Showing posts with label புலன் விசாரணை -2 - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label புலன் விசாரணை -2 - சினிமா விமர்சனம். Show all posts

Thursday, January 29, 2015

புலன் விசாரணை -2 - சினிமா விமர்சனம்

 

1990  இல்  ஆர் கே  செல்வமணி , ஃபிலிம்  இன்ஸ்டிடியூட் ஸ்டூடண்ட்ஸ் ,கேப்டன்  கூட்டணியில்  பிரம்மாண்டமான  க்ரைம்  இன்வெஸ்டிகேசன்  த்ரில்லராக  புலன் விசாரணை  வந்து சக்கை  போடு போட்டது .வசூல்  மழையில்   நனைகிறார்  ஹானஸ்ட் ராஜ்  என்று பேப்பரில் விளம்பரம்  எல்லாம் வந்தது.அதுக்குப்பின்  இயக்குநருக்கு மேரேஜ் ஆன  ராசியோ என்னவோ  படங்கள்  பெரிதாக  கை  கொடுக்கலை. 25 வருடங்களுக்குப்பின்  அதன்  2ம்  பாகம்  என்ற  பெயரில்  புதுக்கதையுடன்  களம்  இறங்கி  இருக்காங்க . எந்த  அளவுக்கு ஒர்க் அவுட் ஆகி  இருக்குன்னு  பார்ப்போம். 


நாட்டில்  பெட்ரோல்  விலை  அடிக்கடி ஏறுது  , இறங்குது. இதுக்கு அரசியல்வாதிகளின்  சுயநலம் தான் காரணம் அப்டினு  கதைக்கரு. 


பெட்ரோல் துறைல  பெட்ரோல்  ஆராய்ச்சிக்கூடத்தில்  பணி புரியும்  15  இஞ்சினியர்க்ள்  அவங்க  டிபார்ட்மென்ட்  ஏற்பாடு செஞ்ச  அஃபிசியல்  டூர்ல பங்கேற்கப்போகும்போது திடடமிட்ட   விபத்து  மூலம்   கொல்லப்படறாங்க .அந்த  டூர்  போன பஸ்சை  தவற  விட்ட  ஒரு  லேடி எஞ்சினியர்  கொல்லப்படறாங்க .அந்தப்பொண்ணோட  பெற்றோர்கள்  கொடுத்த புகார் அடிப்படையில்   புலன்  விசாரணை  நடக்குது.  என்ன  காரணத்துக்காக  அந்தக்கொலை  ? எதனால  விபத்தா  காட்டினாங்க ? யார் செஞ்சது ? இதை  ஹீரோ  கண்டுபிடிப்பதே  திரைக்கதை 


ஹீரோவா  பிரசாந்த்.இல்வாழ்க்கைத்துணை சரியா அமையலைன்னா  அவங்க  வாழ்க்கை  எப்படி  ஏற்படும்னு ஒரு முன்னுதாரணமா  நமக்குகாட்டும் பிரசாந்த்  மீண்டு  வர  மீண்டும்  வெற்றி பவனி  வர  வாழ்த்து.


பல  வருடங்களாக  கிடப்பில்  இருந்த  படம் என்பதால்   கெட்டப்பில்  பல  மாற்றங்கள்.  ஃபைட்  சீனில் கலக்கறார்.  டூயட் சீனில் எஞ்சாய்  பண்றார்.  வழக்கம் போல்  சர்ட்டைக்கழட்டி பாடி  காட்றார்.


ஹீரோயினா  2  பேரு  . கார்த்திகா, அஸ்வினி. ஆக்சன் த்ரில்லர் படங்களில்  ஒரு  ஹீரோயினுக்கே  இடம்  பத்தாது. 2  ஹீரோயின்  எதுக்கு ? 

2 பேரும்  பாஸ்  மார்க் பெருசா  சொல்லிக்கற  அளவு  இல்லை . 


போலீசாக  வரும்  ஹீரோயின்  ஸ்விம்மிங்  டிரஸ் ல  கிளுகிளுப்பை  ஊட்டறார்



மன்சூர்  அலிகான்  வக்கீலாக  ஓப்பனிங்கில்  வந்து கை தட்டல்  அள்ளும்  வசனங்கள் பேசறார்.தலைவாசல்  விஜய்  , குயிலி  என  பல தெரிந்த  முகங்கள் 


 முதல்  பாகத்தில்  வந்த ஆனந்த்ராஜ்  இதிலும்  அட்டெண்டென்ஸ்  போடறார்.ஆனா  அதிக  வாய்ப்பு  இல்லை


 பிரமிட் நடராஜன் , நிழல்கள் ரவி  கோர்ட்  சீன்  கலக்கல்  ரகம் 








மனதைக் கவர்ந்த  வசனங்கள்


1  சுதந்திரம் கிடைச்சு இத்தனை வருசம் ஆகியும் பெட்ரோல் இறக்குமதி ல தான் நம்ம வண்டி ஓடிட்டு இருக்கு # பு வி 2



2  பத்த வைக்கறதுக்கு ஒரு தீக்குச்சியே போதும்.நீங்க தந்திருக்கும் ஆதாரங்கள் தீப்பந்தமா இருக்கு - கம்யூனிஸ்ட் தா  பாண்டியன்  வி 2


3 குற்றவாளிகளுக்கு மட்டும் சம்மன் அனுப்பறதில்லை.குற்றவாளிகளைக்கண்டு பிடிக்கறதுக்காகவும் சம்மன் அனுப்பலாம் # பு வி 2


