட்சுமிமேனன் பயமா? கமல் பயமா? தெரியலை . பாண்டிய நாடு படத்துடன் ஒப்பிட்டால் இது பல படி கீழேதான்.


நாயகியா  ஸ்ருதி  கமல் . இவரது கம்பீரமான ஆண்  குரல் மைனஸ் மாதிரி  தெரிந்தாலும்   ரொம்ப  கேவலமா  எல்லாம் இல்லை. சமாளிக்கலாம்.டூயட் காட்சிகளில்  தனது  திறமையை  சென்சார் அனுமதித்த அளவில்  காட்டி  இருக்கார்.



ராதிகா தான் அம்மா. எடுபடலை . கிழக்குச்சீமையிலே   கேரடக்ர் எல்லாம்  எப்படி  எல்லாம் கலக்கினார்?
 

சூரி தான்  காமெடியன். கரலாட்டக்காரன் வாழைப்பழக்காமெடி ரீ மிக்ஸ் பட்டி டிங்கரிங்க்  ஜோக்கிற்கு  10% மக்கள்  சிரிக்கறாங்க . நல்ல  முன்னேற்றம். முன்பெல்லாம் 3% ஆட்கள்  தான்  சிரி[ப்பாங்க 


 வில்லனாக  முகேஷ்  திவாரி. அய்யோ பாவம் . பலி ஆடு. ஹீரோ  கிட்டே அடி வாங்கவே நேரம் சரியா  இருக்கு

 சத்யராஜ்-ன்  மொட்டை பாஸ் கெட்டப் கலக்கல். ஆனா அவருக்கு வாய்ப்பு கம்மி . போலீஸ் ஆஃபீசர் என்றதும் அவருக்கு   பெரிய  முக்கியத்துவம்  இருக்கும்னு எதிர்பார்த்தா  ஏமாத்திட்டாங்க 


 பாடல்காட்சிகள்  சுமார்  தான் . வழக்கமாக குத்தாட்டப்பாடல்களீல் கலக்கும்  ஹரி இதில் அடக்கி வாசிச்சிருக்கார்.



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  தீபாவளிக்கு  போட்டியே  இல்லாத  டைமில் படத்தை  ரிலீ ஸ்  செஞ்சது



2 படம் பர பரப்பாக   இருப்பது  போல் சம்பவங்களை , காட்சி அமைப்பை வேக வேகமாக அடுக்கிச்செல்வது 

புது வசந்தம் சித்தாராவை அழகாகக்காட்டியது




இயக்குநரிடம் சில கேள்விகள் 


1   சத்யராஜ்மாதிரி   ஒரு ஜைஜாண்டிக்கான  போலீஸ் ஆஃபீசர் ஒரு சினிமா  தியேட்டர் வாசலில்  ஒரு ஆள் வந்து காலில் விழுவது  போல் நடிச்சு காலை வாரி  விடும்போது வேடிக்கை பார்த்து அப்படி பெப்பரப்பேன்னு   விழுவாரா? 


2 ஹீரோ  ஹீரோயின்  கிட்டே லவ் சொல்லும்போது  ஒண்ணா  பிடிச்சிருக்குன்னு  சொல்லனும் , இல்லை பிடிக்கலைன்னு சொல்லனும், பெண் இனத்தையே  கேவலப்படுத்துவது போல் அப்படி வசனம் எதுக்கு ? 


3 முதன்  முதலா காதலைச்சொல்லும்  முறைப்பெண்   எதுக்கு கட்டிப்பிடிக்கனும்? சொல்லவே  கூச்சம். கட்டிப்பிடிக்க  கூச்சம் இல்லையா? ( பொறாமை தான் )

4   வில்லன் அடியாளுங்க  86 பேர் அரிவாளோட இருக்காங்க . ஹீரோ  ஒரே ஒரு  பைக் பம்ப்பர் கொண்டு செம தாக்கு தாக்கறார். அவர் மேல ஒரு கீறல்  குட விழாதா?

மனம் கவர்ந்த வசனங்கள்


1 ஸ்ருதி - என்னங்க இது? உங்க பிரண்ட் பீர்  தர்றாரு?


விஷால் = ?

சூரி = கூலிங்கா ஏதாவது குடுன்னியே?# பூஜை




2 சாமிக்குப்பலி  கொடுத்தா  பூஜை முடிஞ்சிடும்.நான் அவனை பொலி போட்டுட்டு பூஜையை முடிக்கிறேன் # பூஜை




3 பெத்தவங்க மனசை வேதனைப்ப்டுத்திட்டு யாரும் நிம்மதியா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை # பூஜை

4 இந்தக்காலத்துப்பொண்ணுங்க அஞ்சு பீரை அட்டர் டைம் ல அடுக்குவாங்க # பூஜை

5 உன்னைப்பாத்தா வைரமுத்து மாதிரி இருக்கு.


உன்னைப்பார்த்தா வயிறு முத்துவனாட்டம் இருக்கு # பூஜை



6 சூரியின் மொக்கை = டேய் சுடலை.நீ விக்கற கடலை சுடலை




படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S  


1  ஹரி திரைக்கதை எழுதும்போது ஜாக்கிங் போய்க்கிட்டே எழுதுவாரா? படம் பறக்குது # பூஜை

2  ( அம்மாவோட )சித்தப்பா வை செருப்பால அடிச்சவனை ஹீரோ பழி வாங்கறதுதான் கதை.அடேங்கப்பா.# பூஜை

3 கோவை கங்கா யமுனா காவேரி தியேட்டர் காம்ப்ளெக்ஸ் ல விஷால் 28 பேரை அடிக்கறாரு.அடேங்கப்பா # ஹரிடா

4 லோ கட் சர்ட் போட்டுட்டு ஸ்ருதி கமல் ஸ்கிப்பிங் ரோப் இல்லாமயே சும்மா சும்மா குதிக்குது.சமூகத்துக்கு ஏதோ சொல்ல வருதோ? # பூஜை

5 அம்மா ராதிகா பையன் விஷால் கிட்டே " போடா வெளியே"னு துரத்தறாரு.அப்போ அந்த குரல் 6 டைம் எக்கோ அடிக்குது.நம்மைத்தான்  போகச்சொல்றாரா?


6 ஸ்ருதி கமல்  மேலாக்கா  ஏதோ போட்டிருக்காங்க அசால்ட்டா.ஓ அதான் தாவணியாம்.ஒரு ஓரமாகிடக்கு # பூஜை



தீபாவளி ரிசல்ட்
1 கத்தி = தலைவலி
2 பூஜை = காதுவலி






சி பி கமெண்ட் =

பூஜை =அடிதடி ,வெட்டு,குத்து ,கொலை,சேசிங் ,ஜீப் ,கார் ,லாரி .மாமூல் மசாலா.ஹரி மார்க் கொலைகள் .விகடன் மார்க் =41 , ரேட்டிங் = 2.5 / 5



எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 41





குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் =  2.5  /  5
  
யு/ஏ சான்று! அதிர்ச்சியில் பூஜை படக்குழு - ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல முடிவு

தாமிரபரணி படத்திற்கு பிறகு விஷால்-ஹரி கூட்டணி சேர்ந்துள்ள படம் பூஜை. இப்படத்தில் விஷால் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷாலே தயாரிக்கவும் செய்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராக உள்ள நிலையில், படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் இருப்பதாக கூறி யு/ஏ சான்று அளித்துள்ளனர். இதனால் பூஜை படக்குழு அதிர்ச்சியில் இருக்கிறது.

பொதுவாக ஒரு படத்திற்கு யு சான்று கிடைத்தால் மட்டுமே வரிவிலக்கு பெற இயலும், ஆனால் இப்போது பூஜை படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்துள்ளதால் வரி விலக்கு பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி யு சான்று பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர் பூஜை படக்குழுவினர்.


பூஜை படம் தீபாவளியன்று, விஜய்யின் கத்தி படத்தோடு மோத இருக்கிறது.



யு/ஏ சான்று! அதிர்ச்சியில் பூஜை படக்குழு - ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல முடிவு




ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள 13வது படம் பூஜை. இந்த படத்தில் விஷால்-ஸ்ருதிஹாசன்-சத்யராஜ் முக்கிய வேடங்களில நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருககிறார். தீபாவளிக்கு வெளியாகும் இப்படம் இதுவரை விஷால் படங்கள் இல்லாத அளவுக்கு 1108 தியேட்டர்களில் வெளியாவதாக அதிகாரப்பூர்வமான செய்தி வெளியாகியிருக்கிறது.


அந்த வகையில், தமிழ்நாட்டில் மட்டும் 375 தியேட்டர்களிலும், கேரளாவில் 70, ஆந்திராவில் 473, கர்நாடகாவில் 47, எப்எம்எஸ்- 143 ஆக மொத்தம் 1108 தியேட்டர்களில் பூஜை வெளியாகிறதாம். இதில் தமிழ்நாட்டை விட, ஆந்திராவில்தான் அதிகமான தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள்.