 4  அரசாங்கத்தை எதிர்த்து  யார் வேணாலும் போராடலாம்.ஆனா அரசாங்கத்தை நிர்ணயிக்கும்  ஆதிக்க சக்திகளை யாராலும் எதிர்க்கவே முடியாது# பு வி 2


5 செஞ்ச  குற்றத்துக்காக  ஒருத்தரை  தண்டிக்க  முடியலைன்னா செய்யாத  குற்றத்துக்காக  அவரை  மாட்டி  விடறதுல  தப்பே  இல்லை #பு வி 2


6 இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு நபரும் தனக்கு கப்பம் கட்டனும்னு ரிலையன்ஸ் மாதிரி கம்பெனிகள் நினைக்குது # பு வி 2






 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  

வீட்ல தனியா இருக்கும் பொண்ணு பாத்ரூம் ல மிடி ,டாப் போட்டு குளிக்குது.மன்னிக்கவே முடியாத ,ஏற்றுக்கொள்ள முடியாத லாஜிக் மிஸ்டேக் # பு வி 2


2 டைட்டில்ல  நட்புக்காக ரோஜா.னு  போடறாங்க. இயக்குநரின் சம்சாரம் என்பதால் வேற வழி இல்லாம ன்னு போட்டிருக்கலாம் #,பு வி 2


3  38 வயசு வழுக்கை மண்டையன் 15 வயசு ஸ்கூல் பொண்ணை தள்ளிட்டு வந்திருக்கான்.எப்டித்தான் ஏமாறுதுங்களோ?


4 பெட்ரோல் விலை எற்றத்தில் உள்ள தில்லுமுல்லுகளை தோல் உரித்துக்காட்டும் லியாகத் அலிகான் /மன்சூர் அலிகான் வசனங்கள் # பு வி 2



5  கேப்டன் பிரபாகரன் ஓப்பனிங் ஜீப்/போலீஸ் ஸ்டேசன் பைட் டிட்டோ ரீ மேக் # பு வி 2






இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  பல  வருடங்கள்  ஆனாலும்  டச்  விடாமல் ஒரு  சராசரி  க்ரைம் இன்வெச்ட்டிகேசன்  படம்  தந்தது


2   தயாரிப்பாளர் ?ஃபைனான்சியர்  சொந்த சம்சாரம்  ரோஜா  என்பதால்  அவருக்கு  பிரஸ்  ரிப்போர்   ட்டர் கேரக்டர் கொடுத்து  நட்புக்காக  என சமாளிச்ச்சது


3  காமெடி  டிராக்  என்ற  பெயரில்  மொக்கை  எதுவும்  போடாதது 


4 படத்தில் வரும் பெரும்பாலான  பெண்  கேரக்டர்களை  ஒரு  சீனிலாவது குளிக்க  வைத்  து   தான்  ஒரு சுத்த பத்தமான  இயக்குநர்  என நிரூபித்தது


5  லியாகத்  அலிகான் -ன்  கோர்ட்  வசனங்கள்


6   ரிலையன்ஸ்  கம்பெனியை தாக்குவது  போல்  அலையன்ஸ்  கம்பெனி  என  மாற்றியது  செம  தில்




இயக்குநரிடம்  சில கேள்விகள்


1  விபத்தில்  15  பேரை  கொலை செய்யத்திட்டம்  போடும்ம்  வில்லன்  ஏன்  பஸ்  டிரைவர்  மூலம் 15  பேரும் ஆஜர் ஆகிட்டாங்களா ?னு   செக்  பண்ணலை ?


2  விபத்தில்   பாதாளத்தில்  விழும் பஸ்சில்  தப்பிப்பிழைக்கும்  சிலரை    வில்லன்  ஆனந்த்ராஜ்  துப்பாக்கியால்  சுட்டு  பின் பஸ்ஸை  எரிக்கிறார். அது  போஸ்ட்மார்ட்ட்டம்  ரிப்போர்ட்ல  தெரிஞ்சிடும்  என்பது  வில்லனுக்குத்தெரியாதா? சுடாமல்  எரிச்சிருக்கலாமே?


3  விபத்தில்  பலி ஆகாமல்  தப்பித்த சிலர்  ஏன்  ஃபோனில்  யாருக்கும்  தகவலோ  எஸ் எம் எஸ் சோ  அனுப்ப  முயற்சி பண்ணலை ?


4  பெட்ரோல்  ஆராய்ச்சியில்  ஈடுபட்டு  வங்காள விரிகுடாவில்  2  லட்சம்   கோடி  ரூ மதிப்புள்ள  பல ஆயிரக்கணக்கான லிட்டர்  பெட்ரோல்  இருந்ததை  கண்டுபிடித்தததை  அந்த  15  எஞ்சினியர்களும் தங்கள் நெருங்கிய நண்பர்கள் /தோழிகள்/கள்ளக்காதலிகள் னு யாருக்குமே தகவல்  சொல்லலையா?


5  வில்லன்  ஆர் கே  நடிப்பு  எடுபடவில்லை. அவர்  வில்லனா?  கேனமா?




சி  பி  கமெண்ட் -புலன் விசாரணை -2 -  க்ரைம்   இன்வெஸ்டிகேசன்  த்ரில்லர்- ஓக்கே ரகம் - விகடன் மார்க் = 41  ரேட்டிங் = 2.5 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - =41



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) =ஓக்கே



 ரேட்டிங்



Embedded image permalink
 
  சேலம்  ஏ ஆர் ஆர் எஸ்  தியேட்ட்டரில்  படம் பார்த்தேன்