தமிழில் உருவான ஒரு படத்துக்கு தெலுங்கிற்கு இத்தனை முக்கியத்தும் கொடுப்பதற்கும் காரணம் இருக்கிறது. தமிழில் விஜய்யின் கத்தி படம் சர்ச்சைகளில் சிக்கியிருந்தபோதும், அந்த படத்திற்கான எதிர்பார்ப்பே அதிகமாக உள்ளது. அதனால் விஷால் படம் பற்றிய பேச்சே இல்லை என்பதுதான் உண்மை


அதனால் ஒருவேளை தமிழ்நாட்டில் எதிர்பார்த்த வசூல் இல்லையென்றால்கூட ஆந்திர ரசிகர்கள் படத்தை காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கைதான் விஷாலுக்கு அதிகமாக உள்ளதாம். காரணம், விஷால் ஆந்திராக்காரர்தான் என்றபோதும், அவருக்கு அங்கு பெரிதாக மார்க்கெட் இல்லை. ஆனால், அப்படத்தின் நாயகி ஸ்ருதிஹாசனுக்கு பெரிய மார்க்கெட் உள்ளது. அவர் நடித்த எல்லா படங்களுமே கிட்டத்தட்ட அங்கு வசூலை வாரி குவித்திருக்கின்றன.


அவர் ஒத்த பாட்டுக்கு குத்தாட்டம் போட்டால்கூட அந்த படம் ஹிட்தான் என்ற செண்டிமென்ட் இருப்பதால்தான் விஷாலுக்கு ஆந்திரா மீது இத்தனை நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாம். ஆக, தமிழ்நாட்டில் விஷால் படம் என்று வெளியாகும் பூஜை, ஆந்திராவில் ஸ்ருதிஹாசன் படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டு வெளியாகிறதாம்.



தீபாவளிக்குத் திரைக்கு வரும் படங்களில் பலரும் 'கத்தி' படத்தைப் பற்றி மட்டுமே பேசி வருகிறார்கள். அதே தினத்தில் வெளிவரும் 'பூஜை' படத்தைப் பற்றிய பேச்சு குறைவாகவே இருக்கிறது. விஜய்க்கு இருக்கும் லட்சக் கணக்கான ரசிகர்களே அதற்குக் காரணம். சமூக வலைத்தளங்களில் கூட 'கத்தி' படத்தைப் பற்றித்தான் நல்ல விதமாகவோ, கெட்ட விதமாகவோ கமெண்ட்டுகள் அடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், 'பூஜை' படத்தைப் பற்றி யாருமே கண்டுகொள்ளவில்லை. இருந்தாலும் 'பூஜை' படம் 'கத்தி'க்கு சிறிதும் குறைவில்லாமல் அமைதியாக ஒரு சாதனையைப் படைத்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மற்ற மாநிலங்கள், உலகம் முழுவதும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளதாம்.தமிழ் நாட்டில் மட்டும் சுமார் 400 திரையரங்குகள், தெலுங்கில் சுமார் 500 திரையரங்குகள், கேரளா, கர்நாடகா மற்றும் உலகமெங்கும் வெளியாகும் திரையரங்குகளைக் கணக்கில் கொண்டால் 1200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னணி கமர்ஷியல் இயக்குனரான ஹரி, தெலுங்கில் முன்னணி ஹீரோயினான ஸ்ருதிஹாசன் ஆகியோர் இருப்பதால் தெலுங்கிலும் படத்திற்கு நல்ல வியாபாரம் நடந்துள்ளதாம். அதோடு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து சமீபத்தில் வெளியாகிய 'கோவிந்துடு அந்தாரிவாடிலே' படமும் நல்ல வெற்றி பெற்று அவருக்கு மீண்டும் ஒரு ஹிட்டைக் கொடுத்துள்ளதாலும், 'பூஜை' படம் தெலுங்கில் தமிழை விட அதிக திரையரங்குகளில் வெளியாகிறது என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'பூஜை' படத்துடன் தமிழில் 'கத்தி' படமும், தெலுங்கில் 'கார்த்திகேயா' என்ற படமும் மட்டுமே போட்டியாக வெளியாகிறது. 'கத்திக்கும், கார்த்திகேயாவுக்கும்' வெற்றி பெற 'பூஜை' தேவைப்படுகிறது.
நன்றி- தினமலர்